LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு 6 நாட்கள் நடக்கிறது

கம்போடியா நாட்டில் செப்டம்பர் 28, 2022 முதல் அக்டோபர் 3-ம் நாள் வரை, அங்கோர் தமிழ்ச் சங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம், அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு தொண்டு நிறுவனம் மற்றும் கலாச்சாரம் நுண்கலை அமைச்சகம் இணைந்து நடத்தும் உலகத் திருக்குறள் மாநாடு -2022 நடக்கிறது. வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் கமெர் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பும் வெளியீட்டு விழாவும் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகம், மகாராஷ்டிரம் , குஜராத், தில்லி, மேற்குவங்கம் , ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள் , இசைக் கலைஞர்கள் , நாட்டியக்கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மாநாட்டின் முதல் நாள் செப்டம்பர் 29-ந் தேதியன்று நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டின் தொடக்க விழாவில், கம்போடிய அரசின் கலாச்சார மைய வளாகத்தில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கம்போடிய கெமர் மொழியில் திருக்குறள் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.

இவ்விழாவில், கம்போடியா நாட்டின் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக பல்வேறு தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல், கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம்,ஆய்வரங்கம், கலை நிகழ்ச்சிகள் , இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

நிறைவு நாள் விழாவில், கம்போடிய கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் விருதுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் பல்வேறு தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

இம்மாநாட்டின் ஏற்பாடுகளை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், கம்போடியா அங்கோவாட் தமிழ்ச் சங்க தலைவர் திரு.சீனிவாசராவ், துணைத்தலைவர் திரு.ம. ரமேஷ்வரன், முனைவர் உலகநாயகி பழனி, பேராசிரியர் வணங்காமுடி, கவிஞர் அப்துல்காதா் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 

by Swathi   on 29 Sep 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்று உலக இதய தினம் இன்று உலக இதய தினம்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் தொடங்கியது 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் தொடங்கியது
நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து
இந்தியா தூதரக அதிகாரியை வெளியேற்றியது கனடா இந்தியா தூதரக அதிகாரியை வெளியேற்றியது கனடா
கடலூர் தியாகி அஞ்சலை அம்மாளின் பேத்தி இங்கிலாந்து  பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி கடலூர் தியாகி அஞ்சலை அம்மாளின் பேத்தி இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி
வலைத்தமிழ் கல்விக்கழகம் வழங்கும் கலை பயிற்சிகள் வலைத்தமிழ் கல்விக்கழகம் வழங்கும் கலை பயிற்சிகள்
சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்' புத்தகம் கிடைக்கும் வலைதளம் சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்' புத்தகம் கிடைக்கும் வலைதளம்
அமெரிக்காவின் F-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம் அமெரிக்காவின் F-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.