LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- அமெரிக்க அணுகுமுறை

அமெரிக்க ஆரம்பக்கல்வி - 7

இங்கே பள்ளிப்பருவம் முதல் போட்டி மனப்பான்மையை வளர்க்கிறார்கள். பள்ளியில் விளையாட்டை மிகவும் ஊக்கப்படுத்தி நிறைய போட்டிகளை நடத்துகிறார்கள். குழந்தைகளின் அப்பாக்கள் பலர் பல விளையாட்டுகளில் ஆர்வம் மிக்க, போட்டிகளில் விளையாடி அனுபவமுள்ளவர்களை தன்னார்வலாகக் கொண்டும் மாலை வேலையில் குழந்தைகளை பயிற்றுவிக்கிறார்கள். உதாரணமாக ஒரு குழந்தையின் அப்பா பேஸ் பால் விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக விளையாடக் கூடியவராக இருந்தால் மாலை நேரங்களில் குறிப்பிட்ட நாட்களில் அவர் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு அந்த விளையாட்டை சொல்லித்தருகிறார்.


மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விருப்பப் பாடமாக கணிப்பொறி, இசை, ஓவியம் போன்றவைகளை தேர்ந்தேடுத்து பயிற்றுவிக்கிறார்கள்.
   குழந்தைகளுக்கு தேர்வு பயம் போவதற்காக திடீர் தேர்வு (SURPRISE TEST) என்ற ஒன்றை நடத்தி சிறுவயது முதல் நடத்துவதால், குழந்தைகள் தேர்வை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் பல்வேறு தலைப்பு கொடுத்து குழந்தைகளை அதுசம்பந்தமாக ஏதாவது அன்றைய நிகழ்வுகள் குறித்து எழுதச் சொல்லி குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறார்கள். உதாரணமாக, " நான் இன்று திருப்தியாக இருக்கிறேன் " என்ற தலைப்பில் குழந்தைகள் அவர்கள் இன்று என்னென்ன காரணங்களால் திருப்தியாக இருக்கிறார்கள் என்று மூன்று அல்லது நான்கு காரணங்களை எழுதச் சொல்கிறார்கள்.


பள்ளிக்கு தேவையான சில செலவுகளை ஈடுகட்ட குழந்தைகளை அழகாக போட்டோ எடுத்து பெற்றோரை விருப்பப்பட்ட போட்டோவை வாங்கச் சொல்வது என்று ஆரம்பித்து பல்வேறு வழிகளில் நிதி வசூலிக்கிறார்கள். இங்கே குழந்தைகள் தனித்தன்மையுடன், சுயமாக சிந்திக்கும் வகையில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களை பெற்றோரும், ஆசிரியர்களும் சாதாரணமாக, சிரியவர்கள் தானே என்றும் அவர்களுக்கு ஒன்றும் புறியாது என்றும் கண்டுகொள்ளாமல் இருப்பதில்லை. மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளை அவர்களின் அறிவுப்பசிக்கான பயிற்சியாகச் கருதி அவற்றிற்கு சரியான பதிலை  அளிக்கிறார்கள், அவர்களின் கேள்வியினால் எரிச்சல் அடைவதில்லை. ஆசிரியர்கள் குழந்தைகளை உருவாக்கும் உயர்ந்த பொறுப்பை தான் செய்வதாகச் கருதி அதை முழு ஈடுபாட்டுடன் செய்வதை காணமுடிகிறது.

 

    பள்ளியில் குழந்தைகளை சிரிய சிரிய விஷயங்களைக்கூட ஊக்கப்படுத்தி, பாராட்டி அவர்களுக்கு பரிசுப்பொருள், அவர்களின் பெயர் பதிந்த படங்கள், இந்த மாதத்தின் சிறந்த மாணவர் என்ற விருது என்று பல்வேறு வழிகளில் உற்சாகமூட்டுகிறார்கள். தலைமைப்பண்பை  வளர்ப்பதற்காக ஒரு விஷயத்தை எப்படி விளக்குவது (Presentating SCIWS), நிர்வகிப்பது  போன்ற பல்வேறு பயிற்சியை கொடுக்கிறார்கள்.


      இங்கே பள்ளிகளின் பாடத்திட்டம், வகுப்பறை மற்றும் கல்வியின் வசதிகள், தேர்ச்சி விகிதம் ஆகியவற்றை பொருத்து அமெரிக்க கல்விக்கூடங்கள் தரவரிசை கொடுக்கிறார்கள். இதை அனைவரும் இணைய தளத்தில் சென்று பார்க்க முடியும்.


பள்ளிக்குழந்தைகளுக்கு சாதகமாக பல்வேறு சட்டங்கள் இங்கே நடைமுறையில் உள்ளது. உதாரணமாக பள்ளி சார்ந்த இடங்களில் குறைவான வேகத்திலே தான் காரை ஓட்டவேண்டும், பள்ளி பேருந்துகள் நிற்கும்போது அவைகளை தாண்டி காரில் செல்லக்கூடாது, பள்ளி சார்ந்த இடங்களில் போதை பொருட்கள் விற்பது கடுமையான குற்றம் போன்ற பல்வேறு சட்ட விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. பள்ளியில் குழந்தைகளுக்கு எப்படி அவசரத் தேவைக்கு போலீசை கூப்பிடுவது குழந்தை மற்றும் பெற்றோரின் உரிமைகள், போன்ற பல்வேறு விஷயங்களை பயிற்சி கொடுக்கிறார்கள். பெற்றோரோ  / ஆசிரியரோ குழந்தைகளை கை நீட்டி அடிப்பது இங்கே பெரிய குற்றமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குழந்தையை பெற்றோர் எவ்விதம் நடத்துகிறார்கள் என்பதை பள்ளி ஆசிரியர்கள் கவனமாக கேட்டு அறிகிறார்கள். பெற்றோர் அடித்ததாக குழந்தை கூறினால் ஆசிரியர்கள் போலீசுடன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். குழந்தைகளை கவனக்குறைவாக நடத்தியதற்காக எனக்குத் தெரிந்து சில இந்தியப் பெற்றோர்கள் கைது  செய்யப்பட்டுள்ளார்கள்.


       குழந்தைகள் தவறு செய்தால் பள்ளியிலும், வீட்டிலும் தனிமையில் வைத்து பேசாமல் விட்டுவிடுவார்கள். இதை டைம் அவுட்  என்று அழைக்கிறார்கள். இதையே குழந்தைகள் தவறு செய்யும் போது டைம் அவுட் கொடுத்துவிடுவதாகக் கூறி மிரட்டுவார்கள்.



  பாலியல் கல்வி :
                        இங்கே பாலியல் கல்வி பள்ளியிலேயே சொல்லிக்கொடுக்கப்படுகிறது. 5 - வது  அல்லது 6 - வது வகுப்பில் இரண்டுவாரம்  பாலியல் கல்வி குறிப்பிட்ட நேரங்களில் பெற்றோரின் அனுமதியுடன், பெற்றோர் சம்மதித்த குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. பெற்றோர்கள் அனைவரும்  இதற்கு சம்மதிக்கிறார்கள். பாலியல் கல்வி ஆண்களுக்கு ஆண் ஆசிரியரைக் கொண்டும், பெண்களுக்கு பெண் ஆசிரியரைக் கொண்டும் தனித்தனியே நடத்தப்படுகிறது.  பாடங்கள் வகுப்பிற்குத் தகுந்தாற்போல் பனிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 

-தொடரும்

-ச.பார்த்தசாரதி 


by Swathi   on 22 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.