|
||||||||
திருக்குறள் திருவிழா கன்னியாகுமரியில் கொண்டாடப்பட்டது |
||||||||
![]() கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா மே 15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கப் பயிற்றுநர் பழனி தலைமை வகிக்க, பயிற்றுநர் கோபி சிங் முன்னிலை வகித்தார்.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் திருவள்ளுவர் சிலை வளாகத்தில் திருக்குறள் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.
இதைத் திருவள்ளுவர் அறக்கட்டளைப் பொறுப்பாளர் செயற்தாகூர் தலைமையில் நகராட்சித் தலைவர் ஸ்டீபன் திறந்து வைத்தார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது,
மாலையில் கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் உள்ள குமரி வரலாற்றுக்கூடத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடந்தது. தொடர்ந்து லீபுரத்தில் பேருந்து நிறுத்தத்திலிருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.
|
||||||||
by hemavathi on 17 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|