|
|||||
உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்குத் திருக்குறள் புத்தகம் |
|||||
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தைச் சேர்ந்த, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேராவூரணி வடகிழக்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்னாங்கண்ணிக்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாட்டாணிகோட்டை வடக்கு ஆகிய பள்ளிகளில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பள்ளிகளின் தேர்வு செய்யப்பெற்ற தலா 25 மாணவர்களுக்கு உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பெற்றது.
இந்த இயக்கம் சார்பில் பள்ளிகளில் தேர்வு செய்யப்பெறும் 25 மாணவர்களைக் கொண்டு பகிரி குழுக்கள் உருவாக்கப்பட்டு திருக்குறள் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் வகையில் தயார் செய்து மாணவர்களைத் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 15000 பரிசுத்தொகை பெற்றிட ஊக்கப்படுத்துகிறார்கள். அறம் சார்ந்த பொருள் வளமிக்க நல்லிணக்கச் சமுதாயத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தோடு பள்ளிகள் தோறும் திருக்குறள் புத்தகங்களை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
பேராவூரணி ஒன்றிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில் திருக்குறள் பயிற்றுநர்கள் தஞ்சாவூர் அ.கோபிசிங் மற்றும் ஆனந்தி சரவணன் ஆகியோர் மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கி ஊக்க உரை நிகழ்த்தினார்.
பேராவூரணி திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் பாவலர் மு.தங்கவேலனார், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், த.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொன்னாங்கண்ணிக்காடு பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் தலைமையிலும் நாட்டாணிக்கோட்டை வடக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமையிலும், பேராவூரணி வடகிழக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியர் காஜாமுகைதீன் தலைமையிலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது.
நூல்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் இவ்வாண்டுக்குள் 1330 குறட்பாக்களையும் படித்து மனனம் செய்ய உறுதியேற்றுக் கொண்டனர்.
|
|||||
by hemavathi on 10 Feb 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|