LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஆர்னிகா நாசர்

தாயாரம்மா

சொர்ணசேரி வானொலி நிலையம். இயக்குநர் மைதிலியின் எதிரில் அமர்ந்திருந்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ராஜகீர்த்தி.
"மிஸ்டர் கீர்த்தி! அகில இந்திய வானொலி நாடக விழாவில் ஒரு சிறப்பான நாடகத்தைத் தயாரிச்சு வழங்கணும். ஸ்கிரிப்ட் ஏதாவது ரெடியா இருக்கா?"
கீர்த்தி உதடு பிதுக்கினான். "பொதுவாகவே வானொலிக்கு நாடகங்கள் எழுதுற வங்க எண்ணிக்கை ரொம்பக் குறைஞ்சுபோச்சு மேடம். என்கிட்ட 20-க்கும் மேற் பட்ட ஸ்கிரிப்ட்கள் இருக்கு. பெரும்பாலானவை டாகுமென்ட்டரி தரம். பிரசார நெடி அதிகம். நாடக அம்சமே இல்லை."
"இப்படிச் சொன்னா எப்படி? பிரபல எழுத்தாளர் யாருடைய சிறுகதையையாவது கேட்டு வாங்கி, நாடக ஆக்கம் செய்யுங்களேன் கீர்த்தி!"
"என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு மேடம்! சிதம்பரத்தில் சங்கமித்ரன்னு ஓர் எழுத்தாளர் இருக்கார். வயது 76 இருக்கும். மகா முன்கோபி. ஞானபீடம் பரிசு பெற் றவர். அவர் கடந்த 15 வருடங்களாக எந்தக் கதையும் எழுதல. அவரை வற்புறுத்தி ஒரு கதை கேக்கலாம் மேடம். நம்ம அகில இந்திய வானொலி நாடகத் திருவிழாவுக்கு ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்ச மாதிரியும் இருக்கும்; அவரை மீண்டும் எழுதவெச்ச மாதிரியும் இருக்கும்!"
"எது வேணாலும் செய்யுங்க கீர்த்தி. எனக்குப் பழம் பழுத்தா சரி!"
சிதம்பரம். சங்கமித்ரனின் முகவரியை வைத்துக்கொண்டு தேடோ தேடென்று தேடினான் கீர்த்தி. யாருமே சங்கமித்ரனைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. இரண்டு மணி நேரம் அலைந்து, தில்லை அடுக்கு-மாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்துக்குப் போனான். அழைப்பு மணியை அமுக்கினான். பதில் இல்லை. கதவைப் பல ஒலியன்களில் தட்டினான். "சார்! ஐயா! எழுத்தாளரே! வீட்டுக்குள்ள யாராவது இருக்கீங்களா..?"
கதவு மெதுவாகத் திறந்து, சங்கமித்ரனின் ஒரு கீற்று தெரிந்தது. "யார் நீ? என் ஃப்ளாட் வாசல்ல நின்னு ஏன் இப்படிக் கத்தற?"
"நான் சொர்ணசேரி வானொலி நிலையத்தில் இருந்து வர்றேன். என் பெயர் கீர்த்தி. நிகழ்ச்சித் தயாரிப்பாளனா இருக்கேன். உங்களைத்தான் பார்க்க வந்தேன். நீங்கதானே திரு.சங்கமித்ரன்?"
"சங்கமித்ரனா? அவன் 1995-லேயே செத்துப்போயிட்டான்டா! இப்ப இருக்கறது அவனோட சக்கை!"
"1995-ல் அப்படி என்னதாங்கய்யா நடந்தது?"
"என் வொய்ஃப் மஞ்சள்காமாலை வந்து செத்துப்போய்ட்-டாடா. அவ இல்லாம இந்த உலகமே வெறுமையாப்போச்சு. அவ போன இடத்துக்கே போகலாம்னு பார்த்தா தற்கொலை செஞ்சுக்கவும் பயமாயிருக்குடா!" - மித்ரனின் கண்களில் நீர்.
"உங்க வேதனையை என்னால புரிஞ்சுக்க முடியுதுய்யா!"
கதவைத் திறந்துவிட்டார் மித்ரன். "வா, உள்ளே வந்து உக்கார்!"
கீர்த்தி சுற்று முற்றும் பார்த்தான். அறைச் சுவர் களில் புகைப்படங்களோ, கண்ணாடி பீரோக்களில் புத்தகங்களோ காணப்படவில்லை.
"நீ என்ன பாக்கறேன்னு புரியுது. போட்டோஸ் அண்ட் புக்ஸ் ஆர் ஹாண்ட்டிங் மீ. அதான், மொத்தமாப் போட்டு எரிச்சுட்டேன்."
மௌனித்தான் கீர்த்தி.
"சரி, என்ன விஷயமா வந்தே?"
"அகில இந்திய வானொலி நாடகத் திருவிழாவுக்கு நீங்க ஒரு கதை எழுதித் தரணும்."
"நான் எழுத்தை விவாகரத்து பண்ணி ரொம்ப காலமாச்சேடா!"
"அப்படிச் சொல்லக் கூடாது. உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளியா வந்தா ஏதாவது குடுத்து உபசரிப்பீங்கள்ல... அது மாதிரி எனக்கு ஒரு கதை குடுத்து உபசரிங்க!"
"கதை கதைன்றியே... உனக்கு இலக்கியம்பத்தி என்ன தெரியும்? என் கதைகளைப் படிச்சிருக்-கியா?"
பதினைந்து நிமிடங்களுக்கு மித்ரனின் கதைகள் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே வாசித்து முடித்தான் கீர்த்தி. தொடர்ந்து, "எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். எழுத்தாளர்கள்ல நீங்க சிங்கம் மாதிரி. ஆனா, உங்க கர்ஜனைகள் மனிதாபிமானம் மிக்கவை" என்றான்.
"ரொம்பக் காக்கா பிடிக்காதே! எனக்கு இப்பக் கதை எழுத வராது. என்னை விட்ரு! குடித்துக் குடித்து என் மண்டையே வறண்டு-விட்டது!"
"இல்லை. அப்படிச் சொல்லக் கூடாது. உங்களால் முடியும். எனக்காக ஒரே ஒரு கதை எழுதித் தாருங் கள். அது உங்க மாஸ்டர் பீஸா அமையணும்!"
சங்கமித்ரனின் கண்கள் ஏகாந்தத்தில் நிலைத்தன. "இருக்குடா ஒரு கதை. எழுதப்படாத ஒரு மாஸ்டர் பீஸ்! கதைக்குத் தலைப்புக்கூட வெச்சிருந்தேன், 'கிருஷ்ணவேணி வந்தாள்'னு. மனைவியின் மர ணத்துக்கு முன் எழுத ஆரம்-பிச்சு, அவள் மரணத் துக்குப் பின் தூக்கிப் போட்டுட்டேன். அந்தக் -கதையை முடிச்சுத் தர்றேன். ஆனா ஒரு நிபந்தனை..."
"என்ன சார்?"
"கிருஷ்ணவேணியின் கேரக்ட-ருக்குக் குரல் கொடுக்கப்போகும் பெண்ணை என் விருப்பம் அறிந்து-தான் தேர்ந்தெடுக்க வேண்டும்."
"சரி!"
"கதையை எழுதும் அளவுக்கு என் கைகள் திடமாக இல்லை. கதையை நான் சொல்லச் சொல்ல... நீயே எழுதிக்கொள்!"
தலையாட்டினான் கீர்த்தி.
சங்கமித்ரன் சொல்லச் சொல்ல, விறுவிறுவென எழுதினான் கீர்த்தி. கதையைச் சொல்லும்போதே சில இடங்களில் வார்த்தை வராமல் அழுதார். சில இடங்களில் அவனும் நெகிழ்ந்து அழுதான். ஒரு வாறாகக் கதையை எழுதி முடித்து-விட்டு, அவருக்குப் படித்துக் காட்டினான் கீர்த்தி.
"எண்பத்து ஐந்து வயதில் ஒரு கிழவன் இருபது வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றதுபோல இருக்குது இந்தக் கதை. ரெண்டு சந்தோஷம்டா! என் ஆண்மை, அதாவது எழுத்துத் திறமை இன்னும் நிலைத்திருக்கிறது என்பது முதல் சந்தோஷம். ரெண்டாவது சந்தோஷம், பிறந்த குழந்தையும் பீமனைப்போல புஷ்டியாக இருக்கிறது!"
சிரித்தான் கீர்த்தி.
"ஏனப்பா கீர்த்தி? கிருஷ்ணவேணி கேரக்டருக்கு யார் குரல் கொடுக்கப்போறா?"
குரல் வங்கியில் உள்ள நூற்றுக்கணக்கான பெண் குரல்களைப் போட்டுக் காட்டினான். கோவை சரளா குரல், உஷா உதூப் குரல், மால்குடி சுபா குரல், காந்திமதி குரல், மனோரமா குரல்...
வரிசையாகக் கேட்டுக்கொண்டே வந்த மித்ரன் திடீரென, "நிறுத்து... நிறுத்து! இந்தக் குரல் யாருடை யது?" என்றார். "டெரிஃபிக் எக்ஸெலன்ட் அண்ட் எக்ஸ்ட்ராடினரி வாய்ஸ். குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள், வளைவு நெளிவுகள் அசாத்தியம்! இந்த நூற்றாண்டின் இணையற்ற பெண் குரல் இதுதான்டா கீர்த்தி!"
"இந்தக் குரலுக்கு உரிய பெண்மணியின் பெயர் தாயாரம்மா. ஏ ப்ளஸ் கிரேடு ஆர்ட்டிஸ்ட். ஆனா, என்ன காரணமோ தெரியலை... கடந்த ரெண்டு வருஷமா அவங்க எந்த ரெக்கார்டிங்குக்கும் வரலை."
"என்னைப் பிடிச்ச மாதிரி அந்த அம்மாவையும் பிடிடா! அந்தம்மா கிடைக்கலைன்னா இந்த நாடகத்தை உனக்குத் தர மாட்டேன்!"
"ஆண்டவன் கிருபையால அவங்களும் கிடைப் பாங்க சார்! நாளைக்கே நல்ல செய்தியோடு உங்களைச் சந்திக்கிறேன்!"
தாஸ்பேட்டை. ஒளவைத் தெரு. 20-வது குறுக்குத் தெருவுக்குள் பிரவேசித்-தான் கீர்த்தி. கதவைத் தட்டினான். ஓர் 20 வயதுப் பெண் வெளிப்-பட்டாள்.
"யார் சார் நீங்க?"
"வானொலி நிலையத்துல இருந்து வரேன். தாயாரம்மாவைப் பார்க்கணும்!"
"அவங்களைப் பார்க்க முடியாது சார்! படுத்த படுக்கையாஇருக் காங்க. பாலாஜி பாலி கிளினிக்ல அட்மிட் பண்ணியிருக்கோம்."
இருண்டான் கீர்த்தி. "நீங்க அவங்க பொண்ணாம்மா?"
"ஆமா!"
"இப்ப நீங்க அவங்க இருக்கிற ஆஸ்பத்திரிக்குதானே போறீங்க?"
"ஆமா!"
"நானும் உங்ககூட வந்து அவங்களைப் பார்க்கலாமா?"
பத்து நொடி யோசித்து, "சரி வாங்க!" என்றாள்.
மருத்துவமனைக்குள் இருவரும் பிரவேசித்தனர். பினாயில் காயாத ஈரத் துணியின்டிங்க்சர் வாசனை!
இன்டென்சிவ் கேர் யூனிட்டில் தாயாரம்மா படுத்திருந்தாள். வயது 50. சற்றே பூசிய சிவந்த திரேகம். நரைத்த தலைக் கேசம். நோய்-வாய்ப்பட்டு இருந்தபோதிலும் முகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்கியது. கழுத்துப் பகுதி வீங்கியிருந்தது. தாயாரம்மாவின் கண்கள் கீர்த்தியை அடையாளம் கண்டுவிட்டன. ஆக்சிஜன் மாஸ்க்கை அகற்ற சமிக்ஞை செய்தாள். அகற்றினர். பேசினாள். காற்றுதான் வந்தது. 0.0001 டெஸிபல்கூட தொண்டைப் பெட்டியிலிருந்துவெளிக் கிளம்பவில்லை. மீண்டும் மீண்டும் பேசப் பிரயத்தனம் செய்து தோற்றாள்.
தலைமை மருத்துவர் உள்ளே நுழைந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் கூறினான் கீர்த்தி. மருத் துவர் வேதனையாகச் சிரித்து, "உணவுக் குழாயும் வாய்ஸ் பாக்சும் இணைகிற இடத்தில் கேன்சர் எனச் சந்தேகிக்கிறோம். அந்த அம்மா வால் ஒரு வார்த்தைகூடப் பேச இயலாது. பயாப்ஸி ரிப்போர்ட் மாலை வரும்" என்றார்.
தாயாரம்மா விரல்களை அசைத்து மகளை அருகில் அழைத்தாள். சமிக்ஞையில், "கீர்த்தி எதற்கு வந்திருக்கார்னு கேள்!" என்றாள்.
சொன்னான் கீர்த்தி. மீண்டும் சமிக்ஞை. "என்ன கதை? என்ன ரோல்?"
கையில் கொண்டுவந்திருந்த ஸ்கிரிப்ட்டை படித்துக் காட்டினான் கீர்த்தி. தாயாரம்மாவின் கண்-களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருக்கெடுத்து வழிந்தது.
"சங்கமித்ரன் என் ஆதர்ச எழுத்தாளர். கதை யைப் பாராட்டத் தமிழில் வார்த்தைகளே இல்லை!" - இதுவும் சமிக்ஞையில்.
சில நொடிக் கரைசலில் தாயாரம்மா தேம்பித் தேம்பி அழுதார். அழுகிறபோதே சில சைகைகள். அவற்றைக் கவனித்துவிட்டு, "எங்கம்மாவுக்கு கேன்சர் வந்ததுகூடக் கவலை இல்லையாம். இந்த ரேடியோ டிராமாவுல நடிக்க முடியலேன்னு அழ-றாங்க!" என்று விளக்கினாள் மகள்.
"என்ன பண்றது? எங்களுக்குக் கொடுப்பினை அவ்வளவுதான்! அப்ப, நான் கிளம்புறேம்மா!" - விடைபெற்றுத் திரும்பினான்.
முதுகில் ஒரு ஈஸ்ட்ரோஜென் பூசிய குரல் பளார் என அறைந்தது. "கீர்த்தி சார்!"
சுழன்று திரும்பினான் கீர்த்தி. அழைத்தது தாயாரம்மாதான்.
"நீங்களா பேசினீங்க... நீங்களா பேசினீங்க..?"
தொண்டையைத் தடவிவிட்டபடி, ஹிஸ்டீரி கலாக எழுந்து அமர்ந்தாள் தாயாரம்மா.
"சீக்கிரம் டாக்டரைக் கூப்பிடுங்க. என்னை வீல்சேரிலேயோ, ஸ்டெச்சரிலேயோ வெச்சு ரிக்கார்-டிங்-குக்குக் கூட்டிட்டுப் போங்க. கிருஷ்ணவேணி கேரக்டரை நான்தான் பண்ணணும். கிருஷ்ணவேணி கேரக்டருக்கு பேசிட்டுச் செத்தாதான் நிம்மதியா சாவேன்!"
ஐஸி யூனிட் பரபரத்தது. தாயாரம்மாவைச் சுமந்துகொண்டு ஆம்புலன்ஸ் வானொலி நிலையம் பறந்தது. ரிக்கார்டிங் ஆரம்பித்தது. நான்கு மணி நேர ரிக்கார்டிங்கில் கிருஷ்ணவேணியாகவே வாழ்ந்து பார்த்துவிட்டாள் தாயாரம்மா.
தாயாரம்மாவின் உணர்ச்சிபூர்வமான குரலைக் கேட்கக் கேட்க... ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அனை-வரின் முதுகுத்தண்டிலும் பனிப்பூரான் ஊர்ந்-தது. ஆண்களுக்கு மார்பகம் முளைத்து தாய்ப்-பால் சுரந்தது. சொர்க்கத்துக்குள் ரோலர்கோஸ்டர் பயணம். நொடிக்கு நொடி பேரானந்தம். நிலவேம்பு கஷாயத்துக்குள் மனம் நீச்சலடித்துத் தூய்மை பெற்றது.
ரிக்கார்டிங் முடிந்தது. கீர்த்தி, மித்ரன் உள்பட அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.
மித்ரன் தாயாரம்மாவின் கைகளைப் பற்றி முகத்-தில் ஒற்றிக்கொண்டார். "கடவுள் பெண்ணாக இருந்--தால், அவர் குரல் உங்க குரலின் சாயலில்தான் இருக்கும். என்னுடைய சாதாரணக் கதையை மாஸ்டர் பீஸாக்கிவிட்டீர்கள். இதுவரை வாழ்க் கையை அவநம்பிக்கையுடன் கழித்தேன். இனி, மீதி வாழ்நாளை அர்த்தபூர்வமாகச் செலவழிப்பேன்!"
பதில் பேச தாயாரம்மா வாய் திறந்தாள். வார்த்தை வரவில்லை. காற்றுதான் வந்தது. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, வாயில் இருந்து ரத்த நூல் வழிந்தது.
ஆம்புலன்ஸ் தாயாரம்மாவைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தது.
கீர்த்தியிடமும் மித்ரனிடமும், "இன்றைக்கு நடந் தது ஒரு மருத்துவ அற்புதம். ஒன்ஸ் இன் எ ப்ளூ மூன்தான் மருத்துவ அற்புதங்கள் அரங்கேறும். தன் உயிரோடு கரைந்திருக்கும் வானொலி நாடகப் பணி யைச் செய்ய தாயாரம்மா இறைவனிடம் கெஞ்சி நான்கு மணி நேரம் பேசினார்போலும்! இனி அவ் வளவுதான்; அவரால் பேச முடியாது. நீங்களும் இனி அவரைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது!"
வானொலி நிலைய காசோலையைத் தாயா ரம்மாவின் கையில் திணித்தான் கீர்த்தி. பற்றிக் கொண்டன விரல்கள்.
தயங்கித் தயங்கி வெளியேறினர் கீர்த்தியும் மித்ரனும்.
'கிருஷ்ணவேணி வந்தாள்' நாடகத்தைத் தாயா ரம்மா கேட்கும்விதமாக வானொலியை அவளது தலைமாட்டில் வைத்தனர். நாடகம் ஒலிபரப்பானது. நவரச பாவங்களுடன் நாடகத்தைக் கேட்டு முடித் தாள் தாயாரம்மா. நாடகம் முடிந்ததும் செவிலியர் நங்கைகள், மருத்துவர்கள் உட்பட அனைவரும் கரகோஷம் செய்தனர்.
"ஒரு நிமிஷம்..." என்றபடி தாயாரம்மாவின் முன் வந்து நின்றார் மித்ரன்.
"இன்னொரு வானொலி நாடகம் புதுசா எழுதி இருக்கேன். தலைப்பு 'அம்மாவழிப் பாட்டிகளும் அப்பாவழிப் பாட்டிகளும்'. படிக்கிறேன் கேளுங்கம்மா!"
நாடகம் முழுமையையும் படித்து முடித்தார் சங்கமித்ரன். ஏறக்குறைய 100 நொடிகள் நீண்ட மௌனம். பின், அது படீரென்று உடைபட்டது.
"இந்த நாடகத்துல எனக்கு அம்மாவழிப் பாட்டி ரோல்தானே மித்ரன்?"
வினவியது தாயாரம்மாவின் அமானுஷ்யம் ஈஷிய குரல்!

by Swathi   on 04 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.