வணிகர்களுக்கும் வழிகாட்டும் வகையில் திருக்குறளில் பல்வேறு சிறப்புகள் உள்ளதாகவும், அவற்றைப் பின்பற்றி வணிகத்தில் சாதிக்க வேண்டும் என்றார் எழுத்தாளர் குறள் இனிது சோம. வீரப்பன். வணிக நெட்வொர்க்கிங் நிறுவனமான பிஎன்ஐ சார்பில், திருச்சியில் உள்ள பிஎன்ஐ உறுப்பினர்களுக்காக மேலாண்மைகுரு திருவள் ளுவர் என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற குறள் இனிது சோம.வீரப்பன் பேசியது:
வணிகர்களுக்கு வழிகாட்ட திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை. மேலாண்மைக் குரு திருவள்ளுவர் என்பதே சாலப் பொருத்தமானது. தொழில் நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் செய்யவும் வழிகாட்டுகிறார் திருவள்ளுவர். போட்டியாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பது, வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வது, விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது என மூன்று நிலைகளில் வகைப்படுத்தி குறளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. செவி கைப்ப எனத் தொடங்கும் குறள் சொல்வதை இப்போதைய வணிக நிறுவனங் கள் அனைத்துமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும்,தம் குடிமக்களின் குறைகளைக் பொறு மையாக கேட்டுக் கொள்ள வேண் டும். அதேபோலமிகப்பெரியவணிகர்களும் வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு செவிசாய்க்கவேண்டும் என்றார் அவர்.
முன்னதாக உறுப்பினர்களுக்கு திருக்குறள் தங்களுக்கு வணிகத்தில் எவ்வாறு உதவியது என்பதைக் கட்டுரையாக எழுதும் போட்டியும் நடைபெற்றது. இதில் முதல் பரிசை ரமேஷ் ஹார்டுவேர்சைச் சேர்ந்த பிரபாகரன் பெற்றார். இரண்டாம், மூன்றாம் பரிசுகளை கோவிந்தரா ஜன, பரேக் ஆகியோருக்கு சோம. வீரப்பன் வழங்கினார்.
வணிக நிறுவனங்களின் உரிமை யாளர்களான ராஜநாராயணன், பத்ரி நாராயணன், மருத்துவர் யோகேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தினர். நிகழ்வில் பிஎன்ஐ உறுப்பினர் கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
|