LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

திணைமொழி ஐம்பது

 

இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டு பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். 
நூல்
1. குறிஞ்சி
புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்
புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்
வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா
யானை யுடைய கரம். 1
கணமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ
புனமும் அடங்கின காப்பு. 2
ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்
பாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை. 3
ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி
மேனி பசப்புக் கெட. 4
விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்
வரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர்
வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர். 5
யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
|ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்
காணினும் காய்வர் எமர். 6
யாழும் குழலும் முழவும் இயைந்தன
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்
ஊரறி கெளவை தரும். 7
வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்
சோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம்
போந்த(து)இல் ஐய! களிறு. 8
பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவான்கொல் தோழ!
கணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும்
அணிநிற மாலைப் பொழுது. 9
பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்
எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்
புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து. 10
2, பாலை
கழுநீர் மலர்க்கண்ணாய்! கெளவையோ நிற்கப்
பொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்
அழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றி
வழிநீர் அறுத்த சுரம். 11
முரிபரல வாகி முரணழிந்து தோன்றி
எரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர் !
அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார்யார் தேரும் இடத்து. 12
ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்
பொலந்தொடீஇ பொய்த்த குயில். 13
புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
வருநசை பார்க்கும்என் நெஞ்சு. 14
சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி !
முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)
ஆர்பொருள் வேட்கை அவர். 15
கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலர
இருஞ்சிறை வண்டினம் பாலை முரல
அரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல் மடவாய்
விரும்புநாம் செல்லும் இடம். 16
கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்
வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்
எல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ
நல்கா துறந்த நமர். 17
கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்
வெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்(கு)
எதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே
உதிர்வன போல உள. 18
கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்
நிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!
முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோ
வளையொடு சோரும்என் தோள். 19
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்
பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்
கூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள்
ஆற்றுங்கொல் ஐய நடந்து. 20
3. முல்லை
அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்
வந்தார் திகழ்நின் தோள். 21
மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்(று) என்னாங்கொல்
நன்னுதல் மாதராய்! ஈதோ நமர்வருவர்
பல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்(து)
இன்னிறம் கொண்ட(து)இக் கார். 22
சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிதோ
வெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்
தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து
இன்றையில் நாளை மிகும். 23
செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீர்இதோ
வஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால்
வெஞ்சினம் பொங்கி இடித்(து)உரறிக் கார்வானம்
தண்பெயல் கான்ற புறவு. 24
கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்த
உருகு மடமான் பிணையோ(டு) உகளும்
உருவ முலையாய்! நம் காதலர் இன்னே
வருவர் வலிக்கும் போது. 25
இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலி
சுருங்கொடி முல்லை கவின முழங்கிப்
பெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார்
பொருந்த நமக்குரைத்த போழ்து. 26
ஆயர் இனம்பெயர்த்(து) ஆம்பல் அடைதாய்
பாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்து
மாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலை
செயவர் செய்த குறி. 27
அதிர்குரல் ஏறோ(டு) அலைகடல் மாந்தி
முதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக்
கதிர்மறை மாலை கனைபெயல் தாழப்
பிதிரும் முலைமேல் கணங்கு. 28
கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக்
காடெலாம் கார்செய்து முல்லை அரும்(பு)ஈன
ஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்!
போதராய் காண்பாம் புறவு. 29
அருளி அதிரக் குருகிலை பூப்பத்
தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற
வரிவனைத் தோளி! வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்த(து)இக் கார். 30
4. மருதம்
பழனம் படிந்த படுகோட்(டு) எருமை
கழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு)
உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்
கிழமை யுடையன்என் தோட்டு. 31
கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து)
இணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும்
பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன்
இணைத்தான் எமக்குமோர் நோய். 32
கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!
உடைய இளநலம் உண்டாய் - கடைய
கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி
எதிர்நலம் ஏற்றுநின் றாய். 33
செந்நெல் விளைவய லூரன் சிலபகல்
தன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண!
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்
வாரிக்குப் புக்குநின் றாய். 34
வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும்
கூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன்
மாணிழை நல்லார் இளநலம் உண்டவர்
மேனி ஒழிய விடும். 35
செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர!
நொந்தான்மற்(று) உன்னைச் செயப்படுவ(து) என்னுண்டாம்
தந்தாயும் நீயே தரவந்த நன்னலம்
கொண்டாயும் நீஆயக் கால். 36
பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கேள்
நெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள்
எல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போல
நல்லஅருள் நாட்டம்இ லேம். 37
நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண!
சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீ
எல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்
சொல்லுமவர் வண்ணம் சோர்வு. 38
கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம்
பெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்
விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்
கரும்பின்கோ(து) ஆயினேம் யாம். 39
ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும்
தீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும்
தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்
தாமரை தன்ஐயர் பூ. 40
5. நெய்தல்
நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்
செய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்!
ஐயகொல் ஆன்றார் தொடர்பு. 41
முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை
தத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப!
சித்திரப் பூங்கொடி அன்னாட்(கு) அருள்ஈயாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு. 42
எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ
நெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன்
அறிவுஅறா இன்சொல் அணியிழையாய்! நின்னில்
செறிவுஅறா செய்த குறி. 43
இளமீன் இருங்கழி ஓதம் உலாவ
மணிநீர் பரக்கும் துறைவ! தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்
நினைநீர்மை இல்லா ஒழிவு. 44
கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம்
படமணி அல்குல் பரதர் மகளிர்
தொடலைசேர்த்(து) ஆடும் துறைவ! என்தோழி!
உடலுள் உறுநோய் உரைத்து. 45
முருகியல் கானல் அகன்கரை யாங்கண்
குருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்ப
மருவி வரலுற வேண்டும்என் தோழி
உருவழி உன்நோய் கெட. 46
அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான
மணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத்
துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!
தணியும்எள் மென்தோள் வளை. 47
கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப
வறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க
நிறங்கூரும் மாலை வரும். 48
மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு. 49
பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்
புகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும் முன்றில்
தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி
திகழும் திருஅமர் மார்பு. 50
திணை மொழி ஐம்பது முற்றிற்று.

இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டு பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். 

நூல்

1. குறிஞ்சி

புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டாயானை யுடைய கரம். 1
கணமுகை கையெனக் காந்தள் கவினமணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோபுனமும் அடங்கின காப்பு. 2
ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்பாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்பூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலாஈங்கு நெகிழ்ந்த வளை. 3
ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக்கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்வானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழிமேனி பசப்புக் கெட. 4
விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்வரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர்வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்கல்லிடை வாழ்நர் எமர். 5
யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்|ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்காணினும் காய்வர் எமர். 6
யாழும் குழலும் முழவும் இயைந்தனவீழும் அருவி விறன்மலை நன்னாட!மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்ஊரறி கெளவை தரும். 7
வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்சோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம்போந்த(து)இல் ஐய! களிறு. 8
பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்கமணிமலை நாடன் வருவான்கொல் தோழ!கணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும்அணிநிற மாலைப் பொழுது. 9
பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னைசெலவுங் கடிந்தாள் புனத்து. 10

2, பாலை

கழுநீர் மலர்க்கண்ணாய்! கெளவையோ நிற்கப்பொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்அழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றிவழிநீர் அறுத்த சுரம். 11
முரிபரல வாகி முரணழிந்து தோன்றிஎரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர் !அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்தெரிவார்யார் தேரும் இடத்து. 12
ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்பொலந்தொடீஇ பொய்த்த குயில். 13
புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்வருநசை பார்க்கும்என் நெஞ்சு. 14
சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி !முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)ஆர்பொருள் வேட்கை அவர். 15
கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலரஇருஞ்சிறை வண்டினம் பாலை முரலஅரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல் மடவாய்விரும்புநாம் செல்லும் இடம். 16
கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்எல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇநல்கா துறந்த நமர். 17
கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்வெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்(கு)எதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னேஉதிர்வன போல உள. 18
கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்நிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோவளையொடு சோரும்என் தோள். 19
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்கூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள்ஆற்றுங்கொல் ஐய நடந்து. 20

3. முல்லை

அஞ்சனக் காயா மலரக் குருகிலைஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்வந்தார் திகழ்நின் தோள். 21
மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்(று) என்னாங்கொல்நன்னுதல் மாதராய்! ஈதோ நமர்வருவர்பல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்(து)இன்னிறம் கொண்ட(து)இக் கார். 22
சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிதோவெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்துஇன்றையில் நாளை மிகும். 23
செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீர்இதோவஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால்வெஞ்சினம் பொங்கி இடித்(து)உரறிக் கார்வானம்தண்பெயல் கான்ற புறவு. 24
கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்தஉருகு மடமான் பிணையோ(டு) உகளும்உருவ முலையாய்! நம் காதலர் இன்னேவருவர் வலிக்கும் போது. 25
இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலிசுருங்கொடி முல்லை கவின முழங்கிப்பெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார்பொருந்த நமக்குரைத்த போழ்து. 26
ஆயர் இனம்பெயர்த்(து) ஆம்பல் அடைதாய்பாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்துமாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலைசெயவர் செய்த குறி. 27
அதிர்குரல் ஏறோ(டு) அலைகடல் மாந்திமுதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக்கதிர்மறை மாலை கனைபெயல் தாழப்பிதிரும் முலைமேல் கணங்கு. 28
கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக்காடெலாம் கார்செய்து முல்லை அரும்(பு)ஈனஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்!போதராய் காண்பாம் புறவு. 29
அருளி அதிரக் குருகிலை பூப்பத்தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்றவரிவனைத் தோளி! வருவார் நமர்கொல்பெரிய மலர்ந்த(து)இக் கார். 30

4. மருதம்

பழனம் படிந்த படுகோட்(டு) எருமைகழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு)உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்கிழமை யுடையன்என் தோட்டு. 31
கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து)இணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும்பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன்இணைத்தான் எமக்குமோர் நோய். 32
கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!உடைய இளநலம் உண்டாய் - கடையகதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரிஎதிர்நலம் ஏற்றுநின் றாய். 33
செந்நெல் விளைவய லூரன் சிலபகல்தன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண!பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்வாரிக்குப் புக்குநின் றாய். 34
வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும்கூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன்மாணிழை நல்லார் இளநலம் உண்டவர்மேனி ஒழிய விடும். 35
செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர!நொந்தான்மற்(று) உன்னைச் செயப்படுவ(து) என்னுண்டாம்தந்தாயும் நீயே தரவந்த நன்னலம்கொண்டாயும் நீஆயக் கால். 36
பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கேள்நெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள்எல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போலநல்லஅருள் நாட்டம்இ லேம். 37
நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண!சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீஎல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்சொல்லுமவர் வண்ணம் சோர்வு. 38
கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம்பெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்கரும்பின்கோ(து) ஆயினேம் யாம். 39
ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும்தீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும்தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்தாமரை தன்ஐயர் பூ. 40

5. நெய்தல்

நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்செய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்!ஐயகொல் ஆன்றார் தொடர்பு. 41
முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னைதத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப!சித்திரப் பூங்கொடி அன்னாட்(கு) அருள்ஈயாய்வித்தகப் பைம்பூணின் மார்பு. 42
எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவநெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன்அறிவுஅறா இன்சொல் அணியிழையாய்! நின்னில்செறிவுஅறா செய்த குறி. 43
இளமீன் இருங்கழி ஓதம் உலாவமணிநீர் பரக்கும் துறைவ! தகுமோகுணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்நினைநீர்மை இல்லா ஒழிவு. 44
கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம்படமணி அல்குல் பரதர் மகளிர்தொடலைசேர்த்(து) ஆடும் துறைவ! என்தோழி!உடலுள் உறுநோய் உரைத்து. 45
முருகியல் கானல் அகன்கரை யாங்கண்குருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்பமருவி வரலுற வேண்டும்என் தோழிஉருவழி உன்நோய் கெட. 46
அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலானமணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத்துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!தணியும்எள் மென்தோள் வளை. 47
கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்பிறங்கு மணல்மேல் அலவன் பரப்பவறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்கநிறங்கூரும் மாலை வரும். 48
மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கியகண்ணின் வருந்தும்என் நெஞ்சு. 49
பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்புகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும் முன்றில்தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழிதிகழும் திருஅமர் மார்பு. 50

திணை மொழி ஐம்பது முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.