LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

முதுபெரும் தமிழறிஞர், இலக்கண வித்தகர் முனைவர் மா.நன்னன் தம் 94 வயதில் இயற்கையெய்தினார்..

மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும், முதுபெரும் தமிழறிஞருமான திரு.மா. நன்னன் அவர்கள்  கடலூர் மாவட்டம் சாத்துக்குடலில் பிறந்த நன்னன், தமிழ்க் கட்டுரை, பாட நூல்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொலைக்காட்சியில் பல்வேறு தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். வெள்ளையன வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட  பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன் ஆகும். இவருக்கு வயது 94.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற நன்னன், எழுத்து அறிவித்தலில் 'நன்னன் முறை' என்ற புதிய முறையை உருவாக்கியவர்.


சுயமரியாதை தமிழ் வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர் மறைந்து விட்டார். இவர் தலைமை திமுக இலக்கிய அணி புரவலராகவும் அலங்கரித்தவர். தன்னைத் தமிழுக்காக முழுமையாய் அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர். நாத்திகர், மிகுந்த அன்போடு பழகும் பண்பாளர். தமிழில் பிழையின்றி எழுதப் பயிற்றுவிப்பதையே தமது இலட்சிய மாகக் கொண்டிருந்தவர். எதிரே ஆளே இல்லாவிட்டாலும் ஆள் இருப்பதுபோன்ற பாவனையில் நேயர்களைப் பார்த்து வெற்றிகரமாக தொலைக்காட்சி இலக்கண வகுப்புககள் நடத்தியவர்.


தமிழை ஆங்கிலம் கலந்து பேசுவதையும், பிழையாகப் பேசுவதையும் கண்டு மனம் வெகுண்டவர்.


தமிழுக்கு தொண்டு செய்பவர்களுக்கு என்றும் சாவு இல்லை ... தன் தமிழிபணியால் என்றும் வாழ்ந்திருப்பார் ... 

by Swathi   on 07 Nov 2017  1 Comments
Tags: Maa.Nannan   மா.நன்னன்   இலக்கண வித்தகர்              
 தொடர்புடையவை-Related Articles
முதுபெரும் தமிழறிஞர், இலக்கண வித்தகர் முனைவர் மா.நன்னன் தம் 94 வயதில் இயற்கையெய்தினார்.. முதுபெரும் தமிழறிஞர், இலக்கண வித்தகர் முனைவர் மா.நன்னன் தம் 94 வயதில் இயற்கையெய்தினார்..
கருத்துகள்
10-Nov-2017 15:47:26 இ.பு.ஞானப்பிரகாசன் said : Report Abuse
"மாடு உட்கார்ந்திருக்குங்கிறான். மாடு எப்படி உக்காரும்? மாடு படுக்கும், நிற்கும், அவ்வளவுதான். மாத்திரை எடுத்துக்குங்கங்கிறான். இது ‘டேக் தி டேப்லெட்’-ங்கிறதோட தமிழாக்கம். மாத்திரை எடுத்துக்கிட்டா எப்படி உடம்பு சரியாகும்? மாத்திரைய சாப்பிடனும்! முழுங்கனும்!" - இப்படித் தமிழில் நாம் செய்யும் இலக்கணத் தவறுகளை மட்டுமல்லாமல் மரபுப் பிழைகளையும் மனதில் பதியும்படி சுட்டிக்காட்டிய நல்லாசிரியரை இழந்து விட்டோம்! இன்று நான் ஓரளவாவது பிழையின்றி எழுதுகிறேன் என்றால் அதற்கு ஐயாவின் தமிழ்ப் பண்ணை நிகழ்ச்சிகள்தாம் காரணம். அன்னாரின் மறைவு தமிழுக்கும் தமிழர்க்கும் பேரிழப்பு!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.