|
||||||||
திருக்குறள் மேல் தொடுக்கப்படும் கேள்விகளும் - அறிஞர்களின் பதிலும் - திட்டம் |
||||||||
திருக்குறளை சுற்றி பகிரப்படும் சில கதைகளை, நம்பிக்கை சார்ந்த சிந்தனைகள் பல கோணங்களில் தொடர்ந்து பல முக்கிய மனிதர்களால் அவர்கள் நம்பிக்கையை ஒட்டி மேடைகளில் பேசப்படுகிறது, எழுதப்படுகிறது, பரப்பப்படுகிறது. இதில் சில பதிவுகள் திருக்குறளின் வளர்ச்சியின் வேகத்தை குறைக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம்? திருக்குறளை சுற்றி எழுப்பப்படும் சில நம்பிக்கை சார்ந்த , உறுதி செய்ய முடியாத சில கேள்விகளுக்கு விடைகாண பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டியுள்ளது. மேலோட்டமாக இதை பேசிவிட முடியாது. ஆழ்ந்த தரவுகளும் , கடந்தகாலத்தில் வாழ்ந்த நம் அறிஞர்களின் பார்வைகளையும் உள்வாங்கவேண்டியது அவசியமாகிறது. இதற்கு வாழும் நம் மூத்த அறிஞர்களின் அறிவைக்கொண்டு தீர்வு/ விடை காண்பது முழுமையான தீர்வாக அமையும் என்று நம்புகிறேன். வெவ்வேறு பார்வைகளைக்கொண்டு பயணிக்கும் நிலையில் ஒரு குறிப்பிட்ட கேள்வி/நம்பிக்கைக்கு ஆய்வுகள் , அறிஞர்கள் தரவுகள் அடிப்படையில் ஒரு குழுவாக ஒரு முடிவை எட்ட வேண்டும். அதன் நேர்மையான அணுகுமுறையை, ஆய்வு சிந்தனைகளை, அறிஞர்களின் அனுபவகங்களை கருத்தில்கொண்டு அனைவரும் பின்பற்றி பயணிக்கவேண்டும். ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகள் இருந்து அதை நிறுவ வலுவான ஆதாரம் இருந்தால் மீண்டும் இக்கேள்வியை மறுஆய்வுக்கு உப்படுத்துவோம். இதை நம் காலத்திலேயே தீர்க்க திருக்குறள் மேல் மக்களுக்கு இருக்கும் கேள்விகள் , பல்வேறு கோணத்தில் உரையாடப்படும் கதைகள் சார்ந்த கருத்தியலைத் திரட்டி தமிழ்ச்சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிஞர் குழு 7 பேரை அழைத்து ஒரு நேரலையில் வாரம் ஓரிரு தலைப்பை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யலாம் , மாற்று சிந்தனைகளை உள்வாங்கி ஒரு முடிவுக்கு வரலாம் என்று திட்டமிடுகிறோம். இதுகுறித்து , இதன் தேவை, முக்கியத்துவம் குறித்து சில அறிஞர்களிடம் பேசினேன். தேவையான முக்கிய செயல்பாடு. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டு ஒரு நூலாகவே வெளியிடலாம் , அனைவரையும் அழையுங்கள் நான் வருகிறேன் என்று தனித்தனியாகத் தெரிவித்தார்கள். இதை நேர்த்தியாக ஒருங்கிணைக்க வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம் முன்னெடுக்கும் "எனைத்தானும் நல்லவைக்கேட்க ' குழுவை கேட்டுக்கொண்டுள்ளேன். திரு.இராஜேந்திரன் IRS (ஓய்வு), திரு.இளங்கோவன் தங்கவேல் (மிசௌரி- அமெரிக்கா) இருவரும் இம்முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலை முன்னெடுக்க சம்மதித்துள்ளார்கள். தமிழ்ச் சமூகத்தின் மூத்த அறிஞர்களுடன் உரையாடி பட்டியல் வெளியாகும். அதுவரை உலக நாடுகளில் திருக்குறளில் உங்களுக்கு உள்ள கேள்விகளை https://forms.gle/eSAxyjqD1XHZaPGf6 வழியாக பதிவுசெய்யலாம். உங்கள் கேள்வி உரையாடப்படும் வாரத்தில் வாரத்தில் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , உங்கள் கேள்வி அல்லது அது சார்ந்த தரவுகள் இருப்பின் அதை குழுவிற்கு சமர்ப்பிக்கலாம். உலகத் தமிழர்கள் ஒவ்வொரு வாரமும் உரையாட இருக்கும், தீர்வு காண இருக்கும் கேள்விக்கான தரவுகள் இருப்பின், விவரங்கள் இருப்பின் நேரம் பெற்று உங்கள் கருத்தை எவரும் பதிவு செய்யலாம். அது ஆவணப்படுத்தப்படும். இருவேறு கருத்துகளும் முறையாக நேரலையில் உள்வாங்கப்பட்டு , அறிஞர்கள் இறுதியாகக் கூடி அறிக்கையாக தங்கள் கருத்துகளை வழங்குவதுடன், அவர்கள் ஆளுக்கு சில மணித்துளிகள் அதுசார்ந்த அவர்கள் புரிதலை, அனுபவத்தை, வாசிப்பை காணொளியாக ஆவணப்படுத்துவார்கள். அனைத்தும் வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம் இணையதளங்களில் வெளியிடப்படும். தேவையானால் நூலாகவும் வெளியிடப்படும். ஆவணங்கள், தரவுகள் உள்ளவர்கள் கேள்வியைத் தெரிவித்து அதற்கான தரவுகளை thirukkural@valaitamil.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
பேரன்புடன், |
||||||||
by Swathi on 10 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|