|
||||||||
புதிய தமிழகம் கட்சியின் அரசியல் வரலாறு |
||||||||
![]() புதிய தமிழகம் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. தொடங்கியவர்: புதிய தமிழகம் கட்சி 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் துவக்கப்பட்டது.கட்சியின் 13-ஆம் ஆண்டு பிரசாரம்: சென்னை மாநகரில் பல நூறு ஆண்டு காலம் பூர்வீகமாக வாழ்ந்த ஏழை,எளிய மக்களை கூவத்தை அழகுபடுத்துகிறோம், என காரணம் காட்டி நகரின் மைய பகுதிகளிலிருந்து பல கிலோ மீட்டருக்கு அப்பால் குப்பை கூழங்களை அகற்றுவதுபோல அகற்றிய தமிழக அரசின் மனிதாபிமானமற்ற செயலை கண்டித்தும், சட்டமன்ற மேலவைத் தேர்தலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சென்னை உட்பட வடக்கு மாவட்டங்கள் பட்டியலின மக்கள் ஒன்று சேர்வது புதிய தமிழகம் கட்சிக்கு வலு சேர்க்கின்றது. எண்ணற்றோர் தினமும் இதே போன்று புதிய தமிழகம் கடசியில் இணைந்து வருகிறார்கள். இதனால் புதியதமிழகம் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். |
||||||||
by Swathi on 28 Aug 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|