|
||||||||
திருக்குறள் திலகம் பட்டமளிப்பு விழா - திரு. க. கோ. பழனி |
||||||||
![]() திருக்குறள் திலகம் பட்டமளிப்பு விழா - திரு. க. கோ. பழனி வழங்கினார் திரு. க. கோ. பழனி (வயது 69) திருவள்ளுவர் கல்வி மன்றம், இந்த ஆண்டு ஐந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து திருக்குறள் முற்றோதல் திறனறித் தேர்வுக்கு பதிவு செய்துள்ளார் இவர்களுக்கு சான்றிதழ் வழங்கி திருக்குறள் திலகம் என்ற பட்டமும் வழங்கி , அவர்களை மகிழுந்துமேல் பகுதியில் இருக்கை அமைத்து ஊர்வலமாக வரச் செய்தார் ஊர்வலத்தின் நநிறைவில் கூட்டம் ஒன்று அமைத்து அவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும், திருவள்ளுவர் சிலையும் தலா 1330 ரூபாயும் வழங்கப்பட்டது . உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பாக இந்த விழாவில் நானும் என் துணைநலம் மலர்க்கொடியும் கலந்து கொண்டோம் மனனம் செய்த மாணவர்களுக்கு துணைவியார் எழுதிய நிழல் காட்டும் நிஜங்களின் 26 கதைகள் அடங்கிய சிறப்பு வெளியிட்டை அன்பளிப்பாக வழங்கினோம், திருக்குறள் மன்றத்துக்கு திருக்குறள் உவமை நயம் என்ற நூலை வழங்கி மகிழ்ந்தோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டஅனைவருக்கும் சுண்டல் ,கடலை மிட்டாய் ,வாழைப்பழம் கொய்யாப்பழம் வழங்கப்பட்டது. புதிய மாணவர்களும் பெற்றோர்களும் அந்த பகுதியில் வாழும் பெரியோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் திரு பழனி- திருமதி வளர்மதி பழனி இவரது முழக்கம்... மாணவச் செல்வங்களே உணர்ந்து செயல் படு மனிதா! கல்வி மன்றம் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் முடிந்து 10 ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10&12 வகுப்பில் முதல் மாணவர்களாக வந்த மாணவச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி , பாராட்டி பரிசும் வழங்கி வருகிறார் .
இன்னும் சிறப்பாக உயர்ந்து ஒழுக்கத்துடன் மாணவச் செல்வங்கள் உயர்ந்து வர இந்த கல்வி ஆண்டில் (2022-2023 )திருக்குறளில் 133 அதிகாரங்கள் விருப்பமுள்ள பெற்றோர்கள் திரு க. கோ. பழனி கைபேசியில் 98944 59052 தொடர்பு கொள்ளலாம் . சி இராஜேந்திரன் |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 26 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|