வணக்கம், திருக்குறள் ஆர்வலர்களும், அமைப்புகளும், வெளிநாடு வாழ் தமிழர்களும் அவரவர் பிறந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இலவச திருக்குறள் நூல் வழங்கி முற்றோதல் திருக்குறள் பயிற்சியை அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சியாளரை அடையாளம் கண்டு இலவசமாக உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் வழங்குகிறது. இதன்மூலம் 1330 திருக்குறள் முடித்த மாணவர்கள் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் "திருக்குறள் முற்றோதல் விருது" ரூபாய் 15000 பணம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியரின் கையால் பெறுகிறார்கள். விருது பெற்ற மாணவர்களை தமிழ்நாட்டின் முதன்மை மாணாவர்களாக அறிவித்து "திருக்குறள் இளநிலை" சான்றிதழ் வழங்கி https://www.valaitamil.com/mutrothal-students-register-list.php இங்கு ஆவணப்படுத்துகிறோம். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை வழங்க , உலகத் தமிழர்கள் மாணவத் தூதர்களாக அவர்களை இருவரை ஒவ்வொரு ஆண்டும் அழைத்து பெருமைசெய்ய , ஊக்கப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவின் ஹார்வார்ட் தமிழிக்கை புரவலர் குழு ஒருங்கிணைப்பாளர் , தமிழ் வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் அவர்கள் ஒருங்கிணைப்பில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 40000 திருக்குறள் நூல்களை மாவட்டத்திற்கு 1000 நூல்கள் வீதம் நான்கு இலட்சம் மாணவர்களுக்கு தரமான திருக்குறள் முனுசாமியார் உரையுடன் வழங்குகிறார்கள். இந்த திட்டத்தை உலகத் தமிழர்கள் அவரவர் நாடுகளிலும், அவர்கள் பிறந்த மாவட்டங்களில், ஊர்களில், பள்ளிகளில் கொண்டுசேர்த்து நூல்களிலும், மேடைகளையும் அலங்கரிக்கும் திருக்குறளை தமிழர்களின் வாழ்வியலில் பின்பற்ற மாணவப்பருவத்தில் விதைக்க உதவவேண்டுகிறோம்.
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர் , உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
|