|
||||||||
இந்து மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு |
||||||||
தோற்றம்: ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க, உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளில் பணியாற்றிய அர்ஜுன் சம்பத் என்பவரால் 1993 ஆம் வருடம், இந்து மக்கள் கட்சி அமைப்பு ரீதியாக தொடங்கப்பட்டது. கட்சியின் கோரிக்கைகள்: சாதி வெறியை தூண்டும் சங்கங்களை தடைசெய்ய வேண்டும், மதுக்கடைகளையும், போதை பொருட்களையும் தடைசெய்ய வேண்டும்,ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்அனைத்து சூதாட்டங்களையும் தடைசெய்ய வேண்டும்,அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை,ஆபாசமாக பெண்களை சித்தரிக்கும் சினிமா, பத்திரிக்கைகளை தடைசெய்ய வேண்டும்,ஆலயங்களின் நிர்வாகத்தை அரசு மற்றும் அரசியல் சார்பற்ற அறவோர் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்,காவிரி நதி நீரில் தமிழகத்திற்குரிய பாரம்பரிய உரிமைகளை காப்பற்ற வேண்டும்,கச்சத் தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் போன்ற கோரிக்கையை இக்கட்சி விடுத்தது. அரசியல் நிகழ்வுகள்: தமிழ் திரைப்பட நடிகர்கள் பலர் மீது மதரீதியான மற்றும் பண்பட்டு ரீதியான புகார்கள் கொடுத்துள்ளது.கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்கவும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப்புலிகளை ஆதரித்தும் போராடிவருகிறது. |
||||||||
by Swathi on 29 Aug 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|