நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-26
நாள்: 18/08/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-10) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியின் இறுதியான இந்நூலில், நீதியரசர் அரங்க மகாதேவன், தமிழாசிரியர் சா சண்முகம் ஆகியோரது கட்டுரைகள் உட்பட 16 கட்டுரைகள் அடங்கியுள்ளன. திருக்குறளின் அரிய பதிப்புகள் குறித்த இணைப்பும், திருக்குறள் சார்ந்து நடந்தேரும் கருத்தரங்கள் மற்றும் திருக்குறள் பல்வேறு பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளமை குறித்த இணைப்பும் உள்ளது. தொகுப்பாசிரியர் அரங்க ராமலிங்கம் அவர்களது கட்டுரையும் அடங்கியுள்ளது. வர்த்தமானன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது (2022).
நூல் அறிமுகம் செய்வார்: வழக்கறிஞர் பால சீனிவாசன்
வழக்கறிஞர் பால சீனிவாசன் சிறு வயது முதலேயே திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளை ஆன்மீகம், சமயம், அறவியல் எனப் பல நெறிகள் வழிக் கண்டு, நீண்ட காலமாக மேடைகளில் நயனுறப் பேசியும், பயனுற எழுதியும் வருபவர். கொங்கு நாட்டில் உள்ள 'அக்கரைக் கொடிவேரி' என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். இவர் சட்டம் பயின்று வழக்கறிஞராக செயல்படுவதோடு, கூட்டுறவியல், பொருளியல், ஆயுர்வேதம் மற்றும் சுவடியியல் எனப் பல்துறைகளில் தடம் பதித்தவர்.
|