|
||||||||
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணனுடன் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தினர் சந்திப்பு |
||||||||
![]()
நேற்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்களை உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பிலும் , வள்ளுவர் குரல் குடும்பம் சார்பிலும் சந்தித்து திருக்குறள் பரவலாக்கல், வள்ளுவத்தை வாழ்வியலாக்கும் சிந்தனைகள் குறித்து உரையாடினோம்.
இதில் நானும், வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சி.இராஜேந்திரன் IRS (ஓய்வு), திரு.கதிரவன், திரு.இமயவரம்பன், திரு.சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெரும் நம்பிக்கையைத் தரும் சந்திப்பாக அமைந்தது. காலை சந்திப்பைத் தொடர்ந்து மாலையில் மீண்டும் உரிய விவரங்களுடன், தரவுகளுடன் மீண்டும் சந்திக்கும்படி கூறினார். அதில் இலக்கிய ஆர்வலரும், தமிழ்நாடு மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் துணை இயக்குநருக்குமான முனைவர். சங்கர சரவணன் அவர்களும் பங்கேற்றார்.
இதில் திருக்குறளின் இன்றைய நிலை, ஊர்ப் பரவலாக்கல், உலகப்பரவலாக்களில் குறித்த பல்வேறு கோரிக்கைகள் உரையாடப்பட்டது. மேலும் அடுத்தகட்டச் சந்திப்பு, செயல்பாடு குறித்துத் திட்டமிடப்பட்டது.
"வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம்"
-வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
|
||||||||
by hemavathi on 08 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|