|
||||||||
இசையும் நடனமும் |
||||||||
![]() இசையும் நடனமும் ஓரினத்தின் மரபை உணர்வுப்பூர்வமாக இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை தொன்று தொட்டு வழங்கப்பட்டுள்ளது. சங்க நூல்களான தொல்காப்பியம், கூத்தநூல், பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன. சங்கம் மருவிய காலத்து நூலான சிலப்பதிகாரம் தமிழிசை பற்றியும், நடனம் பற்றியும் பல விரிவான ஆனால் நுணுக்கமான விளக்கங்களைத் தருகிறது. பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலான நாயன்மார்களினது தேவாரங்களும், பன்னினு ஆழ்வார்களினது நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் வளப்படுத்தின. கிபி 14 ம் நூற்றாண்டில் தமிழகத்தை டெல்லி சுல்தான்கள் ஆக்கிரமித்த பொழுதும் அதன்பின் விசயநகரப் பேரரசு காலத்திலும், தமிழிசை தொய்வுகளை சந்தித்தது. 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. 19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் போன்றே தமிழிசையும் மறுமலர்ச்சி பெற்றது. 1917 இல் ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையை ஆழமாக விரிவாக ஆராய்ந்து ”கருணாமிர்த சாகரம்” என்ற 1346 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டார். அண்மைக்காலமாக பேரவையும், தமிழ்ச்சங்கங்களும் அமெரிக்க மண்ணில் தமிழிசையையும், தமிழ் நடனத்தையும் ஊக்குவித்து வருகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகிய நடனத்தின் இன்றைய கலைவடிவமே பரதநாட்டியம். ’சதிர்’ என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட விறலியர் நடனம் பின்னர் கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாகத்தான் இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
-முனைவர்.சொ.சங்கரபாண்டி |
||||||||
by Swathi on 28 Jan 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|