LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை

 

நூல்
1. திருப்பரங்குன்றம்
குமரவேளின் பெருமை
தெய்வயானையின் கணவன்
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு 
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . 5
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்  
கடப்பமாலை புரளும் மார்பினன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை 
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து 10
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்  
சூரர மகளிரின் இயல்பு
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் 
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, 
கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், 
கோபத் தன்ன தோயாப் பூந்துகில், 15
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், 
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், 
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, 
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, 
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் 
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு . . .
இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30
வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர் 
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35
வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
'கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி 
வாழிய பெரி'ெதன்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி 40
சூரர மகளிர் ஆடும் சோலை  
காந்தளின் கண்ணி சூடிய சென்னியன்
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்  
முருகன் சூரனைத் தடிந்த வகை
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் 45
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்  
பேய்மகளின் துணங்கைக் கூத்து
உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு 50
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க  
மாமரத்தை வெட்டிய வெற்றி
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து 60
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்  
ஆற்றுப்படுத்தல்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப 65
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே  
திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி 
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70
மாடமலி மறுகின் கூடற் குடவயின் இருஞ்சேற்று 
அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் 
தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று  
2. திருச்சீர் அலைவாய்
ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல்
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக். 80
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு  
ஆறு முகங்களின் இயல்புகள்
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய 
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப 85
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே. 90
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம், 
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம். 100
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.
ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்  
பன்னிரு கைகளின் தொழில்கள்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு 105
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் 
விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை,இருகை 110
ஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப, ஒருகை 
பாடின் படுமணி இரட்ட, ஒருகை 115
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை 
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற  
அலைவாயில் ஆறுமுகன் வந்தருளியிருக்கும் காட்சி
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல 120
உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு 
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ, 
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று 125
3. திருவாவினன்குடி
முன் செல்லும் முனிவரது இயல்புகள்
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு 
வலம்புரி புரையும் வால்நரை முடியினர் 
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். 130
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135
யாவதும் அறியா இயல்பினர் மேவரத் 
துனியில் காட்சி முனிவர் முற்புக  
பாடுவார் இயல்பு
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை 
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின். 140
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர  
பாடும் மகளிர் இயல்பு
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் 145
பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க  
திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள்
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150
புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் 
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், 
நூற்றுப்பத்துஅடுக்கியநாட்டத்துநூறுபல் 155
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,  
பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய . 160
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர 165
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்  
தேவர்கள் வருகின்ற காட்சி
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் 170
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்  
முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் 175
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று,  
4. திரு ஏரகம்
இரு பிறப்பாளரின் இயல்பு
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . 180
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,  
அந்தணர் வழிபடும் முறை
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து 185
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,  
5. குன்றுதோறு ஆடல்
குரவைக் கூத்து
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் . 190
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல் 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர  
குன்றுதோறும் ஆடல்புரியும் தன்மை
விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் 
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல். 200
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு 
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 205
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . 210
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு 
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் 
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் 
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
215
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து 
குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,  
6. பழமுதிர் சோலை
முருகன் இருப்பிடங்கள்
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து 
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், 220
ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன் தைஇய வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும், 
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், 225
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்  
குறமகளின் வெறியாட்டு 
நகரில் முருகனை ஆற்றுப்படுத்தல்
மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச். 230
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி 
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் 
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 235
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை 
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க. 240
உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக் 
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் 
முருகியம் நிறுத்து முரணினர் உட்க 
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்  
முருகனை வழிபடுதல்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
245
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே  
முருகனைக் கண்டு துதித்தல்
ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக. 250
முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,
'நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ! 255
ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை 
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ! 260
மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை! 
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! 265
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து 
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! 
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! 270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்! 
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் 
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்! 
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! 275
போர்மிகு பொருந! குரிசில்!' எனப்பல 
யானறி அளவையின் ஏத்தி ஆனாது,  
கருதி வந்ததை மொழிதல்
'நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்!'எனக். 280
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்  
சேவிப்போர் கூற்று
வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,
'அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன் 
பெரும!நின் வண்புகழ் நயந்'தென 285
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்  
முருகன் அருள்புரிதல்
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி, 290
'அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர'வென
அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன் 295
அருவியின் காட்சியும் இயற்கைவளமும்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு 
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல. 300
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு 
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று 
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று 305
நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா 
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக். 310
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு 
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன 
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று 315
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.  
திருமுருகாற்றுப்படை முற்றிற்று.
தனிப் பாடல்கள்
குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்! 
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும் 
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே! 
உளையாய்! என் உள்ளத்து உறை. 
1
குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும், 
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக் 
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும், 
மெய் விடா வீரன் கை வேல்! 
2
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட 
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி 
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் 
துளைத்த வேல் உண்டே துணை. 
3
இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும், 
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் 
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட 
தனி வேலை வாங்கத் தகும். 
4
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்; 
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக் 
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும் 
வேலப்பா! செந்தி வாழ்வே! 
5
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்; 
வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில் 
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும் 
'முருகா!' என்று ஓதுவார் முன். 
6
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன் 
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன் 
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் 
நம்பியே கைதொழுவேன், நான். 
7
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால், 
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும் 
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல 
இடம்காண்; இரங்காய், இனி! 
8
பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம் 
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, - சுருங்காமல், 
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப் 
பூசையாக் கொண்டே புகல். 
9
நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை 
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல 
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி, 
தான் நினைத்த எல்லாம் தரும். 
10

நூல்

1. திருப்பரங்குன்றம்

குமரவேளின் பெருமைதெய்வயானையின் கணவன்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்குஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளிஉறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . 5மறுவில் கற்பின் வாணுதற் கணவன்  

கடப்பமாலை புரளும் மார்பினன்

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்துஇருள்படப் பொதுளிய பராரை மராஅத்து 10உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்  

சூரர மகளிரின் இயல்பு

மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், 15பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் 20செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபுபைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25துவர முடித்த துகளறு முச்சிப்பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டுஉளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு . . .இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வைதேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35வேங்கை நுண்டாது அப்பிக் காண்வரவெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்'கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரி'ெதன்று ஏத்திப் பலருடன்சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி 40சூரர மகளிர் ஆடும் சோலை  

காந்தளின் கண்ணி சூடிய சென்னியன்

மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட்பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்  

முருகன் சூரனைத் தடிந்த வகை

பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் 45சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்  

பேய்மகளின் துணங்கைக் கூத்து

உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச்சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு 50உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலைஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவரவென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55நிணம்தின் வாயள் துணங்கை தூங்க  

மாமரத்தை வெட்டிய வெற்றி

இருபே ருருவின் ஒருபே ரியாக்கைஅறுவேறு வகையின் அஞ்சுவர மண்டிஅவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து 60எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்  

ஆற்றுப்படுத்தல்

சேவடி படரும் செம்மல் உள்ளமொடுநலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப 65இன்னே பெறுதிநீ முன்னிய வினையே  

திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்

செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்பொருநர்த் தேய்த்த போரரு வாயில்திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70மாடமலி மறுகின் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்குன்றமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று  

2. திருச்சீர் அலைவாய்

ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல்

வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்வாடா மாலை ஓடையொடு துயல்வரப்படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக். 80கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு  

ஆறு முகங்களின் இயல்புகள்

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப 85நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழைசேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇஅகலா மீனின் அவிர்வன இமைப்பத்தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே. 90மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம், மந்திர விதியின் மரபுளி வழாஅ 95அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம். 100குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்  

பன்னிரு கைகளின் தொழில்கள்

ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு 105வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியதுஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;அங்குசங் கடாவ ஒருகை,இருகை 110ஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்ப,ஒருகை மார்பொடு விளங்க ஒருகைஒருகை தாரொடு பொலிய, ஒருகைகீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப, ஒருகை பாடின் படுமணி இரட்ட, ஒருகை 115நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற  

அலைவாயில் ஆறுமுகன் வந்தருளியிருக்கும் காட்சி

அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல 120உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ, விசும்பஆ றாக விரைசெலல் முன்னி,உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று 125

3. திருவாவினன்குடி

முன் செல்லும் முனிவரது இயல்புகள்

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். 130பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புக  

பாடுவார் இயல்பு

புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின். 140நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர  

பாடும் மகளிர் இயல்பு

நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் 145பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க  

திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள்

கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்றுஅழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறுவலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், நூற்றுப்பத்துஅடுக்கியநாட்டத்துநூறுபல் 155வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்துஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானைஎருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,  

பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள்

நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய . 160உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்பலர்புகழ் மூவரும் தலைவ ராகஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்தாமரை பயந்த தாவில் ஊழிநான்முக ஒருவற் சுட்டிக் காண்வர 165பகலிற் றோன்றும் இகலில் காட்சிநால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடுஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்  

தேவர்கள் வருகின்ற காட்சி

மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்புவளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் 170தீயெழுந் தன்ன திறலினர் தீப்படஉரும்இடித் தன்ன குரலினர் விழுமியஉறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்  

முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல்

தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் 175ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று,  

4. திரு ஏரகம்

இரு பிறப்பாளரின் இயல்பு

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅதுஇருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடிஅறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டுஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . 180மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்துஇருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,  

அந்தணர் வழிபடும் முறை

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்புலராக் காழகம் புலர உடீஇ,உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து 185ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்விநாஇயல் மருங்கில் நவிலப் பாடிவிரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்துஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,  

5. குன்றுதோறு ஆடல்

குரவைக் கூத்து

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் . 190அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கள் தேறல் 195குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயர  

குன்றுதோறும் ஆடல்புரியும் தன்மை

விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல். 200முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழைதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇமயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 205செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . 210கொடியன் நெடியன் தொடியணி தோளன்நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி215மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,  

6. பழமுதிர் சோலை

முருகன் இருப்பிடங்கள்

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், 220ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,வேலன் தைஇய வெறியயர் களனும்,காடும் காவும் கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், 225மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்  

குறமகளின் வெறியாட்டு நகரில் முருகனை ஆற்றுப்படுத்தல்

மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவரநெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச். 230செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் ளரிசிசில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 235பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றிநளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்திநறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடிஇமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க. 240உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்  

முருகனை வழிபடுதல்

ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்245கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கிஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்திவேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபடஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே  

முருகனைக் கண்டு துதித்தல்

ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக. 250முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,'நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனைஐவருள் ஒருவன் அங்கை ஏற்பஅறுவர் பயந்த ஆறமர் செல்வ! 255ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!இழையணி சிறப்பின் பழையோள் குழவி!வானோர் வணங்குவில் தானைத் தலைவ! 260மாலை மார்ப! நூலறி புலவி!செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை! மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! 265குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! 270அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்! மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்! சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! 275போர்மிகு பொருந! குரிசில்!' எனப்பல யானறி அளவையின் ஏத்தி ஆனாது,  

கருதி வந்ததை மொழிதல்

'நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடுபுரையுநர் இல்லாப் புலமை யோய்!'எனக். 280குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்  

சேவிப்போர் கூற்று

வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,'அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன் பெரும!நின் வண்புகழ் நயந்'தென 285இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்  

முருகன் அருள்புரிதல்

தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்திஅணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி, 290'அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர'வெனஅன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்றுஇருள்நிற முந்நீர் வளைஇய உலகத்துஒருநீ யாகித் தோன்ற விழுமியபெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன் 295

அருவியின் காட்சியும் இயற்கைவளமும்

வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்துஆர முழுமுதல் உருட்டி வேரற்பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்ததண்கமழ் அலரிறால் சிதைய நன்பல. 300ஆசினி முதுசுளை கலாவ மீமிசைநாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று 305நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழைஇளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புறமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக். 310கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டுஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று 315இழுமென இழிதரும் அருவிப்பழமுதிர் சோலை மலைகிழ வோனே.  

திருமுருகாற்றுப்படை முற்றிற்று.

தனிப் பாடல்கள்

குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்! புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும் இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே! உளையாய்! என் உள்ளத்து உறை. 1
குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும், அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக் கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும், மெய் விடா வீரன் கை வேல்! 2
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை. 3
இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும், கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட தனி வேலை வாங்கத் தகும். 4
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்; பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக் கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தி வாழ்வே! 5
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்; வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில் ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும் 'முருகா!' என்று ஓதுவார் முன். 6
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன், நான். 7
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால், ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும் கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல இடம்காண்; இரங்காய், இனி! 8
பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம் கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, - சுருங்காமல், ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். 9
நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி, தான் நினைத்த எல்லாம் தரும். 10

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.