LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல் வரலாறு Print Friendly and PDF
- கட்சிகள் (Political Parties )

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வரலாறு

தமுமுக என அழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும்.


தோற்றம்:


     இது 1995 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 1ம் தேதி பேரா. ஜவாஹிருல்லா, பி.ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர், செ.ஹைதர்அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்களால் தொடங்கப்பட்டது.பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை வருடந்தோறும் பொதுகூட்டங்கள் நடத்தி வருவதோடல்லாமல் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று போராட்டங்கள் பலவற்றையும் நடத்தி வருகிறது. தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடை வழங்க போராடிய முஸ்லிம் இயக்கங்களுள் முதன்மையானதாக உள்ளது.


சமுகப்பணிகள்:


     தமிழகம் முழுவதும் 99 அவசர ஊர்திகளுடன் சாதி,மத பேதமின்றி சேவையாற்றும் ஒரேஅமைப்பு இதுவாகும். தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் த.மு.மு.கவின் சமுகப்பணிகளை பாராட்டி, த.மு.மு.கவின் அவசர கால ஊர்தி பணியை வெகுவாக பாராட்டிய முதல்வர் தனது சொந்த செலவில் 2 அவசர ஊர்திகளை த.மு.மு.கவிற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.அதிக எண்ணிக்கையில் இரத்ததான செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை குவித்துள்ளது.


நிதி உதவிகள்:


     ரம்ஜான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய நிதியுதவிகளை செய்து வருகின்றன இரத்த தானம், ஏழைகளுக்கான இலவச திருமணம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இஸ்லாமிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறது. தேர்தல் மற்றும் பொது பிரச்சினைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

by Swathi   on 29 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்.... தமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்....
2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம் 2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம்
2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான  ஓட்டு விகிதங்கள் 2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான ஓட்டு விகிதங்கள்
தமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு தமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு
2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம்
தமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும்
காந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு காந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.