நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-24
நாள்: 04/08/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-9) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியின் ஒன்பதாவதான இந்நூலில், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன், பேராசிரியர் க.ப. அறவாணன், பேராசிரியர் கு. மோகனராசு மற்றும் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் ஆகியோரது கட்டுரைகள் உட்பட 12 கட்டுரைகள் அடங்கியுள்ளது. வர்த்தமானன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது (2022).
நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் க. மாரிமுத்து
முனைவர் க. மாரிமுத்து அவர்கள் தற்போது சென்னையில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரித் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் மேலப்புஞ்சை என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தம்முடைய இளங்கலைத் தமிழ்ப் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழத் தமிழ்மொழித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, முனைவர் ஆய்வும் முடித்தவர். முதுகலைத் தமிழியல் பட்டத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர். பழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் ‘ஐந்திணை இலக்கியங்களில் அணிநலன்: பதினெண்கீழ்க்கணக்கு’ என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றுள்ளார். 'கலித்தொகைக் கவிதைமொழி’ என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டத்தினை நிறைவு செய்துள்ளார். பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், பல்நோக்கு ஆய்வுக் கட்டுரைகள் எனத் தமிழுக்காகத் தொடர்ந்து ஆற்றி வருபவர்.
|