LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- அமெரிக்க அணுகுமுறை

கல்வி ஒரு பார்வை -8

இதுவரை அமெரிக்க ஆரம்பக் கல்வி குறித்து விரிவாகப் பார்த்தோம். தொடரில் ஓர் இடைச்செருகலாக சில விஷயங்களை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். அமெரிக்க ஆரம்பக் கல்வியிலுள்ள நல்ல நடைமுறைகளை மட்டும் தொகுதிருப்பதன் மூலம், அமெரிக்கக் கல்விமுறை உலகின் தலைசிறந்தது எனக் கருதிவிட வேண்டாம். இங்கும் பல்வேறு பிரச்சினைகள் இறக்கத்தான் செய்கிறது. ஆனால், அவையனைத்தும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள்.  இங்குள்ள பெரும்பாலான இந்தியர்களைக் கேட்டால், என் குழந்தை வளர்ந்து விவரம் தெரிவதற்குள் இந்தியா சென்றுவிட வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோலவே, ஒவ்வொரு ஆண்டும் பலர் இந்தியா திரும்புகிறார்கள், இதற்குக் காரணம் பெரும்பாலும் “இந்திய கலாச்சாரத்தில் குழந்தைகள் வளர வேண்டும்” என்று நினைப்பதேயாகும்..

நம்முடைய கல்விமுறையில் நாம் நிவர்த்தி செய்ய வேண்டிய விஷயங்கள் பல இருந்தாலும், இது மோசமானது என்று கருதிவிட முடியாது. இதில் பல தேவையான மாற்றங்களையும், புதிய உத்திகளையும் துணிவுடம் திட்டமிட்டு மேற்கொண்டால் சிறப்பான பலனைத் தரும்.  இன்றைய நம் அமைப்பில் எந்த விஷயத்தைத் திட்டமாகச் செயல்படுத்தினாலும், முழுமையான நடைமுறை சாத்தியங்களையும், செயல்படுத்தும்போது ஏற்படும் சவால்களைச் சமாளிக்கும் வழிமுறைகளையும் திட்டமிடாமல் ஆரம்பித்தால் நடைமுறைக் குழப்பங்களால் பல நல்ல திட்டங்கள் முடங்கிப் போய் விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் புதிய விஷயங்களைச் செய்யும்போது, ஒரு நாளில், ஒரு மாதத்தில் செயல்படுத்த முனைவதும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்துகிறது.
 
உதாரணமாக, செயல்முறை வழிக் கல்வியை எடுத்துக் கொண்டால் அது மிகவும் சிறந்த திட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  ஆனால், சில நடைமுறைக் குழப்பங்களால், பெற்றோர்கள் மத்தியில் பல அச்சங்களை அது ஏற்படுத்துகிறது.  கல்வித்துறை சார்ந்த புதிய திட்டங்களைக் கொண்டு வரும்போது கல்வித்துறை அதிகாரிகளையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், பள்ளி நிர்வாகிகளையும், பொதுமக்களையும், மாணவர்களையும் தகுந்த ஊடகங்கள் மூலம் தயார்படுத்தி ஒருமித்த கருத்துடன் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதும், ஆசிரியர்கள் தகுந்த எண்ணிக்கையில் இல்லாதபட்சத்தில் அதை நிவர்த்தி செய்து, பின்னர் திட்டங்களைச் செயல்படுத்துவதும் பயனுள்ளதாக அமையும்.
 
இன்றும்கூட  சில அரசு பள்ளிக்கூடங்களில், ஒரு மாணவர்கூட வெற்றி பெறாத பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன.  இவைகளைக் கண்காணித்துக் காரணங்களை ஆராய்வதும், சிறப்பாக விளங்கும் அரசு பள்ளிகளை இனம் கண்டு, ஊக்கப்படுத்தி, அவற்றை வெளியுலகிற்கு  அடையாளம் காட்டுவதும் கல்வித் துறையின் கடமையாகும்.  பள்ளி மற்றும் கல்லூரிகளை , தரம் சார்ந்து தரவரிசை பிரிப்பதும் மிகவும் பயன்தரும்.  இன்றைய மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.  இன்றைய கணிப்பொறி யுகத்தில் மாணவர்கள் பல விஷயங்களை சிறுவயதிலேயே எளிதாகத் தாங்களாகவே தெரிந்து வசதிகள் இருக்கிறது. எனவே, ஆசிரியர்களும் இம்மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு, மாணவர்களுக்கு சலிப்பு வராத வகையில் பாடம் நடத்தும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். 
இன்றைய நம் கல்வியை மக்களும், கல்வி நிறுவனங்களும் அறிவுப் பசிக்குத் தீனிபோடும் இடமாக இல்லாமல், வயிற்றுப் பிழைப்பிற்கு வழி செய்யும் இடமாகப் பார்பதாக இருந்து வருகிறது. இது உண்மையிலேயே வறுமையில் இருப்பவர்களின் எதிபார்பாக இருந்தால் அதில் தவறில்லை. காரணம், வயிற்றுப் பசிக்குப் பிறகுதான் அறிவுப்பசி சாத்தியமாகும் எனக் கருதலாம். ஆனால், பெற்றோர் இருவரும் நல்ல வேளையில் இருந்தாலும், குழந்தைகள் 'என்ன திறமையை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைவிட, எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பதிலேயே அக்கறை செலுத்துவது சமுதாயத்திற்கும், அக்குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. நண்பர்களே! வளமான், வசதியான, நிறைவான வாழ்க்கை வாழ, அனைவரும் டாக்டர் பட்டமோ, கல்லூரியில் தங்கப் பதக்கமோ, வகுப்பில் முதல் மாணவராகவோ, வெளிநாட்டுப் படிப்புமோ பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை.
இவைகள்  அனைத்தும் இருந்தும்கூட, பலர் தங்களை வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள இயலாமல் சிரமப்படுவதைக் காண முடிகிறது. எனவே, கல்வி வளமான வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள உதவுமே தவிர, அக்கல்வியைக் கொண்டு தனிநபர் தன்னை எப்படி வளர்த்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே வாழ்க்கை அமைகிறது. உதாரணமாக, கல்வி கல்வி மொழியறிவை போதிக்குமானால் அந்த அறிவைக் கொண்டு கண்ணதாசனின் கவிதைகளையும், டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி-யின் உத்வேக எழுத்துக்களையும் படித்து, தன் அறிவை, ரசனையை விசாலமாகிக்கொள்வது ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது.
'ஏன் கல்வி சம்மந்தமில்லாத நூல்கலைப் படிக்க வேண்டும்?  அவை அரையாண்டுத் தேர்விலோ, ஆண்டு இறுதித் தேர்விலோ மதிப்பெண்களை உயர்த்த போவதில்லையே' என்று ஒரு மாணவர் நினைத்தால், கல்வியின் நோக்கம் அங்கேயே தகர்ந்துவிடுகிறது. டாக்டர்.அப்துல்கலாமிற்கும், கவிதைக்கும் என்ன சம்பந்தம்? எப்படி எதற்கெடுத்தாலும் திருக்குறளை அவரால் உதாரணம் காட்ட முடிகிறது?   ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் குரானை மட்டுமின்றி பகவத் கீதையையும், பைபிளையும் நன்கு கற்று அவற்றை மேற்கோள் காட்டுகிறாரே என்றால், அதுதான் கல்வியின் உண்மையான நோக்கம்.  கல்விக்கூடங்கள் மனிதனைப் பண்படுத்தும் பட்டறைகளாக இருக்க வேண்டும்.  இதில் மதிப்பெண் என்பது கல்வியின் ஒரு பகுதியே தவிர அதுமட்டுமே கல்வியின் நோக்கமல்ல.
ஒருவர் வெற்றிகரமாக வாழ்வை அமைத்துக் கொள்ள அறிவில் சிறந்தவராகவும், புத்திக்கூர்மை உடையவராகவும், மனிதர்களை நேசிப்பவராகவும், படிப்பில் தேறியவராகவும் இருந்தாலே போதுமானது. நான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரைச் சந்திக்கும்போது அடிக்கடி கூறுவது, "வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவதற்கு முயன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிடைக்கும் பல நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டு விடாதீர்கள்.   ஆடல், பாடல் , பேச்சுப்போட்டி, கல்லூரி மலரில் ஓவியம் வரைவது, கதை, கவிதை எழுதுவது, விளையாட்டு என பல விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.  இறுதியாண்டு முடிவதற்குள் உங்களிடம் ஒளிந்து கிடக்கும் தனித்திறமையை அடையாளம் காணுங்கள் என்பதாகும்.
நண்பர்களே!  வாழ்க்கை ரசனையாக, திருப்தியாக, வெற்றிகரமாக அமைய வேண்டுமென்றால் படிப்புடன் சேர்த்து, பிடித்த ஒரு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது,  நூல்களை வாசிப்பதாகக் கூட இருக்கலாம்.
இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் பலருக்கு தமிழ் படிக்கத் தெரியாது, பேசத்தெரியாது, எழுதத் தெரியாது, அல்லது எதுவுமே தெரியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சரி, இவர்கள் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர்களா என்றால் அதுவும் இல்லை. ஆங்கிலத்தையும், கல்விக்காக கற்றவர்கள்.  இன்று பல்வேறு இளைஞர்களை கேட்டால் "நேரம் போதவில்லை "  போர் அடிக்கிறது, என்ன செய்வதென்றே தெரியவில்லை ... " என்பதில் தொடங்கி, கடைசியில் கைநிறைய சம்பாதித்தாலும் சலிப்புற்ற மனிதர்களாகிவிடுகிறார்கள். இதற்க்குக் காரணம், பிடித்த விஷயம் என்ற ஒரு கலையை அல்லது திறமையை வளர்த்துக் கொள்ளததேயாகும்.  இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைக்காட்சி நிகழ்சிகளில் சிக்கி காணாமல் போய்விடுகிறார்கள்.
இன்றைய நம் அவசியத் தேவை, ஆசிரியர்களும், பெற்றோர்களும், கணிப்பொறி போன்ற பாடங்களை வேலைக்காகவும், மொழிகால்வியை வாழ்க்கைக்காகவும் கற்க வேண்டும் என்பதை மாணவ சமுதாயத்திடம் வலியுறுத்தவேண்டும். இதை நாம் செய்யவில்லை எனில் இன்றைய பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து, வாழ்வியல் பிரச்சினைகள் அதிகரித்துவிடும்.
ச. பார்த்தசாரதி
                                                                              -தொடரும்

-ச. பார்த்தசாரதி

by Swathi   on 23 Sep 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
03-Aug-2014 13:01:49 SALEM ARULPRAKASH.A said : Report Abuse
American Education System Ninaithal Pirammippa ierukku. Inku Kalviyai Viyaparama Mathittanga... Intha Nilaiyaium Mathi Kattuvum... Pathivu Nandri Iyya.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.