|
||||||||
திருக்குறள் கதை களஞ்சியம் - பெரியண்ணன் |
||||||||
"திருக்குறள் கதை களஞ்சியம் ." பொருட்பால் தொகுதி ஒன்று .
பெரியண்ணன் .ஜோதி புக் சென்டர் முதல் பதிப்பு 2017 மொத்த பக்கங்கள் 750 விலை ரூபாய் 665.
இது ஒரு காலம் காட்டும் குறள் கவிதை புத்தகம் என்று சொல்லலாம். திருக்குறளை குறித்து என்னவென்று சொல்வதம்மா .கட்டுரை புத்தகம் சொல்லலாம் .காவியப் புத்தகம் என்று சொல்லலாம். வாழ்க்கை இலக்கண புத்தகம் என்று சொல்லலாம் செய்யுள் புத்தகம் என்றும் சொல்லலாம் .ஒவ்வொரு திருக்குறளுக்கும் குறிப்பாக பொருட்பாலில் உள்ள சில திருக்குறளுக்கு மட்டும் ஆசிரியர் கதைகளாக வைத்திருக்கிறார் இந்த புத்தகத்தில்.
25 அதிகாரங்களில் உள்ள திருக்குறளுக்கு கதைகளாக 250 கதைகள் எழுதப்பட்டு இருக்கிறது திருக்குறளை விளக்கும் நோக்கத்தோடு.
****
கீழ்க்கண்ட அதிகாரங்களுக்கு கதை எழுதப்பட்டிருக்கிறது.
109. தகை அணங்குறுத்தல்
110. குறிப்பு அறிதல்.
111. புணர்ச்சி மகிழ்தல்.
112. நலம் புனைந்து உரைத்தல்.
113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல் .
116. பிரிவு ஆற்றாமை
117. படர்மெலிந்து இரங்கல்
118. கண் விதுப்பழிதல்
119. பசப்புறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி.
121. நினைந்தவர் புலம்பல்.
122. கனவுநிலை உரைத்தல்.
123. பொழுதுகண்டு இரங்கல்
124. உறுப்புநலன் அழிதல்.
125. நெஞ்சொடு கிளத்தல்...
126. நிறையழிதல்..
127. அவர்வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்..
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்...
131. புலவி.
132. புலவி நுணுக்கம் ..
133. ஊடல் உவகை.
திருக்குறள் (காமத்துப்பால்)
1081. காதல் மயக்கம்..
திருக்குறளுக்கு
உகந்த சில கதைகளை பார்ப்போம் ஆசிரியர் எழுதியுள்ளபடி.
1) கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும் போதே ஒரு முடிவிற்கு வந்திருந்தான் தீபக். காதல் என்பதே தன்னை நெருங்க விடக் கூடாது. கல்வி மட்டும்தான் முக்கியம். படித்துப் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதே அவன் ஆசையாக இருந்தது.
ஆனால் அகிலாவைப் பார்க்கும் வரைதான் அந்த விரதம். அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விட்டான்.
அவன் நண்பர்கள் கேலி பேசினர்.
"என்னடா சாமியாராகப் போறேன்னு சொன்னே?" என்றான் ஒருவன்.
"பெண் வாசனையே எனக்குப் பிடிக்கலைன்னு சொன்னே!” என்றான் அடுத்தவன்.
"காதலை விடக் கல்விதான் முக்கியம்னு சொன்னே! இப்ப என்ன ஆச்சு?” என்றான் இன்னொரு நண்பன்.
தீபக் மனதிற்குள் அகிலா வந்தாள்.
"உண்மைதாண்டா. ஆனா தேவதை போலவும், அழகான மயிலைப் போலவும் ஒயிலாக ஒரு பெண்ணைப் பார்க்கறப்ப எப்படி மயங்காமல் இருக்க முடியும்? அதனாலதான் நான் அகிலாவை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்" என்றான்.
அவனது காதல் மயக்கம் நண்பர்களுக்கும் புரிந்தது. அவனை வாழ்த்தவே செய்தனர்.
குறள் - 1082
நோக்கினாள் நோக்குளதிர் நோக்குதல் தாக்குஅணங்கு தானைக்கொண்டு அன்னது உடைத்து, .
பொருள் :
இவள் பார்வை, போர் செய்வதற்கென்றே சேனையையும் உடன் கொண்டு வந்திருப்பது போலத் தோன்றுகிறது.
2) 1082. தேவதைக் கூட்டம்
உலக அழகு அத்தனையையும் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருந்தாள் மாலினி. அவளைப் பார்ப்பவர் விழிபிரிக்க மறுப்பர்.
“அப்பாடா... இத்தனை அழகா?" என்று வாய் பிளந்து நிற்பர். பார்த்த முதல் பார்வையிலேயே அருண் அவள் மேல் காதல் கொண்டு விட்டான். அவன் நண்பர்களே ஆச்சர்யப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் மத்தியில் அருணுக்குச் சாமியார் என்று பெயர்.
"எப்படிடா?" என்று அவனைக் கலாய்த்தனர். 'அப்படித்தான்' என்று நழுவி விடுவான் அருண்.
நாளாக நாளாக அவனது காதலின் தீவிரம் கூடிக் கொண்டே போனது. பைத்தியம் பிடித்தவன் போல் சுற்றியலைந்தான். நண்பர்கள் அறிவுறுத்தினர்.
“அருண். முழுசா உன்னைத் தொலைச்சுடாதே. காதலிக்கலாம்
தப்பு இல்லை. ஆனா பைத்தியமா ஆயிடாதே" என்றனர். அருண் சொன்னான்.
''மாலினிக்காக நான் பைத்தியமானாலும் பரவாயில்லை..." என்றான்,
நண்பர்கள் அவனையே பார்த்தனர். அருண் தொடர்ந்தான்.
'அவளை நான் தேவதைன்னு மட்டும் சொல்ல மாட்டேன். தேவதைக் கூட்டம். அவளோட பார்வை ஒரு பெரும் டடை, அதனால் தாக்குண்டு நான் பைத்தியமானால் அதுக்கு அவள்தான் பொறுப்பு. நான் இல்லை" என்றான்.
3) குறள் - 1083
பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை இனிஅறிந்தேன் பெண்தகையால் பேர்அமர்க் கட்டு.
பொருள்
எமனை நான் முன்பு அறியேன்; இன்று அறிந்தேன்; அது பெண் தன்மைகளோடு போர் செய்யும் கண்களையும் உடையது.
மனத்தில் நிற்கும்படி அழகாக, சிறப்பாக, சுருக்கமாக ஆசிரியர் அவர்கள் இந்நூலைப் படைத்துள்ளார்கள்.
இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய மிக அத்தியாவசியமான நூலாக இது திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அகிலம் போற்றும் திருவள்ளுவர் எழுதிய குறளை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு கதை என எளிமையாகப் புரிய வைத்து "திருக்குறள் கதைக் களஞ்சியம் என்ற தொகுப்பாக, மிகச் சிறப்பாக ஆசிரியர் விளக்குகிறார். அனைவரும் பயனடையலாம் படித்து.
-திரு.நா.கருணாமூர்த்தி -முகநூல் பதிவு
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 19 Oct 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|