|
|||||
இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்! |
|||||
![]() இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்!
பெருந்தலைவர் காமராசரின் சீடர் நெல்லை கண்ணன் அவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவருக்கு வயது 77. இளங்கோவடிகள் விருது பெற்ற தமிழறிஞர் நெல்லை கண்ணன் அவர்கள் அநீதிக்கு எதிராக இயங்கிய பெருமகனார்.
தலைப்பு எதுவாக இருந்தாலும் வள்ளுவன், கம்பன், பாரதி, காமராஜர் இந்த நால்வரும் தவறாமல் இவர் உரையில் இடம்பெறுவர். அவரது மேடைப்பேச்சுக்கென்று தமிழகத்தில் தனியான ரசிகர் கூட்டம் உண்டு. அவருக்கே உரித்தான நெல்லை வட்டார வழக்கில் பாரதியைப் பற்றிப் பேசுவார். தமிழ்நாட்டின் பல முக்கியமான மேடைகளில் உரை நிகழ்த்திய நெல்லை கண்ணன் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் சமூக வலைத்தளத்திலும் எழுதிவந்தார்.
திரு.நெல்லை கண்ணனின் பேச்சை, எழுத்தை, அரசியலை ஒருவர் ஏற்கலாம், எதிர்க்கலாம். ஆனால் தவிர்க்கமுடியாது!
மரபுத்தமிழ் இலக்கியங்களை புதிய தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்தியவர். வாழ்வின் கடைசி நொடிவரை வற்றாத தமிழுக்கு சொந்தக்காரர். வரலாற்று அரசியல் நிகழ்வுகளை நினைவில் வைத்து புள்ளிவிவரங்களுடன் கூறும் ஆற்றல் பெற்றவர். அரசியலில் துணிந்து தன் விமர்சனங்களை வெளிப்படுத்துபவர்.
ஐயாவின் ஆன்மா இறையருளின் இளைப்பாற இறையருளை வேண்டுகிறோம்..
|
|||||
![]() |
|||||
by Swathi on 18 Aug 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|