LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை -வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,   ஒருங்கிணைப்பாளர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்  - நூலாசிரியர் குழு:  Thirukkural Translations in World Languages, ஆசிரியர் - "குறள் வழி" மாத இதழ்

[திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த முழுமையான ஆய்வுகளை செய்துள்ள ஐந்து ஆண்டு பணிகளை சுருக்கமாக எதுத்துரைத்து நாம் செய்யவேண்டிய புதிய மொழிப்பார்ப்புகள் குறித்த தெளிவை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.]

உலகின் மூத்த மொழியான தமிழில் உள்ள முதன்மையான வாழ்வியல் நூல்கள் திருக்குறளும் தொல்காப்பியமுமாகும்.  இதில் திருக்குறள் மட்டுமே நாடு,மொழி,இனம் கடந்து உலக மக்களுக்கான வாழ்வியல் கருத்துகளை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது.  மேலும் ஏற்கனவே இது உலகப்பொதுமறையாக ஏற்கப்பட்டு ஓரளவு பரவியுள்ளது. உலகப் பரவலாக்கத்திற்கு முக முக்கிய செயல்பாடாக விளங்குவது மொழிபெயர்புகளைப் பற்றிய முழு விவரங்களாகும். இதைக் கருத்தில் கொண்டு "உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்"  2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி முன்னெடுப்பில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவில் அமெரிக்காவின் இளங்கோ தங்கவேலு, தலைமையில் முனைவர். N.V.K அஷ்ரப், சி இராஜேந்திரன்,IRS (ஓய்வு),  செந்தில்செல்வன், வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி, அஜய்குமார் உள்ளிட்டோம் அங்கம் வகித்தனர். இக்குழு வெளியிட்ட 2024 ஆய்வறிக்கையின் படி "Thirukkural Translations in World Languages " நூலில் இதுவரை உலக அளவில் 345 முறை  58 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற விவரமும், இன்னும் 158 உலக அலுவல் மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பதும் ஆய்வுகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. 

 மேலும் ஐ.நா. சபை , யுனெசுகோவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளில் போர்ச்சுகீசு மொழியைத் தவிர அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும், இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் சிந்தி மொழியைத்தவிர மீதம் உள்ள 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் நமக்கு பெருமைதரும் செய்தியாகும்.  58 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அது 148 நாடுகளின் ஏதாவது ஒருமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரியதாகும்.

உலகம் போற்றும் வாழ்வின் உன்னத வாழ்வியல் தத்துவங்களைக்கொண்டு திருக்குறள் உலகின் 100கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் பெரிய இனமான 10 கோடி தமிழர்களால் ஏன் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. நாம் முழுமையாக வாசித்து , வாழ்ந்து நம் அனுபவங்களை உலக மக்களுக்குப் பகிர்வதுதானே  சரியான பரவலாக்களாக இருக்க முடியும்?. இந்தக் களச் சூழலின் அடிப்படையில் ஆராய்ந்து உலகப் பரவலாக்கல் செய்ய அமெரிக்காவில் 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு இரண்டு நிலைகளாக தங்களது செயல்பாட்டை வகுத்துக்கொண்டு 9 செயல்திட்டங்களை முன்னெடுத்து மொழிபெயர்புகளையும் , பரவலாக்கல் புதிய உத்திகளையும் வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. அதுகுறித்தான  விவரங்களை  ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

யுனெஸ்கோ உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை: 194

ஐ.நா. சபை நாடுகளின் எண்ணிக்கை:193

 

திருக்குறள் இதுவரை உலக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட பட்டியல்

எண்

மொழி

மொழிபெயர்ப்பு
எண்ணிக்கை   

 

எண்

மொழி

மொழிபெயர்ப்பு
எண்ணிக்கை   

1

Arabic

6

 

31

Konkani

3

2

Assamese

2

 

32

Korean

1

3

Awadhi

1

 

33

Koraga

1

4

Badaga

1

 

34

Latin

5

5

Bengali

5

 

35

Malay

6

6

Bhojpuri

1

 

36

Malayalam

24

7

Bodo/Boro

1

 

37

Marathi

3

8

Burmese

1

 

38

Manipuri

1

9

Chinese

3

 

39

Maithili

1

10

Creole

1

 

40

Nepali

1

11

Czech

1

 

41

Odia

7

12

Danish

1

 

42

Punjabi

1

13

Dogri

1

 

43

Persian

1

14

Dutch

1

 

44

Polish

2

15

English

100+

 

45

Russian

5

16

Fijian

2

 

46

Sanskrit

10

17

Finnish

2

 

47

Santali

1

18

French

19

 

48

Saurashtri

2

19

Garo

1

 

49

Sinhalese

2

20

German

7

 

50

Spanish

3

21

Gujarati

3

 

51

Swahili

1

22

Hindi

21

 

52

Swedish

1

23

Indonesian

3

 

53

Telugu

19

24

Irish

1

 

54

Thai

1

25

Italian

1

 

55

Tok Pisin

1

26

Japanese

2

 

56

Tulu

1

27

Kannada

9

 

57

Urdu

4

28

Kashmiri

1

 

58

Vakraboli

2

29

Khmer

1

       

30

Kodava

1

       

Source: Thirukkural Translations in World Languages, www.eStore.ValaiTamil.com

 

திருக்குறள் உலக நாடுகளின் அலுவல் மொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டிய பட்டியல்

 

S.No

Language

Country Spoken

Region

Population Spoken

  S.No Language Country Spoken Region Population Spoken

1

Abkhaz

Abkhazia

European

1,90,000

 

71

Nauruan

Nauru

Oceanic

10,000

2

Afar

Ethiopia

African

26,00,000

 

72

Ndau

Zimbabwe

African

24,00,000

3

Afrikaans

South Africa

African

72,00,000

 

73

Niuean

Niue (New Zealand)

Oceanic

5,000

4

Araona

Bolivia

Americas

110

 

74

Norfuk

Norfolk Island

Oceanic

2,000

5

Asháninka

Brazil

Americas

35,000

 

75

Northern Ndebele

Zimbabwe

African

26,00,000

Peru

 

South Africa

6

Aymara

Bolivia

Americas

17,00,000

 

76

Oromo

Ethiopia

African

4,55,00,000

7

Bambara

Mali

African

42,00,000

 

77

Ossetian

North Ossetia–Alania

European

5,00,000

8

Baure

Bolivia

Americas

20

 

South Ossetia

9

Beja

Eritrea

African

27,00,000

 

78

Pacawara

Bolivia

Americas

600

10

Belarusian

Belarus

European

51,00,000

 

79

Palauan

Palau

Oceanic

17,000

11

Berber (Tamazight)

Algeria 

Asian

1,40,00,000

 

80

Papiamento

Caribbean ABC islands

Caribbean

3,00,000

Morocco

 

81

Pashto

Afghanistan

Asian

4,40,00,000

12

Bésiro (Chiquitano)

Bolivia

Americas

2,400

 

82

Pijin (Creole)

Solomon Islands

Oceanic

25,000

13

Bilen

Eritrea

African

72,000

 

83

Puquina (Pukina)

Bolivia

Americas

0

14

Bislama

Vanuatu

Oceanic

10,000

 

84

Quechua

Bolivia

Americas

72,00,000

15

Bissa

Burkina Faso

African

6,00,000

 

85

Romansh (Graubünden)

Switzerland

European

60,000

16

Bobo

Mali

African

3,40,000

 

86

Saho

Eritrea

African

1,80,000

17

Bosnian

Bosnia and Herzegovina

European

26,00,000

 

87

Sámi languages

Northern Europe

European

30,000

18

Bozo

Mali

African

2,30,000

 

88

Samoan

Samoa

Oceanic

5,10,000

19

Canichana

Bolivia

Americas

0

 

89

Sango

Central African Republic

African

6,20,000

20

Cape Verde

Cabo Verde

African

9,20,000

 

90

Senufo

Mali

African

27,00,000

21

Cavineña

Bolivia

Americas

600

 

91

Serbian

Serbia

European

1,20,00,000

22

Cayubaba

Bolivia

Americas

650

 

92

Seychellois

Seychelles

African

85,000

23

Chácobo

Bolivia

Americas

1,100

 

93

Shangani (Tsonga)

Zimbabwe

African

37,00,000

24

Chewa

Zimbabwe

African

1,40,00,000

 

94

Shona

Zimbabwe

African

65,00,000

25

Chibarwe (Sena)

Zimbabwe

African

28,69,000

 

95

Shuar

Ecuador

Americas

35,000

26

Chichewa (Chewa)

Zimbabwe

African

140

 

96

Sindhi

India

Asian

3,70,00,000

27

Chimáne

Bolivia

Americas

5,300

 

97

Sirionó

Bolivia

Americas

217

28

Comorian

Comoros

African

8,00,000

 

98

Somali

Somalia

African

2,40,00,000

29

Cook Islands Māori

Cook Islands

Oceanic

14,000

 

99

Songhay languages

Mali

African

40,00,000

30

Croatian

Croatia

European

51,00,000

 

100

Soninke

Mali

African

21,00,000

31

Dogon languages

Mali

African

6,00,000

 

101

Sotho (Sesotho, Sepedi)

Zimbabwe

African

56,00,000

32

Dyula

Burkina Faso

African

22,00,000

 

102

Southern Ndebele

South Africa

African

11,00,000

33

Dzongkha (Bhutanese)

Bhutan

Asian

6,40,000

 

103

Swazi

Eswatini

African

23,00,000

34

Ese Ejja

Bolivia

Americas

700

 

104

Tacana

Eswatini

Americas

1,200

35

Fula

Burkina Faso

African

3,70,00,000

 

Bolivia

Mali

 

105

Tajik

Tajikistan

Asian

80,00,000

36

Gilbertese

Kiribati

Oceanic

1,20,000

 

106

Tamasheq

Mali

African

9,00,000

37

Guaraní

Paraguay

Americas

65,00,000

 

107

Tapieté

Bolivia

Americas

50,000

38

Guarasu'we (Warázu)

Brazil

Americas

0

 

108

Tetum

Togo

Asian

5,00,000

Bolivia

 

109

Tigre

Eritrea

African

8,90,000

39

Guarayu

Bolivia

Americas

8,400

 

110

Tigrinya

Eritrea

African

97,00,000

40

Haitian Creole

Haiti

Caribbean

1,30,00,000

 

111

Tokelauan

Swains Island

Oceanic

4,000

41

Hiri Motu

Papua New Guinea

Oceanic

95,000

 

112

Tonga

Zimbabwe

African

15,00,000

42

Itonama

Bolivia

Americas

1

 

113

Tongan

Tonga

Oceanic

1,70,000

43

Kalanga

Zimbabwe

African

16,00,000

 

114

Toromona

Bolivia

Americas

200

44

Kallawaya

Bolivia

Americas

0

 

115

Tshivenda (Venda)

South Africa

African

13,00,000

45

Kassonke

Bali

African

25,00,000

 

116

Tswana (Setswana)

Zimbabwe

African

82,00,000

46

Kazakh

Kazakhstan

Asian

1,70,00,000

 

117

Tuvaluan

Tuvalu

Oceanic

13,000

47

Khoisan

South Africa

African

2,50,00,000

 

118

Uru-Chipaya

Bolivia

Americas

1,000

48

Kichwa

Ecuador

Americas

4,50,000

 

119

Vietnamese

Vietnam

Asian

8,50,00,000

49

Kinyarwanda

Rwanda

African

1,50,00,000

 

120

Weenhayek

Bolivia

Americas

1,900

50

Kirundi

Burundi

African

1,30,00,000

 

121

Xhosa

Zimbabwe

African

80,00,000

51

Kituba

Republic of Congo

African

54,00,000

 

South Africa

52

Kunama

Eritrea

African

1,80,000

 

122

Xitsonga (Tsonga)

South Africa

African

37,00,000

53

Kurdish

Iraq

Asian

2,60,00,000

 

123

Yaminawa

Bolivia

Americas

2,800

54

Leco

Bolivia

Americas

20

 

124

Yuki

Bolivia

Americas

0

55

Lingala

Republic of Congo

African

2,00,00,000

 

125

Yuracaré

Bolivia

Americas

2,700

56

Luxembourgish

Luxembourg

European

3,00,000

 

126

Zamucoan languages

Bolivia

Americas

5,100

57

Machineri (Piro)

Bolivia

Americas

5,000

  127

Italian

 

   

58

Malagasy

Madagascar

African

2,50,00,000

     

 

 

 

59

Maninke

Guinea

African

46,00,000

           

Senegal

           

Mali

           

60

Maropa (Reyesano)

Bolivia

Americas

250

           

61

Marshallese

Marshall islands

Oceanic

50,000

           

62

Minyanka

Mali

African

7,40,000

           

63

Mojeño-Ignaciano

Bolivia

Americas

1,000

           

64

Mojeño-Trinitario

Bolivia

Americas

3,000

           

65

Montenegrin

Montenegro

European

2,30,000

           

66

Moré (Moore, Messi)

Burkina Faso

Americas

65,00,000

           

67

Mosetén

Bolivia

Americas

800

           

68

Movima

Bolivia

Americas

1,000

           

69

Nambya

Zimbabwe

African

1,00,000

           

70

Nara

Eritrea

African

73,000

           

 

"உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்"  இரண்டு கட்டங்களாக செய்யப்படுத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டம் முடிந்து இரண்டாவது செயல்பாட்டுக்குள் சென்றுள்ளோம்.

முதல் கட்டமாக கீழ்காணும் மூன்று செயல்பாடுகளில் கவனம் செய்துமுடிக்கப்பட்டது.  

1. உலகில் இதுவரை எத்தனை மொழிகளில் திருக்குறள் வந்துள்ளது என்ற முழுமையான தரவுகளை ஆதாரங்களுடன் திரட்டுதல்.

2. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் திருக்குறள் அச்சு நூல்களைத் திரட்டி கொண்டுவந்து சென்னையில் தொகுத்தல்.

3. மொழிபெயர்ப்பு சார்ந்த ஐந்து ஆண்டுகளின் தரவுகளை முழுமையாகத் திரட்டி ஒரு நூலாக வெளியிடுதல்.

இதுவரை மொழிபெயர்ப்பு ஆய்வுக்குழுவின் தொடர் ஆய்வில் உறுதிசெய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கீழ்காணும் விவரங்கள் தெளிவான மொழிபெயர்ப்பு குறித்த புரிதலை ஏற்படுத்தும்.

 

மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை

      :58

மொழிபெயர்ப்பு செய்யவேண்டிய மொத்த மொழிகளின் எண்ணிக்கை

      :158

செம்மொழி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ள ஏற்கனவே இருக்கும் மொழிகளில் மொழிபெயர்ப்பு

       :90

செம்மொழி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ள புதிய மொழிகளில் மொழிபெயர்ப்பு

        :10

தமிழ்நாடு அரசு மொழிபெயர்புத் துறை மூலம் செய்துவரும் மொழிபெயர்ப்புகள்

         :4

இன்னும் செய்யவேண்டிய மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கை

       :128

 

by Swathi   on 03 Nov 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன்  அவர்களை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன் மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்
எனைத்தானும் நல்லவை கேட்க: இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட 70 காணொளிகளைக்  காண: எனைத்தானும் நல்லவை கேட்க: இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட 70 காணொளிகளைக் காண:
ஹாங்காங் நாட்டில் Thirukkural Translations in World Languages நூல் வெளியீடு ஹாங்காங் நாட்டில் Thirukkural Translations in World Languages நூல் வெளியீடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.