|
||||||||
பேரறிஞர் அண்ணா குறள் பணிகள் - சி. இராஜேந்திரன் |
||||||||
![]() பேரறிஞர் அண்ணா குறள் பணிகளை மனத்தில் இருத்தி, அவரது நினைவைப் போற்றுவோம்.
1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதலமைச்சர் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவப் படம் அனைத்து அரசாங்க அலுவலகங்கள் - கோர்ட் - காவல் நிலையங்கள் - பேருந்துகள் அனைத்திலும் இடம் பெற வேண்டும் என அரசாணை வெளியிட்டார் ( GOMS 1193 ).
*அனைவரிடத்திலும் அன்போடும் - பண்போடும் எளிமையாகப் பழகும், திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்த வேணுகோபால் சர்மா அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா. *‘ஓவியப் பெருந்தகை’* ( ஆங்கிலத்தில் - NOBLE SOUL ) என்ற பட்டத்தை அளித்துக் கவுரவித்தார்
*தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் 1968 இல் இரண்டாம் உலத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதன் விளைவாக
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகம்
ஆகிய பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கென்று ரூபாய் 3 இலட்சம் வைப்பு நிதியாக நல்கப்பட்டு, திருக்குறள் ஆய்விருக்கை அமைக்கப்பட்டது.
திருக்குறள் பணி குறித்து பேரறிஞர் அண்ணா
"நமது பெரும் பணி மூலமே, மக்களுக்கு, வாழ்க்கையிலே சந்தேகத்தை நீக்கவும், போக்கவும், நேர்மையை நிலைநாட்டவும் உதவும் இப்பெருநூலின் உண்மைப் பொருள் தெரிய முடியும்.
குறள் ஏந்திச் செல்வோம் - நாடு, நகரமெங்கும்; பட்டி, தொட்டிகளில் எல்லாம்! பண்பாடு - எது என்பதை மக்கள் அறியச் செய்வோம்!
அறம், பொருள், இன்பம் எனும் அரிய முப்பொருளை மக்கள் உணர மட்டுமல்ல; நுகரவும் பணியாற்ற வேண்டும்.
புதிய பணி இது; ஆனால் நமது பழைய பணியின் தொடர்ச்சிதான் - முற்றிலும் புதிதன்று!
அப்பணிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு - குறளின் அருமை, பெருமை பற்றி அறிஞர்கள் கூறியுள்ள கருத்துரைகளை எண்ணிப் பார்ப்பது முக்கியமான முதல் வேலையாகும்."
திராவிடநாடு கிழமை இதழ் - சனவரி 14, 1949
|
||||||||
by Swathi on 19 Sep 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|