|
||||||||
மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு |
||||||||
![]() மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியறல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் சின்னம்: மனிதநேய மக்கள் கட்சியின் சின்னமாக ரயில் என்ஜினை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. கட்சியை தொடங்கியவர்: இதன் தலைவர் J.S ரிபாயி, இவரே இக்கட்சியை தொடங்கியவர் ஆவர். பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி, பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் மூத்த தலைவர் M.H.ஜவாஹிருல்லாMLA, மூத்தசெயலாளர் ஹைதர் அலி, இணை பொதுச் செயலாளர் ஹாரூண் ரஷீத் துணைப் பொதுச் செயலாளர் ஆர்.சரவணன் எம்.எ.பி.எல் அமைப்புச் செயலாளர்கள் பி.ஜோசப் நொலஸ்கோ, பி.செல்லச்சாமி. அதிமுகவுடன் கூட்டணி: 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா. ஜவாஹிருல்லாவும் வெற்றிபெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
||||||||
by Swathi on 28 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|