LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

திருகார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்:

 

 

 

     சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும்.இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும்.

 

 

 

     கார்த்திகைத் தீபப்பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை “சுப்பிரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், மேற்கொள்கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது.இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப்பணத்தைச் செலவு செய்வதோடு, காடு, மேடு, குப்பை கூளங் களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும்.

 

 

 

மகரஜோதி:

 

 

 

     முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே,தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது.இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது.

 

 

 

     இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல்பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள். மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ''மகரஜோதி'' தரிசனம் கேரளத்தில் மிகவும் பிரசித்தம்.

 

 

 

''கார்த்திகை விளக்கிட்டனன்'':

 

      

 

     இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக்கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும்.அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும் தீப ஒளியை தரிசனம் செயவர். திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப்பெருமானுக்கு  ஏற்றப்படுகிறது. ''கார்த்திகை விளக்கிட்டனன்'' என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணிகுறிப்பிடுகிறது.

 

முருகன் :

 

முருகனுக்கு உரிய நட்சத்திர விரதமாகவும் கார்த்திகை விளங்குகிறது. திருக்கார்த்திகை அன்று தொடங்கி, தொடர்ந்து 12 ஆண்டுகள் அதாவது 144 மாதங்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம்.

விரதம்

திருக்கார்த்திகையன்று காலையில் சாப்பிடக்கூடாது. மதியம் பச்சரிசி சாதம் உண்ண வேண்டும். மாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, அரிசி மாவை மஞ்சள் நீரில் கரைத்து, சிறிது கெட்டியான பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் பெண்கள் வலது கையை நனைத்து, வீட்டுக் கதவுகளில் அப்படியே பதிக்க வேண்டும். உள்ளங்கை தரிசனம் லட்சுமி கடாட்சம் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்வதுண்டு.

மாலை ஆறு மணிக்கு மேல், வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வாசல்படியிலும், நுழைவு வாயிலிலும் குறைந்தது ஆறு விளக்குகளாவது ஏற்ற வேண்டும், அதிகபட்சமாக எவ்வளவு விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம். விளக்கின் முன் இலை விரித்து அதில் பிடி கொழுக்கட்டை, அவள், கார்த்திகை பொரி, பலம் வைத்து படைத்து இறைவனை வணங்க வேண்டும். இந்த நேரத்தில் ஓம் முருகா, ஓம் சரவண பவ என்னும் மந்திரங்களை 108 அல்லது 1008 முறை சொல்ல வேண்டும்.

சிவபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் போன்ற நூல்களைப் படிக்கலாம். இறுதியாக பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

மாலையில் மலைக்கோயில்களை வலம் வருவது குடும்பத்திற்கு நல்லது.

by Swathi   on 17 Aug 2012  1 Comments
Tags: Karthigai Deepam   கார்த்திகை தீபம்                 
 தொடர்புடையவை-Related Articles
திருகார்த்திகை தீபம் திருகார்த்திகை தீபம்
கருத்துகள்
26-Jan-2015 17:46:25 kavitha said : Report Abuse
தங்களின் தகவலுக்கு நன்றி .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.