LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

தங்கப்பேனா தகுதிக்கு மீறியது

ஒருமுறை மலேசியா வேளாண் அமைச்சர் கக்கனை அவரது அமைச்சரவை அலுவலகத்தில் சந்தித்தார் . கக்கன் வைத்திருந்த பழங்காலப் பேனாவைப் பார்த்து விட்டு தமது சட்டைப்பையில் இருந்த பேனாவை எடுத்துக் கொடுத்தார் . அதை வாங்கி கக்கன் அப்போனாவைத் திருப்பித்திருப்பிப் பார்த்து விட்டு , ‘ இது என்ன தங்கப் பேனாவா ?’ என்று கேட்டார் . ‘ ஆமாம் இதை எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் அந்த மலேசிய அமைச்சர் .

‘இந்தத் தங்கப்பேனாவை வைத்துக் கொள்ளும் தகுதி எனக்கு இல்லை’ என்றார் . பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் கக்கன் தமது உதவியாளரை அழைத்து இதை அலுவலகப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்து தமக்கு வழங்கியதாக எழுதிக் கொண்டு வர ஏற்பாடு செய்தார் . இதைக் கண்ணுற்ற மலேசிய அமைச்சர் ‘இது உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்குத்தான் . இந்த அரசுக்க அல்ல’ என்றார் . ‘ இந்த அமைச்சர் அலுவலகத்தில் நான் அமைச்சர் பொறுப்பில் இருக்கும்வரை இம்மாதிரியான பரிசுப்பொருள்களைப் பதிவு செய்த பிறகுதான் பயன்படுத்துவேன் . நான் பதவியை இழந்து வெளியே போகும்போது முறையாக அரசிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன் . அவ்வாறு செய்வது ஓர் அமைச்சர் பொறுப்பில்’ இருக்கும் என் போன்றவர்களின் கடமை அல்லவா ? என்றார் .

மீண்டும் அந்த மலேசிய அமைச்சர் ‘தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கே கொடுத்தேன்’ என்றார் . உடனே ‘நான் அமைச்சராக இல்லையென்றால் இந்தப் பேனாவைக் கொடுத்திருப்பீர்களா ? மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் பொறுப்பேற்ற நம்மைப் போன்றவர்கள் பரிசுப் பொருள்களைத் தமது சொந்தப் பயன்பாட்டிற்குத் வைத்துக் கொள்ளலாமா ?’ என்று கக்கன் கேட்டதும் மலேசிய அமைச்சர் அமைதியானார் . என்றாலும் விடவில்லை ; “ தங்களின் பயன்பாட்டிற்கே தாங்களே வைத்து கொள்வதாக இருந்தால் இதைக் கொடுப்பேன் . அரசுப் பதிவேட்டில் எழுதி அரசுப் பொருள்களோடு இதையும் சேர்ப்பதாக இருந்தால் நான் கொடுக்க மாட்டேன்’ என்றார் . “ நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று தங்கப் பேனாவைத் திருப்பி கொடுத்து விட்டார் . மலே ‘abCò அமைச்சரும் அதைத் திரும்ப வாங்கி வைத்துக் கொண்டார் .

இந்த நிகழ்ச்சியை நேருக்கு நேர் கண்ணுற்ற காங்கிரஸ் கட்சியின் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற டி . பி . ஏழுமலை பல மேடைகளில் இதைப் பற்றிப் பேசியுள்ளார் . கக்கனின் தன்னலமற்ற உள்ளத்தையும் தம் தகுதிக்குட்பட்டு வாழவேண்டும் என்ற உயரிய பண்பாட்டையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம் .

பரிசுப்பொருள்களையும் பட்டியலிட்டு விற்பனை செய்யும் அமைச்சர் பெருமக்கள் வாழ்ந்த வரலாறும் , பிறந்தநாள் என்ற பெயரால் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பரிசுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் அமைச்சர்கள் வாழும் வரலாறு கொண்ட இந்தத் தமிழகத்தில் இப்படியொரு அமைச்சரா ?

அப்படி வாழ்ந்த கக்கனின் குறிக்கோள் தான் என்ன ? பரிசு என்ற பெயரால் பிறர் வழங்கும் பொருட்சுமை கூடப் பொதுநலம் என்ற கப்பலைத் தரைதட்டிவிடச் செய்யும் என்று எண்ணினாரோ ? அப்படிப் பிறர் செய்யும் செயல்களில் கூடக் கறைபடா நெஞ்சினன் என்ற எல்லையை எட்டத் தடைக் கற்களாக அமைத்துவிடும் என்று அஞ்சினாரோ ? எப்படி எண்ணி இருந்தாலும் அவரது உள்ளத்தில் உயரிய குறிக்கோள் குடிகொண்டிருந்தது என்பது உறுதி .

‘குறிக்கோளில்லாத மனிதன் திசைகாட்டும் கருவியில்லாத கப்பலைப் போன்றவன்’ என்று அறிஞன் ‘ஆவ்பரி’ கூறியதை ஒப்பிட்டுப் பார்த்தால் இன்று “கறைபடாக் கரங்கள்” என்று அனைத்து அரசியல் தலைவர்களாலும் பேசப்படும் எல்லையை எட்டும் குறிக்கோள் கொண்டே வாழ்ந்தார் என்பது உண்மை .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.