|
||||||||
வந்துவிட்டது திருக்குறளுக்கான சிறப்புப் பதிப்பகம்! |
||||||||
இதுவரை வெளிவந்துள்ள திருக்குறள் நூல்கள் எத்தனை?
அவை வகைப்படுத்தப்பட்டு இணையத்திலும், நேரடியாகவும் சென்று வாங்க ஏதும் கட்டமைப்பு உள்ளதா?
திருமணங்கள், பிற நிகழ்ச்சிகளுக்குப் பரிசாகத் திருக்குறள் சார்ந்த ஒன்றைக் கொடுக்க விருப்பம், எங்கு கிடைக்கும்?
இப்படியான கேள்விகளுக்கு இதுவரை விடையில்லாமல் இருந்தது. ஒவ்வொரு பதிப்பகமும் 5-10 திருக்குறள் நூல்கள் , சில தனி மனிதர்கள்... சில நூல்கள் என்று உலகெங்கும் திருக்குறளுக்காக எழுதப்பட்ட நூல்கள் ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கும் நிலையில், தேடுபவர்களுக்கு, தேவைப்படும்போது , தேர்ந்தெடுத்துப் படிக்க அவை ஒரே இடத்தில் கிடைப்பதில்லை.
திருக்குறளுக்கு இருக்கும் வாசகர்கள் வேறு என்பதை உணர்ந்து பிற தலைப்புகள் இல்லாத திருக்குறள் சார்ந்த நூல்களை மட்டும் தொகுக்கப்பட்டு ஒரு பதிப்பகம், இணையதளம் கொண்டுவரவேண்டும் என்று வலைத்தமிழ் குழு கடந்த ஆண்டு திட்டமிட்டது. காணக்கிடைக்காத பழைய திருக்குறள் நூல்கள், ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், உரைகள், பிற மொழிகள், பிற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் , பரிசுப் பொருள்கள், சிலைகள் என்று அனைத்தையும் தொகுக்கத் திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ளோம்.
நீங்கள் எழுதிய திருக்குறள் நூல்களை, உங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ள திருக்குறள் நூல்களை மட்டும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். திருக்குறள் சார்ந்த புதிய சிந்தனைகளை, பரிசுப்பொருள்களை உருவாக்கியுள்ளீர்களா? தொடர்புகொள்ளுங்கள். https://estore.valaitamil.com/ தளத்தில் பட்டியலிட ஏற்பாடு செய்கிறோம். இணையதளம் அதற்கேற்பத் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் வகைப்படுத்தப்பட்டு வெளிவரவிருக்கிறது.
இங்குத் திருக்குறள் நூல்கள் மட்டுமல்லாது, திருக்குறள் சார்ந்த அனைத்துப் பரிசுப் பொருள்களும் கிடைக்கும் வகையில் திருக்குறள் பரவலாக்கத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. திருக்குறள் சார்ந்த அனைத்தும் இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும், கிடைக்காததைக் கொண்டுவந்து சேர்க்கவும் தனிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இனி நீங்கள் வெளியிடும் திருக்குறள் நூல்கள் உங்கள் அலமாரியில் இருக்கவேண்டியதில்லை. உலகிற்குக் கொண்டுசெல்ல வலைத்தமிழ் பதிப்பகம் வந்துவிட்டது.
திருக்குறளை வாழ்வியலாகத் தமிழ்ச்சமூகம் பின்பற்றத் திருக்குறளை எல்லாமுமாகப் பயன்பாட்டில் கொண்டுவருவோம். வாருங்கள்..
வலைத்தமிழ் பதிப்பகம்
திருக்குறளுக்கான சிறப்புப் பதிப்பகம்
Email: eStore@ValaiTamil.com | WhatsApp: +91 73055 71897
https://estore.valaitamil.com/
https://www.kuralworld.org/
|
||||||||
by hemavathi on 31 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|