|
|||||
தாண்டவம் - விமர்சனம் |
|||||
![]()
காசிக்குப் பிறகு விக்ரம் பார்வையில்லாதவராக நடித்திருக்கும் படம். ஒலியை செவி மூலம் கேட்டு செவிகளை கண்ணாக பயன்படுத்தும் திறன் உடையவர் விக்ரம். சாலையோரம் நின்று கொண்டிருக்கும் இவரை டாக்சி டிரைவரான சந்தானம் காரில் ஏற்றிச் செல்கிறார். ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவருக்காக சந்தானம் காத்திருக்கிறார். காரில் இருந்து இறங்கி சென்ற விக்ரம் ஒருவனை கொலை செய்து விட்டு தப்பித்து விடுகிறார். இந்த கொலையை லண்டன் போலீஸ் அதிகாரியான நாசர் விசாரணை செய்கிறார். விக்ரமை இறக்கி விட்ட காரை வைத்து சந்தானத்தை பிடித்து விசாரிக்கின்றனர். விசாரணையில் சந்தானம் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து நாசர் விட்டுவிடுகிறார். உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவதற்காக போலியாக சமூக சேவையில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் எடுக்கிறார். அப்படி ஒரு முதியோர் இல்லத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது தான் விக்ரமை சந்திக்கிறார் எமி ஜாக்சன்.
இந்த சந்திப்பினால் விக்ரம் மீது அனுதாபம் ஏற்பட்டு, அது பின்னர் காதலாகவும் மாறுகிறது. இதனால் விக்ரமை பின் தொடர ஆரம்பிக்கிறார் எமி ஜாக்சன். இதற்கிடையே அடுத்தடுத்து இரண்டு கொலைகளை செய்கிறார் விக்ரம். இதில் ஒரு கொலைக்கு மீண்டும் சந்தானம் காரிலேயே செல்கிறார். இந்த முறையும் சந்தானம் மாட்டிக்கொள்கிறார். ஆனால் பேப்பரில் விக்ரமை அடையாளம் காட்டி விடுகிறார். எமி ஜாக்ஸனுக்கும் விக்ரம் கொலைகாரன் என்று தெரிந்து விடுகிறது. விக்ரமை போலீசில் பிடித்துக்கொடுக்க முயற்சிக்கும் எமி ஜாக்சன் மற்றும் சந்தானத்திடம் விக்ரமின் பிளாஷ் பேக்கை சொல்கிறார் லட்சுமி ராய்.
இந்திய அரசின் உளவுப்பிரிவில் விக்ரம் மற்றும் ஜெகபதி பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள். விக்ரமுக்கு ஒரு நாள் கூரியர் வருகிறது. அது அவருடைய திருமண அழைப்பிதழ். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் ஊருக்குச் செல்லும் இவர் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார். அங்கு திருமண பெண்ணான அனுஷ்காவை கண்டதும் மனம் மாறி திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் முடிந்து பணிக்கு வருவதற்குள் இந்தியாவில் ஒரு மோசமான வெடிகுண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உளவுத்துறைக்கு கிடைக்கிறது. இந்த வழக்கு ஜெகபதி பாபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் இவரோ பணத்துக்கு ஆசைப்பட்டு தேச விரோத செயலுக்கு உடந்தையாகிவிடுகிறார். தன்னுடைய அலுவலகத்தில் இதற்கு யாரோ உடந்தையாக இருப்பதை அறிந்த விக்ரம், அமைச்சரிடம் பேசி வழக்கை தன் வசம் எடுத்துக்கொள்கிறார்.
இந்த வழக்கிற்காக லண்டன் செல்லும் விக்ரம், அங்கு தீவிரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். அப்பொழுது இதற்கு காரணமான சதிகார கும்பலையும் பார்த்து விடுகிறார். இதற்கு உடந்தையாக இருப்பது ஜெகபதி பாபு என்பதும் விக்ரமுக்கு தெரிந்து விடுகிறது. லண்டனில் ஜெகபதி பாபு தன் மனைவியுடன் அனுஷ்காவையும் அழைத்து வருகிறார். ஜெகபதி பாபுவின் சதியால் குண்டு வெடிப்பில் அனுஷ்கா இறந்து விடுகிறார், விக்ரமுக்கு கண் போய் விடுகிறது. இத்தனைக்கும் காரணமான ஜெகதிபாபுவை பழி தீர்த்தாரா? தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாரா? எமி ஜாக்சன், விக்ரம் மீது கொண்ட காதல் என்ன ஆனது? என்பதே மீதி கதை . . .
காசிக்குப் பிறகு விக்ரம் பார்வையில்லாதவராக நடித்திருக்கும் படம். ஒலியை செவி மூலம் கேட்டு செவிகளை கண்ணாக பயன்படுத்தும் திறன் உடையவர் விக்ரம். சாலையோரம் நின்று கொண்டிருக்கும் இவரை டாக்சி டிரைவரான சந்தானம் காரில் ஏற்றிச் செல்கிறார். ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவருக்காக சந்தானம் காத்திருக்கிறார். காரில் இருந்து இறங்கி சென்ற விக்ரம் ஒருவனை கொலை செய்து விட்டு தப்பித்து விடுகிறார். இந்த கொலையை லண்டன் போலீஸ் அதிகாரியான நாசர் விசாரணை செய்கிறார். விக்ரமை இறக்கி விட்ட காரை வைத்து சந்தானத்தை பிடித்து விசாரிக்கின்றனர். விசாரணையில் சந்தானம் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து நாசர் விட்டுவிடுகிறார். உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவதற்காக போலியாக சமூக சேவையில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் எடுக்கிறார். அப்படி ஒரு முதியோர் இல்லத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது தான் விக்ரமை சந்திக்கிறார் எமி ஜாக்சன்.
இந்த சந்திப்பினால் விக்ரம் மீது அனுதாபம் ஏற்பட்டு, அது பின்னர் காதலாகவும் மாறுகிறது. இதனால் விக்ரமை பின் தொடர ஆரம்பிக்கிறார் எமி ஜாக்சன். இதற்கிடையே அடுத்தடுத்து இரண்டு கொலைகளை செய்கிறார் விக்ரம். இதில் ஒரு கொலைக்கு மீண்டும் சந்தானம் காரிலேயே செல்கிறார். இந்த முறையும் சந்தானம் மாட்டிக்கொள்கிறார். ஆனால் பேப்பரில் விக்ரமை அடையாளம் காட்டி விடுகிறார். எமி ஜாக்ஸனுக்கும் விக்ரம் கொலைகாரன் என்று தெரிந்து விடுகிறது. விக்ரமை போலீசில் பிடித்துக்கொடுக்க முயற்சிக்கும் எமி ஜாக்சன் மற்றும் சந்தானத்திடம் விக்ரமின் பிளாஷ் பேக்கை சொல்கிறார் லட்சுமி ராய்.
இந்திய அரசின் உளவுப்பிரிவில் விக்ரம் மற்றும் ஜெகபதி பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள். விக்ரமுக்கு ஒரு நாள் கூரியர் வருகிறது. அது அவருடைய திருமண அழைப்பிதழ். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் ஊருக்குச் செல்லும் இவர் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார். அங்கு திருமண பெண்ணான அனுஷ்காவை கண்டதும் மனம் மாறி திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் முடிந்து பணிக்கு வருவதற்குள் இந்தியாவில் ஒரு மோசமான வெடிகுண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உளவுத்துறைக்கு கிடைக்கிறது. இந்த வழக்கு ஜெகபதி பாபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் இவரோ பணத்துக்கு ஆசைப்பட்டு தேச விரோத செயலுக்கு உடந்தையாகிவிடுகிறார். தன்னுடைய அலுவலகத்தில் இதற்கு யாரோ உடந்தையாக இருப்பதை அறிந்த விக்ரம், அமைச்சரிடம் பேசி வழக்கை தன் வசம் எடுத்துக்கொள்கிறார்.
இந்த வழக்கிற்காக லண்டன் செல்லும் விக்ரம், அங்கு தீவிரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். அப்பொழுது இதற்கு காரணமான சதிகார கும்பலையும் பார்த்து விடுகிறார். இதற்கு உடந்தையாக இருப்பது ஜெகபதி பாபு என்பதும் விக்ரமுக்கு தெரிந்து விடுகிறது. லண்டனில் ஜெகபதி பாபு தன் மனைவியுடன் அனுஷ்காவையும் அழைத்து வருகிறார். ஜெகபதி பாபுவின் சதியால் குண்டு வெடிப்பில் அனுஷ்கா இறந்து விடுகிறார், விக்ரமுக்கு கண் போய் விடுகிறது. இத்தனைக்கும் காரணமான ஜெகதிபாபுவை பழி தீர்த்தாரா? தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாரா? எமி ஜாக்சன், விக்ரம் மீது கொண்ட காதல் என்ன ஆனது? என்பதே மீதி கதை . . . |
|||||
by Swathi on 01 Oct 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|