LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1205 - கற்பியல்

Next Kural >

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ? (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.)
மணக்குடவர் உரை:
தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய உள்ளத்தின் கண் எம்மைச் செல்லவிடாது அதைக் காவல் செய்துகொண்ட காதலர் ; எம் நெஞ்சத்து ஓவாவரல் நாணார் கொல் - தாம் மட்டும் எம்முடைய உள்ளத்தின்கண் இடைவிடாது வருவதற்கு நாணாரோ? ஒருவரைத் தம்மிடத்திற்கு ஒருபோதும் வரவிடாது தடுத்து விட்டுத் தாம் மட்டும் அவரிடத்திற்கு ஓயாது செல்லுதல், நாணுடையார் செயலன்மையின் 'நாணார்கொல்' என்றாள். 'கடி' காவலுணர்த்தும் உரிச்சொல்; இனி, விலக்குப் பொருளது எனினுமாம். 'கொல்' ஐயம்.
கலைஞர் உரை:
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.
Translation
Me from his heart he jealously excludes: Hath he no shame who ceaseless on my heart intrudes?.
Explanation
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.
Transliteration
Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol Emnenjaththu Ovaa Varal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >