நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-18
நாள்: 23/06/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி
நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-4) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக தொகுப்பட்டுள்ளது. 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியின் நான்காவதான இந்நூலில், சிலம்புச்செல்வர் மா பொ சி, பேரறிஞர் அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் அச ஞானசம்பந்தன் ஆகியோரது கட்டுரைகள் உட்பட 16 கட்டுரைகள் அடங்கியுள்ளன. வர்த்தமானன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது (2022).
நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் க கிரிவாசன்
முனைவர் க கிரிவாசன் அவர்கள் தற்போது, சென்னையில் உள்ள 'துவாரகாதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியில்' தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். "சங்க இலக்கியத்தில் பாணர் மரபு" என்ற தலைப்பில், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், முனைவர் பட்டம் பெற்றவர். 'அமுதசுரபியின் இலக்கிய பணிகள்' என்பது இவரது ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வாகும். "வைணவத் திருமாலைகள்" என்னும் கட்டுரை நூலும், "பெண்னே பிறந்திடு" என்னும் கவிதை நூலும் சமைத்துள்ளார். சர்வதேச அரங்குகளில், பல்வேறு பொருண்மைகளில் 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
|