|
|||||
மே 24-ம் தேதி ஜப்பானில் வெளியாகிறது டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் |
|||||
![]()
சசிகுமார் நடித்துள்ள ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மே 24-ம் தேதி ஜப்பானில் வெளியாகவுள்ளது.
மே 1-ம் தேதி வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. முதல் நாளில் குறைவான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியைக் கடந்துவிட்டது. மேலும் கேரளா, கர்நாடகா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை ஜப்பானிலும் வெளியிடவுள்ளது படக்குழு. மே 24-ம் தேதி ஜப்பானிலும் வெளியாகும் என்று இப்படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தரான அகிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மூன்று மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்திருந்தார்.
|
|||||
by hemavathi on 18 May 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|