LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தொடர்பான வழக்கு: பெண் நீதிபதியின் மாறுபட்ட கருத்து

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது  தொட.ர்பான வழக்கில் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், அந்த அமர்வில் இருந்த ஒரே ஒரு பெண் நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.


கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில்  தொடரப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.


5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதில் நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். தீபக் மிஸ்ராவுடன் கன்வில்கர் இணைந்து அளித்த தீ்ர்ப்பை, நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.


இந்த அமர்வில் இருக்கும் ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். எனினும் ஐந்து நீதிபதிகளில் 4 பேர் ஒரே கருத்தை கொண்டு இருப்பதால் அந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 


நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனது தீர்ப்பில் கூறியதாவது:
‘‘மதரீதியான பழக்கங்களுடன் பெண்களுக்கான சம உரிமையை தொடர்பு படுத்த முடியாது. மதரீதியான பழக்கங்களை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துவோர் தான் முடிவு செய்ய வேண்டும்.


மதநம்பிக்கையுடன் பகுத்தறிவு, மாறும் சூழல் போன்றவற்றை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு சமூகமும் பின்பற்றி வரும் மத நம்பிக்கையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது.


இந்தியா பல்வேறு மக்கள் வாழும் நாடு. அவர்களது நம்பிக்கையை பின்பற்ற அரசியல் சட்டம் அவர்களுக்கு உரிமை வழங்கியுள்ளது. ஒருவரது நம்பிக்கையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு சமூகத்தில் பெரும் தீங்கு நிலவினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.


தற்போதைய தீர்ப்பு என்பது சபரிமலையுடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இது மேலும் விரிவடையும். மிக ஆழ்ந்த மத நம்பிக்கையை இதுபோன்று சர்வசாதாரணமாக புறந்தள்ள முடியாது. மத நம்பிக்கை பெண்ணுரிமையுடன் ஒப்பிட முடியாது. இது முழுக்க முழுக்க வழிபாட்டு உரிமை. அதனை அவர்களே முடிவு செய்ய இயலும். நீதிமன்றம் இதில் தலையிட எந்த வாய்ப்பும் இல்லை.


கணவரின் சிதையுடன் பெண்களை உயிருடன் எரியூட்டும் கொடூரமான சதி போன்ற பழக்கத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால் சபரிமலை கோயில் நம்பிக்கை என்பது வேறானது. தான் நம்பும் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை அனைவருக்கும் உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

by Mani Bharathi   on 29 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
01-Oct-2018 13:21:56 கி.Krishnaswamy said : Report Abuse
Yes. What ever she said is correct. I fully endorse her views. It is correct to say that, no one can intervene the rights of the temple. From the historic period the temple [Iyppa] authorities has taken the view that, as per Akkama shastras, Ladies between 10 to 50 years[for the cleanness of the temple] are not allowed in the temple. Then tomorrow, the other religion will fight for their entrance to the temple as saying all are equal before the law!!! Then what we have to say. When the law is admitting the board saying only HINDUS are allowed in the Sanctom, what about other religion people if they want to go inside and object for the said board.? Further, in mosques the Muslim ladies are not allowed by the mosque authorities. How, it is going to be solved the issue by the court and whether the Muslim Khazies going to accept it. Let us wait and see. Religious is separate and Constitutional rights is separate.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.