|
||||||||
வள்ளுவரின் கடவுட் கோட்பாடு - புலவர் கு.வை. இளங்கோவன் |
||||||||
"வள்ளுவரின் கடவுட் கோட்பாடு ". புலவர் கு.வை. இளங்கோவன் . கஜலட்சுமி என்டர்பிரைசஸ் வெளியீடு .முதல் பதிப்பு 1999 மொத்த பக்கங்கள் 170 விலை ரூபாய் 35.
# இது ஒரு திருக்குறள் சம்பந்தமான புத்தகம் .
வள்ளுவரின் கடவுள் கோட்பாடு என்ன என்பதை ஆய்வு செய்து திருக்குறள் மூலமாக சொல்லப்படுகின்ற அருமையான புத்தகம் இது.
ஊழ், மனம், நிறை, கடவுள், உறவு. இயற்கை என்ற சொல்லாய்வுகளை சங்க இலக்கியம் முதல் ஆய்வு செய்தது,போல
வள்ளுவர்தம் குறட்பாவில் ஆய்வு செய்து இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது ஆசிரியரால்.
திருக்குறளில் கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம். கடவுள் உண்டுஎன்று வழிபாடுகளை ஆடம்பரமாக செய்வது ஒரு கூட்டம். கடவுள் உண்டு என்று சொல்லி தன்னை வளர்த்துக் கொள்கிறது ஒரு கூட்டம். பல குழுக்கள் கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கிறது; தன்னை வளர்த்துக் கொள்கிறது; தன்னைச் சார்த்தோரை உயர்த்துகிறது. அறியாமையால் அறியொணாக் கூட்டம் அலை மோதுகிறது.
வள்ளுவரின் கடவுட் கோட்பாடு என்ன என்பதைச் சிந்தித்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
வள்ளுவர், குறள், மனிதன், கடவுள், மனம், ஊழ் போன்றவற்றை மேலும் விளக்கினால் நூல் பெரியதாகி விடும் என்ற கருத்தில் குறைவாக எழுதியிருப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.
***
இந்த புத்தகம் கீழ்க்கண்ட தலைப்புகளில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.
1. :1 திருவள்ளுவர்.
திருக்குறள்.
கடவுட் செய்திகள்.
2. கடவுள் :
உண்டு என்பார் .
இல்லை என்பார் .
கடவுட் பெயர்கள் .
சிந்தனை .
அகராதிகள் .
உயிர் .
தத்துவ அறிஞர்கள் .
கூற்று .
கடவுள் .
வேதகாலக் கடவுள் .
சங்ககாலக் கடவுள் .
சமயங்களில் கடவுள்.
. குறள் அமைப்பு :
பாயிரம் .
அறத்துப்பால்
![]() : 4 இன்பத்துப்பால்.
4. குறட்பாவில் கடவுள் :-
1 மனிதன்
2 கடவுள் வாழ்த்து
![]() 4 பொருள் இன்பத்துப்பால்.
5. முடிவுரை:-
1 மனிதப் பிறப்பு
;2 உருவஅமைப்புகள்
3 இயற்கையும் மனிதனும்
:4 மனம்
5 அறிவு
6 அறிவுரை
:7 தெய்வம்
:8 ஊழ் .
9 வள்ளுவரின் கடவுட் கொள்கை.
**
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார்.
மனிதனாகப் பிறந்தாலும் உருவத்தால் மட்டும் மனிதனாக இல்லாமல் வாழ்க்கை நெறி முறையில் மனிதனாக வாழ வேண்டும்.
பறவைகளும். விலங்குகளும் தன் இயற்கை ஒழுங்கில் இருந்து மாறவில்லை. மனிதனின் அறிவு தன்னை மேன் மேலும் உயர்த்திக் கொள்ள வழி வகுக்க வேண்டும்!
சான்றோர், ஞானிகள் பலர் மனிதனுக்கு மட்டுமே இற்றைநாள் வரை அறிவுரை கூறிக்கொண்டே வந்துள்ளனர். அறிவுரைகளைக் கேட்கிறான் மனிதன்; படிக்கிறான் மனிதன்; மேடையில் ஏறி முழங்குகிறான் மனிதன். ஆனால் அவனது வாழ்வில் அவன் கேட்டதற்கும், படித்துதற்கும், பேசியதற்கும் சம்பந்தமே இல்லை.
ஆனால், கேட்டபடி. படித்தபடி, பேசியபடி இந்நூலாசிரியர் நடப்பவர்.
அவர் வள்ளுவரின் திருக்குறளில் இருந்து மனித வாழ்வியல் மேலும் சிறக்க, மனிதன் உயர, உலகைப் புரிந்து கொள்ள உரிய சிந்தனைகளைச் சிந்திக்க வைக்கிறார்.
கடவுள் இல்லை என்று சொல்லும் இவ்வுலகில் வள்ளுவரின் கடவுட் கோட்பாடு என்று எழுதி உள்ளார். இந்நூல் நம் சிந்தனையை நுண்மையாக்கக் கூடியது. சிறந்த ஒப்பற்ற நூல்களுள் இதுவும் ஒன்று.
கடவுள் உண்டென்று உறுதியுடன் சொல்வாரும், கடவுள் இல்லையென்று அறுதியீட்டுச் 'சொல்வாரும் உண்டு, கடவுள் உண்டென்றும், கடவுள் இல்லையென்றும் குழம்பி இருதரப்பிலும் சென்று சென்று உழலும் அறியொணாக் கொள்கையுடையவரும் உண்டு.
கடவுளின் தோற்றத்தை, கடவுளின் செயல்பாடுகளைப் பலரும் பலவிதமாகக் கூறி வத்துள்ளனர்:
பலராலும் பேசப்படுகின்ற கடவுள், அனைத்து மக்களாலும் போற்றப்படுகின்ற திருக்குறளில் காணப்படுகிறதா என்பதில் ஆர்வம் இருப்பதில் வியப்பில்லை. திருக்குறனை எழுதியதாகக் கருதப்படும் திருவள்ளுவர், குறள் கூறும் கருத்தின்படி வாழ்ந்திருக்க வேண்டும். அக்குறட்பாக்களின் செய்தியைக் கொண்டு திருவள்ளுவரைக் காண்கிறோம்.
திருவள்ளுவர். :
இத்திருவள்ளுவர் புலவர்கள் இடையில் ஆராய்ச்சிக் குரியவர். இவர் யார்? இவர் எப்பொழுது பிறந்தார்? இவர் எங்கு பிறந்தார்? இவரது பெற்றோர் யாவர்? இவரது வாழ்க்கை எத்தகையது? திருவள்ளுவர் என்று கூறப்படும் இவர்தான் திருக்குறளை எழுதினாரா? திருவள்ளுவர் கடவுள் அவதாரமாக வந்து அக்குறட்பாக்களை மனிதனுக்காக எழுதிச் சென்றாரா? என்பன போன்ற வினாக்கள் பலராலும் எழுப்பப்பட்டு, எவரும் அறுதியான முடிவை அறிவித்தாரில்லை.
இவருடைய கால ஆராய்ச்சியில் பலரும் பலவித கருத்துக்களைக் கூறியிருப்பினும் தமிழினப் பற்றுமிக்க நம் புலவர்கள் கி.மு. என்று குறளின் காலத்தைக் கூறினர். புலவர் உலகம் ஆம் என்றது. ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லையாயினும் கி.மு. என்பதே தொடர்கிறது.
திருக்குறளை எழுதியவர் ஒருவர். அவர் பெயர் திருவள்ளுவர் என்று பல காரணங்கள் கற்பித்து புலவர் உலகம் கூறியது. ஆய்வாளர்கள் கூற்றில் வியப்புக்குறியும், வினாக்குறியும் எழுந்த வண்ணம் உள்ளன.
இவரது காலமும், வாழ்க்கை வரலாறும் பலராலும் பேசப்படுகின்ற, எழுதப்படுகின்ற நிலைக்கு புலவர் உலகம் சென்றது. அதைக் கண்ணுற்ற ஆய்வுலகம் சமக்குறி கிடைக்காது தவித்துக் கொண்டுள்ளது.
திருவள்ளுவன் மனிதனா? கடவுளா? என்ற ஐயம் எழுந்தபோது முழுதும் முற்றுணர்ந்த மனிதனே என்று புலவர் உலகம் கூறியது.
ஆய்வுலகம் தனியொரு மனிதனால் எழுதப்பட்டதா என்ற ஐயத்தை எழுப்பி ஆராய்ந்து கொண்டுள்ளது.
நம் கருத்துக்கேற்ப திருவள்ளுவர் ஒரு ஆய்வுலக மனிதனே என்று கொள்வோம்- உலகம் (உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.) கூறியதற்கேற்ப இவ்வள்ளுவர் தான் திருக்குறளை இயற்றினார் எனவும் கொள்வோம்.
திருக்குறள் :
இலக்கண வகையான் குறளடி என்று புலவரால் பேசப்படும் வகையில் அமைந்து சிறப்பும் உயர்வும் மிக்க சொல்லாலும், பொருளாலும் 'திரு' என்ற அடைமொழியைத் திருக்குறள் பெற்றது. மூன்று பால்கள், பதின்மூன்று இயல்கள் 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள் என வரிசையால் பேசப்படுகின்றன.
இவற்றின் வைப்பு முறைகள் சரியில்லை; அதிகாரப் பெயர்கட்குப் பொருத்தமான குறட்பாக்கள் முழுமையாக அமையவில்லை. பால்களுக்குத் தக அதிகாரங்களும் அமைய வில்லை.இன்பத்துப்பால் வள்ளுவரால் எழுதப்படவில்லை என்பன போன்ற வினாக்களும் எழுகின்றன.
திருக்குறள் வள்ளுவரால் செய்யப்பட்டது என்றால் வள்ளுவர் தம் கடவுட் கருத்து யாதென குறள்
மூலமே அறிதல் வேண்டும்.
வழக்கும், செய்யுளும் நாடி எழுதுதல் மரபு என்பதைத் தொல்காப்பியர் காட்டியுள்ளார்.
வள்ளுவர் தம் காலத்தில் வழக்கும், செய்யுளும் ஆய்வும் நாடி குறளை யாத்தார் எனில் தவறாகாது.
மனிதன் மனிதனாக வாழ உரிய வழி முறைகளை குறள் கூறுகின்றதெனில் உண்மை - அக்கால அரசியல் அமைச்சியல், படையியல், அரணியல் கூழிபியல், படையியல். நட்பியல், குடியியல் நாடி பொருளதிகாரத்தை எழுதினார் என்றால் உண்மை.
மனித வாழ்வின் அற வாழ்வு இல்லறத்தில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்றார். துறவு எனில் துறத்தலும் துறத்தல் செயலும் இது எனத் துறவறவியலில் கூறினார்.
மனித முயற்சி எத்துணைத்தாயினும், அவரவர் செய்த செயலுக்கேற்ப பயனைப் பெறுவர் என்பதற்கு ஊழியலைப் படைத்தார். இவையாவும் வழக்கும், ஆய்வும் எனில் மிகையாகாது.
மனித வாழ்வில் தன் மனைவியுடன் துய்க்க வேண்டிய இன்பம் இத்தகைத்து என்ற அளவில் கற்பியலைக் கூறினார்.
களவியல் என்ற ஒன்று சங்க காலம் முதலாக வழக்கையை எண்ணி களவியல் கூற்றாகப் பல செய்திகளைக் கூறினார்.
கடவுட் செய்திகள். :
திருக்குறள் வழக்கும், செய்யுளும், ஆய்வும் நாடி குறளாக எழுதப்பட்டது என்பதில் மாற்றம் இல்லை. அக்கால வழக்கில் காணப்பட்ட சொற்களும், செய்திகளும் குறளில் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளன என்பதில் மறுப்பு இருக்க இயலாது.
திருக்குறளில் அவர் காலத்தில் வழக்கில் இருந்த, அவருக்கு முற்காலத்தில் பேசப்பட்டு வந்த சொற்களுள் ஏற்புடைமையை மட்டும் வள்ளுவர் கையாண்டுள்ளார். என்றால் மிகை இல்லை.
வள்ளுவர் நம்மைப் போன்ற குறையறிவு படைத்தவர் அல்லர் என்பதில் புலவர்கள் இடையில் ஒத்த கருத்து உள்ளது. முற்றும் முழுதுணர்ந்த புலவன்' தான்' வள்ளுவன். வள்ளுவன் பொய் பேசாதவன் வள்ளுவன் பிறர் புகழ் வேண்டி எழுதாதவன். பிறிதோர் சொல் வெல்லும் சொல் இல்லாமை அறிந்து எழுதினான் என்பது குறள் உண்மை.
இத்தரு வன்ளுவன் கடவுட் செய்திகளாக, வழக்கில் இன்று வரை பேசப்பட்டு வரும் சொற்களுள் கடவுள் சார்ந்த சொற்களை, மனிதன் தன் வாழ்வில் கண்ட, காண வேண்டிய உவமைகளை அக்கால வழக்குச் சொற்களை, விதை சார்ந்த சொற்களை எழுதியுள்ளான் எனில் ஐயம் எழத்தான் செய்யும்.
நாம் பிறந்த தமிழினத்தில் நம்மில் பிறந்த வள்ளுவனுக்குக் குறைவு ஏற்படவே சொல்கிறோம் என்ற எண்ணம் எழுந்தால் அது தவறானது. உண்மைகளை நம் அறிவுக் கண் கொண்டு, நம்மால் இயன்றவரை காண்பதும், பிறர்க்குக் கூறுவதும் ஆய்வாளர்கள் கடன். அவற்றை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் கற்றோரின் கடன்! கற்போரின் உரிமை.
அதன் வழி இங்கு கடவுள் பற்றிய வள்ளுவனது கருத்தை ஆய்வது தவறாகாது என்ற எண்ணத்தில்
முகிழ்த்தது இந்நூல்.
இந்நூலுள்
குறட்பாக்கள் கூறும் சொற் கருத்தையொட்டியே எழுதப்பட்டது.
ஆய்வாளர்கள், தத்துவ அறிஞர்கள், அகராதிகள்
போன்றன என்ன பொருள் கூறுகின்றது என்பதை அறிந்து செல்வோம்.
திரு.நா.கருணாமூர்த்தி -முகநூல் பதிவு
|
||||||||
|
||||||||
by Swathi on 04 Oct 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|