LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[751 -800]

பாடல் 751 - விருத்தாசலம் 
ராகம் - ஹரிகாம்போதி 
தாளம் - ஆதி - 2 களை
தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன ...... தனதான
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
     செயமுன மருளிய ...... குளவோனே 
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
     தெறிபட மறுகிட ...... விடுவோனே 
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
     னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ 
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
     ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா 
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
     கணினெதிர் தருவென ...... முனமானாய் 
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
     கருணையில் மொழிதரு ...... முதல்வோனே 
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
     முரணுறு மசுரனை ...... முனிவோனே 
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
     முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
வேத மொழியாம் ப்ரணவத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காக சிவபிரான் உன்னிடத்தில் வணங்க முன்பு அவருக்கு உபதேசித்து அருளிய, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, ஒளிமிக்க மதுரையில் சமணர்களின் உயிர்கள் கழுமரத்தில் கலங்கிச் சிதறுபட வைத்தவனே*, நீக்குவதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் அன்பில்லாதவர்களைப் போல துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் கண்பார்த்தருள்வாயோ? உலகத்தில் உள்ள யாவரும் புகழும்படியாக திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலிலே வந்து உதவிய வீரனே**, கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூரிய, கண்களை உடைய குற மகள் வள்ளியின் கண்களுக்கு எதிரிலேயே வேங்கை மரமாக முன்பு ஆனவனே, கார்மேகத்தை ஒத்த நிறமுடைய திருமாலின் அழகிய மருமகனே, கருணையோடு உபதேச மொழியை எனக்களித்த முதல்வோனே, நறுமணம் வீசும் மலர் கொண்ட கற்பக விருட்ச நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறு மாறுபட்டு நின்ற அசுரனாம் சூரனைக் கோபித்தவனே, இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே. 
* முருகனே திருஞானசம்பந்தராக வந்து சமணரைக் கழுவேற்றினார் என்பது சுவாமிகளின் கருத்து.
** அருணகிரிநாதர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இங்கு குறிப்பிடப்படுகிறது.
பாடல் 752 - விருத்தாசலம் 
ராகம் - ...; தாளம் -
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
     தனதத்த தனதத்த ...... தனதான
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
     பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப் 
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
     பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி 
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
     மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே 
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
     விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே 
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
     னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர் 
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
     அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே 
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
     வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே 
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
     வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே.
ஈரப்பசையற்ற இவ்வுடல் வற்றிப் போகச் செய்த வினை முதிர்ச்சி அடைந்து, நடையும் தள்ளாடுதலை அடைந்து, நிலை தடுமாறி, கை சொறிதலையே தொழிலாகக் கொண்டு, (ஈறுகள் தேய்தலால்) பற்கள் வெளியே நீண்டு வர, கண் பூ விழுந்து மறைப்பதால் பார்வை இழந்து குருடாகி, மிகவும் நெகிழ்ந்து பழம் போலப் பழுத்து, மயிர் நரைத்து கொக்கைப் போல் வெண்ணிறமாகி, வேகத்துடன் வருகின்ற பித்தத்தாலும், வாயுவினாலும், கண் இடமும் நிலையும் தடுமாறிக் கெட்டு, உடல் மெலிதலை அடைந்து, கைவிரல்களினால் பிடிக்கப்பட்ட தடியுடன், வெளியே தனியனாக நிற்கின்ற தன்மை மிகும்படியாக துன்பமே கொண்ட பிறப்பைத் தவிர்த்து, உன் திருவருளைத் தருவதும் ஒரு நாள் உண்டாகுமோ? கலக்கம் இல்லாத அசுரர்கள் மடிந்து இறந்தொழிய, அதனால் மகிழ்ந்த, வலிய வஜ்ராயுதக் கையனனாகிய இந்திரனும் மற்றும் உள்ள தேவர்களும், பூக்களைப் பொழிந்து பூமி முழுதும் மறையும்படிச் செய்கின்ற நிகர் இல்லாதவனே, போரில் வெற்றி உடையவனே, பழிப்புக்கு இடம் இல்லாமல், முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின் காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட* மேக நிறக் கண்ணனது மருகனே, இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள முது குன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சகாதேவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரதப் போருக்கு முன்பும், அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின் போதும், கண்ணன் விசுவரூப தரிசனம் தந்தது இங்கு குறிப்பிடப் பெறுகிறது.
பாடல் 753 - வேப்பூர் 
ராகம் - பீம்பளாஸ் 
தாளம் - அங்கதாளம் - 15 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனதன தனதன தனதன தாந்த
     தாத்தான தந்த ...... தனதான
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
     கூத்தாடு கின்ற ...... குடில்பேணிக் 
குகையிட மருவிய கருவிழி மாந்தர்
     கோட்டாலை யின்றி ...... யவிரோதம் 
வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
     வார்க்கே விளங்கு ...... மநுபூதி 
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
     வாக்கால்மொ ழிந்த ...... ருளவேணும் 
திரள்வரை பகமிகு குருகுல வேந்து
     தேர்ப்பாகன் மைந்தன் ...... மறையோடு 
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
     தீப்பாய இந்த்ர ...... புரிவாழ 
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
     வேற்கார கந்த ...... புவியேழும் 
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
     வேப்பூர மர்ந்த ...... பெருமாளே.
ஆரவாரம் செய்கின்ற கடல் சூழ்ந்த உலகில் உயிர் எடுத்து வந்து, பலவித விளையாட்டுகளை ஆடும் இந்த உடலை விரும்பிப் போற்றி, மலைக்குகை போன்ற கருக்குழிக்குள் விழுகின்ற மக்களுக்கு நேரும் துன்பங்கள் எவையும் இல்லாமல், விரோதமின்மை என்னும் மனப்பான்மை வருவதற்கும், நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் நீங்குவதற்கும், ஞான உணர்வோடு இருப்பவர்களுக்கே விளங்கும்படியான அனுபவ ஞானமான உன் அருட்பிரசாத வடிவத்தினை உன் அழகிய லக்ஷ்மிகரம் நிறைந்த திருவாக்கால் உபதேசித்து அருளவேண்டும். திரண்டு பருத்த கிரெளஞ்சமலையானது பிளவுபடவும், குருகுலவேந்தன் அர்ச்சுனனின் தேர்ப்பாகனாக வந்த கண்ணன் (திருமாலின்) மைந்தனாகிய பிரமன் தான் கற்ற வேதமும் தானுமாகக் கலக்கம் அடையவும், அசுரர்களின் மனைவியர் ஒன்றுகூடி தீயில் பாய்ந்து இறக்கவும், தேவேந்திரனின் தலைநகரம் அமராவதி வாழ்வுபெறவும், பரந்து விரிந்த அலைகடலில் நெருப்புப் பற்றி எழவும், முதன்மையாம் தன்மை படைத்த வேலாயுதத்தைச் செலுத்திய கந்தனே, ஏழுலகின் வறுமையும் நீங்குமாறு செழிப்பான விளைச்சலைத் தரும் வளமான வயல்கள் சூழ்ந்த வேப்பூரில்* அமர்ந்த பெருமாளே. 
* வேப்பூர் வட ஆற்காடு மாவட்டத்தில் ஆற்காட்டுக்கு அருகில் பாலாற்றின் கரையில் உள்ளது.
பாடல் 754 - நிம்பபுரம் 
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் 
தாளம் - ஆதி
தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான
அஞ்சுவித பூத முங்கரண நாலு
     மந்திபகல் யாது ...... மறியாத 
அந்தநடு வாதி யொன்றுமில தான
     அந்தவொரு வீடு ...... பெறுமாறு 
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
     மங்கைதனை நாடி ...... வனமீது 
வந்தசர ணார விந்தமது பாட
     வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே 
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
     குங்குமப டீர ...... வதிரேகக் 
கும்பதன மீது சென்றணையு மார்ப
     குன்றுதடு மாற ...... இகல்கோப 
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
     வென்றிவடி வேலை ...... விடுவோனே 
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
     விண்டலம கீபர் ...... பெருமாளே.
பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்களும், இரவு - பகல் என்ற இரண்டும் அறியாத முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததான அந்த ஒப்பற்ற மோக்ஷ இன்பத்தைப் பெறுமாறு, மேகம் தவழ்கின்ற சிகரங்களை உடைய அழகிய மலைவாழ் வேடர்களின் மகளாகிய வள்ளியை விரும்பி வள்ளிமலைக் காட்டில் வந்தடைந்த திருவடித் தாமரைகளைப் பாட எனக்கு வண்தமிழில் அற்புதக் கவித்துவத்தை நீ அருள்வாயாக. ஐராவதம் என்ற யானை வளர்த்த, மயிலின் சாயலுடைய, மங்கை தேவயானையின் அழகிய செஞ்சாந்தும் சந்தனமும் மிகுதியாகப் பூசியுள்ள மார்பின் மீது மனதாரத் தழுவி அணைக்கும் திருமார்பா, கிரெளஞ்சகிரி தடுமாற்றம் அடையுமாறு அதன்மீது பகைத்துக் கோபித்தவனே, கொடிய போரினைச் செய்த சூரனுடைய நெஞ்சு பிளவுபட வீரம் வாய்ந்த வெற்றி தரும் கூரிய வேலினைச் செலுத்தியவனே, ஒளி பொருந்திய மயில்கள் சூழ்ந்துள்ள நிம்பபுரம்* என்ற தலத்தவனே, விண்ணுலகத்துத் தேவேந்திரர்களின் பெருமாளே. 
* நிம்பபுரம் என்பது வேப்பூர் என்று கருதப்படுகிறது. நிம்பம் என்றால் வேம்பு.வேப்பூர் தென்னாற்காடு மாவட்டத்தில் பாலாற்றங் கரையில் ஆற்காட்டுக்கு அருகில் உள்ளது.
பாடல் 755 - வேப்பஞ்சந்தி 
ராகம் - 
தாளம் -
தாத்தந் தந்தத் தந்தத் தனனத் ...... தனதான
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே 
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய் 
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே 
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர் 
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே 
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா 
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே 
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.
விருப்பத்தை (உன் மீது) தங்க வைத்து, பெண்களின் மார்புக்குவட்டில் கவனம் படியாமல், தங்கள் கருத்தை உன் திருவடியில் நாட்ட வல்ல தொண்டர்களுக்கு தாமரைத் திருவடிகளைத் தந்து அருள் புரிவாய். சோர்வு காணும்படி விண்ணில் உள்ள தேவர்களின் சேனைகள் மீது பகைமை மொழிகளைக் கூறி கூட்டமாக போருக்கு எதிர்த்து வந்த அசுரர்களின் கூட்டமெல்லாம் கெட்டுப் பிரிந்துச் சிதறும்படி சண்டை செய்பவனே, யமனுடைய ஒழுங்கான (நீதி வழுவாத) மனத்தின் பண்பை நிகர்த்து ஒளி வீசும் வேலை உடையவனே, அடியார்களின் விருப்பத்தை (நிறைவேற்றும் பெருமானும்), தொப்பையை உடையவனும் (ஆகிய) யானைமுகப் பெருமானுக்குத் தம்பியே, வேப்பஞ்சந்தி* என்னும் ஊரில் உறையும் கந்தனே, குமரப் பெருமாளே. 
* இக்கோயில் இருக்குமிடம் - விருதாச்சலத்திலிருந்து 22 கிமீ மேற்கில், உளுந்தூர்பேட்டையிலிருந்து 24 கிமீ தெற்கில், தொளுதூரிலிருந்து 19 கிமீ வடக்கில். (இணைய பார்வையாளர் திரு. ஷண்முகம் நாகராஜன் அவர்களின் குறிப்பு).
பாடல் 756 - திருக்கூடலையாற்று஡ர் 
ராகம் -....; தாளம் -
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
     தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
          தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான
வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
     மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு
          மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே 
வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு
     காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு
          வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத் 
தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
     பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென
          சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ...... தன்பிலாமல் 
தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம
     னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள்
          சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய் 
வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
     நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை
          மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ...... விஞ்சையோனே 
வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை
     யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
          மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ...... முங்கொளாயி 
கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
     தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்
          கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ...... கந்தவேளே 
கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்
     நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ
          கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே.
என்னை வருத்திச் சூழ்ந்துள்ள வினையும், மண், பெண், பொன் என்ற மூவாசைகளும், தீயை மூட்டி உலையில் காய்ந்த பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல விரிந்து வெளிப்பட்டு என்னை மாட்டி வைத்து, என்னைப் பாய்ந்து வாழ்க்கை வழியில் பிடிவாதமாய் ஆட்டி வைக்கும் மாய வித்தை காரணமாய், கிடைத்துள்ள மலர், சந்தனம், புனுகுச் சட்டம், பன்னீர் இவைகளுடன் நல்ல காற்று வர அனுபவித்து, தாங்குவனவாய் மார்பில் அணிந்துள்ள முத்து மாலைகள் நன்கு கிடைத்ததென அணிந்து, அழகு பெற சோபையுடன் மகிழ்ச்சியும் அன்பும் மிகப் பெருக, மை தீட்டிய கண்கள் ஒளி பொருந்திய விலைமாதர்களுடன் விளையாடி, அந்தக் காம வலையில் பூட்டப்பட்டு அகப்பட்டு, நோய்களுடன் வலிகளும் வாத நோயும் எனப் பல வியாதிகள் ஒன்று சேர்ந்திட, நிலை மாறி வினைகள் கவ்விய அடியேனாகிய நானும் உனது அன்பு இல்லாமல், சேகரித்த பொருள் நிரம்ப இருப்பதால், ஒருவாறு மனம் தெளிவு பெற்று சாவு என்பதே இல்லை என்னும் எண்ணத்துடன் வாழ்நாளைச் செலுத்தி, யமன் தன் தூதுவர்களை ஓட்டி அனுப்ப, மெலிந்து போய், எழுத்துள்ளதும் பிரமனுடைய அடையாளம் கொண்டதுமான ஓலைச் சீட்டு வர அதைப் பார்க்கும்படி வருத்துகின்ற காலன் என்னை அணுகாதபடி உன்னுடைய அருளையும் அன்பையும் எனக்குத் தந்து உதவுக. வேடர்கள் மீது வெகுண்டு குறப் பெண் வள்ளியுடன் நட்பு கொண்டு, அஞ்ஞான நிலையரான அசுரர்களைச் சிவந்த ஓளி வீசும் வேலைச் செலுத்தி போர் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டு, தேவர்கள் தலைவனாகிய இந்திரனை வாழும்படி வைத்த கலைஞனே, மாறுபட்ட உருவத்தோடு சென்று மதுரையில் பல திருவிளையாடல்களை விளையாடி, வைகை ஆற்றில் மண் சுமந்தவரும், மழு ஏந்தியவரும், என்னுடைய தந்தையும், திரி புரங்களின் மேன்மையை எரித்து ஆண்ட சிவ லோகனும், (நந்தி என்ற) ரிஷப வாகனத்தில் ஏறினவருமாகிய சிவபெருமானுடைய இடது பாகத்தைக் கொண்ட தாய், மலை போன்ற மார்பகங்களைத் தாங்கும் நூல் போன்ற இடையையும், கோடிச் சந்திரர்களுடைய வடிவையும் எடுத்து வந்தாற் போல் அழகிய சிவகாமி, வலிய யமனைக் கோபித்து அழித்த பேரழகியாகிய பார்வதி தேவி மனம் குளிர அருளிய கந்த வேளே, வெள்ளாறும், மணிமுத்தா நதியும் ஒன்று கூடிய ஆறு நிறைந்து வரும் விளக்கம் கொண்ட இடத்தில் உள்ள கூடலையாற்றூரில்* வீற்றிருக்கும் சேந்தனே, மயில் வாகனனே, வள்ளி, தேவயானை ஆகிய இருவரோடு இணைந்து, யமன் (என்னை விட்டு) ஒதுங்கித் தாண்டி விழும்படி என்னுடைய உடலில் குடி கொண்டு வாழ்கின்ற குமரனே, தம்பிரானே. 
* விருத்தாசலத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 757 - கடம்பூர் 
ராகம் - ....; தாளம் -
தானனம் தானான தானனம் தானான
     தானனம் தானான ...... தனதான
வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண
     மால்கடந் தேபோமெ ...... னியலூடே 
வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார
     வாசகம் போல்கூறி ...... யணைமீதே 
சேருமுன் காசாடை வாவியும் போதாமை
     தீமைகொண் டேபோமெ ...... னடமாதர் 
சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்
     சீதளம் பாதார ...... மருள்வாயே 
நாரணன் சீராம கேசவன் கூராழி
     நாயகன் பூவாயன் ...... மருகோனே 
நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு
     நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா 
சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட
     சூரியன் தேரோட ...... அயிலேவீ 
தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு
     சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே.
இங்கே வாருங்கள், என் வீடு அருகில் தான் இருக்கின்றது, எனக்குப் பணம் விஷம் மாதிரி. உம்முடைய ஆசையை என்னுடைய அன்புடனே கலந்து தீர்த்துக் கொண்டே போங்கள். பெண்களே வாருங்கள், பாயைப் போடுங்கள் என்று மரியாதைப் பேச்சுக்கள் போன்றவைகளைப் பேசி, படுக்கையில் சேர்வதற்கு முன்பாக பொருளையும், ஆடைகளையும் வேண்டிய அளவுக்குப் பறித்தும், அவை போதாது என்று குற்றம் கூறி ஓடிப் போம் என்று அடம் பிடிக்கும் விலைமாதர்கள் உள்ள இடத்தில் நான் போகாமல், குற்றங்கள் வந்து என்னைச் சேர்ந்து பெருகாமலும், உனது குளிர்ந்த திருவடித் தாமரைகளைத் தந்து அருள்வாயாக. நாராயணன், ஸ்ரீராமன், கேசவன், கூர்மை கொண்ட சக்ராயுதத்தைத் தரித்த தலைவன், பூலோகத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த கண்ணபிரானின் மருகனே, நாரதர், தும்புரு ஆகியோர் இசை பாட, நின்று ஆடுகின்ற (ஊர்த்துவ) நடனத்தைச் செய்கின்ற திருவடியை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே, சூரனும், அவன் வருத்தும் செயல்களும் கடலில் போய் (மாமரமாகக்) கிடந்தே அழியவும், சூரியனுடைய தேர் (பழைய முறைப்படி) ஓடவும் வேலைச் செலுத்தியவனே, பரிசுத்தமான நறு மணம் வீசும் காவேரி நதியுடன் சேர்கின்ற, ஒள்ளிய சிற்றாறு சூழ்கின்ற கடம்பூரில்* வீற்றிருக்கும், தேவர்கள் பெருமாளே. 
* கடம்பூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது.
பாடல் 758 - திருவரத்துறை 
ராகம் - ....; தாளம் -
தனன தத்தனத் தனன தத்தனத்
     தனன தத்தனத் ...... தனதான
கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
     கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக் 
களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
     கருதி வைத்தவைப் ...... பவைசேரத் 
தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
     தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச் 
சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
     தருணி கட்ககப் ...... படலாமோ 
பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
     பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும் 
பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
     ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச் 
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
     சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன் 
செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
     திருவ ரத்துறைப் ...... பெருமாளே.
கோபம் காட்டி மையைக் கண்களில் இட்டு, அன்புடனே அழைத்து, இயல் தமிழ்ப் பாக்களைச் சொல்லிச் சிரித்து உறவு கூறி விளையாடி, களவு வித்தைகளைக் கொண்டு மனதை உருகச் செய்து, முன்னதாகவே திட்டமிட்டு, சேமித்து வைத்த பொருள்கள் எல்லாம் தம்மைச் சேரும்படி, கொடுமை காட்டி அபகரித்து, இருவர் கழுத்தும் ஒன்றாகும்படி அணைத்து, நெகிழ்ந்து போய் உயிரும் சோரும்படி, படுக்கை மெத்தையில் செய்வது இன்னது என்று தெரியாத வகையில் செயல் அழிக்கின்ற இந்த இளம் பெண்களிடையே அகப் படலாமோ? பிறவிப் பிணியைத் தொலைத்து அருளக் கூடிய உருவமில்லாத, முழு முதற் பொருளான ஞானானந்தக் கடலில் மூழ்கும் பெரிய முனிவர்களுடைய கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே, சீகாழியில் நான்கு வேதங்களும் வல்லவனாய் வளர்ந்த (திருஞான சம்பந்தச்) சிறுவனே, உன்பால் அருள் வைத்து (முத்துக்) குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்தருளிய** சிவ பெருமான் வீற்றிருக்கும் பூமியில் புகழ் பெற்ற சத்தியபுரியாகிய திருவரத்துறையில்* வாழும் பெருமாளே. 
* கொச்சை சீகாழிக்கு உரிய பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. மற்ற பெயர்கள் வருமாறு:பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரிபுரம், புறவம், சண்பை, காழி, கழுமலம்.
** பெண்ணாடகம் என்ற ஊரில் திருஞானசம்பந்தர் தரிசித்துவிட்டு திருவரத்துறைக்குப் போகும் வழியில் அவர் களைத்ததைக் கண்ட சிவன் அவர் ஏறிச் செல்ல முத்துச் சிவிகை, குடை ஆகியவற்றைக் கொடுத்து அருளினார்.
*** திருவரத்துறை பெண்ணாடகத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 759 - யாழ்ப்பாணாயன்பட்டினம் 
ராகம் - ....; தாளம் -
தாத்தா தானம் தத்தன தனதன
     தாத்தா தானம் தத்தன தனதன
          தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
     பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
          போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும் 
போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
     மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது
          பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல் 
வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
     நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட
          வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம் 
மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்
     வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
          வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ 
ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
     கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
          யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை 
ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
     நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
          யாட்டா லீசன் பக்கம துறைபவள் ...... பெறுசேயே 
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
     நீத்தார் ஞானம் பற்றிய குருபர
          யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே 
ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
     வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
          யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.
பூவாலாகிய மாலையைச் சூடுபவர்கள். பூங்கொத்துக்களைச் சூடும் கூந்தலை உடையவர்கள். அவர்களது பார்வை வேல் போலவும், வாள் போலவும், மன்மதன் செலுத்தும் போருக்கு என்றே நிறைந்த, பெருகியுள்ள தேன் கொண்ட பூ அம்புகள் போலவும், யமன் ஏவி அனுப்பியுள்ள தூதர் போலவும் பாய்ந்து, நாள் தோறும், யார் கையில் பொருள் உள்ளதோ அத்தகையோரை தம் மீது அன்பு வரும்படியான ஆசை மயக்கத்தை ஏற்றக்கூடிய மாய வித்தைகளைக் கற்றுள்ள அஞ்சனம் பூசிய கண்ணினர். அமுதம் போன்ற வாயிதழ் ஊறல் வாய்ந்தவர்கள். (வந்தவரின்) மனம் மாறுபடுதல் உண்டாகும்படி பேசும் பொய் நிறைந்த உபாயத்தினர். நூலிலும் தேய்ந்து மிக நுண்ணியதான சிறிய இடை துன்பப்படும்படி ஒளி தாவி வீசுவதும், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, அகில், மாலை, சிறந்த ஆபரணங்கள், முத்து மாலை, கச்சு இவைகளை அணிந்த மார்பை உடையவர்கள். இத்தகைய வேசையர் மீது ஆசை பூண்டு, உடல் நலம் கெட்ட என்னை உன்னுடைய சத்திய வாக்கால் நான் ஞானத்தை அடைந்து இனி உன்னை வழிபடுமாறு அருள் புரிய மாட்டாயோ? தாயானவள், திருமாலின் தங்கை, கன்னிகை, உமாதேவி, நடனம் செய்யும் ஆனந்த சிவாம்பிகை, திரி புரங்களை எரித்தவள், தான் ஆளும் பேய்களும், பூதங்களும், சுற்றியுள்ள பைரவி, புவனங்களுக்கு ஈசுவரி, எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், வேறுபாடு பொருந்தப் பார்க்காது எதையும் அழித்தவள். திருவிளையாடலாக சிவ பெருமான் (இடது) பக்கத்தில் உறைபவள் ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே, நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் இவைகளைச் செய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே, யாப்பிலக்கணம் ஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய (திருஞானசம்பந்தராக வந்த) முருகனே, ஏற்பவர்கள் வரும் போது (அவர்களுக்கு) மனம் விரும்பி மகிழ்ச்சியுடன் பொருளை அள்ளித் தரும் (கொடையாளிகள்) உள்ள, பொன்னொளி வீசும் நீண்ட மதில் சூழ்ந்த யாழ்ப்பாணாயன் பட்டினத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* அறுபத்திமூவரில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடைய ஊர். விருத்தாசலத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் 
ராகம் - மத்யமாவதி 
தாளம் - ஆதி
தனனத்த தான தனனத்த தான
     தனனத்த தான ...... தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
     கரிமுத்து மாலை ...... மலைமேவுங் 
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
     கடல்முத்து மாலை ...... யரவீனும் 
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
     னடைவொத்து லாவ ...... அடியேன்முன் 
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
     மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே 
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
     மழலைச்சொ லாயி ...... யெமையீனு 
மதமத்த நீல களநித்த நாதர்
     மகிழ்சத்தி யீனு ...... முருகோனே 
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
     திருமுத்தி மாதின் ...... மணவாளா 
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
     திருமுட்ட மேவு ...... பெருமாளே.
கரும்பு தரும் முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன மாலை, யானை தரும் முத்தாலான மாலை, மலையிற் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை, சங்கிலிருந்து கிடைக்கும் முத்தாலான மாலை, கடலில் பெறப்படும் முத்தாலான மாலை, பாம்பு தரும் சூடுள்ள முத்தாலான மாலை, இப்படி எல்லா மாலைகளும் மார்பிலே தகுதி பெற்றுப் புரண்டு அசைய, அடியேனின் எதிரே அடர்ந்த பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில் இச்சா சக்தியாம் வள்ளியுடனும், உன் அடியார் கூட்டத்துடனும், வந்து அருள் புரிவாயாக. மேகம் போன்ற நிறத்தை உடைய ஜோதி உமை, குயிலும் கிளியும் போன்று மழலை மொழி பேசும், எம்மை ஈன்ற, தாய், பொன் ஊமத்தைமலரை (ஜடையில்) அணிந்தவரும், நீல நிறம் கொண்ட கழுத்தை உடையவரும், என்றும் அழியாது இருப்பவருமான தலைவர் சிவபிரான் மகிழ்கின்ற சக்தியாம் பார்வதி தேவி பெற்ற முருகனே, செழிப்புள்ள முத்துமாலை பூணும் மார்பை உடைய, அமுதமயமான தேவயானை, மேலான முக்தியைத் தரவல்ல மாதரசியின் மணவாளனே, சிறையில் தேவர்களை வைத்த சூரர்கள் அவர்களுக்குப் பூட்டிய விலங்கைத் தறித்து எறிந்தவனே, ஞானனே, திருமுட்டம்* என்ற தலத்தில் அமர்ந்த பெருமாளே. 
* திருமுட்டம் இப்போது 'ஸ்ரீமுஷ்ணம்' என வழங்கப்படும். சிதம்பரத்துக்கு தென்மேற்கே 24 மைலில் உள்ளது.
பாடல் 761 - ஸ்ரீ முஷ்டம் 
ராகம் - ...; தாளம் -
தனனத் தத்தன தானன தானன
     தனனத் தத்தன தானன தானன
          தனனத் தத்தன தானன தானன ...... தனதான
சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
     சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்
          தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள் 
சனுமெத் தப்பரி வாகிய மாமய
     லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்
          தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும் 
விரகத் துர்க்குண வேசைய ராசையர்
     பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்
          விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக 
மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
     கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்
          விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உறவாமோ 
பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
     லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை
          புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது 
புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
     சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
          புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா 
திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
     புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
          சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர் 
திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
     மகளைப் பொற்றன வாசையொ டாடிய
          திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
வெற்றியையே தரும் அம்பு, கயல் மீன் என்று உவமிக்கப்படும் வேல் போன்ற கண்கள், வில்லைப் போன்று வட்டமாக வளைந்த புருவம், மேகம் போன்று கரிய கூந்தல், முத்து மாலையை அணிந்ததும் மலை போன்றதும் ஆகிய மார்பகங்கள், நூல் போன்று மெல்லிய இடுப்பு இவற்றைக் கொண்ட விலைமாதர்கள். காம விளையாட்டில் அதிக அன்பு கூடுகின்ற பெரிய மயக்கத்தைத் தரும், முத்தம் விளைவிக்கும் ஆசையோடு கூடிய பெண்கள். தகுதத் தக்கிட தோதகு தீதென்ற தக்க ஒலிகளோடு நடனமாடி விளையாடுகின்ற சாமர்த்தியம் உள்ள தீய ஒழுக்கம் கொண்ட பொது மகளிர். ஆசை காட்டுபவர்கள். பணத்தை அதிகமாகப் பறிக்கின்றவர்கள். அடிக்கடி குணம் மாறுபவர்கள். பல விதமான நடையுடை பாவனைகளை மேற்கொள்ளுபவர்கள். அதிக போகத்தை அனுபவிப்பதால் உடல் மெலிவடைந்து, குறி துர் நாற்றமும் கிழிவும் உடையவர்கள். கலகமே செய்யும் மூதேவிகள். பீடித்துத் துன்புறுத்துபவர்கள். பெருமைப் பேச்சுக்களைப் பேசி குடியைக் கெடுப்பவர்கள். இளமை உடையவர்கள். இத்தகைய வேசியரது உறவு எனக்கு நல்லதாகுமா? காமப் போரில் வெற்றியையே தரும் கரும்பாகிய நீண்ட வில்லை உடைய மன்மதனின் உடல் எரிந்து உலர்ந்த சருகு போல் விழும்படி தீச் சிரிப்பைச் செலுத்திய, பிறைச் சந்திரன் வாழும் சடையை உடைய, சிவபெருமானின் இடப்பாகத்தில் உறையும் ஒப்பற்ற மாது, எல்லாராலும் புகழப்பட்ட பரம சக்தி, நிலை குலையாத மனப் பான்மையை மேற் கொண்டுள்ள, சிவ பக்தி நிறைந்த பரமேஸ்வரியாள், மூவுலகங்களையும் அருளுடன் முன்பு படைத்தவளாகிய உமாதேவி அருளிய குழந்தையே, முன்னொரு காலத்தில் பாற்கடலில் பொன் மலையாகிய மேரு (மத்தாகச்) சுழன்று ஆடும்படி வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கட்டி, சுவை நிறைந்த அமுதத்தை சிவ பக்தர்களுக்கு இது உரியதாம் என்று பங்கிட்டுக் கொடுத்த திருமாலாகிய ராமர், லக்ஷ்மி சென்று பணிந்து பூஜித்த ஆதி வராகப் பெருமானுடைய மகளாகிய வள்ளியின் அழகிய மார்பகத்தின் மீது ஆசை கொண்டு அவளுடன் விளையாடிய, திரு முட்டப்* பதியில் (ஸ்ரீமுஷ்ணத்தில்) வீற்றிருக்கின்ற முருகனே, தேவர்களுடைய பெருமாளே. 
* திருமுட்டம் இப்போது ஸ்ரீமுஷ்ணம் என வழங்கப்படும். சிதம்பரத்துக்கு தென்மேற்கே 24 மைலில் உள்ளது. இங்கு உறையும் திருமால் ஆதிவராகப் பெருமாள் என்று அழைக்கப்படுவார். லக்ஷ்மி பூஜித்த எட்டு தலங்களில் ஒன்று. மற்ற தலங்கள் வருமாறு:ஸ்ரீரங்கம், திருவேங்கடம், வானமாமலை, புஷ்கரம், நைமிசாரணியம், பத்ரிகாசிரமம், சாளக்கிராமம்.
பாடல் 762 - திருநல்லு஡ர் 
ராகம் - ....; தாளம் -
தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
மூல முண்டகனு பூதி மந்திரப
     ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ
          தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல் 
மூது ரம்பலவர் பீட மந்தமுமி
     லாத பந்தவொளி யாயி ரங்கிரண
          மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம் 
ஓல மென்றுபல தாள சந்தமிடு
     சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
          ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம் 
ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
     தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
          மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ 
சூலி யந்தரிக பாலி சங்கரிபு
     ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
          வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே 
சூர சங்கரகு மார இந்திரச
     காய அன்பருப கார சுந்தரகு
          காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா 
சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
     மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
          நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே 
தேவ ரம்பையமு தீண மங்கைதரு
     மான ணைந்தபுய தீர சங்கரதி
          யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
மூலாதார கமலத்தில் உள்ள அனுபவ ஞானத்தைத் தரும் மந்திரம் மேல் நிலையில் உள்ள (சூரிய, சந்திர, அக்கினி எனப்படும்) முச்சுடர்கள், மூன்று மண்டலங்கள், ஆதாரங்களாக சந்திக்கப்படும் ஆறு ஆதாரங்கள்*, கற்பக விருக்ஷம் (போல விரும்பிய எல்லாம் அளிக்க வல்ல மேலைச் சிவ வீதி இவைகளை எல்லாம்) தாண்டி அவைகளின் மேல் சென்று, பழைய (எல்லா தத்துவங்களும் ஒடுங்கும் பரவொளிப்) பீடமாகிய லலாட மண்டபத்தில், முடிவில்லாத திரண்ட ஒளியாய் விளங்கும், ஆயிரம் கிரணங்கள் வீசும் மூன்றாம் பிறை நிலவின் வடிவைக் கொண்ட ஆக்ஞை ஆதாரத்தில், சந்திர ஒளியுடன் கூடி மேல் நிலையில் பளிங்கு போல் விளங்கும் விந்து சம்பந்த (சிவசக்தி ஐக்கிய) நாத ஒலி அபயம் என்று அழைத்தல் போன்ற ஒலியுடன் பல வகையான தாளங்கள் சந்தங்கள் கலக்கும் நடன தரிசனத்தைக் கண்டு தேவாம்ருத கடலைப் பருகி, பதினாலு உலகங்களையும் அங்கே விளக்கமுறத் தரிசித்து அனுபவித்து, சந்திரன், சூரியன், அக்கினி (இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும்) மூன்று நாடிகளின் வழியே சூலம் போல ஓடுகின்ற அந்தப் பிராண வாயு ஒடுங்க, (வீணா தண்டம் என்னும்) முதுகு எலும்பில் தங்கி, ஞான வளப்பம் பொருந்திய சுழு முனைக் கயிற்றின் வழியே மேலே தழுவி, நூறு கோடி சந்திரர்களின் ஒளியை (சிவப் பேரொளியைச்) சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாச வடிவை உடையவள், கபாலம் ஏந்திய சங்கரி, திரிபுரம் எரித்தவள், திரி புரம் எரித்த போது அம்பாக இருந்த வைஷ்ணவி, என்றும் இளையவள், எட்டு** குணத்தினரான சிவபெருமான் பாகத்தில் உறைபவள் ஆகிய சிவகாம சுந்தரி மகிழும் குழந்தையே, சூரனை அழித்த குமார வேளே, இந்திரனுக்கு உதவி செய்தவனே, அடியார்களுக்கு உபகாரம் செய்தவனே, அழகனே, குகனே என்றெல்லாம் வேதங்கள் முறையிட்டு உரைக்க நடனம் செய்த வேலனே, பரிசுத்தமான திருவெண்ணீற்றை அணியாதவர்களும் கொடியவர்களும் ஆகிய சமணர்கள் இறக்கும்படி கொடிய கழுமரத்தில் ஏறுங்கள் என்று (திருஞானசம்பந்தராக வந்து) திருவிளையாடல் இயற்றி திருநீற்றை (கூன் பாண்டியனுக்கும், அடியார்களுக்கும்) அளித்த தாமரைக் கையனே, சந்திரன் போன்ற (ஆறு) முகமுடைய கந்த வேளே, தேவ லோகத்து ரம்பை போன்றவளும் பாற் கடல் அமுதத்துடன் தோன்றியவளும் ஆகிய லக்ஷ்மிதேவி அளித்த மானாகிய வள்ளி (அமுதவல்லி) அணைந்த திருப் புயத்தை உடையவனே, தீரனே, சங்கரத் தியாகர் என்னும் நாமம் உடைய சிவ பெருமான் வந்து எழுந்தருளிய திரு நல்லூர்*** என்னும் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கின்ற தம்பிரானே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** சிவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
*** திருநல்லூர்ப் பெருமணம், சிதம்பரத்திலிருந்து 3 மைலில் உள்ள கொள்ளிடத்துக்கு அருகில் உள்ளது. சங்கரத் தியாகர் என்பது திருநல்லூர் சிவபெருமானின் திருநாமம்.
பாடல் 763 - திருமயேந்திரம் 
ராகம் - ....; தாளம் -
தந்தன தந்தன தாந்த தானன
     தந்தன தந்தன தாந்த தானன
          தந்தன தந்தன தாந்த தானன ...... தனதான
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
     அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
          வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல 
வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
     யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
          வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன் 
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
     குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
          கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர் 
கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
     நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
          கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ...... முழல்வேனோ 
அண்டரு டன்தவ சேந்து மாதவர்
     புண்டரி கன்திரு பாங்கர் கோவென
          அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை 
அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
     ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
          அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா 
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
     யென்பணி யன்கன சாம்பல் பூசிய
          செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகோனே 
திங்கள்மு கந்தன சாந்து மார்பின
     ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
          சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.
வண்டுகள் மொய்க்கும், நறுமணம் கமழும் கூந்தலை உடையவர்களின் கண் அம்பு போன்று இருக்கும். வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றி, வளப்பம் பொருந்திய முத்தை ஒத்துத் திகழும் நன்கு அமைந்த வரிசையான பற்கள், குயிலைப் போன்ற நன்கு பயிலும் மொழிகள், மலை போன்ற மார்பகம், அதில் அழகிய தேமல், அழகிய குமிழம் பூ போன்ற மூக்கு, மூங்கில் போன்ற தோளும், கையும், வஞ்சிக் கொடி போன்ற, நூல் போன்ற நுண்ணிய இடை, இவைகளை உடைய விலைமாதர்கள் பொருளைப் பார்த்தவுடனேயே மகிழ்ச்சி மிகுந்து பேசுபவர்கள், கலகத்தை மூட்டும் குரலுடன் எல்லாவற்றையும் பற்றிப் பேசுபவர்கள், கண்கள் சுழலும்படி தாண்டுவதும் ஆடுவதுமாக உள்ள வஞ்சகக்காரிகள், (பணமில்லாதவரிடம்) இரப்போர்கள் ஏந்தும் பையையும், தடி ஒன்றையும் கொடுத்து (பிச்சைக்காரனாகிப்) போவென்று விரட்டி, விஷத்தையும் கலந்து கொடுக்கும் வஞ்சகம் நிறைந்த பாவிகள், (இத்தகையோரின்) அதிகார வரம்பிலும் இவ்வுடல் நலிவுற்று, நாய் போன்ற அடியேனும் திரிவேனோ? தேவர்களும், தவ நிலையை மேற்கொண்டுள்ள தவசிகளும், தாமரையோனும் (பிரமனும்), லக்ஷ்மியின் கணவனான திருமாலும் கோ என்று ஓலம் இட, பயப்பட வேண்டாம் என்னும்படி சென்று வீரத்துடன் அசுரர்களை அவர்கள் உடல் ஒடுங்கி இறந்து ஒழியச் செய்து, கடல்களும், எட்டு மலைகளும் பொடி சாம்பலாய்த் தூளாக, யமனும் தனது பாசக் கயிற்றை அவ்விடம் (போர்க்களத்தில்) வியப்புடன் வீசிட வேலாயுதத்தைச் செலுத்தியவனே, பூச் செண்டை அணிந்துள்ள சடையில் பாம்பு, கங்கை, சந்திரன், எலும்பு (ஆகியவற்றை) அணிந்தவன், பெருமை பொருந்திய திரு நீற்றைப் பூசியுள்ள சிவந்த உடலை உடையவன் (ஆகிய சிவபெருமானுடைய) பிள்ளையே, சிவப்பு நிறம் உடையவனே, வேலனே, முருகோனே, சந்திரனை ஒத்த திருமுகத்தையும், மார்பில் சந்தனப் பூச்சையும் உடையவள், எனது உள்ளத்தில் புகுந்துள்ள உன் தோழி வள்ளியுடன் மனம் மகிழ்ந்து திருமயேந்திரம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருமயேந்திரம் கொள்ளிடம் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஆச்சாபுரம் (திருநல்லூர்) என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
பாடல் 764 - சீகாழி 
ராகம் - ....; தாளம் -
தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
     அரிவையர் வசையுட னங்கி போல்வர
          அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும் 
அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
     அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
          அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய் 
முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
     வழிவச மறஅற நின்று சோர்வுற
          முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே 
முருகவிழ் திரள்புய முந்து வேலணி
     முளரியொ டழகிய தொங்கல் தாரினை
          முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ 
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
     திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
          திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி 
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
     திமிலையொ டறைபறை நின்று மோதிட
          சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே 
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
     மலரடி வருடியெ நின்று நாடொறு
          மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே 
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
     மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
          வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.
அலை வீசும் கடல், வில் ஏந்திய மன்மதன், மழைக் காலத்துக் காற்று, மாதர்களின் வசைப் பேச்சு இவை எல்லாம் நெருப்பு போல (என்னிடம்) வர, அசைந்து வருகின்ற மாடுகளின் மணிகளின் ஒலி, அன்றில் பறவை, குயில் இவற்றின் ஓசைக்குப் பயந்து நானும், நெருப்பிலிட்ட மெழுகு போல் உருகி, வியர்த்து விறுவிறுக்க, சாம்பிராணிப் புகையும், கஸ்தூரியும் விஷம் போலத் தாக்க, அணிந்துள்ள ஆபரணங்கள் ரத்ன மாலைகள் பலவும் வெந்து சாம்பலாக, உடல் நிலை வேறுபட்டு, மார்பகங்கள் நெருப்பைச் சொரிய, முன்பிருந்த நினைவானது அழிந்து, தன் வசம் மிகக் கெட நின்று, தளர்ச்சி உண்டாக, முழு நிலையில் வந்துள்ள விரக வேதனை நெருப்பை மொண்டு வீச, அதனால் நான் சோர்வு அடையாமல், வாசனை வீசுகின்ற திரண்ட புயங்கள் வேகமாகச் செலுத்தும் வேலாயுதம், அற்புதப் பாதத் தாமரை இவையுடன் அழகிய தொங்கும் பூ மாலையை, வெறுப்பு, கோபம் இல்லாமல் உன்னுடைய திருவருளைத் தந்து, என்னுடைய காம மயக்கத்தைக் கடிந்து நீக்காதோ? வில் போன்ற நெற்றி, கயல் மீன் போன்ற கண்கள், செம்மை வாய்ந்த சொல்லை உடைய வானவி தேவி, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பைரவியாகிய சிவனது பத்தினி, சந்திரனைச் சூடிய விளக்கமுற்ற சடையை உடைய பெரியவள், செம்பொன் மேனி நிறத்தவள், சிங்க வாகனம் கொண்டவள், கூட்டமான படையாகப் பேய்களை உடையவள், ஒலி பொங்கி மேலெழும் ஊது கொம்புகள், திமிலைப் பறையுடன், முழங்கும் பறை இவையெல்லாம் இருந்து பேரொலி செய்ய, சிவபெருமானுடன் நடனம் செய்யும் மங்கை, மாது, உமை என்ற பார்வதி பெற்ற முருக வேளே, வள்ளி மலைச் சாரலில் தவம் செய்த ஒரு முனிவர் பெற்ற வள்ளியின் திருவடியை வருடி நின்று, நாள் தோறும், மயில், நெருங்கி வரும் குயில், கிளி இவைகளை, புதியனவாய் (கவண் கல் கொண்டு) கடிந்து (வள்ளிக்கு ஆயல் ஓட்டும் தொழிலில்) தொண்டு செய்தவனே, மழை கொண்ட மேகங்கள் தவழ்கின்ற நெருங்கிய கோபுரங்கள் மதில், வயல் இவை சூழ மேம்பட்டு விளங்கும் சீகாழியில்* அவதரித்தக் கவுணிய குலத்துப் பிள்ளையாகிய ஞானசம்பந்தனே, தேவர்களின் தம்பிரானே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடுவதாக அமைந்தது.அலைகடல், மன்மதன், காற்று, மாதர்களின் வசை, மாடுகளின் மணியோசை, அன்றில், குயில் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 765 - சீகாழி 
ராகம் - ....; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
இரத மான தேனூற லதர மான மாமாத
     ரெதிரி லாத பூணார ...... முலைமீதே 
இனிது போடு மேகாச உடையி னாலு மாலால
     விழியி னாலு மாலாகி ...... யநுராக 
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
     ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி 
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
     விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய் 
அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
     அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற 
அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
     அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற் 
புரள வீழ்வ ¡£ராறு கரவி நோத சேய்சோதி
     புரண பூர ணாகார ...... முருகோனே 
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
     புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
சுவை நிரம்பிய தேன் போல ஊறும் வாய் இதழ் ஊறலை உடைய அழகிய விலைமாதர்களின் நிகர் இல்லாத அணிகல மாலைகள் கொண்ட மார்பகங்களின் மேல் அழகாக அணிந்துள்ள மேலாடை உடையினாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும் காம மயக்கம் கொண்டு, காமப் பற்றினால் வேதனைப்பட்டு, படுக்கையில் எப்போதும் நாள் தோறும் கஸ்தூரி முதலிய நறு மணங்கள் சேர்ந்துள்ள கூந்தலின் நிழலிலே மூழ்கினவனாய், (அதனால்) ஏற்படும் காம மயக்கம் என்னும் பெரிய மாயை என்னை விட்டு அகலுமாறு, நாயினும் அடியவனாகிய நானும் வீணன் ஆகாதவாறு உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. அரகரா என்று கூறாத மூடர்கள், திருநீற்றைப் பூசாத மூடர்கள், அடியவர்களைப் பணியாத மூடர்கள், கரை ஏறுவதற்கான நல்ல அறிவைத் தரும் ஞான நூல்களைக் கல்லாத மூடர்கள், நல்ல நெறியைக் கடைபிடிக்காத மூடர்கள், தருமம் இன்னதென்று கூட விசாரணை செய்யாத மூடர்கள் ஏழு* நரகங்களிலும் புரளும்படி விழுவார்கள். பன்னிரண்டு திருக் கரங்களை உடைய விநோதனே, செவ்வேளே, ஜோதி வடிவானவனே, நிறைந்த ஒளி பொருந்திய பூரண உருவத்தனே, முருகனே, மேகம் உலாவும் விண் நாட்டவர் போற்றிப் பரவி நாள்தோறும் ஈடேறுகின்ற சீகாழியில்** வீற்றிருந்து வாழ்கின்ற, தேவர்களின் பெருமாளே. 
* ஏழு நரகங்கள் பின்வருமாறு: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 766 - சீகாழி 
ராகம் - ஜோன்புரி 
தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தக-1, தகிட-1 1/2
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
     தானத்தன தான தனந்த ...... தனதான
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
     ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் 
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
     ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் 
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
     கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே 
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
     கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே 
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
     சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் 
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
     தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா 
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
     காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் 
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
     காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை, மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு குடிலாகிய இந்த உடல் நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், கூனித் தடிகொண்டு நடந்தும், இழிவைத் தரும் கோழை மிக்க குப்பையான இந்த உடலை, மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான இந்த உலக மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி, உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக. சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில், மதுரையில் முன்பு (சம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடி, கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து, திடத்துடன் திரு நீற்றை விநியோகித்து, மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டியனின் உடலில் பொருந்திய கொடிய சுர நோய் தீரும்படியாக அருள் சுரந்த குரு நாதனே, (வள்ளி மலைக்) காட்டில் மீது இருந்த சிறு மான் போன்ற வள்ளியை நினைந்து, தினைப்புனத்தில் நடந்து சென்று, ஆசைக் கிளியாகிய அவளோடு பேசி, வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து, அந்த ஞானக் குறப்பெண்ணை மணந்து, சீகாழிப்* பதியில் அமர்ந்து மகிழும் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 767 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -
தய்யா தத்தன தானன தானன
     தய்யா தத்தன தானன தானன
          தய்யா தத்தன தானன தானன ...... தனதான
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
     மெய்யா ரப்பணி பூஷண மாலைக
          ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி 
ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
     கையா ரக்கணை மோதிர மேய்பல
          வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச் 
செய்வா ரிப்படி யேபல வாணிப
     மிய்யா ரிற்பண மேயொரு காசிடை
          செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச் 
செய்வா ரிற்படு நானொரு பாதகன்
     மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
          செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே 
மையா ரக்கிரி யேபொடி யாய்விட
     பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
          வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா 
வையா ளிப்பரி வாகன மாகொளு
     துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
          மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே 
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
     செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
          தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத் 
திய்யா ரக்கழு வேறிட நீறிடு
     கையா அற்புத னேபிர மாபுர
          செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
அலங்காரமான சிலை உருவம் என்று சொல்லும்படி, நறுமணம் உடலில் நிரம்ப, அணி ஆபரண மாலைகளைச் சுமந்து, நல்ல ஆடையை அணிந்து, மிக்க காம இன்பம் கொடுப்பவர் ஆகி, தமக்கு ஒப்பாகமாட்டார் இந்த பூமியில் உள்ளோர் என்று சொல்லும்படியாக இரு கைகளிலும் முத்திரை மோதிரம் பல அணிந்தவர்களாய், சொல்லப்போனால், கலக்கம் உறும் மாதவிடாய் நாட்களிலும் தம் உடலை விரும்பிப் பாதுகாத்து இப்படியே பல வியாபாரம் செய்வார்கள். பணத்தைத் தானமாகக் கொடாதவர்கள். ஒரு காசு அளவு கூட வெளிவிடார்கள். வஞ்சனை செய்பவர்கள். பிசாசு போன்றவர்கள். (தமது வேசைத்தொழிலைச்) செய்பவர்கள் கூட்டத்தில் உன் திருவடியைப் போற்றாது அகப்பட்ட நான் ஒரு பாவி. உண்மையாக எப்படி ஒரு கரை நான் சேர்வது? செந்நிற வேளே, அற்புதம் ஆகும் வண்ணம் அந்த ஒப்பற்ற பொருளை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை பொடிபட்டுக் கீழே விழவும், பொய் நிறைந்த அசுரர்களின் தலைவனான சூரனுடைய ஊர் அழியவும், தேவர்கள் எங்களை நல்ல நிலையில் வைத்தருள்வாய், அழகிய பாதங்களை உடையவனே என்று வேண்டி வணங்க வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, சவாரிக்கு உதவும் வாகனமாக குதிரை போன்ற மயிலைக் கொண்ட வாழ்வே, (அகத்தியரால்) உண்ணப்பட்ட ஆழமான ஏழு கடல்கள், ஏழு மலைகள் ஆகியவை கலக்கமுற, பசுமை நிறம் கொண்ட ஒளி பொருந்திய மயில் மேல் வரும் செல்வமே, தேவயானைக்கு நாயகனே, குறப் பெண் வள்ளி மகிழ்கின்ற செந்நிறம் உடையவனே, முத்தமிழுக்கு இருப்பிடமானவனே, புகழ் நிரம்பிய தெய்வீகம் பொருந்திய பரம் பொருளே, சிறந்த குருவே என்று வெற்றிச் சின்னங்கள் ஊத, தீயராகிய சமணர்கள் அந்தக் கழுவில் ஏறும்படி திருநீற்றைப் பரப்பியிட்ட (திருஞானசம்பந்தராக வந்த) திருக்கரத்தனே, அற்புதமானவனே, பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், வயல்கள் சூழ்ந்ததுமான சீகாழியில்* வீற்றிருக்கும் முருகனே, தேவர்கள் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 768 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
கட்கா மக்ரோ தத்தே கட்சீ
     மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக் 
கச்சா பிச்சா கத்தா வித்தா
     ரத்தே யக்கொட் ...... களைநீளக் 
கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே
     யிட்டா சைப்பட் ...... டிடவேவை 
கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
     னித்தீ தத்தைக் ...... களைவாயே 
வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர்
     விக்கா னத்தைத் ...... தரிமாறன் 
வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
     புக்காய் வெற்பிற் ...... குறமானை 
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
     முற்சார் செச்சைப் ...... புயவீரா 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
கள் குடிப்பதிலும், காம வசப்படுதலிலும், கோபப்படுவதிலும், இவைகளின் கண் வசப்பட்டவர்கள் மீது பாடல்களைப் பாடி, தெளிவில்லாத முறையில் பாடப் பட்டோர் பெருமையை பாமாலையில் நிலை நிறுத்தி, அப்படிப் பாடியதால் கொண்ட பொருள்களை நெடுநாளாகச் சேகரிக்கும் போது, அந்த அழகிய முக்கோணம் போன்ற பெண்குறிக்கே கொடுத்து ஆசைப்பட்டிடவே வைத்து (இங்ஙனம்) ஏற்கும் தானத்துக்காகவும், இந்த உடலுக்காகவும் தேடி இளைத்தேன். இந்தத் தீய குணத்தை நீக்கி அருள்வாயாக. வெட்கப்படாமல் ஆடையாக அரையில் பாயைச் சுற்றிக் கொள்ளும் அறிவிலிகளாகிய சமணர்களைச் சேர்ந்த தீதைக் கொண்டிருந்த பாண்டியனின் சுரம் தணியும்படி ('மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் பதிகத்தைப்) பாடி, சீகாழி என்னும் ஊரில் புகுந்து இருந்த திருஞான சம்பந்தனே, வள்ளி மலையில் குறப் பெண் வள்ளியை, முள் தைக்கும் காட்டில் காலை வைத்து ஓடிப்போய் முன்பு தினைப்புனத்திலே சென்று தழுவிய, வெட்சி மாலை அணிந்த தோள்களை உடைய வீரனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 769 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -
தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான
கொங்கு லாவிய குழலினு நிழலினு
     நஞ்ச ளாவிய விழியினு மிரணிய
          குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர் 
கொம்பு சேர்வன இடையினு நடையினு
     மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி
          கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய 
சங்கை யாளியை அணுவிடை பிளவள
     வின்சொல் வாசக மொழிவன இவையில
          சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந் 
தண்டை நூபுர மணுகிய இருகழல்
     கண்டு நாளவ மிகையற விழியருள்
          தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே 
வங்க வாரிதி முறையிட நிசிசரர்
     துங்க மாமுடி பொடிபட வடவனல்
          மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி 
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய
     சண்பை மாநக ருறையுமொ ரறுமுக
          வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே 
பங்க வீரியர் பறிதலை விரகினர்
     மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்
          பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர் 
பண்பி லாதவர் கொலைசெயு மனதின
     ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை
          பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே.
வாசனை வீசும் கூந்தலிலும் அதன் ஒளியிலும், விஷம் கலந்த கண்களிலும், பொன் மலை போல வளர்ந்துள்ள மார்பினிலும் அதன் உறுதியான தன்மையிலும், அழகிய விலைமாதர்களின் கொடி போன்ற மெல்லிய இடுப்பிலும், நடையிலும், அன்பு மிக்கெழும் பேச்சிலும், அழகு குடி கொண்ட சிவந்த வாயிதழ் அமுதத்திலும் அவர்களுடைய சிரிப்பிலும் மனது பாய்கின்ற எண்ணம் கொண்டவனாகிய எனக்கு, அணு அளவேனும் அதன் பிளவளவேனும் இனிய சொற்களைப் பேசுவதே இல்லாததான வழக்கம் உள்ளவனும், வீணனும் ஆகிய எனக்கு, ஒளி விளங்குவதும் இசை மிகுந்ததும் ஆகிய தண்டையும் சிலம்பும் அணிந்துள்ள இரண்டு கழலடிகளைப் பார்த்து எனது வாழ் நாள் வீணாகப் பெருகுதல் இல்லாமல் (உனது) கண்ணோக்க அருளை (நீ) தந்த பெரும் கிருபையை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன். கப்பல்கள் உலவும் கடல் முறையிட, அசுரர்களின் உயர்ந்த பெரிய முடிகள் பொடியாக, வடமுகாக்கினி அடங்கி சாம்பலாக, பேய்கள் நடனமாட மயிலின் மீது ஏறி துஷ்டர்களை வஞ்சித்து அழிக்கும் வேலைக் கொண்டு கோபித்தவனே, அழகிய சண்பை எனப்படும் சீகாழி நகரில் எழுந்தருளி இருக்கும் ஆறு முகப் பெருமானே, உன்னிடம் அடைக்கலம் புக வந்த தேவர்களின் மன வருத்தம் நீங்கும்படியாக நினைத்தவனே, சமணர்கள் வலிமை இருந்தும் தோல்வி அடைந்தவர், தலைவன் மயிர் பறிக்கும் உற்சாகத்தினர், மிகுதியான பாவம் செய்தவர்கள், தரும நெறியின் பயனை அடையாதவர்கள், பாசத்தில் கட்டுண்ட வேடதாரிகள், வஞ்சகர்கள், தன்மை கெட்டவர்கள், நல்லொழுக்கம் இல்லாதவர்கள், கொலை செய்ய இசையும் மனதை உடையவர்கள், இங்கு (மதுரையில்) அவர்கள் எண்ணாயிரம் பேர்களும் உயர்ந்த கழு மரத்தின் மேல் ஏறி, ஐந்து பெரிய பாவச் செயல்களைப் புரிந்ததால், முதன்மை நிலை கெட்டு ஒழியும்படி (திருஞானசம்பந்தராக வந்து) அருளிய பெருமாளே. 
சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 770 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -
தந்த தந்தன தனதன தனதன
     தந்த தந்தன தனதன தனதன
          தந்த தந்தன தனதன தனதன ...... தனதான
சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
     கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
          தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர் 
சந்த தம்பொலி வழகுள வடிவினர்
     வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்
          தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே 
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
     தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்
          செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித் 
திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில
     னென்று சண்டைகள் புரிதரு மயலியர்
          சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய் 
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
     சிந்த அன்றடர் மழைதனி லுதவிய
          மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே 
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
     துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
          வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா 
தந்த னந்தன தனதன தனவென
     வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
          தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே 
சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
     துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு
          சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.
சந்தனம், நறு மணமுள்ள புனுகு சட்டம் இவைகளை அணிந்துள்ள மார்பினை உடைய மாதர்கள், கை வளையல்களோடு, வேறு நூதனமான நெளிவளைகளும் அணிந்துள்ள சிவந்த கையினர், அன்னம் போல் நடந்து வரும் அழகிய விலைமாதர்கள், எப்போதும் அழகு பொலிகின்ற வடிவத்தினர், வஞ்சக எண்ணங்கள் நிறைந்துள்ள மனத்தை உடையவர்கள், தம்மை நெருங்கி வந்தவர்கள் தங்களுடைய மனம் மகிழும்படி பொருளைத் தர அவர்கள் மேல் மனதார நயவஞ்சகமான பேச்சுக்களைப் பேசி பொருளைக் கவர்கின்ற தந்திரம் வாய்ந்த யோசனைக்காரர்கள், பூமியில் தம்மை அணைப்பவர்கள் தங்களிடம் செம்பொன் இல்லையே என்று சொன்னால் அதிகமாகக் கோபித்து, ஒரு மாத காலத்தில் நேற்றுக் கூட பொருள் உதவி செய்யவில்லை இவன் என்று சண்டைகள் விளைவிக்கும் ஆசைக்காரிகள் (ஆகிய விலைமாதரின்) விஷம் போன்ற உறவும், (அதனால்) வரும் பொல்லாத வறுமையும் என்னை விட்டு அகல, உன்னுடைய திருவருளைப் பாலிப்பாயாக. மந்தர (மலை போன்ற பெரிய கோவர்த்தன) மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களுக்கு உற்ற துயரம் ஒழியும்படி அன்று அடர்ந்த மழையில் உதவி புரிந்த கண்ணனாகிய திருமால், மேகம் என்னும்படியான நிறத்தைக் கொண்ட திருமால் மெச்சுகின்ற மருகனே, பார்வதி தேவி மகிழும் சரவணபவனே, உயர்வும் விரும்பத்தக்க தன்மையும் கொண்ட யானை முகத்தை உடைய விநாயகர் மகிழும் தம்பியே, நல்ல வஞ்சிக் கொடி போன்ற இடை உடையவளும், குளிர்ந்த மனம் உள்ளவளுமான குறப்பெண்ணாகிய வள்ளியின் மலர் போன்ற திருவடியைப் பணியும் கணவனே, தந்த னந்தன தனதன தன என்று வண்டு இசையை வெளி விட்டு ¡£ங்காரம் செய்யும் நறு மண மலர்கள் உள்ள சண்பக மரங்கள் மேகத்தின் அளவுக்கு உயர்ந்து வளரும் சோலையில், சங்கு நன்கு வெளிப்படுத்துகின்ற முத்தும், நாகங்கள் உமிழும் அழகுள்ள பரிசுத்தமான பிரகாசமான ரத்தினங்களும் ஒளி வீசும் சண்பை என்னும் சீகாழியில்* வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 771 - சீகாழி 
ராகம் - ராக மாலிகை 
தாளம் - ஆதி
தனதன தந்தன தந்தன தந்தன
     தனதன தந்தன தந்தன தந்தன
          தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
     சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
          தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ் 
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
     பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
          சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும் 
விருது துலங்க சிகண்டியி லண்டரு
     முருகி வணங்க வரும்பத மும்பல
          விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின் 
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
     வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
          விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே 
கருதியி லங்கை யழிந்துவி டும்படி
     அவுணர டங்கம டிந்துவி ழும்படி
          கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன் 
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு
     மடுவினில் வந்துத வும்புய லிந்திரை
          கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி 
மருது குலுங்கி நலங்க முனிந்திடு
     வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்
          வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி 
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
     பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
          மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே.
மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும் வருபவரான சமயவாதிகளும், தெய்வம் என்ற ஒன்றே இல்லை என்பவர்களும், பறிதலையராம்* சமண குருமாரும் - இவ்வாறு யாவரும் நின்று கலங்க, அனைவரும் விரும்பத்தக்க தமிழ்ப்பாடல்களை (திருஞானசம்பந்தராக) கூறும் செல்வாக்கையும்**, உபகார குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான பல பெருமைகளையும், சீர்மையையும், நற்குணத்தையும், நீ குழந்தையாய் விளையாடிய சரவணப் பொய்கையையும், உனது பொறுமையையும், புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலையும், வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில் மீது அமர்ந்து தேவர்களும் மனமுருகி வணங்கும்படியாக வரும் திருவடியையும், பலவிதமான கொடைவண்மையையும், உன் சாமர்த்தியத்தையும், தகுதியையும், தினைப்புனத்து மானாகும் வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் அணிந்த மார்பிலே மயங்கி நொந்து, அவளது திருவடியை வருடி, மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும், மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன். ராவணனின் பிழையை மனத்தில் எண்ணி, இலங்கை அழிந்து போகும்படியும், அரக்கர் யாவரும் இறந்துவிழும்படியும், சூரியனும், சந்திரனும் பழைமை முறைப்படி ஒளியுடன் வரும்படியும் செய்த திருமால், மதயானை கஜேந்திரன் பயந்து நடுக்கமுற்று வருந்திநின்ற மடுவினிடையே வந்து உதவிய மேகவண்ணப் பெருமான், லக்ஷ்மியின் கணவன், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட முகுந்தன், தன்னைக் கொல்லவந்த சகடாசுரனை காலால் மோதிக் கொன்றவன், மருதமரம் குலுங்கி நொறுங்கிப்போகக் கோபித்த வரதன், மாலையைச் சூடியருளும் வாமன வடிவ மூர்த்தி, பெரிய கடல் நொந்து வற்றிப் போகுமாறு ஒரு அம்பைக் கையால் தொடுத்த பராக்ரமசாலி ஆகிய திருமாலின் மருகனே, இந்திரன் தவம் சிரத்தையுடன் செய்த பிரமபுரம் என்ற சீகாழிப்*** பதியிலும், குகனே என்று கூறுபவர் மனத்திலும், அன்போடு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமாளே. 
* பறிதலை என்பது: சமணர்களில் ஒருவர் குருவாக ஆகும்போது மற்ற குருமார், இப்போது துக்கம் பிற்பாடு சுகம் என்ற மந்திரத்தைச் சொல்லி, அவரது தலைமயிர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கும் வழக்கம்.** சலிகை என்றால் செல்வாக்கு - முருகனின் சலிகை முதலிய 16 அருமையான லக்ஷணங்களை இங்கு தொடங்கி விஜயமும் வரை வெகு அழகாக அருணகிரிநாதர் வரிசைப் படுத்தியது மிக்க இன்பம் தருகிறது.*** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 772 - சீகாழி 
ராகம் - ....; தாளம் -
தந்தத்தன தானன தந்தத் ...... தனதான
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே 
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே 
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே 
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள் 
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே 
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே 
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே 
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.
கடலில் இருந்து எழுகின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பாலே, தென்றல் காற்று சந்தனச் சோலையின் நறு மணத்துடன் எழுந்து வருவதாலே, மாலைப் பொழுதாகிய இரவின் நெருக்கத்தாலே, அன்பு மிகுந்து எழும் இப் பேதைப் பெண் மயக்கம் கொண்டு தனித்திருக்கின்றாள். சங்குகள் உள்ள சமுத்திரத்தை, கலங்கிய தோற்றம் ததும்பும்படியாக, விஷம் போன்று விளங்கும் வேலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த அரசே, சந்தக் கவி நூல் சொல்லும் புலவர்களுடைய சொல்லில் விருப்பம் உடையவனே, சீகாழியில்* பொருந்தி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், சந்தன மணம், இரவு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 773 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
     தத்தனா தத்தனத் ...... தனதான
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
     தெற்கிலூ தைக்கனற் ...... றணியாத 
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
     சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக் 
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
     கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு 
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
     கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய் 
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
     தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய 
தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்
     தத்வரூ பக்கிரிப் ...... புரைசாடிக் 
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
     குத்துரா வுத்தபொற் ...... குமரோனே 
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
     கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.
செவ்வானத்து பிறை நிலவுக்கும், கரும்பு வில்லை ஏந்தும் மன்மதனுக்கும், இவை மட்டும் இல்லாமல் தெற்கிலிருந்து வரும் ஊதைக் காற்றுக்கும், நெருப்புப் போலச் சுடுகின்ற தன்மை குறையாத (இன்பகரமான ஓசையைத் தரும்) சித்திர வீணைக்கும், வசை மொழிகளைக் கொண்ட தாய்மார்களுக்கும், வீணாக உள்ளம் வாட்டம் அடைந்து, (விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது) பெரிதாகப் பாடல்களைப் பாடி, (அப்பாடல்களில் அவர்களைத்) துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் சேரும் அதிர்ஷ்டம் உள்ளவர் என்றும், கொடையில் கேட்டதைத் தரும் கற்பக மரத்தைப் போன்றவர் என்றும், மூவுலகங்களிலும் விளங்கும் சூரியன் என்றும், கற்ற புலவர்களின் சேமநிதி (நீங்கள்) என்றும், (பொய்யான புகழ் கூறிக்) குப்பையாகிய செல்வ யோகம் படைத்த மனிதர்களின் கைக்குள் நான் அகப்பட்டு வெட்கம் அடைந்து நிற்கின்ற நிலையை நீ கண் பார்ப்பாயாக. சக்கரத்தைக் கையில் கொண்ட திருமாலுக்கும், அந்தத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனுக்கும், என்றும் அழியாதவர் என்று புகழ் பெற்ற பரம சிவனுக்கும் எட்டுதற்கு அரியதான தத்துவ வேதத்தின் தோற்றத்தை உபதேசம் செய்த அந்த ஞான வடிவானவனே, கிரெளஞ்ச மலையின் பெருமையைக் குலைத்து, மாமரத்தில் புகுந்து ஒளித்திருந்த சூரனின் உடல் தொளை படும்படியாக (வேலினால்) குத்திய குதிரை (மயில்) வீரனே, அழகிய குமரனே, அரசனே, நீலோற்பலம், வெட்சி மாலை இவைகளை அணிந்த புயங்களை உடையவனே, சீகாழியில் வீற்றிருக்கும் முத்தமிழ் வல்ல பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 774 - சீகாழி 
ராகம் - ஹம்ஸநாதம் 
தாளம் - அங்கதாளம் - 5 - திஸ்ர்ருபகம் 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தாந்த தான தனதன தாந்த தான
     தனதன தாந்த தான ...... தனதான
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
     தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ் 
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
     வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும் 
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
     புழுககில் சாந்து பூசி ...... யரசாகி 
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
     மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ 
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
     மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக 
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே 
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
     கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக் 
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
     கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.
சூரியன், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்று சொல்லும்படியான பெருமையுடன், மதில் நீளமுடையதாக, மிகுந்த சூரிய ஒளியைப் பெற்றிருக்கும் மாளிகையில் முத்தாலும் அழகிய ரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் (அமர்ந்து) கீதம் நிரம்பிய பாடல்களைப் புகழ்ந்து பாடும் பாணர்கள் ஒன்றுகூடிப் பாடவும், இரண்டு பக்கங்களிலும் ஒரே மாதிரியான வளையல்களைப் பூண்ட கையை உடைய மாதர்கள் நின்று கவரி வீசவும், மாலைகளைச் சூடி, புனுகு, அகில், சந்தனம் இவற்றைப் பூசிக்கொண்டு, அரச பதவியில் இருந்து, இன்பமயமாக இறுமாப்புடனே வாழ்கின்ற, நல்வினை, தீவினை இரண்டிற்கும் கட்டுப்பட்ட இந்த சா£ரம் கடைசியில் ஒருபிடி சாம்பலாக மாறி அழிந்து போகலாமா? காட்டில் திரியும் வேடர்கள் அதிசயிக்க வானத்தின் உச்சியைத் தொடும்படியாக வளர்ந்து, ஆசையாக அவ்வேடர்கள் வளர்த்த மயிலாகிய வள்ளியும் தோழிமார்களும் அருகே இருக்க மயில்களும் மான்களும் சூழ, செழித்து வளர்ந்த வேங்கைமரமாகி வள்ளிமலை மேலே தோன்றிய மாய வடிவத்தோனே, பெருத்த சமண ஊமையர்கள் பலரும் (வாதிலே உன்னிடம் தோற்று) கழுமுனையில் தொங்க, திருநீறு உன் கருணைக்குப் பாத்திரமான பாண்டியநாட்டில் பரவ, வேதப்பொருள் கொண்ட தேவாரப்பாடல்களைத் தந்தருளிய ஒளிகொள் மேனியனே, பாலகன் ஞானசம்பந்தனாக வந்த முருகா, கழுமலம், பூந்தராய் என்ற பெயர்கொண்ட சீகாழிப்பதியில்* வீற்றிருப்போனே, கவுணியர் குலத்தில் வந்த அரசனே, தேவர் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 775 - சீகாழி 
ராகம் - பந்துவராளி 
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தானாதன தானன தானன
     தானாதன தானன தானன
          தானாதன தானன தானன ...... தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை
     வாய்நாலுடை யோன்மலி வானவர்
          கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம் 
பூராயம தாய்மொழி நூல்களும்
     ஆராய்வதி லாதட லாசுரர்
          போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி 
நீமாறரு ளாயென ஈசனை
     பாமாலைக ளால்தொழு தேதிரு
          நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு 
நீரேர்தரு சானவி மாமதி
     காகோதர மாதுளை கூவிளை
          நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே 
போமாறினி வேறெது வோதென
     வேயாரரு ளாலவ ¡£தரு
          போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு 
பூலோகமொ டேயறு லோகமு
     நேரோர் நொடி யேவரு வோய்சுர
          சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங் 
காமாவறு சோம ஸமானன
     தாமாமண மார்தரு நீபசு
          தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக் 
காவாயடி நாளசு ரேசரை
     யேசாடிய கூர்வடி வேலவ
          காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.
தாமரைமலர் மீது அமரும் லக்ஷ்மிதேவியை மார்பிலே தரித்துள்ள திருமாலும், வேதம் சொல்லும் வாய் நான்கு உடையவனான பிரமனும், கூட்டமான தேவர்களின் தலைவனான இந்திரனும், முநிவர்கள் முதலிய யாவரும், இயம்பப்படும் வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில் ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள் செய்யும் போருக்குப் பயந்து, மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி, நீ, பகைவர்களை அழிக்கவல்ல, ஒரு மாற்றுப் பகைவனை தந்தருள்வாயாக என்று ஈசுவரனைப் பாமாலைகளால் பாடித்தொழுது, திருநீறால் அழகு விளங்கும் திருமேனியனே, தேன் பொதிந்த கொன்றை மலருடனே நீர் அழகுடன் ததும்பும் கங்கையையும், சிறந்த நிலவையும், பாம்பையும், மாதுளம் பூவையும், வில்வ இலையையும், நாவல் இலை, விளா இலை, முதலியன நிறைந்த சடையணியும் எங்கள் பெருமானே, நாங்கள் உய்ந்து போகும் வழி இனி உன்னையன்றி வேறு எது உள்ளது எனச் சொல்லி அருள்க என்று முறையிடவே, நிறைந்த கருணையினால் அந்தச் சிவபெருமான் தந்தருளிய வேலவனே, நீலத் தோகை மயில் மீது ஏறி நீண்ட இந்தப் பூலோகத்துடனே மீதி ஆறு லோகங்களையும் நேராக ஒரே நொடிப் பொழுதிலே சுற்றி வந்தவனே, தேவர்களின் சேனாதிபதி ஆனவனே, உன்னை அன்போடு, மன்மதனைப் போன்ற அழகனே, ஆறு பூரண சந்திரர்களுக்கு சமமான திருமுகங்களை உடையவனே, மணம் நிறைந்து வீசும் கடப்பமாலைகளை அணிந்தவனே, நல்ல திவ்விய ஒளியை உடையவனே என்றெல்லாம் போற்றித் துதிக்காமல் திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்வாயாக. அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரன் முதலியவர்களை சம்ஹரித்த கூரிய வேலாயுதத்தை உடையவனே, மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில்** வீற்றிருக்கும் தம்பிரானே. 
இப்பாடலின் முக்கால் பகுதி கந்த புராணச் சுருக்கமாக அமைந்துள்ளது.
* சானவி = ஜானவி, ஜன்னு என்ற முநிவரின் காது வழியே சென்றதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் உண்டு.
** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 776 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன
     தனனத்தத் தானத் தானன ...... தனதான
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
     மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக 
மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள்
     வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர் 
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
     குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க் 
கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை
     குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே 
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட
     ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா 
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில
     கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே 
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை
     தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே 
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்
     சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே.
மன்மதன் சம்பந்தமான காமச் சொற்களை உற்சாகத்துடன் பேசுபவர்கள். (காதில் உள்ள) பவளத் தோடு ஆடும்படி சீறிக் கோபிப்பவர்கள். கண்டோர் மருளும்படி பட்டு ஆடைகளை அணிபவர்கள். அழகாக, மவுனத்தாலேயே (தங்களுக்கு வேண்டியதைச்) சுட்டிக் காட்டி காரியத்தைச் சாதிப்பவர்கள். பிணங்குதல் மூலமாக தங்கள் ஆசையை வெளியிடுபவர்கள். பல வகையான முத்து மலைகளைச் சூடுபவர்கள். உடலை விலைக்கு விற்பவர்கள். மழலைப் பேச்சுக்களை சரசமாகப் பேசுபவர்கள். நரகமாகிய அச்சில் ஆடவரைச் சாய்வித்துத் துன்பப்படுத்துவர். தமது செய்கைக்குத் தடையாக வந்த கர்ப்பத்தைக் கலைப்பவர்கள். இத்தகைய வேசியர்பால் மோகம் மேற்பட்டு, (அதனால்) கொள்ளப்பட்டுக் கட்டுண்டு, அந்த ஆசையில் பற்று கொண்ட என்னை, பிறப்பால் வரும் துக்க நிகழ்ச்சிகளில் வீழ்ந்த வஞ்சகனாகிய என்னை, ஆம்பல் மலர் அணிந்த அழகிய திருவடிச் சேவையைத் தந்து அருள்வாயாக. ஏழு கிரியும் அவை காவலாக இருந்த சூரனும் கதறி அழவும், கரிய கடல் எரியவும், (எட்டு) திசைகளும் இடையூறு பட்டுப் பாழாகவும், (அசுர) சேனைகளை வாளுக்கு உணவாகும்படிச் செய்த வேலனே, சூரியன் வலம் வரும் பொன் மலையாகிய மேருவின் பக்கத்தில் உள்ள கயிலையில் வீற்றிருக்கின்ற பச்சை நிறமுள்ள குயில் போன்ற பார்வதியின் மார்பகத்திலுள்ள அழகிய சந்தனக் கலவை உன் சிரத்தின் மேற்படும்படிக் கட்டிக் கொள்ளும் குழந்தை முருகோனே, தேமல் உடையவளும், அழகிய அன்பை இதயத்தில் உடையவளும், கரிய குயில் போன்று அழகுடையவளும், பொலிவு நிறைந்த மயில் போன்ற, பதுமை போன்றவளுமாய் விளங்கும் வள்ளியை நாள்தோறும் அவளைத் தழுவும் பொருட்டு அவள் தோளை அணைந்தவனே, சிறந்த திலகப் பொட்டு விருப்பமுடன் நெற்றியில் அணியும் திரு முகத்தை உடையவனே, மயிலின் மேல் பொருந்தி ஏறி சீகாழியில் அமர்ந்து, அத்தலத்தில் சிவபெருமான் புகழும்படியாக அவர் காதைச் சிறப்பித்துத் (தோடுடைய செவியன்* என்ற) தேவாரப் பாவை ஓதிய (திருஞானசம்பந்தப்) பெருமாளே. 
* திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவாரம் சிவனாரின் செவியிலுள்ள தோடைப் புகழ்ந்தது.சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
பாடல் 777 - சீகாழி 
ராகம் - ....; தாளம் -
தனதனன தத்ததன தனதனன தத்ததன
     தனதனன தத்ததன ...... தனதான
விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி
     விரிகதிரெ னப்பரவு ...... நிலவாலே 
விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு
     விரைதருவி தட்கமல ...... கணையாலே 
அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்
     அழலொடுகொ தித்துவரு ...... கடைநாளில் 
அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற
     அவசமொட ணைத்தருள ...... வரவேணும் 
அடவிதனில் மிக்கபரு வரையவர ளித்ததிரு
     அனையமயில் முத்தமணி ...... சுரயானை 
அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு
     மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா 
கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி
     கருணையொட ளித்ததிற ...... முருகோனே 
கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி
     கழுமலந கர்க்குமர ...... பெருமாளே.
விஷம் போலப் பொருந்திய, வடமுகாக்கினி என்று கூறும்படியாக, உச்சிப்பகலின் சூரியனது வெப்பம் மிகுந்த கதிர்கள் என்று சொல்லும்படியாக, தனது கிரணங்களைப் பரப்பும் சந்திரனால் துன்பம் மிக அடைந்தும், (அச்சமயத்தில்) வருகின்ற ரதியின் கணவனான மன்மதன் கோபித்துச் செலுத்துகின்ற, வாசனை தருகின்ற இதழ்களை உடைய தாமரை அம்பினால் வலியப் போரைச் செய்யும் சமயத்தில், என்னைச் சார்ந்து, மிக்க நெருப்புத் தணல் போல கொதிப்புடன் படுகின்ற கடைசி நாளில் (என்னை) நமன் அணுகித் தாக்க, நான் மயக்கம் கொள்ளும் அச்சமயத்தில், நீ மனம் வைத்து பரவசத்துடன் என்னை அணைத்து அருள வர வேண்டும். காட்டில் நிறைந்திருந்த பெருத்த மலைவாசிகளாகிய வேடர்கள் போற்றி வளர்த்த, லக்ஷ்மி போன்ற மயிலாகிய வள்ளி, முத்து மாலை அணிந்த தேவயானை (ஆகிய இருவர்களின்) அழகிய மணி மாலைகள் உள்ள குடம் போன்ற மார்பகங்களின் மேல் மோகம் கொள்ளும் மிகுந்த காதலனே, அழகிய மணிகள் புனைந்த மயில் வீரனே, மதமும் பெருமையும் பொருந்திய யானை முகவராகிய கணபதிக்குத் தம்பியே, இமய மலை அரசன் மகளான பார்வதி (தேவர்களின் மீது) கருணை கொண்டு அருளிய வலிமை மிக்க முருகனே, தாமரை மலரை ஒத்த கண்களை உடைய திருமாலின் மருகனே, அடியார்கள் பணிகின்ற சீகாழியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவி பாடுவது போல் பாடியது.சந்திரன், மன்மதன், மலர் அம்பு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 778 - கரியவனகர் 
ராகம் - ...; தாளம் -
தனதன தனனத் தான தாத்தன
     தனதன தனனத் தான தாத்தன
          தனதன தனனத் தான தாத்தன ...... தனதான
அளிசுழ லளகக் காடு காட்டவும்
     விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
          அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள் 
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
     அழகிய மயிலிற் சாயல் காட்டவும்
          அளவிய தெருவிற் போயு லாத்தவும் ...... அதிபார 
இளமுலை மிசையிற் றூசு நீக்கவும்
     முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்
          இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக 
எவரையு மளவிப் போய ணாப்பவும்
     நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்
          இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய் 
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்
     குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
          நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட 
நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட
     அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
          நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா 
களிமயில் தனில்புக் கேறு தாட்டிக
     அழகிய கனகத் தாம மார்த்தொளிர்
          கனகிரி புயமுத் தார மேற்றருள் ...... திருமார்பா 
கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
     யருள்சுத குறநற் பாவை தாட்பணி
          கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ...... பெருமாளே.
வண்டுகள் மொய்க்கும் கூந்தலாகிய காட்டைக் காட்டுதற்கும், கண்களால் காமத் தீயை மூட்டுதற்கும், படுக்கையில் எப்பொழுதும் பொழுது போக்கவும், இள வயது உள்ளவர்களின் வசத்தில் பழகி பொருள் கேட்பதற்கும், அழகிய தங்கள் மயில் போன்ற சாயலைக் காட்டவும், சந்திக்கும் பொருட்டு வீதியில் போய் உலாத்துதற்கும், மிகவும் கனத்த இளமையான மார்பின் மேலுள்ள ஆடையை (வேண்டுமென்றே) நீக்குதற்கும், முகமொடு முகம் வைத்து காம ஆசையை உண்டு பண்ணவும், நிறைய பணம் இல்லாதவர்களை தூரத்தே விரட்டி நீக்குதற்கும், இனிய சொற்களுடன் எல்லாருடனும் கலந்துபோய் ஏமாற்றவும், நினைக்கின்றவர்களாகிய விலை மகளிர் சம்பந்தப்பட்ட வரையில் என் ஆசையை நீக்க, என் வருத்தமெல்லாம் தொலைய, திருவடிகளைக் காட்டி உன் திருவருளைத் தந்து அருளுக. சுழற்சி உறும் போர்க்களத்தில் ஆறு போலச் சுழன்று ஓடும் ரத்தத்தில் முழுகி பேய்கள் கூச்சலிட, மாமிசத்தை உண்டு பருந்துகளும், காகங்களும், கழுகுகளும் விளையாட, கூட்டம் கூட்டமாக வரிசையாக நின்று நரிகள் ஆரவாரம் செய்ய, அதிர்ச்சி உறும் போரில் சேனைகளைக் கூட்டி வந்த அசுரர்கள் இறக்கும்படி சம்காரம் செய்யும் வேலைக் கொண்டு போர் புரியும் வீரனே, செருக்கைக் கொண்டிருந்த மயிலின் மேல் புகுந்து ஏறும் பலவானே, அழகிய பொன் மாலை நிறைந்து விளங்கும் பொன் மலை போன்ற புயங்களை உடையவனே, முத்து மாலை ஏற்று அணிந்துள்ள அழகிய மார்பனே, கரியவனகர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தேவனே, பார்வதி அருளிய மகனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் தாள்களைப் பணிகின்ற கருணா மூர்த்தியே, தமிழ்ப் பாடல் கேட்டு அன்பர்க்கு அருளும் பெருமாளே. 
* கரியவனகர் சீகாழிக்கு மேற்கே 4 மைலில் உள்ள கொண்டல் வண்ணக்குடி என்ற தலம்.
பாடல் 779 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - வாசஸ்பதி 
தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
தனத்தன தானத் ...... தனதான
உரத்துறை போதத் ...... தனியான 
உனைச்சிறி தோதத் ...... தெரியாது 
மரத்துறை போலுற் ...... றடியேனும் 
மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ 
பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே 
பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே 
வரத்துறை நீதர்க் ...... கொருசேயே 
வயித்திய நாதப் ...... பெருமாளே.
உறுதி வாய்ந்த ஞானத்தின் தனிப்பொருளான உன்னைச் சிறிதளவேனும் போற்றத் தெரியாமல் மரக்கட்டை போன்று இருந்து அடியேனும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் இருள் போல் என் மனத்தை மூடி நான் கெட்டுப்போகலாமோ? மேலான நிலையிலுள்ள புனித வாழ்க்கையர்களின் செல்வமே, உன் திருவடியில் பணிவித்து வாழ்வு பெற அருள்வோனே, வரம் தருவதே தன் நீதியாகக் கொண்ட சிவனாரின் ஒப்பற்ற சேயே, வைத்தீசுரன்கோயில் நாதனாம் சிவனுக்குப் பெருமாளே. 
பாடல் 780 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - திலங் 
தாளம் - திஸ்ர்ருபகம் - 5 0/3 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தத்தன தான தான தத்தன தான தான
     தத்தன தான தான ...... தனதான
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
     யெத்தனை கோடி போன ...... தளவேதோ 
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
     யிப்படி யாவ தேது ...... இனிமேலோ 
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
     சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் 
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
     சித்திர ஞான பாத ...... மருள்வாயே 
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
     நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே 
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
     நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா 
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
     பத்திர பாத நீல ...... மயில்வீரா 
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
     பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை விட்டு, புது உடல்களில் ஓடிப்புகுந்தும், ஆடியும், இவ்வாறு எத்தனை கோடிப் பிறப்புக்கள் போனதோ? இதற்கு ஓர் அளவும் உண்டோ? இவ்வாறு மோகமும் போகமும் கலந்து, இப்படி பிறந்து இறந்து மீண்டும் இவ்வாறு பிறந்து ஆவதினால் என்ன பயன்? இனிமேல் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால், சீசசீ, சீச்சீ, மிக இழிவானது இந்த மாயமான வாழ்க்கை. இதன் சிக்கலில் அகப்பட்டு மாய்கின்ற அடியேனை, அறிவு என்னும் மேடையிலே ஆட்டுவித்து, மூன்று தமிழ்த் துறையிலும் வல்ல புலவர்கள் ஓதுகின்ற உன் அழகிய ஞானத் திருவடிகளை எனக்கு அருள்வாயாக. நாள்தோறும் உன்னைத் துதிப்பவர்களின் உள்ளமே நீ தங்கியுள்ள இருப்பிடமாகக் கொண்டு அதில் நடனமாடிடும் ஆறுமுகத்துக் கடவுளே, உருவ அருவமாக உள்ளவரும், பாதி மரகதப் பச்சை நிற உடல் கொண்டவரும், மூன்று நீண்ட இலைகளை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவருமான சிவபெருமான் அருளிய புதல்வனே, ஆயிரம் பெரிய படங்கொண்ட தலைகள் வாய்த்த ஆதிசேஷனை கீறிக் கிழிக்கும் வாள் போன்ற கூரிய நகங்களை உடைய நீல மயில் மீது வரும் வீரனே, பசுமையான இளம் கமுக மரத்தின் மடல் மீது வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்கும் வேளூரில்* விருப்புடன் அமரும் முத்தேவர் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) போற்றும் பெருமாளே. 
* புள்ளிருக்கும் வேளூர் இப்போது வைத்தீசுரன் கோயில் என்று அறியப்படுகிறது.சீர்காழிக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.
பாடல் 781 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - ...; தாளம் -
தான தத்தனந் தான தத்ததன
     தான தத்தனந் தான தத்ததன
          தான தத்தனந் தான தத்ததன ...... தனதான
பாட கச்சிலம் போடு செச்சைமணி
     கோவெ னக்கலந் தாடு பொற்சரணர்
          பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார் 
பார பொற்றனங் கோபு ரச்சிகர
     மாமெ னப்படர்ந் தேம லிப்பரித
          மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர் 
ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ
     டாட ளிக்குலம் பாட நற்றெருவி
          லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி 
ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்
     வாரு முற்பணந் தாரு மிட்டமென
          ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ 
சேட னுக்கசண் டாள ரக்கர்குல
     மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
          சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல் 
சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
     யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
          சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா 
நாட கப்புனங் காவ லுற்றசுக
     மோக னத்திமென் தோளி சித்ரவளி
          நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே 
ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
     நாய கிக்குநன் பாக ரக்கணியும்
          நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே.
கொலுசு, சிலம்பு இவற்றுடன் சிவந்த மணிகள், கோமேதகம் சேர்க்கப்பட்டது போல ஒன்று சேர்ந்து அசைகின்ற அழகிய பாதங்களை உடையவர். சித்திரப் பதுமை போன்றவர்கள். பட்டு உடை அணிந்துள்ள நூல் போல் நுண்ணியதான இடையை உடையவர்கள். கனத்த, அழகிய மார்பகம் கோபுர உச்சி என்று சொல்லும்படியாக வளர்ந்து களிப்பு கொள்பவர்கள். இன்பகரமான வெல்லம் நல்ல சர்க்கரை போல இனிய சொற்களைப் பேசும் மாதர்கள். மலர்க் கூட்டங்களைக் கொண்ட கரிய கூந்தலில் விளையாடும் வண்டுகளின் கூட்டம் பாட, அழகிய தெருக்களில் சென்று, பறவை இனம் போல பல பல சொற்களை அமைந்த ராகங்களைப் பாடி, மிகுந்த முகஸ்துதியான பேச்சுக்களைப் பேசி வஞ்சித்து, இன்ப மொழியால், வாருங்கள், முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், உங்கள் அன்பையும் கொடுங்கள் என்று சொல்லி, ஏணி வைத்து ஏறும்படி செய்து (பின்னர் இறங்க முடியாமல்) ஏணியை எடுத்துச் செல்பவர்களாகிய விலைமாதர்களின் செயல்களை நம்புதல் தகுமோ? ஆதி சேஷன் மெலிய, கொடும் பாதகர்களான அசுரர்கள் குலம் மாண்டு ஒழிய, எட்டு மலைகளும் அலை மிகுந்த ஏழு கடல்களும் ஒன்று சேர உலர்ந்து போகும்படியாக நின்று விளையாடிய வேல் ஏந்திய கைகளாகிய பன்னிரண்டு தோளின் மேல் விண்ணுலகத்தினர் பொன் மலரைப் பொழிய, முனிவர்கள் புகழ்ப் பாடல்கள் பாட, எட்டுத் திக்கிலும் உள்ள அரசர்கள் ஜே ஜே என்று தாளம் இட்டு முழங்க, செந்தாமரையில் வாழும் லக்ஷ்மி தேவி புகழும் வேலனே, நீ மனத்தில் விரும்பிச் சென்ற வள்ளி மலையில் இருக்கும் தினைப் புனத்தில் காவல் இருந்தவளும், உன்னைச் சுகமாக மயக்கியவளும், மெல்லிய தோளை உடையவளும் ஆகிய அழகிய வள்ளி நாயகிக்கு இன்பகரமான பாடல்களைப் பாடி, நாள் தோறும் அணிகலன்களை அணிவித்து மகிழ்பவனே, ஞானம் என்னும் மலையில் மகிழ்ந்து விளையாடும் பெருமான், தையல்நாயகி** என்னும் திருநாமம் உடைய தேவியை நல்ல தமது பாகத்தில் கொண்டவர், ருத்ராக்ஷ மாலை அணிந்துள்ள சிவபெருமான் மெச்சும்படி வந்து விளையாடி, முத்தம் அவருக்குத் தந்தருளும் பெருமாளே. 
* வைத்தீசுரன் கோயில் முருகனுக்கு முத்துக் குமரர் என்று பெயர்.
** தையல்நாயகி என்பது வைத்தீசுரன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் உமா தேவியின் பெயர்.
பாடல் 782 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - மனோலயம் - மத்யம ஸ்ருதி 
தாளம் - ஆதி - 2 களை - திஸ்ரநடை - 24
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
     தான தான தத்த தந்த ...... தனதான
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
     மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய 
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
     வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல் 
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
     வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே 
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
     வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே 
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
     கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே 
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
     காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா 
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
     சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே 
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
     சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.
ஆசை என்ற ஒன்றினால் உருவெடுத்த, துளைகள் உள்ள இந்த உடம்பு, சோறு கொண்டு வளர்க்கப்படும் இந்த சா£ரம், மாறி மாறி எண்ணம் கொள்ளும் இந்த மனம், இவையெல்லாம் அநியாயமான பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்தவனாக நான் வாட்டம் உறுகின்றேன். ஐயனே, எனக்கு இரக்கப்பட்டு வந்தருள்வாய் ஐயா, இனிப் பிறப்பதும் இறப்பதும் இல்லாமல், உன் வேலாயுதத்தால் என் வினைக்கூட்டங்களை தூளாகும்படி எரித்து, உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க. அன்பு நிறைந்த உன் அடியார் திருக்கூட்டத்தில் யானும் கலந்து, உன்னைப் போல பரிசுத்த உள்ளம் பெறவே, மகிழ்ச்சி கொள்ளும் கந்த வேளே நமக்கு உற்ற துணையாகும் என்றிருக்க பரிந்து அருள்வாயாக. காற்றிலே பரந்ததுபோலப் பரவியிருந்த சூரர்கள் இறக்கும்படி ஜயம் கொண்ட, யமன் போன்ற வலிமையும், சூரியன் போன்று பேரொளியும் அமைந்த சக்திவேலை அழகிய கையிலே கொண்ட முருகனே, மன்மதனது பாணம் வருத்தினதால், கணக்கில்லாத மாதர்களைக் கலந்த* திருமாலாகிய ரிஷபத்தின்** மேல் ஏறிய தலைவன், எம் தந்தை சிவன் அருளிய பாலனே, சேல் மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே, உன் புகழை ஓதும் பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே, தேவர்களும், பெண்டிரும், சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும் புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன் கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே, சேவற்கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே. 
* கண்ணபிரான் நரகாசுர வதை செய்துப் பின் கொண்டுசென்ற மந்தரமலையின் சிகரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ, கந்தர்வ, சித்த கன்னிகைகள் பதினாயிரம் பேரையும் மணந்து கொண்டு, கண்ணன் துவாரகையில் வாழ்ந்தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
** திரிபுர சம்ஹாரத்துக்கு சிவன் எழுந்த தேர் அச்சு அறுந்து விழுந்த போது, தேர் நிலை கலங்க, திருமால் ரிஷப உருவத்தில் சிவபிரானைத் தாங்கினார் - சிவ புராணம்.
பாடல் 783 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் -....; தாளம் -
தானா தானன தாத்த தந்தன
     தானா தானன தாத்த தந்தன
          தானா தானன தாத்த தந்தன ...... தனதானா
மூலா தாரமொ டேற்றி யங்கியை
     ஆறா தாரமொ டோட்டி யந்திர
          மூலா வாயுவை யேற்று நன்சுழி ...... முனையூடே 
மூதா தாரம ரூப்பி லந்தர
     நாதா கீதம தார்த்தி டும்பர
          மூடே பாலொளி ஆத்து மந்தனை ...... விலகாமல் 
மாலா டூனொடு சேர்த்தி தம்பெற
     நானா வேதம சாத்தி ரஞ்சொலும்
          வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர ...... தவிசூடே 
மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
     வீடே மூணொளி காட்டி சந்திர
          வாகார் தேனமு தூட்டி யென்றனை ...... யுடனாள்வாய் 
சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
     மாதா ராபகல் காத்த மைந்தனை
          சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ...... னெமையாளுந் 
தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்
     வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
          தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா 
வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
     மூடார் சூரரை வாட்டி யந்தகன்
          வீடூ டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே 
வேதா நால்தலை சீக்கொ ளும்படி
     கோலா காலம தாட்டு மந்திர
          வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே.
மூலாதார* கமலத்தில் அக்கினியை ஏற்றி, ஆறு ஆதாரங்களிலும் செல்லும்படி ஓட்டிச் செலுத்தி, ஆதார இயந்திரங்களின் வழியாக பிரதானமான பிராண வாயுவை நல்ல சுழி முனை** நாடியின் வழியே ஓடச் செய்து, முதல் ஆதாரமான ஆஞ்ஞை ஆதாரத்தின் பிறைச் சந்திர வடிவின் கோட்டில் (புருவத்தின் மத்தி இடமாகிய) ஆகாச நிலையில் இசைத் தொனிகள் ஒலி செய்யும் மேலான இடத்தில் (பிரமரந்திர நிலையில்) ஒளித்து நிற்கும் ஜீவாத்மாவை தவறிப் போகாத வழியில் ஆசை ஊடாடும் இந்த உடலில் ஈடுபட வைத்து இன்பம் பெருக, பலவகையான வேதங்களும் சிறந்த சாத்திர நூல்களும் சொல்லிப் புகழும் தழைத்த ஞான நிலையில் (துவாத சாந்த வெளியில்) ஏற்றி (ஐந்தெழுத்தாகிய) மந்திர பீடத்தினிடையே பார்வதியும் சிவபெருமானும் வீற்றிருந்து அருளும் திருச்சபையில் (அக்கினி, சூரியன், சந்திரன் என்னும்) முச்சுடர்களின் ஒளியை தரிசிக்கச் செய்து, அங்கே சந்திரக்கலையின் தேன் அமுதம் பொங்கி எழ அதனை எனக்கு ஊட்டி என்னை உடனிருந்து ஆண்டருள்க. சூலாயுதத்தை உடைய மாது, உமாதேவி, அருள் பொழியும் சம்புவின் மனைவி, தாய், இரவும் பகலும் காத்து அமைந்த அன்னை, சுடுகின்றபடி நம்மை ஈர்த்துச் செல்லும் வினைகளை வாட்டித் தொலைத்து, குழந்தைகளைக் காப்பது போல் நம்மைக் காத்து அருளுகின்ற பரிசுத்த தேவதை, பிரமன், திருமால், ருத்திரன் என்னும் மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் பதவியில் நிலைநாட்டிய எம்பெருமான் வைத்தீசுரன் கோயிலில் வாழ்கின்ற வைத்திய நாதராய் பல வினைகளைத் தீர்க்கும் சிவபெருமான் என்னும் உருவத் திருமேனி கொண்டவர் பாகத்தில் பொருந்தி இருப்பவளாகிய பார்வதிதேவி அருளிய குழந்தையாகிய வேலனே, எழு கடலையும் வற்றச் செய்து, வஞ்சகம் நிறைந்த மூடர்களாகிய சூரர்களை வாட்டி, யமபுரிக்கு அவர்களை அனுப்பிய கோபத்தை உடைய குதிரையாகிய மயில் வாகனனே, பிரமனுடைய நான்கு தலைகளையும் சீழ் கொள்ளும்படி குட்டி, குதூகலத்துடன் (பிரமனின் சிறைவாசத்தை) கொண்டாடிய மந்திர வேலனே, திருமாலின் மகளாகிய வள்ளிக்கு கருணை காட்டிய பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
பாடல் 784 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - ...; தாளம் -
தான தானதன தானதன தானதன
     தான தானதன தானதன தானதன
          தான தானதன தானதன தானதன ...... தனதான
மேக வார்குழல தாடதன பாரமிசை
     யார மாடகுழை யாடவிழி யாடபொறி
          மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதிபரி ...... மளமேற 
மீனு லாடையிடை யாடமயில் போலநடை
     யோல மோலமென பாதமணி நூபுரமு
          மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை 
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
     வோரை வாருமென வேசரச மோடுருகி
          ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார 
ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
     வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
          ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ 
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
     நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
          நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள் 
நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
     வேத கீதவொலி பூரையிது பூரையென
          நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா 
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
     தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
          சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே 
தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
     மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
          சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் ...... பெருமாளே.
மேகம் போல் கறுத்து நீண்ட கூந்தல் ஆடவும், மார்பின் பாரங்களின் மேல் முத்து மாலை ஆடவும், காதில் குண்டலங்கள் ஆடவும், கண்கள் ஆடவும், பொலிவு பரந்துள்ள உடல் நறு மணங்கள் வீசவும், பெண்குறியின் மேற்பட்டு நல்ல மணம் அதிகரிக்கவும், ஒளி வீசும் நூலாடை இடையில் ஆடவும், மயிலைப் போல நடை நடக்க, பாதத்தில் உள்ள ரத்தினச் சிலம்பு ஓலம் ஓலம் என்று முறையிடும் ஒலியுடன் சப்திக்க, ஒளியை ஆபரணங்கள் வீச, பால் போலவும் குயில் போலவும், முரசொலி போலவும் ஒலி பெருகவே சபையில் கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள். தெருவில் வரும் ஆடவர்களை வாருங்கள் என்று நயமுடன் இனிய வார்த்தைகள் சொல்லி, மன உருக்கத்துடன் ஆசை பூண்டவர்கள் போல தங்களுடைய வீட்டிற்குக் கொண்டு போய் தழுவுவார்கள். காமத்துக்கு ஆதாரமாயுள்ள அழகுள்ள மார்பகத்தில் முழுகி, சுகக் கடலில் அனுபவித்து வேர்வை பாய படுக்கையில் கோலாகலத்துடன் இன்பம் அனுபவிக்க, (அதனால் பின்னர்) வருத்தம் தருவதான சூலை நோய் மற்றும் பல நோய்களாகிய கடலில் சிக்கி வேதனைப் பட்டு இந்த உடலுடன் அலைவேனோ? நாக லோகத்தில் உள்ளவர்கள், சந்திர மண்டலத்தில் உள்ளவர்கள், சூரிய மண்டலத்தில் உள்ளவர்கள், பிரம லோகத்தில் இருப்பவர்கள், தேவர்கள், கணநாதர்கள், நந்திகண நாதர்கள், அந்தணர்கள், முதன்மையான யோக மார்க்கத்தில் ஏற்படும் ஜோதி விளங்கும் முனிவர்கள், நவ நாத சித்தர்கள், மனிதர்கள், நிலை பெற்ற நாராயண மூர்த்திகள், பதினெண் புராணங்கள், வேதங்களின் ஒலிகள் எல்லாம் இதுவே (அசுரர்களின்) முடிவு காலம், இதுவே முடிவு காலம் என்று சொல்ல, அசுரர் அழிந்து போக, அவர்கள் இருந்த கிரவுஞ்ச கிரி பொடிபடச் செலுத்திய வேலனே, மயில் போன்ற மாது, குற மாது, அமுத வல்லி எனப் பெயர் பூண்டிருந்த தேவயானையின் நல்ல துணையாய் அமைந்த மாது, வள்ளி நாயகி என்கின்ற மின்னொளி போன்றவளை சுகத்துடனும் விரக தாபத்துடனும் அழுந்தக் கட்டி, உனது மார்பில் அவளுடைய மார்பகத்தை விடாமல் அணைத்துத் தழுவியவனே, பன்னிரண்டு தோள்களும், ஆறு திருமுகங்களும், மயில், வேல், இவைகளின் அழகுக்கு மேம்பட்டுப் பொருந்தியுள்ள எழில் வடிவம் உள்ளவனே, தொழுது வணங்கி ஜடாயு, சம்பாதி என்னும் பறவை வடிவினரும், காவிரி ஆறும் சூழ்ந்து பரவும் புள்ளிருக்கும் வேளூர் என்ற வைத்தீசுரன் கோயிலில் வீற்றிருக்கும் முருகா, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 785 - திருக்கடவூர் 
ராகம் - பைரவி 
தாளம் - ஆதி - 2 களை 
- எடுப்பு - 1/4 இடம்
தாத்த தனத்தன தானன தானன
     தாத்த தனத்தன தானன தானன
          தாத்த தனத்தன தானன தானன ...... தனதான
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
     வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
          லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி 
ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
     ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
          மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப் 
பூட்டு சரப்பளி யேமத னாமென
     ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
          பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம் 
போற்றி நமக்கிரை யாமென வேகொள
     நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
          பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே 
வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
     னாட்டை விடுத்திட வேபல சூதினில்
          வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய் 
வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
     பார்த்து முடித்திட வேயொரு பாரத
          மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே 
கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
     மூட்டி யெரித்தப ராபர சேகர
          கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா 
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
     யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
          கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே.
பிரமனது ஓலையில் கண்ட விதியின்படி, (இந்த உயிரைக்) கொண்டு போய் நல்ல உடலாகிய வீட்டில் சேர்த்து, பொருந்தும்படியாக (அடிக்கும்) சவுக்குப்போன்ற, (சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும்)* மூன்று நாடிகளை அதில் பொருத்தி அடித்துச் செலுத்த, கடலில் படகு ஓடுவது போலத் தடுமாறி காலம் கழித்து, நல்லது என்று நினைத்து பொன், பெண் ஆகிய ஆசைகளை மேற்கொண்டு, தூ எனப் பலர் இகழத் திரிந்தும், வருந்தியும், தவம் சேர்ந்துள்ள இடமே எங்கிருக்கின்றது என்று தெரியாமலும், இந்த உடலை விரும்பிப் பாதுகாத்து, வைரம் அழுத்தமாகப் பதித்த கழுத்தணி விளங்க, மன்மதன் இவன் என்னும்படி, உடலை ஆட்டியும் அசைத்தும் இயல்பாகத் திரியும் காலத்தில், நிரம்பின மலம் சேர்ந்த குகையோ, அல்லது சோற்றுப் பொதியோ இந்த உடல் என்னும்படி, கழுகும் காகமும் விரும்பி நமக்கு (இவ்வுடல்) உணவாகும் என்று கொள்ளும்படி, பூமியில் யாவும் அடங்கியாயிற்று என்று (இவ்வுடல்) விழுகின்ற, இறந்து போகும் அந்தச் சமயத்தில் கால்களில் பாம்பை அழுத்தமாகக் கட்டியுள்ள அழகிய மயிலின் மீது அமர்வோனே, நீ அருள் புரிவாயாக. (அரக்கு) மாளிகையில் (பஞ்ச பாண்டவர்களை) இருக்கச் செய்து, நெருப்பை இட்ட பாதகனாகிய துரியோதனன் நாட்டை விட்டுப் போகும்படி பல சூதாட்டங்களில் தோற்கடிக்க, விதியின்படி குருகுலத்து அரசராம் பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று, மாறு வேடம் பூண்டு அஞ்ஞாத வாசம் செய்திருந்த நாளின் முடிவைப் பார்த்து, வனவாசம் முடிந்திடவே, ஒரு பாரதப் போரையே மேலே நடக்கும்படித் துவக்கிவைத்த பெரிய வீரனாகிய திருமாலின் மருகனே, (சூரனது மகேந்திரபுரியின்) கோட்டைகளை அழித்து, அசுரர்களின் தலைவனான சூரன் கோ என்று கூச்சலிட (அவனுடைய நகரத்தை) நெருப்பு மூட்டி எரித்த பராபரப் பொருளே, அழகனே, கோக்கப்பட்ட இரத்தின ஒளிக்கு நிகரான கூரிய வேலனே, யமன் இறந்து போகும்படியாக (இடது காலால்) உதைத்த பார்வதி தேவியார்க்கும் இனிமை தரும் பெண்ணாகிய, மானின் வயிற்றில் பிறந்த வள்ளியின் மலை போன்ற மார்பகங்களுக்கு உரிய தலைவனே, திருக்கடவூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** திருக்கடவூர் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 13 மைலில் உள்ளது.தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக சிவபிரான் யமனை உதைத்துத் தள்ளி, காலபைரவ மூர்த்தியாக இருக்கும் தலம்.
பாடல் 786 - திருக்கடவூர் 
ராகம் - ...; தாளம் -
தானதன தான தத்த தானதன தான தத்த
     தானதன தான தத்த ...... தனதான
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
     தூயவொளி காண முத்தி ...... விதமாகச் 
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து
     சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி 
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
     மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி 
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
     வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய் 
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
     மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா 
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
     ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே 
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
     காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா 
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
     கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே.
சூலம் போல மூன்று கிளைகளாக* ஓடுகின்ற பாம்பு போன்ற பிராணவாயுவை வெளியேறாது அடக்கி, பரிசுத்தமான பர ஒளியைக் காணவும், முத்தி நிலை கை கூடவும், சூழ்ந்துள்ள ஆணவ இருளாகிய உருவத்தை அழிபடும்படியாக யோக நெருப்பில் அதை எரித்து, ஜோதி ரத்னபீடம் அமைந்துள்ள நிர்மலமான வீட்டை அடைந்து, அந்த மேலைப் பெரு வெளியிலே, ஆயிரத்தெட்டு இதழோடு கூடிய மேலான குரு கமலத்தில் (ஸஹஸ்ராரத்தில்)** சேர்ந்து, சிவ ஞான இன்ப ஒளியைப் பிரதிபலிக்கும் புனலில் மூழ்கி, வேல், மயில் இவைகளின் தரிசன ஒளியை அந்த நிலையில் கிடைக்கப் பெற்று, முக்தி நிலையைச் சிறப்புடன் பெறும் அருளைத் தந்தருளுக. ஓலமிட்டு அழும் அசுரர்களும், எட்டுத் திசைகளில் உள்ள கடல்களும், சக்ரவாளகிரியும் அழிபடவும், கிரெளஞ்ச மலையும் தொளை படும்படியாகவும் வேலைச் செலுத்திய மயில் வீரனே, சிறப்பான குற மானாகிய வள்ளியின் தினைப்புனக் காட்டுக்குச் சென்று, அவளுடைய காலை வருடி, அவளுடைய மனத்துள் பதியும்படி ஓம் என்னும் பிரணவ உபதேசமாகிய மூலப் பொருளோடு அவளை அணைந்தவனே, யமனுடன் (அவன் வாகனம்) எருமையும் அழிய, விதிப்படியே பூமியின் மேல் விழும்படி உதைத்துக் கிடத்தின காலகாலனாகிய சிவபிரானின்*** இடப் பாகத்தில் உள்ள பராசக்தி பார்வதி அருளிய பாலனே, ஊழிக் காலம் முதலாக வாழ்ந்து வரும் இந்தப் பூமிக்கு ஆதார நகராயுள்ள திருக்கடவூரில் இருக்கும் கோபுரத்தில் காட்டு மயில் போன்ற வாகனத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
*** தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக சிவபிரான் யமனை உதைத்துத் தள்ளி, கால ஸம்ஹார மூர்த்தியாக இருக்கும் தலம்.திருக்கடவூர் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 13 மைலில் உள்ளது.
பாடல் 787 - திருப்படிக்கரை 
ராகம் - ...; தாளம் -
தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
     தனத்த தத்தனத் ...... தனதான
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
     டழைத்தி தப்தடச் ...... சிலகூறி 
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
     தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத் 
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
     குளக்க ருத்தினிற் ...... ப்ரமைகூரா 
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
     துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ 
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
     றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச் 
சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
     றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர் 
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
     செயித்த வுத்தமத் ...... திருமாமன் 
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
     திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.
அருமை பாராட்டி அமைதியாகச் சிரித்து, மை பூசிய கண் கொண்டு அழைத்து, இன்பம் பெருகும்படி சில வார்த்தைகளைப் பேசி, இடுப்பினில் உள்ள பெண்குறிக்காக பணம் பெறும்பொருட்டு அதனை விற்பனை செய்து, கட்டியுள்ள பட்டாடையை அவிழ்த்து, அணைத்து, வாயிதழ் ஊறலைத் தந்து, காமலீலையில் உள்ளத்தை உருக வைத்து, குறைவிலா வகையில் பொருள் பறிக்கும் பொது மகளிரிடம் எனது உள்ளக் கருத்தில் மயக்கம் மிக்கு எழாது, செய்ப்பதி எனப்படும் வயலூர் என்ற தலத்தைப் போற்றி உரைத்து, உன்னைத் துதித்து, திருப்புகழ்ப் பாடல்களைச் சொல்வேனோ? பெருமை உள்ள குரங்குப் படையின் பலத்தினால் பெரிய மலைகளை எடுத்துப் போட்டு அணை கட்டி, கடலைக் குறுக்கே அடைத்து, (அணைக்கு) அப்பால் இருந்த அரக்கர்கள் பொடியாக, சண்டை மிக்கெழ, வீரம் உள்ள அம்பைச் செலுத்தி வீழ்த்தி வெற்றி கொண்ட மேலான அழகிய (ராமனாகிய) திருமாலும், சிறந்த தந்தையாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவனே. முத்தமிழ் வல்லானே, திருப்படிக்கரையில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* இந்தத் தலம் திருமண்ணிப் படிக்கரை எனவும், இலுப்பைப்பட்டு எனவும் வழங்கும். வைதீஸ்வரன்கோவிலுக்கு மேற்கே 6 மைலில் உள்ளது. 
பாடல் 788 - மாயூரம் 
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தானன
     தனதன தத்தத் தனந்த தானன
          தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான
அமுதினை மெத்தச் சொரிந்து மாவின
     தினியப ழத்தைப் பிழிந்து பானற
          வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய் 
அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்
     வருபசி யர்க்குற் றவன்பி னாலுண
          வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக் 
குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய
     நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
          குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக் 
குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு
     மவர்மய லிற்புக் கழிந்த பாவியை
          குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே 
வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு
     மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்
          மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே 
மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
     விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன்
          வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே 
எமதும லத்தைக் களைந்து பாடென
     அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய
          இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே 
எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய
     பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய
          இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.
அமுதத்தை நிரம்ப ஊற்றி, மாமரத்தின் இனிப்பான பழத்தை அதனுடன் பிழிந்து, பாலும் அதனுடன் தேனையும் கலந்து கூட்டி, (அவையுடன்) தித்திக்கின்ற கற்கண்டையும் கலந்த அத்தனை சுவையுள்ள வாயிதழ் (ஊறலை) உடையவர்களாய், அழகான பொன் தட்டில் மொண்டு, காம நோயுடன் வருகின்ற மோகப் பசி உள்ளவர்கள் மேல் வைத்த அன்பினால் (அவர்கள்) உண்ணும்படி கொடுப்பவர்கள் போன்று இளைப்புள்ள காமிகளின் மோக மயக்கம் நீங்க, (அதரபானத்தால்) வாய் வெளுத்த வேசையர்களின், இடம் பரந்த நிலவொளி வீசும் முத்து மாலையை அணிந்த, பருத்து விளங்கும், அழகுடன் மிக்கெழுந்த, நிறைந்த பாரமான மார்பாம் மலை இளகும்படி அணைத்து, வயிற்றின் மேல் விழுகின்ற அந்த விலைமாதர்களின் மோக வலையில் பட்டு அழிந்த பாவியாகிய என்னை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக. தன் குலத்தினர் பெருக, உலகம் எல்லாம் கலக்கமுற, மூர்க்கமும் கொடுமையும் நிறைந்த இழிவான புத்தியைக் கொண்டு அழிவு தரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த ராவணன் சற்றும் பொருட்படுத்தாமல், குற்றம் அற்ற, கற்பில் மேம்பட்ட சீதைக்கு துக்கம் விளைவிக்க, குரங்குகளின் சேனையின் உதவியைக் கொண்டு அவனுடைய குலத்தை அறுத்து விளங்கும் (ராமனாம்) திருமாலின் மருகனே, என்னுடைய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களையும் நீக்கி, பாடுவாயாக என்று நீ எனக்குத் திருவருள் பாலிக்க, அதன் படியே உன்னைப் புகழ்ந்து உழுவலன்புடன் பாடிய பாடல்களை விரும்பி மேலான பேற்றினை எனக்கு அருளிய முருகனே, அழகிய சங்கு நிரம்பத் தவழ்ந்து உலாவுகின்ற காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் விளங்குகின்ற, ஒப்பு இல்லாத, ரத்தினமயமான மயிலாடு துறையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 789 - பாகை 
ராகம் - ...; தாளம் -
தான தானன தானம், தான தானன தானம்
     தான தானன தானம் ...... தனதான
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
     தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே 
ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
     றாயு வேதனை யேயென் ...... றுலையாதே 
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
     த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே 
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
     தேவ நாயக நானின் ...... றடைவேனோ 
பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
     பாவை பாகனு நாளும் ...... தவறாதே 
பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
     பாகை மாநக ராளுங் ...... குமரேசா 
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
     கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா 
கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்
     கோல மாமயி லேறும் ...... பெருமாளே.
காம லீலைகளை விளைவிக்கும் சிறந்த மன்மதன் காமப் போரில் செலுத்தும் (மலர்ப்) பாணங்களால் மனம் நொந்து, உடல் வேர்வை வர மோகம் கொண்டு தளராமலும், முத்துப் போன்ற ஒளி வீசும் பற்களை உடைய விலைமாதரது சிவந்த சேல் மீன் போன்ற கண்களின் கட்டளைப்படி கீழ்ப்படிந்து ஆயுட் காலம் வரையில் துன்பமே என்னும்படி நிலை குலையாமலும், ஆதிசேஷனின் பெரிய பணாமுடியின் மேல் தாங்கப்படுகின்ற இந்தப் பூமியில் உள்ளவர்களுள் பெரிய கொடை வள்ளல்கள் யார் யார் என்று தேடி அலையாமலும், நான்கு வேதங்களும் தேடி நாடுகின்றனவும், (வள்ளியைத் தேடிக்) காட்டில் ஓடி அலைந்தனவுமான உனது திருவடிகளை தேவ நாயகனே, யான் என்று அடையப் பெறுவேனோ? நான்கு வேதங்களும் பாடுகின்ற பிரமனும், (அவனுக்குத்) தகப்பனாகிய திருமாலும், பார்வதி என்ற பெண்ணொரு பாகனாம் சிவபெருமானும், நாள் தோறும் தவறாமல், பக்குவமாக அன்று அலர்ந்த மலர்களைச் சூட்டுகின்ற திருமுடியை உடையவனே, கோட்டை மதில்கள் சூழ்ந்த அழகிய பாகை* நகரில் வீற்றிருக்கும் குமரேசனே, மதுரைப் பதி அரசனின் (கூன் பாண்டியனின்) கூன் அன்று தொலையும்படி, (சமணரோடு) வாதம் செய்த, உயர்ந்த வேதப் பொருள் கொண்ட தேவாரப் பாடல்களைப் பாடிய (திருஞானசம்பந்தராகிய) நாவன்மை மிக்க தமிழ் வீரனே, பல கோடி அசுரர்கள் கைகளும் கால்களும் அற்று விழும்படியாக, வெற்றி உலாச் செய்யும் அழகிய சிறந்த மயில் ஏறும் பெருமாளே. 
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.
பாடல் 790 - பாகை 
ராகம் - ஹிந்தோளம் 
தாளம் - ஆதி - 2 களை
தான தனந்தன தான தனந்தன
     தான தனந்தன ...... தனதான
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
     நோய்கள் வளைந்தற ...... இளையாதே 
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
     காடு பயின்றுயி ...... ரிழவாதே 
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
     வேறு படுந்தழல் ...... முழுகாதே 
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
     வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே 
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
     சேல்கள் மறிந்திட ...... வலைபீறா 
வாகை துதைந்தணி கேதகை மங்கிட
     மோதி வெகுண்டிள ...... மதிதோயும் 
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
     சாடி நெடுங்கடல் ...... கழிபாயும் 
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
     தோகை விரும்பிய ...... பெருமாளே.
கோழை, காய்ச்சல், குளிர், வாதம் என்ற பல நோய்கள் என்னைச் சூழ்ந்து நான் மிகவும் இளைப்பு அடையாமல், வலிமையை இழந்து துன்பமடையும் சிறிய கூடாகிய இவ்வுடலில் புகுந்து சுடுகாட்டிற்குச் சேரும்படி உயிரை இழக்காமல், மூளை, எலும்புகள், நாடிகள், நரம்புகள் இவையெல்லாம் வெவ்வேறாகும்படி நெருப்பில் மூழ்கி வேகாமல், மூலப்பொருளான சிவயோக பதவியில் நான் வாழ்வுபெறும்படியாக உபதேசித்தருள்வாயாக. வாளை மீன்கள் தமக்கு அருகில் உள்ள குளத்தில் இருக்கும் கயல் சேல் மீன்கள் இவற்றை விரட்டி, வலைகளைக் கிழித்து, வெற்றி கொண்டாடி, வரிசையாக இருந்த தாழம்பூக்கள் உருக்குலையும்படி அவற்றை மோதிக் கோபிக்க, பிறைச்சந்திரன் படியும் உயரமான பாளைகளைக் கொண்ட நறுமணம் கமழும் கமுக மரக்காட்டில் அந்த மீன்கள் உச்சியில் சாடி, பெரிய கடலின் உப்பங்கழியில் பாயும், பாகை* என்ற வளமான தலத்தில் வீற்றிருந்து, வளப்பம் நிறைந்த தோகைமயிலான வள்ளியை விரும்பிய பெருமாளே. 
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள 'பாகசாலை' என்னும் தலம்.
பாடல் 791 - பாகை 
ராகம் - ...; தாளம் -
தனன தனதன தனன தனதன
     தான தானன ...... தனதான
குவளை பொருதிரு குழையை முடுகிய
     கோல வேல்விழி ...... மடவார்தங் 
கொடிய ம்ருகமத புளக தனகிரி
     கூடி நாடொறு ...... மயலாகித் 
துவள வுருகிய சரச விதமது
     சோர வாரிதி ...... யலையூடே 
சுழலு மெனதுயிர் மவுன பரமசு
     கோம கோததி ...... படியாதோ 
கவள கரதல கரட விகடக
     போல பூதர ...... முகமான 
கடவுள் கணபதி பிறகு வருமொரு
     கார ணாகதிர் ...... வடிவேலா 
பவள மரகத கநக வயிரக
     பாட கோபுர ...... அரிதேரின் 
பரியு மிடறிய புரிசை தழுவிய
     பாகை மேவிய ...... பெருமாளே.
குவளை மலரை விட அழகானது என்று அதனுடன் போர் செய்வதாகி, இரு காதுகளிலும் உள்ள குண்டலங்களை விரட்டக் கூடியதாகி, அழகிய வேல் போன்றதாகிய கூரிய கண்களை உடைய விலைமாதர்களின் பொல்லாதனவும், கஸ்தூரி அணிந்தனவும், புளகம் கொண்டனவுமான மலை போன்ற மார்பகங்களை அணைந்து ஒவ்வொரு நாளும் மோகம் கொண்டவனாய், துவளும்படி உருகிய சரச லீலை விதங்களில் தளர்ச்சியுற, காமக் கடல்களின் அலைகளுக்கு உள்ளே சுழல்கின்ற என்னுடைய உயிர் மவுன நிலை என்கின்ற பரம சுகம் ஆகிய பெரிய கடலில் மூழ்கித் திளைக்காதோ? வாயளவு கொண்ட உணவை உட்கொள்ளும் துதிக்கையையும், மதம் பாயும் சுவடு கொண்ட அழகிய கன்னத்தையும், யானையின் முகத்தையும் கொண்ட கடவுளாகிய கணபதிக்குப் பின்னால் தோன்றிய ஒப்பற்ற மூலப் பொருளே, ஒளி வீசும் வடி வேலனே, பவளத்தின் செந்நிறத்தையும், மரகதத்தின் பச்சை நிறத்தையும், பொன்னின் மஞ்சள் நிறத்தையும், வைரத்தின் வெண்மை நிறத்தையும் கொண்ட கதவுகளையும், கோபுரத்தையும் கொண்டு, சூரியனது தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்கள் சூழ்ந்துள்ள பாகை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.
பாடல் 793 - திருவிடைக்கழி 
ராகம் -...; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
     தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா 
அவலக் கவலைச் சவலைக் கலைகற்
     றதனிற் பொருள்சற் ...... றறியாதே 
குனகித் தனகிக் கனலொத் துருகிக்
     குலவிக் கலவிக் ...... கொடியார்தங் 
கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
     குலைபட் டலையக் ...... கடவேனோ 
தினைவித் தினநற் புனமுற் றகுறத்
     திருவைப் புணர்பொற் ...... புயவீரா 
தெளியத் தெளியப் பவளச் சடிலச்
     சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே 
கனகச் சிகரக் குலவெற் புருவக்
     கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா 
கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
     கழியிற் குமரப் ...... பெருமாளே.
நெருப்பு, நீர், காற்று முதலிய பஞ்ச பூதங்கள் சேர்ந்ததும், (சத்துவம், ராஜதம், தாமஸம் என்ற) முக்குணங்கள் வைக்கப்பட்டதும், நிரம்பப் பொய்யானதும், ரத்தம் கூடியதுமான இந்தக் குடிசையாகிய உடலை விரும்பி, பயனற்றதும், கவலைகளுக்கு இடமானதும், மனக் குழப்பம் தருவதுமான பல நூல்களைக் கற்று, அந்நூல்களில் உள்ள பொருளைக் கொஞ்சமும் அறியாமல், கொஞ்சிப் பேசியும், உள்ளம் களித்தும், நெருப்பில் பட்ட மெழுகு போல் உருகியும், நெருங்கி உறவாடிக் கூடியும் பசப்புகின்ற கொடி போன்ற பெண்களின் கொடுமையிலும், கடுமையிலும், குவளை மலர் போன்ற கண்களின் ஓரப்பார்வையிலும் நிலை தடுமாறி நான் அலைச்சல் உறுவேனோ? தினை விதைக்கப்பட்ட நல்ல புனக்கொல்லையில் இருந்த குறப்பெண்ணான வள்ளியை அணைகின்ற அழகிய தோள்களை உடைய வீரனே, தெள்ளத் தெளியும்படி ஒப்பற்ற பிரணவத்தை செந்நிறமான சடையை உடைய சிவ பெருமானுக்கு உபதேசித்தவனே, தங்க மயமான சிகரங்களை உடைய சிறந்த கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படிக் கோபித்துச் சண்டை செய்த ஒளி வீசும் வேலைக் கையில் ஏந்தியவனே, கடலின் உப்பு நீர்ப் பரப்பு கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் திருவிடைக்கழி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
பாடல் 793 - திருவிடைக்கழி 
ராகம் -...; தாளம் -
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
     தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான
இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்
     றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென் 
றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்
     டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர் 
குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்
     பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின் 
குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்
     குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே 
அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்
     கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி 
அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்
     தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே 
கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்
     கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக் 
கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்
     கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.
யாசிப்பவர்களுக்கு மிக்க இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று சொல்லும்படியான எனக்கு, இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து, ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வர, பெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின் குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து, ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில் துன்பப்படும் பிறப்பு என்ற கடலை நான் தாண்டி உய்ய, இனி அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக. அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை பொடிபட்டு உதிர, எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி* என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே, துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை, வேங்கை மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படி, கணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
பாடல் 794 - திருவிடைக்கழி 
ராகம் - ஸெளராஷ்டிரம் 
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தத்தனத் தனன தத்தனத்
     தனன தத்தனத் ...... தனதான
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
     பயனு மெப்படிப் ...... பலவாழ்வும் 
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
     பரவு கற்பகத் ...... தருவாழ்வும் 
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
     பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும் 
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
     புகழ்ப லத்தினைத் ...... தரவேணும் 
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
     சரவ ணத்தினிற் ...... பயில்வோனே 
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
     தழுவு பொற்புயத் ...... திருமார்பா 
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
     திறல யிற்சுடர்க் ...... குமரேசா 
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
     றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
புகழப்படுகின்ற முத்தமிழ் நூல்களின் பொருளையும், உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும், எத்தன்மைத்தான பலதரப்பட்ட வாழ்வையும், தொன்று தொட்டு வரும் முக்திச் செல்வ நிலையையும், யாவரும் விரும்பிப் போற்றும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும், குற்றமற்ற புத்தியுடன் ராஜயோகத்தைப் பெற்று விளங்கும் அற்புதமான சிறந்த வாழ்வையும், ஐம்புலச் சேஷ்டைகள் நீங்கப்பெற உன் பலவகைப் பெருமைகளைப் புகழும் அறிவுப் பலத்தையும் நாவன்மையையும் நீ தந்தருள வேண்டும். (தக்ஷயாகத்தில் நடைபெற்ற) சண்டையின்போது தகர்க்கப்பட்டு அறுந்துபோன கைகளைக் கொண்ட அக்கினிதேவனது கைத்தலங்கள் (முருகனின் ஆறு பொறிகளின் சூடு தாங்காமல்) கங்கையில் விட்டுவிட இணைந்திருக்கும் சரவணப் பொய்கையில் பொருந்தி வளர்ந்தவனே, தனியாக வள்ளிமலைக்காட்டில் தினைப்புனத்தைக் காத்த மறக்குலத்து வள்ளியை தழுவிய அழகு புயங்களையும் திருமார்பையும் உடையவனே, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலையைப் பிளந்து பகிர்ந்த ஞானமும் வலிமையும் வடிவான சுடர்வேலை உடைய குமரேசனே, செழிப்பான பூஞ்சோலைகளில் குராமரங்கள் உள்ள அழகிய திருவிடைக்கழியில்* மேவும் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
பாடல் 795 - திருவிடைக்கழி 
ராகம் - ரேவதி 
தாளம் - அங்கதாளம் - 5 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனனதன தத்தனத் தனனதன தத்தனத்
     தனனதன தத்தனத் ...... தனதான
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
     பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு 
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
     பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும் 
உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
     குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன் 
உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
     துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே 
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
     கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா 
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
     குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே 
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
     தடலனுச வித்தகத் ...... துறையோனே 
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
     தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
மண், நீர், தீ, வலிமை கொண்ட வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், பொய், கருவிலே பிறப்பு கூடும் அவஸ்தை, ஸாத்வீகம், ராஜஸம், தாமதம் என்ற முக்குணங்கள், வெகு காலமாய்க் கூடிவரும் நோய்கள், மூளை, ஜீவதாது, ரத்தம், எலும்பு, உடலில் தோன்றும் பசி, உள்ளிருக்கும் மாமிசம் இவை யாவும் கூடிய அறிவற்ற சிறு குடிசையைப் பெரிதெனப் போற்றி இந்த தேகத்தைத் தாங்கி மிகக் கீழானதாகப் பெறப்பட்ட இந்தப் பிறவியிலே ஞானம் கலந்த சிந்தை இல்லாமல் நாயினும் கீழான நான்அலைந்து திரியும் தன்மை நீதி ஆகாது. வீரக் கழல் அணிந்த உன் திருவடிகளை எனக்கு அளித்து, உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்தில் என்னையும் ஒருசேர வைத்து அருள் புரிய வேண்டுகிறேன். கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான சேவலைக் கொடியாக உடையவனே, அழகான தினைப்புனத்து வள்ளிக் கொடி படரும் புயமலைகளை உடைய, ஒளி பொருந்திய வேலாயுதனே, குமரனே, போரில் சீறிப் பாயும் பாம்பை அணியும் தந்தை சிவபிரானின் மெய்ப் புதல்வனே, மூன்று தமிழிலும் மகிழும் வித்தகனே, விசேஷமான அழகிய மத்தகத்தோடு கூடிய பெரிய மலை போன்ற கணபதியின் தந்தை சிவபிரானுக்கு குருவே, அதே கணபதியின் பராக்ரமம் மிகுந்த தம்பியே, ஞான நிலையில் விளங்குபவனே, விருக்ஷங்கள் பொருந்தி விளங்கும் தலமும், பூமியின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் தன்னிடம் வந்து வேண்டினால் அவர்களுக்கு முத்தியைத் தரும் தலமுமாகிய திருவிடைக்கழித் தலத்தில் அமர்ந்த பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
பாடல் 796 - திருவிடைக்கழி 
ராகம் - கல்யாணி 
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனனத் தனதான தனதனனத் தனதான
     தனதனனத் தனதான ...... தனதான
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
     பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப் 
படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
     பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர் 
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
     யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன் 
உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
     உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே 
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
     திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத் 
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
     ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே 
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
     அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா 
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
     அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.
பழி பாவங்களுக்கு இருப்பிடமான உடலாகிய இந்தக் குடிசையை எடுத்து இழிவான சொற்களை சொல்லும் செயல்களை உடைய மாதர்கள் தருகின்ற மாயமான படுகுழியில் வீழ்ந்து நல்லபடியாக கரையேறும் வழி உண்டோ என்று தடவிப் பார்த்தும் தெரியாமல், பழங்கொள்கைகளையே ஆராயாமல் பிதற்றும் இவ்வுலக முழுமூடர்கள் திருந்து விருப்பமுடன் ஓதும் பல குழப்பம்தரும் நூல்களைத் தேடி ஒரு பயனையும் தெளிந்து அறியாமல் இறப்பதன்முன்பு, உன் தாமரைப் பாதங்களை விரும்பி உருகி, உள்ளத்தில் பக்திரசம் அமுதமாக ஊற உன் திருப்புகழை ஓதுவதற்கு அருள்வாயாக. முழங்கும் உப்புக் கடல் மொகு மொகு என்று கொந்தளிக்கவும், பெரிய மேருமலை திடு திடு என்று பொடிபட்டு இடிபடவும், பலவகை பூதகணங்கள் விதவிதமாக திமிதிமி என்று கூத்தாடவும், சண்டையிட்ட சூரன் மாமர உருவில் இருந்து நெறுநெறு என்று முறிந்து விழவும், பல தேவர்களும் ஜெய ஜெய என்று வெற்றி கோஷம் இடவும், கோபித்து எழுந்த வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அழகு நிறைந்திட்ட கடப்பமாலையை அணிந்தவனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே, வேலனே, வெற்றியைத் தருவதும், முழங்கி ஒலிப்பதும் நீல நிறமானதுமான மயில் வாகனத்தில் ஏறும் வீரனே, திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செங்கோடு, பழநிநகர், வல்லக்கோட்டை ஆகிய தலங்களில் வாழும் தலைவனே, திருவிடைக்கழித் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
பாடல் 797 - திருவிடைக்கழி 
ராகம் - ...; தாளம் -
தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
          தனத்த தானன தனதன தனதன ...... தனதான
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
     நகைத்து வாமென அமளிய ருகுவிரல்
          பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... வுறவாடிப் 
பிதற்றி யேயள விடுபண மதுதம
     திடத்தி லேவரு மளவுந லுரைகொடு
          பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் ...... கனமாலாய் 
முருக்கி னேரித ழமுதுப ருகுமென
     வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை
          முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் ...... பொருள்தீரின் 
முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
     மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற
          முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ ...... அருள்தாராய் 
நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற
     வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு
          நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி ...... கொளும்வேலா 
நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி
     புரத்தி லேநகை புரிபர னடியவர்
          நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய ...... புதல்வோனே 
செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
     மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்
          திருக்கை வேல்வடி வழகிய குருபர ...... முருகோனே 
சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
     யிருக்கு வேதனு மிமையவர் பரவிய
          திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.
திரண்டு பெருகியுள்ள செல்வத்தை உடையவர்கள் தம்மிடம் வந்தால், மிகவும் சிரிப்புடன் வாருங்கள் என்று படுக்கை அருகில் (வந்தவரின்) விரலைப் பிடித்து (அழைத்துக் கொண்டு) போய் அவர் தொடை தம் தொடை மீது நெருங்கிப் பட, உறவு மொழிகளைப் பேசி விளையாடி, பல அன்பு மொழிகளைப் பிதற்றி தாம் கணக்கு வைத்திருந்த பணம் முழுதும் தம் வசம் வந்து சேரும் வரை நல்ல இன்பமான வார்த்தைகளால் பகட்டுப் பேச்சுக்களைப் பேசி மிக்க சல்லாபத்துடன் அணைவார்கள். பெருத்த அன்பு பூண்டவர்கள் போல முருக்கம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும் என்று கூறி, காம லீலைகளில் பல விதங்கள் காட்டி மலை போல் பருத்த மார்பகங்களின் மீது சாய்ந்து கொள்ளும்படி மயக்கம் ஊட்டுபவர். பொருள் தீர்ந்துபோன பிறகு, முறுக்கும் திருப்புமாய் கோபக் குறி காட்டி உதையும் உதைத்து வசை மொழிகளைப் பேசும் நன்றி கெட்டவர்கள் ஆகிய விலைமாதர்களின் ஆணையால் செய்யும் செயல்களில் ஈடுபடும் கருத்து அற்றுப் போக, என்னைத் திருப்பி உனது இரண்டு திருவடி மலர்களைத் தொழும்படியாக திருவருளைத் தந்து அருள்வாய். நெருங்கி வந்த அசுரர்களின் கூட்டம் அழிபடக் கோபித்து, மயிலின் முதுகில் வேகமாய் வந்து, இந்தப் பூமியில் போர் செய்தவர்களாகிய அந்த அசுரர்களின் உயிரைப் பலி கொண்ட வேலனே, கைந்நகத்தால் பிரமனுடைய தலையை கிள்ளிப் பறித்த இறைவன், திரிபுரத்தில் (தீயெழச்) சிரித்த பரமன், அடியவர் நினைத்தாலே அருள் பாலிக்கும் சிவ பெருமான் பெற்ற பிள்ளையே. அகந்தை கொண்ட வேடர்கள் வளர்த்த ஒப்பற்ற வள்ளியை நறு மணம் வீசும் மலர்ப் படுக்கையின் மேல் அணைந்த, திருக்கை வேலுடன் திருவுருவம் அழகுள்ள குருபரனே, முருகனே, சிறப்புற்ற மகா தவசிகளும் இந்திரனும் ரிக்வேதம் வல்ல பிரமனும் தேவர்களும் போற்றிப் பரவும் திருக் குரா மரத்தின் அடி நிழலில் (திருவிடைக்கழியில்*) விளங்கிப் பொலியும் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
பாடல் 798 - திருவிடைக்கழி 
ராகம் - காபி 
தாளம் - சதுஸ்ர ரூபகம் - திஸ்ர நடை - 9 
- எடுப்பு - அதீதம் வீச்சில் 1 தள்ளி
தனத்த தானன தனதன ...... தனதான
மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே 
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே 
கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே 
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும் 
தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா 
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா 
திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே 
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.
நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை (விரகத்தின் காரணமாக) கொதித்துச் சூடு தராமலும், வளர்த்த தாயும் சுற்றத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், காரணமாக (கருவைத்து) நட்பு கொண்டாடிய அயலார்கள் பழிச் சொல் கூறாமலும் (இருக்க வேண்டுமானால்) உன் (அடையாளமாய்) கடம்ப மாலையை இனி அனுப்பி வைக்க வேண்டும். கற்பக விருட்சத்தின் கீழ் வளர்ந்த, கொடிபோன்ற இடையை உடைய தேவயானையின் மணவாளனே, சாமர்த்தியசாலியே, மரகத மணியின் நிறம் கொண்ட மயில்மீது வரும் வீரனே, திருவிடைக்கழியில் உள்ள திருக்குராமரத்தின் அடிநிழல் தன்னில் வீற்றிருப்பவனே, திருக்கையில் வேல் ஏந்திய, வடிவம் அழகிய பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
பாடல் 799 - திருவிடைக்கழி 
ராகம் - ....; தாளம் -
தனன தத்தன தனதன தனன தத்தன தனதன
     தனன தத்தன தனதன ...... தனதான
முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்
     முறைம சக்கிகள் திருடிகள் ...... மதவேணூல் 
மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை
     முகமி னுக்கிகள் கசடிகள் ...... இடையேசூழ் 
கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம ளியின்மிசை
     கனியி தழ்ச்சுருள் பிளவிலை ...... யொருபாதி 
கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி
     கவலை யற்றிட நினதருள் ...... புரிவாயே 
அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்
     அணிக ழுப்பெற நடவிய ...... மயில்வீரா 
அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
     அவர வர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே 
சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
     திருவி னைப்புண ரரிதிரு ...... மருகோனே 
திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்
     திருவி டைக்கழி மருவிய ...... பெருமாளே.
எப்போதும் தங்கள் மார்பகத்தைக் குலுக்குபவர்கள். வஞ்சனை மனம் உடையவர். வடித்து எடுக்கப்பட்ட இழிந்தவர்கள். முட்டாள்கள். உறவு முறை கூறி மயங்கச் செய்பவர்கள். திருடிகள். மன்மதனுடைய காம நூலில் கூறியவாறு பேச்சினால் ஏய்ப்பவர்கள். செருக்கு உடையவர். சிணுங்கி அழுகின்ற மனத்தை உடையவர்கள். தக்க சிரிப்புடன் முகத்தை மினுக்குபவர்கள். குற்றம் உடையவர்கள். இடுப்பில் சூழ்ந்துள்ள ஆடையைத் தளர்த்தி விடுபவர்கள். இளைஞர்களின் பொருளை அபகரித்து, படுக்கையில் கனி போன்ற தங்கள் வாயிதழில் உள்ள சுருள் பாக்கு வெற்றிலையில் ஒரு பாதியை புணர்ச்சி நேரத்தில் கொடுக்கும் கெட்ட நடத்தை உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) கண் மயக்கில் நான் வசம் அழியும் கவலை என்னை விட்டு ஒழிய உன் திருவருளைப் புரிவாயாக. கடல் தீப்பிடிக்க, வடக்கிலுள்ள (கிரவுஞ்ச) மலை பொடியாக, சமணர்களின் கூட்டம் வரிசையாக அமைக்கப்பட்ட கழுமரங்களில் ஏற (திருஞான சம்பந்தராக வந்து) நடத்திய மயில் வீரனே, அரன், திருமால், பிரமன் மூவரும் முன்பு வழிபட்டுப் போற்ற, அவர்கள் மேல் மிக்க அன்பு பூண்டு அவரவர்க்கு ஒப்பற்ற ஒரு பிரணவப் பொருளை உபதேசித்த பெரியவனே, (சிவதனுசு ஆகிய) வில் மொளுக்கென்று முறிந்து விழ, மிதிலை நகரில் ஜனகன் ஆகிய அரசன் அருளிய லக்ஷ்மி போன்ற சீதையை மணந்த (ராமன்) திருமாலின் அழகிய மருகனே, திரண்டுள்ள பலா, கமுகு மரங்கள் சொரிகின்ற தேன், வாழை இவை எல்லாம் வளர்கின்ற திருவிடைக்கழி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
பாடல் 800 - தான் தோன்றி 
ராகம் - ....; தாளம் -
தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன
     தாந்தாந்த தத்ததன ...... தனதான
சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர்
     தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே 
சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
     தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே 
வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
     வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல் 
வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
     வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய் 
வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
     வான்தோன்று மற்றவரு ...... மடிபேண 
மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்
     வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித் 
தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
     சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா 
தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
     தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.
சூழ்ந்து நிகழும் துன்பம் தரும் வினைகள் ஒன்று கூடி நிலை பெறுவதற்கு இடமானதும், நீரால் வளருவதுமான தூணை ஒத்த இந்த உடலும் உலகிடையே தளர்ச்சி உற்று, கட்டு குலைந்து, நெருப்பில் நுண்ணிய சாம்பற் பொடியாகிவிடும் குற்றம் வாய்ந்த தன்மையை மனத்தினுள் நன்கு ஆய்ந்து உணராமல், விரும்பி விரைவுடன் சென்று நல்ல கல்வி நூல்களில் ஆழ்ந்து ஆய்ந்து அறிந்து நிரம்பப் பொருள் தேடவேண்டி, பொற் கலப்பையைக் கொண்டு வயலை உழுபவர்கள் போல, மனம் வேகும் தன்மையும் ஒழிந்து, வினை பெருகும் நிலைமையும் நீங்கி, (நற்கதி) விளையும்படியான தகைமையில், உனது நல்ல திருவடிகளைத் தொழ ஆண்டருள்க. வாழ்வுற்று மேலான செந்நெறி வாய்க்கப் பெற்று, ஆய்ந்த ஒழுக்கத்தில் உள்ள நல்ல தவசிகளும், விண்ணுலகத்தில் வாழும் பிறரும் உன் திருவடியைப் போற்ற, பொன் வளையல்களை அணிந்த மாதர்கள் (வள்ளி, தேவயானை) தாம் இருவரும் அணைந்துள்ள நல்ல புயமும் தோன்ற, ஆகாயத்தை அளாவும்படி மயிலின் மீது ஏறி, கீழே மிக ஆழ்ந்துள்ள கடலில் விழுந்து நெருங்கியிருந்த (எழு) கிரியில் வாழ்ந்த அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படி போர் செய்த கூரிய வேலனே. தான் தோன்றி* அப்பர் என்னும் திருநாமத்தை உடைய சிவபெருமான் (தேவியுடன்) குடி கொண்டிருந்து பெற்ற நல்ல குமரனே, தானே தோன்றி (சுயம்பு மூர்த்தியாய்) நிற்க வல்ல பெருமாளே. 
* தான்தோன்றி இப்போது 'ஆக்கூர்' என வழங்கப்படுகிறது. மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.

பாடல் 751 - விருத்தாசலம் 
ராகம் - ஹரிகாம்போதி தாளம் - ஆதி - 2 களை

தனதன தனதன தனதன தனதன     தனதன தனதன ...... தனதான

திருமொழி யுரைபெற அரனுன துழிபணி     செயமுன மருளிய ...... குளவோனே 
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு     தெறிபட மறுகிட ...... விடுவோனே 
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி     னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ 
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்     ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா 
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்     கணினெதிர் தருவென ...... முனமானாய் 
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக     கருணையில் மொழிதரு ...... முதல்வோனே 
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட     முரணுறு மசுரனை ...... முனிவோனே 
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்     முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.

வேத மொழியாம் ப்ரணவத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காக சிவபிரான் உன்னிடத்தில் வணங்க முன்பு அவருக்கு உபதேசித்து அருளிய, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, ஒளிமிக்க மதுரையில் சமணர்களின் உயிர்கள் கழுமரத்தில் கலங்கிச் சிதறுபட வைத்தவனே*, நீக்குவதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் அன்பில்லாதவர்களைப் போல துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் கண்பார்த்தருள்வாயோ? உலகத்தில் உள்ள யாவரும் புகழும்படியாக திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலிலே வந்து உதவிய வீரனே**, கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூரிய, கண்களை உடைய குற மகள் வள்ளியின் கண்களுக்கு எதிரிலேயே வேங்கை மரமாக முன்பு ஆனவனே, கார்மேகத்தை ஒத்த நிறமுடைய திருமாலின் அழகிய மருமகனே, கருணையோடு உபதேச மொழியை எனக்களித்த முதல்வோனே, நறுமணம் வீசும் மலர் கொண்ட கற்பக விருட்ச நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறு மாறுபட்டு நின்ற அசுரனாம் சூரனைக் கோபித்தவனே, இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே. 
* முருகனே திருஞானசம்பந்தராக வந்து சமணரைக் கழுவேற்றினார் என்பது சுவாமிகளின் கருத்து.
** அருணகிரிநாதர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இங்கு குறிப்பிடப்படுகிறது.

பாடல் 752 - விருத்தாசலம் 
ராகம் - ...; தாளம் -

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த     தனதத்த தனதத்த ...... தனதான

பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி     பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப் 
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க     பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி 
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு     மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே 
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை     விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே 
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி     னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர் 
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்     அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே 
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற     வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே 
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்     வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே.

ஈரப்பசையற்ற இவ்வுடல் வற்றிப் போகச் செய்த வினை முதிர்ச்சி அடைந்து, நடையும் தள்ளாடுதலை அடைந்து, நிலை தடுமாறி, கை சொறிதலையே தொழிலாகக் கொண்டு, (ஈறுகள் தேய்தலால்) பற்கள் வெளியே நீண்டு வர, கண் பூ விழுந்து மறைப்பதால் பார்வை இழந்து குருடாகி, மிகவும் நெகிழ்ந்து பழம் போலப் பழுத்து, மயிர் நரைத்து கொக்கைப் போல் வெண்ணிறமாகி, வேகத்துடன் வருகின்ற பித்தத்தாலும், வாயுவினாலும், கண் இடமும் நிலையும் தடுமாறிக் கெட்டு, உடல் மெலிதலை அடைந்து, கைவிரல்களினால் பிடிக்கப்பட்ட தடியுடன், வெளியே தனியனாக நிற்கின்ற தன்மை மிகும்படியாக துன்பமே கொண்ட பிறப்பைத் தவிர்த்து, உன் திருவருளைத் தருவதும் ஒரு நாள் உண்டாகுமோ? கலக்கம் இல்லாத அசுரர்கள் மடிந்து இறந்தொழிய, அதனால் மகிழ்ந்த, வலிய வஜ்ராயுதக் கையனனாகிய இந்திரனும் மற்றும் உள்ள தேவர்களும், பூக்களைப் பொழிந்து பூமி முழுதும் மறையும்படிச் செய்கின்ற நிகர் இல்லாதவனே, போரில் வெற்றி உடையவனே, பழிப்புக்கு இடம் இல்லாமல், முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின் காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட* மேக நிறக் கண்ணனது மருகனே, இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள முது குன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சகாதேவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரதப் போருக்கு முன்பும், அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின் போதும், கண்ணன் விசுவரூப தரிசனம் தந்தது இங்கு குறிப்பிடப் பெறுகிறது.

பாடல் 753 - வேப்பூர் 
ராகம் - பீம்பளாஸ் தாளம் - அங்கதாளம் - 15 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனதன தனதன தனதன தாந்த     தாத்தான தந்த ...... தனதான

குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து     கூத்தாடு கின்ற ...... குடில்பேணிக் 
குகையிட மருவிய கருவிழி மாந்தர்     கோட்டாலை யின்றி ...... யவிரோதம் 
வரஇரு வினையற உணர்வொடு தூங்கு     வார்க்கே விளங்கு ...... மநுபூதி 
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த     வாக்கால்மொ ழிந்த ...... ருளவேணும் 
திரள்வரை பகமிகு குருகுல வேந்து     தேர்ப்பாகன் மைந்தன் ...... மறையோடு 
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து     தீப்பாய இந்த்ர ...... புரிவாழ 
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு     வேற்கார கந்த ...... புவியேழும் 
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த     வேப்பூர மர்ந்த ...... பெருமாளே.

ஆரவாரம் செய்கின்ற கடல் சூழ்ந்த உலகில் உயிர் எடுத்து வந்து, பலவித விளையாட்டுகளை ஆடும் இந்த உடலை விரும்பிப் போற்றி, மலைக்குகை போன்ற கருக்குழிக்குள் விழுகின்ற மக்களுக்கு நேரும் துன்பங்கள் எவையும் இல்லாமல், விரோதமின்மை என்னும் மனப்பான்மை வருவதற்கும், நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் நீங்குவதற்கும், ஞான உணர்வோடு இருப்பவர்களுக்கே விளங்கும்படியான அனுபவ ஞானமான உன் அருட்பிரசாத வடிவத்தினை உன் அழகிய லக்ஷ்மிகரம் நிறைந்த திருவாக்கால் உபதேசித்து அருளவேண்டும். திரண்டு பருத்த கிரெளஞ்சமலையானது பிளவுபடவும், குருகுலவேந்தன் அர்ச்சுனனின் தேர்ப்பாகனாக வந்த கண்ணன் (திருமாலின்) மைந்தனாகிய பிரமன் தான் கற்ற வேதமும் தானுமாகக் கலக்கம் அடையவும், அசுரர்களின் மனைவியர் ஒன்றுகூடி தீயில் பாய்ந்து இறக்கவும், தேவேந்திரனின் தலைநகரம் அமராவதி வாழ்வுபெறவும், பரந்து விரிந்த அலைகடலில் நெருப்புப் பற்றி எழவும், முதன்மையாம் தன்மை படைத்த வேலாயுதத்தைச் செலுத்திய கந்தனே, ஏழுலகின் வறுமையும் நீங்குமாறு செழிப்பான விளைச்சலைத் தரும் வளமான வயல்கள் சூழ்ந்த வேப்பூரில்* அமர்ந்த பெருமாளே. 
* வேப்பூர் வட ஆற்காடு மாவட்டத்தில் ஆற்காட்டுக்கு அருகில் பாலாற்றின் கரையில் உள்ளது.

பாடல் 754 - நிம்பபுரம் 
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் தாளம் - ஆதி

தந்ததன தான தந்ததன தான     தந்ததன தான ...... தனதான

அஞ்சுவித பூத முங்கரண நாலு     மந்திபகல் யாது ...... மறியாத 
அந்தநடு வாதி யொன்றுமில தான     அந்தவொரு வீடு ...... பெறுமாறு 
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்     மங்கைதனை நாடி ...... வனமீது 
வந்தசர ணார விந்தமது பாட     வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே 
குஞ்சரக லாப வஞ்சியபி ராம     குங்குமப டீர ...... வதிரேகக் 
கும்பதன மீது சென்றணையு மார்ப     குன்றுதடு மாற ...... இகல்கோப 
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர     வென்றிவடி வேலை ...... விடுவோனே 
விம்பமதில் சூழு நிம்பபுர வாண     விண்டலம கீபர் ...... பெருமாளே.

பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்களும், இரவு - பகல் என்ற இரண்டும் அறியாத முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததான அந்த ஒப்பற்ற மோக்ஷ இன்பத்தைப் பெறுமாறு, மேகம் தவழ்கின்ற சிகரங்களை உடைய அழகிய மலைவாழ் வேடர்களின் மகளாகிய வள்ளியை விரும்பி வள்ளிமலைக் காட்டில் வந்தடைந்த திருவடித் தாமரைகளைப் பாட எனக்கு வண்தமிழில் அற்புதக் கவித்துவத்தை நீ அருள்வாயாக. ஐராவதம் என்ற யானை வளர்த்த, மயிலின் சாயலுடைய, மங்கை தேவயானையின் அழகிய செஞ்சாந்தும் சந்தனமும் மிகுதியாகப் பூசியுள்ள மார்பின் மீது மனதாரத் தழுவி அணைக்கும் திருமார்பா, கிரெளஞ்சகிரி தடுமாற்றம் அடையுமாறு அதன்மீது பகைத்துக் கோபித்தவனே, கொடிய போரினைச் செய்த சூரனுடைய நெஞ்சு பிளவுபட வீரம் வாய்ந்த வெற்றி தரும் கூரிய வேலினைச் செலுத்தியவனே, ஒளி பொருந்திய மயில்கள் சூழ்ந்துள்ள நிம்பபுரம்* என்ற தலத்தவனே, விண்ணுலகத்துத் தேவேந்திரர்களின் பெருமாளே. 
* நிம்பபுரம் என்பது வேப்பூர் என்று கருதப்படுகிறது. நிம்பம் என்றால் வேம்பு.வேப்பூர் தென்னாற்காடு மாவட்டத்தில் பாலாற்றங் கரையில் ஆற்காட்டுக்கு அருகில் உள்ளது.

பாடல் 755 - வேப்பஞ்சந்தி 
ராகம் - தாளம் -

தாத்தந் தந்தத் தந்தத் தனனத் ...... தனதான

நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே 
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய் 
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே 
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர் 
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே 
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா 
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே 
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.

விருப்பத்தை (உன் மீது) தங்க வைத்து, பெண்களின் மார்புக்குவட்டில் கவனம் படியாமல், தங்கள் கருத்தை உன் திருவடியில் நாட்ட வல்ல தொண்டர்களுக்கு தாமரைத் திருவடிகளைத் தந்து அருள் புரிவாய். சோர்வு காணும்படி விண்ணில் உள்ள தேவர்களின் சேனைகள் மீது பகைமை மொழிகளைக் கூறி கூட்டமாக போருக்கு எதிர்த்து வந்த அசுரர்களின் கூட்டமெல்லாம் கெட்டுப் பிரிந்துச் சிதறும்படி சண்டை செய்பவனே, யமனுடைய ஒழுங்கான (நீதி வழுவாத) மனத்தின் பண்பை நிகர்த்து ஒளி வீசும் வேலை உடையவனே, அடியார்களின் விருப்பத்தை (நிறைவேற்றும் பெருமானும்), தொப்பையை உடையவனும் (ஆகிய) யானைமுகப் பெருமானுக்குத் தம்பியே, வேப்பஞ்சந்தி* என்னும் ஊரில் உறையும் கந்தனே, குமரப் பெருமாளே. 
* இக்கோயில் இருக்குமிடம் - விருதாச்சலத்திலிருந்து 22 கிமீ மேற்கில், உளுந்தூர்பேட்டையிலிருந்து 24 கிமீ தெற்கில், தொளுதூரிலிருந்து 19 கிமீ வடக்கில். (இணைய பார்வையாளர் திரு. ஷண்முகம் நாகராஜன் அவர்களின் குறிப்பு).

பாடல் 756 - திருக்கூடலையாற்று஡ர் 
ராகம் -....; தாளம் -

தாத்ததனத் தாந்ததன தானதன தானதன     தாத்ததனத் தாந்ததன தானதன தானதன          தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான

வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்     மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு          மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே 
வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு     காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு          வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத் 
தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை     பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென          சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ...... தன்பிலாமல் 
தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம     னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள்          சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய் 
வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்     நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை          மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ...... விஞ்சையோனே 
வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை     யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர          மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ...... முங்கொளாயி 
கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி     தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்          கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ...... கந்தவேளே 
கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்     நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ          கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே.

என்னை வருத்திச் சூழ்ந்துள்ள வினையும், மண், பெண், பொன் என்ற மூவாசைகளும், தீயை மூட்டி உலையில் காய்ந்த பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல விரிந்து வெளிப்பட்டு என்னை மாட்டி வைத்து, என்னைப் பாய்ந்து வாழ்க்கை வழியில் பிடிவாதமாய் ஆட்டி வைக்கும் மாய வித்தை காரணமாய், கிடைத்துள்ள மலர், சந்தனம், புனுகுச் சட்டம், பன்னீர் இவைகளுடன் நல்ல காற்று வர அனுபவித்து, தாங்குவனவாய் மார்பில் அணிந்துள்ள முத்து மாலைகள் நன்கு கிடைத்ததென அணிந்து, அழகு பெற சோபையுடன் மகிழ்ச்சியும் அன்பும் மிகப் பெருக, மை தீட்டிய கண்கள் ஒளி பொருந்திய விலைமாதர்களுடன் விளையாடி, அந்தக் காம வலையில் பூட்டப்பட்டு அகப்பட்டு, நோய்களுடன் வலிகளும் வாத நோயும் எனப் பல வியாதிகள் ஒன்று சேர்ந்திட, நிலை மாறி வினைகள் கவ்விய அடியேனாகிய நானும் உனது அன்பு இல்லாமல், சேகரித்த பொருள் நிரம்ப இருப்பதால், ஒருவாறு மனம் தெளிவு பெற்று சாவு என்பதே இல்லை என்னும் எண்ணத்துடன் வாழ்நாளைச் செலுத்தி, யமன் தன் தூதுவர்களை ஓட்டி அனுப்ப, மெலிந்து போய், எழுத்துள்ளதும் பிரமனுடைய அடையாளம் கொண்டதுமான ஓலைச் சீட்டு வர அதைப் பார்க்கும்படி வருத்துகின்ற காலன் என்னை அணுகாதபடி உன்னுடைய அருளையும் அன்பையும் எனக்குத் தந்து உதவுக. வேடர்கள் மீது வெகுண்டு குறப் பெண் வள்ளியுடன் நட்பு கொண்டு, அஞ்ஞான நிலையரான அசுரர்களைச் சிவந்த ஓளி வீசும் வேலைச் செலுத்தி போர் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டு, தேவர்கள் தலைவனாகிய இந்திரனை வாழும்படி வைத்த கலைஞனே, மாறுபட்ட உருவத்தோடு சென்று மதுரையில் பல திருவிளையாடல்களை விளையாடி, வைகை ஆற்றில் மண் சுமந்தவரும், மழு ஏந்தியவரும், என்னுடைய தந்தையும், திரி புரங்களின் மேன்மையை எரித்து ஆண்ட சிவ லோகனும், (நந்தி என்ற) ரிஷப வாகனத்தில் ஏறினவருமாகிய சிவபெருமானுடைய இடது பாகத்தைக் கொண்ட தாய், மலை போன்ற மார்பகங்களைத் தாங்கும் நூல் போன்ற இடையையும், கோடிச் சந்திரர்களுடைய வடிவையும் எடுத்து வந்தாற் போல் அழகிய சிவகாமி, வலிய யமனைக் கோபித்து அழித்த பேரழகியாகிய பார்வதி தேவி மனம் குளிர அருளிய கந்த வேளே, வெள்ளாறும், மணிமுத்தா நதியும் ஒன்று கூடிய ஆறு நிறைந்து வரும் விளக்கம் கொண்ட இடத்தில் உள்ள கூடலையாற்றூரில்* வீற்றிருக்கும் சேந்தனே, மயில் வாகனனே, வள்ளி, தேவயானை ஆகிய இருவரோடு இணைந்து, யமன் (என்னை விட்டு) ஒதுங்கித் தாண்டி விழும்படி என்னுடைய உடலில் குடி கொண்டு வாழ்கின்ற குமரனே, தம்பிரானே. 
* விருத்தாசலத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 757 - கடம்பூர் 

ராகம் - ....; தாளம் -

தானனம் தானான தானனம் தானான     தானனம் தானான ...... தனதான

வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண     மால்கடந் தேபோமெ ...... னியலூடே 
வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார     வாசகம் போல்கூறி ...... யணைமீதே 
சேருமுன் காசாடை வாவியும் போதாமை     தீமைகொண் டேபோமெ ...... னடமாதர் 
சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்     சீதளம் பாதார ...... மருள்வாயே 
நாரணன் சீராம கேசவன் கூராழி     நாயகன் பூவாயன் ...... மருகோனே 
நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு     நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா 
சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட     சூரியன் தேரோட ...... அயிலேவீ 
தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு     சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே.

இங்கே வாருங்கள், என் வீடு அருகில் தான் இருக்கின்றது, எனக்குப் பணம் விஷம் மாதிரி. உம்முடைய ஆசையை என்னுடைய அன்புடனே கலந்து தீர்த்துக் கொண்டே போங்கள். பெண்களே வாருங்கள், பாயைப் போடுங்கள் என்று மரியாதைப் பேச்சுக்கள் போன்றவைகளைப் பேசி, படுக்கையில் சேர்வதற்கு முன்பாக பொருளையும், ஆடைகளையும் வேண்டிய அளவுக்குப் பறித்தும், அவை போதாது என்று குற்றம் கூறி ஓடிப் போம் என்று அடம் பிடிக்கும் விலைமாதர்கள் உள்ள இடத்தில் நான் போகாமல், குற்றங்கள் வந்து என்னைச் சேர்ந்து பெருகாமலும், உனது குளிர்ந்த திருவடித் தாமரைகளைத் தந்து அருள்வாயாக. நாராயணன், ஸ்ரீராமன், கேசவன், கூர்மை கொண்ட சக்ராயுதத்தைத் தரித்த தலைவன், பூலோகத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த கண்ணபிரானின் மருகனே, நாரதர், தும்புரு ஆகியோர் இசை பாட, நின்று ஆடுகின்ற (ஊர்த்துவ) நடனத்தைச் செய்கின்ற திருவடியை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே, சூரனும், அவன் வருத்தும் செயல்களும் கடலில் போய் (மாமரமாகக்) கிடந்தே அழியவும், சூரியனுடைய தேர் (பழைய முறைப்படி) ஓடவும் வேலைச் செலுத்தியவனே, பரிசுத்தமான நறு மணம் வீசும் காவேரி நதியுடன் சேர்கின்ற, ஒள்ளிய சிற்றாறு சூழ்கின்ற கடம்பூரில்* வீற்றிருக்கும், தேவர்கள் பெருமாளே. 
* கடம்பூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது.

பாடல் 758 - திருவரத்துறை 
ராகம் - ....; தாளம் -

தனன தத்தனத் தனன தத்தனத்     தனன தத்தனத் ...... தனதான

கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்     கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக் 
களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்     கருதி வைத்தவைப் ...... பவைசேரத் 
தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்     தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச் 
சயன மெத்தையிற் செயல ழிக்குமித்     தருணி கட்ககப் ...... படலாமோ 
பிறவி யைத்தணித் தருளு நிட்களப்     பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும் 
பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்     ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச் 
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்     சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன் 
செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்     திருவ ரத்துறைப் ...... பெருமாளே.

கோபம் காட்டி மையைக் கண்களில் இட்டு, அன்புடனே அழைத்து, இயல் தமிழ்ப் பாக்களைச் சொல்லிச் சிரித்து உறவு கூறி விளையாடி, களவு வித்தைகளைக் கொண்டு மனதை உருகச் செய்து, முன்னதாகவே திட்டமிட்டு, சேமித்து வைத்த பொருள்கள் எல்லாம் தம்மைச் சேரும்படி, கொடுமை காட்டி அபகரித்து, இருவர் கழுத்தும் ஒன்றாகும்படி அணைத்து, நெகிழ்ந்து போய் உயிரும் சோரும்படி, படுக்கை மெத்தையில் செய்வது இன்னது என்று தெரியாத வகையில் செயல் அழிக்கின்ற இந்த இளம் பெண்களிடையே அகப் படலாமோ? பிறவிப் பிணியைத் தொலைத்து அருளக் கூடிய உருவமில்லாத, முழு முதற் பொருளான ஞானானந்தக் கடலில் மூழ்கும் பெரிய முனிவர்களுடைய கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே, சீகாழியில் நான்கு வேதங்களும் வல்லவனாய் வளர்ந்த (திருஞான சம்பந்தச்) சிறுவனே, உன்பால் அருள் வைத்து (முத்துக்) குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்தருளிய** சிவ பெருமான் வீற்றிருக்கும் பூமியில் புகழ் பெற்ற சத்தியபுரியாகிய திருவரத்துறையில்* வாழும் பெருமாளே. 
* கொச்சை சீகாழிக்கு உரிய பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. மற்ற பெயர்கள் வருமாறு:பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரிபுரம், புறவம், சண்பை, காழி, கழுமலம்.
** பெண்ணாடகம் என்ற ஊரில் திருஞானசம்பந்தர் தரிசித்துவிட்டு திருவரத்துறைக்குப் போகும் வழியில் அவர் களைத்ததைக் கண்ட சிவன் அவர் ஏறிச் செல்ல முத்துச் சிவிகை, குடை ஆகியவற்றைக் கொடுத்து அருளினார்.
*** திருவரத்துறை பெண்ணாடகத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 759 - யாழ்ப்பாணாயன்பட்டினம் 
ராகம் - ....; தாளம் -

தாத்தா தானம் தத்தன தனதன     தாத்தா தானம் தத்தன தனதன          தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான

பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்     பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு          போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும் 
போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்     மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது          பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல் 
வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்     நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட          வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம் 
மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்     வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்          வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ 
ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை     கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை          யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை 
ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற     நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை          யாட்டா லீசன் பக்கம துறைபவள் ...... பெறுசேயே 
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு     நீத்தார் ஞானம் பற்றிய குருபர          யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே 
ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு     வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்          யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.

பூவாலாகிய மாலையைச் சூடுபவர்கள். பூங்கொத்துக்களைச் சூடும் கூந்தலை உடையவர்கள். அவர்களது பார்வை வேல் போலவும், வாள் போலவும், மன்மதன் செலுத்தும் போருக்கு என்றே நிறைந்த, பெருகியுள்ள தேன் கொண்ட பூ அம்புகள் போலவும், யமன் ஏவி அனுப்பியுள்ள தூதர் போலவும் பாய்ந்து, நாள் தோறும், யார் கையில் பொருள் உள்ளதோ அத்தகையோரை தம் மீது அன்பு வரும்படியான ஆசை மயக்கத்தை ஏற்றக்கூடிய மாய வித்தைகளைக் கற்றுள்ள அஞ்சனம் பூசிய கண்ணினர். அமுதம் போன்ற வாயிதழ் ஊறல் வாய்ந்தவர்கள். (வந்தவரின்) மனம் மாறுபடுதல் உண்டாகும்படி பேசும் பொய் நிறைந்த உபாயத்தினர். நூலிலும் தேய்ந்து மிக நுண்ணியதான சிறிய இடை துன்பப்படும்படி ஒளி தாவி வீசுவதும், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, அகில், மாலை, சிறந்த ஆபரணங்கள், முத்து மாலை, கச்சு இவைகளை அணிந்த மார்பை உடையவர்கள். இத்தகைய வேசையர் மீது ஆசை பூண்டு, உடல் நலம் கெட்ட என்னை உன்னுடைய சத்திய வாக்கால் நான் ஞானத்தை அடைந்து இனி உன்னை வழிபடுமாறு அருள் புரிய மாட்டாயோ? தாயானவள், திருமாலின் தங்கை, கன்னிகை, உமாதேவி, நடனம் செய்யும் ஆனந்த சிவாம்பிகை, திரி புரங்களை எரித்தவள், தான் ஆளும் பேய்களும், பூதங்களும், சுற்றியுள்ள பைரவி, புவனங்களுக்கு ஈசுவரி, எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், வேறுபாடு பொருந்தப் பார்க்காது எதையும் அழித்தவள். திருவிளையாடலாக சிவ பெருமான் (இடது) பக்கத்தில் உறைபவள் ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே, நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் இவைகளைச் செய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே, யாப்பிலக்கணம் ஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய (திருஞானசம்பந்தராக வந்த) முருகனே, ஏற்பவர்கள் வரும் போது (அவர்களுக்கு) மனம் விரும்பி மகிழ்ச்சியுடன் பொருளை அள்ளித் தரும் (கொடையாளிகள்) உள்ள, பொன்னொளி வீசும் நீண்ட மதில் சூழ்ந்த யாழ்ப்பாணாயன் பட்டினத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* அறுபத்திமூவரில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடைய ஊர். விருத்தாசலத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் 
ராகம் - மத்யமாவதி தாளம் - ஆதி

தனனத்த தான தனனத்த தான     தனனத்த தான ...... தனதான

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை     கரிமுத்து மாலை ...... மலைமேவுங் 
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை     கடல்முத்து மாலை ...... யரவீனும் 
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி     னடைவொத்து லாவ ...... அடியேன்முன் 
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு     மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே 
மழையொத்த சோதி குயில்தத்தை போலு     மழலைச்சொ லாயி ...... யெமையீனு 
மதமத்த நீல களநித்த நாதர்     மகிழ்சத்தி யீனு ...... முருகோனே 
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை     திருமுத்தி மாதின் ...... மணவாளா 
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான     திருமுட்ட மேவு ...... பெருமாளே.

கரும்பு தரும் முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன மாலை, யானை தரும் முத்தாலான மாலை, மலையிற் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை, சங்கிலிருந்து கிடைக்கும் முத்தாலான மாலை, கடலில் பெறப்படும் முத்தாலான மாலை, பாம்பு தரும் சூடுள்ள முத்தாலான மாலை, இப்படி எல்லா மாலைகளும் மார்பிலே தகுதி பெற்றுப் புரண்டு அசைய, அடியேனின் எதிரே அடர்ந்த பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில் இச்சா சக்தியாம் வள்ளியுடனும், உன் அடியார் கூட்டத்துடனும், வந்து அருள் புரிவாயாக. மேகம் போன்ற நிறத்தை உடைய ஜோதி உமை, குயிலும் கிளியும் போன்று மழலை மொழி பேசும், எம்மை ஈன்ற, தாய், பொன் ஊமத்தைமலரை (ஜடையில்) அணிந்தவரும், நீல நிறம் கொண்ட கழுத்தை உடையவரும், என்றும் அழியாது இருப்பவருமான தலைவர் சிவபிரான் மகிழ்கின்ற சக்தியாம் பார்வதி தேவி பெற்ற முருகனே, செழிப்புள்ள முத்துமாலை பூணும் மார்பை உடைய, அமுதமயமான தேவயானை, மேலான முக்தியைத் தரவல்ல மாதரசியின் மணவாளனே, சிறையில் தேவர்களை வைத்த சூரர்கள் அவர்களுக்குப் பூட்டிய விலங்கைத் தறித்து எறிந்தவனே, ஞானனே, திருமுட்டம்* என்ற தலத்தில் அமர்ந்த பெருமாளே. 
* திருமுட்டம் இப்போது 'ஸ்ரீமுஷ்ணம்' என வழங்கப்படும். சிதம்பரத்துக்கு தென்மேற்கே 24 மைலில் உள்ளது.

பாடல் 761 - ஸ்ரீ முஷ்டம் 
ராகம் - ...; தாளம் -

தனனத் தத்தன தானன தானன     தனனத் தத்தன தானன தானன          தனனத் தத்தன தானன தானன ...... தனதான

சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி     சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்          தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள் 
சனுமெத் தப்பரி வாகிய மாமய     லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்          தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும் 
விரகத் துர்க்குண வேசைய ராசையர்     பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்          விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக 
மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்     கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்          விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உறவாமோ 
பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட     லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை          புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது 
புகழ்சத் திச்சிலு காவண மீதுறை     சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி          புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா 
திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி     புனைவித் துத்தலை நாளமு தார்சுவை          சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர் 
திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த     மகளைப் பொற்றன வாசையொ டாடிய          திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.

வெற்றியையே தரும் அம்பு, கயல் மீன் என்று உவமிக்கப்படும் வேல் போன்ற கண்கள், வில்லைப் போன்று வட்டமாக வளைந்த புருவம், மேகம் போன்று கரிய கூந்தல், முத்து மாலையை அணிந்ததும் மலை போன்றதும் ஆகிய மார்பகங்கள், நூல் போன்று மெல்லிய இடுப்பு இவற்றைக் கொண்ட விலைமாதர்கள். காம விளையாட்டில் அதிக அன்பு கூடுகின்ற பெரிய மயக்கத்தைத் தரும், முத்தம் விளைவிக்கும் ஆசையோடு கூடிய பெண்கள். தகுதத் தக்கிட தோதகு தீதென்ற தக்க ஒலிகளோடு நடனமாடி விளையாடுகின்ற சாமர்த்தியம் உள்ள தீய ஒழுக்கம் கொண்ட பொது மகளிர். ஆசை காட்டுபவர்கள். பணத்தை அதிகமாகப் பறிக்கின்றவர்கள். அடிக்கடி குணம் மாறுபவர்கள். பல விதமான நடையுடை பாவனைகளை மேற்கொள்ளுபவர்கள். அதிக போகத்தை அனுபவிப்பதால் உடல் மெலிவடைந்து, குறி துர் நாற்றமும் கிழிவும் உடையவர்கள். கலகமே செய்யும் மூதேவிகள். பீடித்துத் துன்புறுத்துபவர்கள். பெருமைப் பேச்சுக்களைப் பேசி குடியைக் கெடுப்பவர்கள். இளமை உடையவர்கள். இத்தகைய வேசியரது உறவு எனக்கு நல்லதாகுமா? காமப் போரில் வெற்றியையே தரும் கரும்பாகிய நீண்ட வில்லை உடைய மன்மதனின் உடல் எரிந்து உலர்ந்த சருகு போல் விழும்படி தீச் சிரிப்பைச் செலுத்திய, பிறைச் சந்திரன் வாழும் சடையை உடைய, சிவபெருமானின் இடப்பாகத்தில் உறையும் ஒப்பற்ற மாது, எல்லாராலும் புகழப்பட்ட பரம சக்தி, நிலை குலையாத மனப் பான்மையை மேற் கொண்டுள்ள, சிவ பக்தி நிறைந்த பரமேஸ்வரியாள், மூவுலகங்களையும் அருளுடன் முன்பு படைத்தவளாகிய உமாதேவி அருளிய குழந்தையே, முன்னொரு காலத்தில் பாற்கடலில் பொன் மலையாகிய மேரு (மத்தாகச்) சுழன்று ஆடும்படி வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கட்டி, சுவை நிறைந்த அமுதத்தை சிவ பக்தர்களுக்கு இது உரியதாம் என்று பங்கிட்டுக் கொடுத்த திருமாலாகிய ராமர், லக்ஷ்மி சென்று பணிந்து பூஜித்த ஆதி வராகப் பெருமானுடைய மகளாகிய வள்ளியின் அழகிய மார்பகத்தின் மீது ஆசை கொண்டு அவளுடன் விளையாடிய, திரு முட்டப்* பதியில் (ஸ்ரீமுஷ்ணத்தில்) வீற்றிருக்கின்ற முருகனே, தேவர்களுடைய பெருமாளே. 
* திருமுட்டம் இப்போது ஸ்ரீமுஷ்ணம் என வழங்கப்படும். சிதம்பரத்துக்கு தென்மேற்கே 24 மைலில் உள்ளது. இங்கு உறையும் திருமால் ஆதிவராகப் பெருமாள் என்று அழைக்கப்படுவார். லக்ஷ்மி பூஜித்த எட்டு தலங்களில் ஒன்று. மற்ற தலங்கள் வருமாறு:ஸ்ரீரங்கம், திருவேங்கடம், வானமாமலை, புஷ்கரம், நைமிசாரணியம், பத்ரிகாசிரமம், சாளக்கிராமம்.

பாடல் 762 - திருநல்லு஡ர் 
ராகம் - ....; தாளம் -

தான தந்ததன தான தந்ததன     தான தந்ததன தான தந்ததன          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

மூல முண்டகனு பூதி மந்திரப     ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ          தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல் 
மூது ரம்பலவர் பீட மந்தமுமி     லாத பந்தவொளி யாயி ரங்கிரண          மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம் 
ஓல மென்றுபல தாள சந்தமிடு     சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி          ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம் 
ஓடு மந்தகலி காலொ டுங்கநடு     தூணில் தங்கவரி ஞான வண்கயிறு          மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ 
சூலி யந்தரிக பாலி சங்கரிபு     ராரி யம்பரிகு மாரி யெண்குணசு          வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே 
சூர சங்கரகு மார இந்திரச     காய அன்பருப கார சுந்தரகு          காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா 
சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்     மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி          நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே 
தேவ ரம்பையமு தீண மங்கைதரு     மான ணைந்தபுய தீர சங்கரதி          யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.

மூலாதார கமலத்தில் உள்ள அனுபவ ஞானத்தைத் தரும் மந்திரம் மேல் நிலையில் உள்ள (சூரிய, சந்திர, அக்கினி எனப்படும்) முச்சுடர்கள், மூன்று மண்டலங்கள், ஆதாரங்களாக சந்திக்கப்படும் ஆறு ஆதாரங்கள்*, கற்பக விருக்ஷம் (போல விரும்பிய எல்லாம் அளிக்க வல்ல மேலைச் சிவ வீதி இவைகளை எல்லாம்) தாண்டி அவைகளின் மேல் சென்று, பழைய (எல்லா தத்துவங்களும் ஒடுங்கும் பரவொளிப்) பீடமாகிய லலாட மண்டபத்தில், முடிவில்லாத திரண்ட ஒளியாய் விளங்கும், ஆயிரம் கிரணங்கள் வீசும் மூன்றாம் பிறை நிலவின் வடிவைக் கொண்ட ஆக்ஞை ஆதாரத்தில், சந்திர ஒளியுடன் கூடி மேல் நிலையில் பளிங்கு போல் விளங்கும் விந்து சம்பந்த (சிவசக்தி ஐக்கிய) நாத ஒலி அபயம் என்று அழைத்தல் போன்ற ஒலியுடன் பல வகையான தாளங்கள் சந்தங்கள் கலக்கும் நடன தரிசனத்தைக் கண்டு தேவாம்ருத கடலைப் பருகி, பதினாலு உலகங்களையும் அங்கே விளக்கமுறத் தரிசித்து அனுபவித்து, சந்திரன், சூரியன், அக்கினி (இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும்) மூன்று நாடிகளின் வழியே சூலம் போல ஓடுகின்ற அந்தப் பிராண வாயு ஒடுங்க, (வீணா தண்டம் என்னும்) முதுகு எலும்பில் தங்கி, ஞான வளப்பம் பொருந்திய சுழு முனைக் கயிற்றின் வழியே மேலே தழுவி, நூறு கோடி சந்திரர்களின் ஒளியை (சிவப் பேரொளியைச்) சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாச வடிவை உடையவள், கபாலம் ஏந்திய சங்கரி, திரிபுரம் எரித்தவள், திரி புரம் எரித்த போது அம்பாக இருந்த வைஷ்ணவி, என்றும் இளையவள், எட்டு** குணத்தினரான சிவபெருமான் பாகத்தில் உறைபவள் ஆகிய சிவகாம சுந்தரி மகிழும் குழந்தையே, சூரனை அழித்த குமார வேளே, இந்திரனுக்கு உதவி செய்தவனே, அடியார்களுக்கு உபகாரம் செய்தவனே, அழகனே, குகனே என்றெல்லாம் வேதங்கள் முறையிட்டு உரைக்க நடனம் செய்த வேலனே, பரிசுத்தமான திருவெண்ணீற்றை அணியாதவர்களும் கொடியவர்களும் ஆகிய சமணர்கள் இறக்கும்படி கொடிய கழுமரத்தில் ஏறுங்கள் என்று (திருஞானசம்பந்தராக வந்து) திருவிளையாடல் இயற்றி திருநீற்றை (கூன் பாண்டியனுக்கும், அடியார்களுக்கும்) அளித்த தாமரைக் கையனே, சந்திரன் போன்ற (ஆறு) முகமுடைய கந்த வேளே, தேவ லோகத்து ரம்பை போன்றவளும் பாற் கடல் அமுதத்துடன் தோன்றியவளும் ஆகிய லக்ஷ்மிதேவி அளித்த மானாகிய வள்ளி (அமுதவல்லி) அணைந்த திருப் புயத்தை உடையவனே, தீரனே, சங்கரத் தியாகர் என்னும் நாமம் உடைய சிவ பெருமான் வந்து எழுந்தருளிய திரு நல்லூர்*** என்னும் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கின்ற தம்பிரானே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** சிவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
*** திருநல்லூர்ப் பெருமணம், சிதம்பரத்திலிருந்து 3 மைலில் உள்ள கொள்ளிடத்துக்கு அருகில் உள்ளது. சங்கரத் தியாகர் என்பது திருநல்லூர் சிவபெருமானின் திருநாமம்.

பாடல் 763 - திருமயேந்திரம் 
ராகம் - ....; தாளம் -

தந்தன தந்தன தாந்த தானன     தந்தன தந்தன தாந்த தானன          தந்தன தந்தன தாந்த தானன ...... தனதான

வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி     அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்          வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல 
வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை     யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர          வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன் 
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்     குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்          கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர் 
கஞ்சுளி யுந்தடி யீந்து போவென     நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்          கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ...... முழல்வேனோ 
அண்டரு டன்தவ சேந்து மாதவர்     புண்டரி கன்திரு பாங்கர் கோவென          அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை 
அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக     ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட          அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா 
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி     யென்பணி யன்கன சாம்பல் பூசிய          செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகோனே 
திங்கள்மு கந்தன சாந்து மார்பின     ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு          சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.

வண்டுகள் மொய்க்கும், நறுமணம் கமழும் கூந்தலை உடையவர்களின் கண் அம்பு போன்று இருக்கும். வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றி, வளப்பம் பொருந்திய முத்தை ஒத்துத் திகழும் நன்கு அமைந்த வரிசையான பற்கள், குயிலைப் போன்ற நன்கு பயிலும் மொழிகள், மலை போன்ற மார்பகம், அதில் அழகிய தேமல், அழகிய குமிழம் பூ போன்ற மூக்கு, மூங்கில் போன்ற தோளும், கையும், வஞ்சிக் கொடி போன்ற, நூல் போன்ற நுண்ணிய இடை, இவைகளை உடைய விலைமாதர்கள் பொருளைப் பார்த்தவுடனேயே மகிழ்ச்சி மிகுந்து பேசுபவர்கள், கலகத்தை மூட்டும் குரலுடன் எல்லாவற்றையும் பற்றிப் பேசுபவர்கள், கண்கள் சுழலும்படி தாண்டுவதும் ஆடுவதுமாக உள்ள வஞ்சகக்காரிகள், (பணமில்லாதவரிடம்) இரப்போர்கள் ஏந்தும் பையையும், தடி ஒன்றையும் கொடுத்து (பிச்சைக்காரனாகிப்) போவென்று விரட்டி, விஷத்தையும் கலந்து கொடுக்கும் வஞ்சகம் நிறைந்த பாவிகள், (இத்தகையோரின்) அதிகார வரம்பிலும் இவ்வுடல் நலிவுற்று, நாய் போன்ற அடியேனும் திரிவேனோ? தேவர்களும், தவ நிலையை மேற்கொண்டுள்ள தவசிகளும், தாமரையோனும் (பிரமனும்), லக்ஷ்மியின் கணவனான திருமாலும் கோ என்று ஓலம் இட, பயப்பட வேண்டாம் என்னும்படி சென்று வீரத்துடன் அசுரர்களை அவர்கள் உடல் ஒடுங்கி இறந்து ஒழியச் செய்து, கடல்களும், எட்டு மலைகளும் பொடி சாம்பலாய்த் தூளாக, யமனும் தனது பாசக் கயிற்றை அவ்விடம் (போர்க்களத்தில்) வியப்புடன் வீசிட வேலாயுதத்தைச் செலுத்தியவனே, பூச் செண்டை அணிந்துள்ள சடையில் பாம்பு, கங்கை, சந்திரன், எலும்பு (ஆகியவற்றை) அணிந்தவன், பெருமை பொருந்திய திரு நீற்றைப் பூசியுள்ள சிவந்த உடலை உடையவன் (ஆகிய சிவபெருமானுடைய) பிள்ளையே, சிவப்பு நிறம் உடையவனே, வேலனே, முருகோனே, சந்திரனை ஒத்த திருமுகத்தையும், மார்பில் சந்தனப் பூச்சையும் உடையவள், எனது உள்ளத்தில் புகுந்துள்ள உன் தோழி வள்ளியுடன் மனம் மகிழ்ந்து திருமயேந்திரம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருமயேந்திரம் கொள்ளிடம் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஆச்சாபுரம் (திருநல்லூர்) என்ற ஊருக்கு அருகில் உள்ளது.

பாடல் 764 - சீகாழி 

ராகம் - ....; தாளம் -

தனதன தனதன தந்த தானன     தனதன தனதன தந்த தானன          தனதன தனதன தந்த தானன ...... தந்ததான

அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்     அரிவையர் வசையுட னங்கி போல்வர          அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும் 
அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ     அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற          அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய் 
முலைகனல் சொரிவர முன்பு போல்நினை     வழிவச மறஅற நின்று சோர்வுற          முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே 
முருகவிழ் திரள்புய முந்து வேலணி     முளரியொ டழகிய தொங்கல் தாரினை          முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ 
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி     திரிபுரை பயிரவி திங்கள் சூடிய          திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி 
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்     திமிலையொ டறைபறை நின்று மோதிட          சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே 
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்     மலரடி வருடியெ நின்று நாடொறு          மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே 
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர     மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்          வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.

அலை வீசும் கடல், வில் ஏந்திய மன்மதன், மழைக் காலத்துக் காற்று, மாதர்களின் வசைப் பேச்சு இவை எல்லாம் நெருப்பு போல (என்னிடம்) வர, அசைந்து வருகின்ற மாடுகளின் மணிகளின் ஒலி, அன்றில் பறவை, குயில் இவற்றின் ஓசைக்குப் பயந்து நானும், நெருப்பிலிட்ட மெழுகு போல் உருகி, வியர்த்து விறுவிறுக்க, சாம்பிராணிப் புகையும், கஸ்தூரியும் விஷம் போலத் தாக்க, அணிந்துள்ள ஆபரணங்கள் ரத்ன மாலைகள் பலவும் வெந்து சாம்பலாக, உடல் நிலை வேறுபட்டு, மார்பகங்கள் நெருப்பைச் சொரிய, முன்பிருந்த நினைவானது அழிந்து, தன் வசம் மிகக் கெட நின்று, தளர்ச்சி உண்டாக, முழு நிலையில் வந்துள்ள விரக வேதனை நெருப்பை மொண்டு வீச, அதனால் நான் சோர்வு அடையாமல், வாசனை வீசுகின்ற திரண்ட புயங்கள் வேகமாகச் செலுத்தும் வேலாயுதம், அற்புதப் பாதத் தாமரை இவையுடன் அழகிய தொங்கும் பூ மாலையை, வெறுப்பு, கோபம் இல்லாமல் உன்னுடைய திருவருளைத் தந்து, என்னுடைய காம மயக்கத்தைக் கடிந்து நீக்காதோ? வில் போன்ற நெற்றி, கயல் மீன் போன்ற கண்கள், செம்மை வாய்ந்த சொல்லை உடைய வானவி தேவி, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பைரவியாகிய சிவனது பத்தினி, சந்திரனைச் சூடிய விளக்கமுற்ற சடையை உடைய பெரியவள், செம்பொன் மேனி நிறத்தவள், சிங்க வாகனம் கொண்டவள், கூட்டமான படையாகப் பேய்களை உடையவள், ஒலி பொங்கி மேலெழும் ஊது கொம்புகள், திமிலைப் பறையுடன், முழங்கும் பறை இவையெல்லாம் இருந்து பேரொலி செய்ய, சிவபெருமானுடன் நடனம் செய்யும் மங்கை, மாது, உமை என்ற பார்வதி பெற்ற முருக வேளே, வள்ளி மலைச் சாரலில் தவம் செய்த ஒரு முனிவர் பெற்ற வள்ளியின் திருவடியை வருடி நின்று, நாள் தோறும், மயில், நெருங்கி வரும் குயில், கிளி இவைகளை, புதியனவாய் (கவண் கல் கொண்டு) கடிந்து (வள்ளிக்கு ஆயல் ஓட்டும் தொழிலில்) தொண்டு செய்தவனே, மழை கொண்ட மேகங்கள் தவழ்கின்ற நெருங்கிய கோபுரங்கள் மதில், வயல் இவை சூழ மேம்பட்டு விளங்கும் சீகாழியில்* அவதரித்தக் கவுணிய குலத்துப் பிள்ளையாகிய ஞானசம்பந்தனே, தேவர்களின் தம்பிரானே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடுவதாக அமைந்தது.அலைகடல், மன்மதன், காற்று, மாதர்களின் வசை, மாடுகளின் மணியோசை, அன்றில், குயில் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 765 - சீகாழி 

ராகம் - ....; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

இரத மான தேனூற லதர மான மாமாத     ரெதிரி லாத பூணார ...... முலைமீதே 
இனிது போடு மேகாச உடையி னாலு மாலால     விழியி னாலு மாலாகி ...... யநுராக 
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு     ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி 
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்     விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய் 
அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்     அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற 
அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்     அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற் 
புரள வீழ்வ ¡£ராறு கரவி நோத சேய்சோதி     புரண பூர ணாகார ...... முருகோனே 
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு     புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.

சுவை நிரம்பிய தேன் போல ஊறும் வாய் இதழ் ஊறலை உடைய அழகிய விலைமாதர்களின் நிகர் இல்லாத அணிகல மாலைகள் கொண்ட மார்பகங்களின் மேல் அழகாக அணிந்துள்ள மேலாடை உடையினாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும் காம மயக்கம் கொண்டு, காமப் பற்றினால் வேதனைப்பட்டு, படுக்கையில் எப்போதும் நாள் தோறும் கஸ்தூரி முதலிய நறு மணங்கள் சேர்ந்துள்ள கூந்தலின் நிழலிலே மூழ்கினவனாய், (அதனால்) ஏற்படும் காம மயக்கம் என்னும் பெரிய மாயை என்னை விட்டு அகலுமாறு, நாயினும் அடியவனாகிய நானும் வீணன் ஆகாதவாறு உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. அரகரா என்று கூறாத மூடர்கள், திருநீற்றைப் பூசாத மூடர்கள், அடியவர்களைப் பணியாத மூடர்கள், கரை ஏறுவதற்கான நல்ல அறிவைத் தரும் ஞான நூல்களைக் கல்லாத மூடர்கள், நல்ல நெறியைக் கடைபிடிக்காத மூடர்கள், தருமம் இன்னதென்று கூட விசாரணை செய்யாத மூடர்கள் ஏழு* நரகங்களிலும் புரளும்படி விழுவார்கள். பன்னிரண்டு திருக் கரங்களை உடைய விநோதனே, செவ்வேளே, ஜோதி வடிவானவனே, நிறைந்த ஒளி பொருந்திய பூரண உருவத்தனே, முருகனே, மேகம் உலாவும் விண் நாட்டவர் போற்றிப் பரவி நாள்தோறும் ஈடேறுகின்ற சீகாழியில்** வீற்றிருந்து வாழ்கின்ற, தேவர்களின் பெருமாளே. 
* ஏழு நரகங்கள் பின்வருமாறு: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 766 - சீகாழி 
ராகம் - ஜோன்புரி தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தக-1, தகிட-1 1/2

தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த     தானத்தன தான தனந்த ...... தனதான

ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த     ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் 
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து     ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் 
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த     கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே 
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று     கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே 
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து     சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் 
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று     தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா 
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து     காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் 
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து     காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.

அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை, மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு குடிலாகிய இந்த உடல் நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், கூனித் தடிகொண்டு நடந்தும், இழிவைத் தரும் கோழை மிக்க குப்பையான இந்த உடலை, மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான இந்த உலக மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி, உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக. சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில், மதுரையில் முன்பு (சம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடி, கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து, திடத்துடன் திரு நீற்றை விநியோகித்து, மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டியனின் உடலில் பொருந்திய கொடிய சுர நோய் தீரும்படியாக அருள் சுரந்த குரு நாதனே, (வள்ளி மலைக்) காட்டில் மீது இருந்த சிறு மான் போன்ற வள்ளியை நினைந்து, தினைப்புனத்தில் நடந்து சென்று, ஆசைக் கிளியாகிய அவளோடு பேசி, வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து, அந்த ஞானக் குறப்பெண்ணை மணந்து, சீகாழிப்* பதியில் அமர்ந்து மகிழும் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 767 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -

தய்யா தத்தன தானன தானன     தய்யா தத்தன தானன தானன          தய்யா தத்தன தானன தானன ...... தனதான

ஒய்யா ரச்சிலை யாமென வாசனை     மெய்யா ரப்பணி பூஷண மாலைக          ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி 
ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு     கையா ரக்கணை மோதிர மேய்பல          வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச் 
செய்வா ரிப்படி யேபல வாணிப     மிய்யா ரிற்பண மேயொரு காசிடை          செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச் 
செய்வா ரிற்படு நானொரு பாதகன்     மெய்யா எப்படி யோர்கரை சேர்வது          செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே 
மையா ரக்கிரி யேபொடி யாய்விட     பொய்சூ ரப்பதி யேகெட வானவர்          வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா 
வையா ளிப்பரி வாகன மாகொளு     துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்          மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே 
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்     செய்யா முத்தமி ழாகர னேபுகழ்          தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத் 
திய்யா ரக்கழு வேறிட நீறிடு     கையா அற்புத னேபிர மாபுர          செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.

அலங்காரமான சிலை உருவம் என்று சொல்லும்படி, நறுமணம் உடலில் நிரம்ப, அணி ஆபரண மாலைகளைச் சுமந்து, நல்ல ஆடையை அணிந்து, மிக்க காம இன்பம் கொடுப்பவர் ஆகி, தமக்கு ஒப்பாகமாட்டார் இந்த பூமியில் உள்ளோர் என்று சொல்லும்படியாக இரு கைகளிலும் முத்திரை மோதிரம் பல அணிந்தவர்களாய், சொல்லப்போனால், கலக்கம் உறும் மாதவிடாய் நாட்களிலும் தம் உடலை விரும்பிப் பாதுகாத்து இப்படியே பல வியாபாரம் செய்வார்கள். பணத்தைத் தானமாகக் கொடாதவர்கள். ஒரு காசு அளவு கூட வெளிவிடார்கள். வஞ்சனை செய்பவர்கள். பிசாசு போன்றவர்கள். (தமது வேசைத்தொழிலைச்) செய்பவர்கள் கூட்டத்தில் உன் திருவடியைப் போற்றாது அகப்பட்ட நான் ஒரு பாவி. உண்மையாக எப்படி ஒரு கரை நான் சேர்வது? செந்நிற வேளே, அற்புதம் ஆகும் வண்ணம் அந்த ஒப்பற்ற பொருளை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை பொடிபட்டுக் கீழே விழவும், பொய் நிறைந்த அசுரர்களின் தலைவனான சூரனுடைய ஊர் அழியவும், தேவர்கள் எங்களை நல்ல நிலையில் வைத்தருள்வாய், அழகிய பாதங்களை உடையவனே என்று வேண்டி வணங்க வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, சவாரிக்கு உதவும் வாகனமாக குதிரை போன்ற மயிலைக் கொண்ட வாழ்வே, (அகத்தியரால்) உண்ணப்பட்ட ஆழமான ஏழு கடல்கள், ஏழு மலைகள் ஆகியவை கலக்கமுற, பசுமை நிறம் கொண்ட ஒளி பொருந்திய மயில் மேல் வரும் செல்வமே, தேவயானைக்கு நாயகனே, குறப் பெண் வள்ளி மகிழ்கின்ற செந்நிறம் உடையவனே, முத்தமிழுக்கு இருப்பிடமானவனே, புகழ் நிரம்பிய தெய்வீகம் பொருந்திய பரம் பொருளே, சிறந்த குருவே என்று வெற்றிச் சின்னங்கள் ஊத, தீயராகிய சமணர்கள் அந்தக் கழுவில் ஏறும்படி திருநீற்றைப் பரப்பியிட்ட (திருஞானசம்பந்தராக வந்த) திருக்கரத்தனே, அற்புதமானவனே, பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், வயல்கள் சூழ்ந்ததுமான சீகாழியில்* வீற்றிருக்கும் முருகனே, தேவர்கள் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 768 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

கட்கா மக்ரோ தத்தே கட்சீ     மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக் 
கச்சா பிச்சா கத்தா வித்தா     ரத்தே யக்கொட் ...... களைநீளக் 
கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே     யிட்டா சைப்பட் ...... டிடவேவை 
கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே     னித்தீ தத்தைக் ...... களைவாயே 
வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர்     விக்கா னத்தைத் ...... தரிமாறன் 
வெப்பா றப்பா டிக்கா ழிக்கே     புக்காய் வெற்பிற் ...... குறமானை 
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்     முற்சார் செச்சைப் ...... புயவீரா 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

கள் குடிப்பதிலும், காம வசப்படுதலிலும், கோபப்படுவதிலும், இவைகளின் கண் வசப்பட்டவர்கள் மீது பாடல்களைப் பாடி, தெளிவில்லாத முறையில் பாடப் பட்டோர் பெருமையை பாமாலையில் நிலை நிறுத்தி, அப்படிப் பாடியதால் கொண்ட பொருள்களை நெடுநாளாகச் சேகரிக்கும் போது, அந்த அழகிய முக்கோணம் போன்ற பெண்குறிக்கே கொடுத்து ஆசைப்பட்டிடவே வைத்து (இங்ஙனம்) ஏற்கும் தானத்துக்காகவும், இந்த உடலுக்காகவும் தேடி இளைத்தேன். இந்தத் தீய குணத்தை நீக்கி அருள்வாயாக. வெட்கப்படாமல் ஆடையாக அரையில் பாயைச் சுற்றிக் கொள்ளும் அறிவிலிகளாகிய சமணர்களைச் சேர்ந்த தீதைக் கொண்டிருந்த பாண்டியனின் சுரம் தணியும்படி ('மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் பதிகத்தைப்) பாடி, சீகாழி என்னும் ஊரில் புகுந்து இருந்த திருஞான சம்பந்தனே, வள்ளி மலையில் குறப் பெண் வள்ளியை, முள் தைக்கும் காட்டில் காலை வைத்து ஓடிப்போய் முன்பு தினைப்புனத்திலே சென்று தழுவிய, வெட்சி மாலை அணிந்த தோள்களை உடைய வீரனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 769 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -

தந்த தானன தனதன தனதன     தந்த தானன தனதன தனதன          தந்த தானன தனதன தனதன ...... தனதான

கொங்கு லாவிய குழலினு நிழலினு     நஞ்ச ளாவிய விழியினு மிரணிய          குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர் 
கொம்பு சேர்வன இடையினு நடையினு     மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி          கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய 
சங்கை யாளியை அணுவிடை பிளவள     வின்சொல் வாசக மொழிவன இவையில          சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந் 
தண்டை நூபுர மணுகிய இருகழல்     கண்டு நாளவ மிகையற விழியருள்          தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே 
வங்க வாரிதி முறையிட நிசிசரர்     துங்க மாமுடி பொடிபட வடவனல்          மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி 
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய     சண்பை மாநக ருறையுமொ ரறுமுக          வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே 
பங்க வீரியர் பறிதலை விரகினர்     மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்          பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர் 
பண்பி லாதவர் கொலைசெயு மனதின     ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை          பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே.

வாசனை வீசும் கூந்தலிலும் அதன் ஒளியிலும், விஷம் கலந்த கண்களிலும், பொன் மலை போல வளர்ந்துள்ள மார்பினிலும் அதன் உறுதியான தன்மையிலும், அழகிய விலைமாதர்களின் கொடி போன்ற மெல்லிய இடுப்பிலும், நடையிலும், அன்பு மிக்கெழும் பேச்சிலும், அழகு குடி கொண்ட சிவந்த வாயிதழ் அமுதத்திலும் அவர்களுடைய சிரிப்பிலும் மனது பாய்கின்ற எண்ணம் கொண்டவனாகிய எனக்கு, அணு அளவேனும் அதன் பிளவளவேனும் இனிய சொற்களைப் பேசுவதே இல்லாததான வழக்கம் உள்ளவனும், வீணனும் ஆகிய எனக்கு, ஒளி விளங்குவதும் இசை மிகுந்ததும் ஆகிய தண்டையும் சிலம்பும் அணிந்துள்ள இரண்டு கழலடிகளைப் பார்த்து எனது வாழ் நாள் வீணாகப் பெருகுதல் இல்லாமல் (உனது) கண்ணோக்க அருளை (நீ) தந்த பெரும் கிருபையை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன். கப்பல்கள் உலவும் கடல் முறையிட, அசுரர்களின் உயர்ந்த பெரிய முடிகள் பொடியாக, வடமுகாக்கினி அடங்கி சாம்பலாக, பேய்கள் நடனமாட மயிலின் மீது ஏறி துஷ்டர்களை வஞ்சித்து அழிக்கும் வேலைக் கொண்டு கோபித்தவனே, அழகிய சண்பை எனப்படும் சீகாழி நகரில் எழுந்தருளி இருக்கும் ஆறு முகப் பெருமானே, உன்னிடம் அடைக்கலம் புக வந்த தேவர்களின் மன வருத்தம் நீங்கும்படியாக நினைத்தவனே, சமணர்கள் வலிமை இருந்தும் தோல்வி அடைந்தவர், தலைவன் மயிர் பறிக்கும் உற்சாகத்தினர், மிகுதியான பாவம் செய்தவர்கள், தரும நெறியின் பயனை அடையாதவர்கள், பாசத்தில் கட்டுண்ட வேடதாரிகள், வஞ்சகர்கள், தன்மை கெட்டவர்கள், நல்லொழுக்கம் இல்லாதவர்கள், கொலை செய்ய இசையும் மனதை உடையவர்கள், இங்கு (மதுரையில்) அவர்கள் எண்ணாயிரம் பேர்களும் உயர்ந்த கழு மரத்தின் மேல் ஏறி, ஐந்து பெரிய பாவச் செயல்களைப் புரிந்ததால், முதன்மை நிலை கெட்டு ஒழியும்படி (திருஞானசம்பந்தராக வந்து) அருளிய பெருமாளே. 
சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 770 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -

தந்த தந்தன தனதன தனதன     தந்த தந்தன தனதன தனதன          தந்த தந்தன தனதன தனதன ...... தனதான

சந்த னம்பரி மளபுழு கொடுபுனை     கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை          தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர் 
சந்த தம்பொலி வழகுள வடிவினர்     வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்          தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே 
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்     தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்          செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித் 
திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில     னென்று சண்டைகள் புரிதரு மயலியர்          சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய் 
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்     சிந்த அன்றடர் மழைதனி லுதவிய          மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே 
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ     துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்          வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா 
தந்த னந்தன தனதன தனவென     வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்          தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே 
சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு     துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு          சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.

சந்தனம், நறு மணமுள்ள புனுகு சட்டம் இவைகளை அணிந்துள்ள மார்பினை உடைய மாதர்கள், கை வளையல்களோடு, வேறு நூதனமான நெளிவளைகளும் அணிந்துள்ள சிவந்த கையினர், அன்னம் போல் நடந்து வரும் அழகிய விலைமாதர்கள், எப்போதும் அழகு பொலிகின்ற வடிவத்தினர், வஞ்சக எண்ணங்கள் நிறைந்துள்ள மனத்தை உடையவர்கள், தம்மை நெருங்கி வந்தவர்கள் தங்களுடைய மனம் மகிழும்படி பொருளைத் தர அவர்கள் மேல் மனதார நயவஞ்சகமான பேச்சுக்களைப் பேசி பொருளைக் கவர்கின்ற தந்திரம் வாய்ந்த யோசனைக்காரர்கள், பூமியில் தம்மை அணைப்பவர்கள் தங்களிடம் செம்பொன் இல்லையே என்று சொன்னால் அதிகமாகக் கோபித்து, ஒரு மாத காலத்தில் நேற்றுக் கூட பொருள் உதவி செய்யவில்லை இவன் என்று சண்டைகள் விளைவிக்கும் ஆசைக்காரிகள் (ஆகிய விலைமாதரின்) விஷம் போன்ற உறவும், (அதனால்) வரும் பொல்லாத வறுமையும் என்னை விட்டு அகல, உன்னுடைய திருவருளைப் பாலிப்பாயாக. மந்தர (மலை போன்ற பெரிய கோவர்த்தன) மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களுக்கு உற்ற துயரம் ஒழியும்படி அன்று அடர்ந்த மழையில் உதவி புரிந்த கண்ணனாகிய திருமால், மேகம் என்னும்படியான நிறத்தைக் கொண்ட திருமால் மெச்சுகின்ற மருகனே, பார்வதி தேவி மகிழும் சரவணபவனே, உயர்வும் விரும்பத்தக்க தன்மையும் கொண்ட யானை முகத்தை உடைய விநாயகர் மகிழும் தம்பியே, நல்ல வஞ்சிக் கொடி போன்ற இடை உடையவளும், குளிர்ந்த மனம் உள்ளவளுமான குறப்பெண்ணாகிய வள்ளியின் மலர் போன்ற திருவடியைப் பணியும் கணவனே, தந்த னந்தன தனதன தன என்று வண்டு இசையை வெளி விட்டு ¡£ங்காரம் செய்யும் நறு மண மலர்கள் உள்ள சண்பக மரங்கள் மேகத்தின் அளவுக்கு உயர்ந்து வளரும் சோலையில், சங்கு நன்கு வெளிப்படுத்துகின்ற முத்தும், நாகங்கள் உமிழும் அழகுள்ள பரிசுத்தமான பிரகாசமான ரத்தினங்களும் ஒளி வீசும் சண்பை என்னும் சீகாழியில்* வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 771 - சீகாழி 
ராகம் - ராக மாலிகை தாளம் - ஆதி

தனதன தந்தன தந்தன தந்தன     தனதன தந்தன தந்தன தந்தன          தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான

சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு     சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி          தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ் 
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள     பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்          சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும் 
விருது துலங்க சிகண்டியி லண்டரு     முருகி வணங்க வரும்பத மும்பல          விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின் 
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி     வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல          விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே 
கருதியி லங்கை யழிந்துவி டும்படி     அவுணர டங்கம டிந்துவி ழும்படி          கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன் 
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு     மடுவினில் வந்துத வும்புய லிந்திரை          கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி 
மருது குலுங்கி நலங்க முனிந்திடு     வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்          வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி 
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய     பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்          மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே.

மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும் வருபவரான சமயவாதிகளும், தெய்வம் என்ற ஒன்றே இல்லை என்பவர்களும், பறிதலையராம்* சமண குருமாரும் - இவ்வாறு யாவரும் நின்று கலங்க, அனைவரும் விரும்பத்தக்க தமிழ்ப்பாடல்களை (திருஞானசம்பந்தராக) கூறும் செல்வாக்கையும்**, உபகார குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான பல பெருமைகளையும், சீர்மையையும், நற்குணத்தையும், நீ குழந்தையாய் விளையாடிய சரவணப் பொய்கையையும், உனது பொறுமையையும், புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலையும், வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில் மீது அமர்ந்து தேவர்களும் மனமுருகி வணங்கும்படியாக வரும் திருவடியையும், பலவிதமான கொடைவண்மையையும், உன் சாமர்த்தியத்தையும், தகுதியையும், தினைப்புனத்து மானாகும் வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் அணிந்த மார்பிலே மயங்கி நொந்து, அவளது திருவடியை வருடி, மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும், மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன். ராவணனின் பிழையை மனத்தில் எண்ணி, இலங்கை அழிந்து போகும்படியும், அரக்கர் யாவரும் இறந்துவிழும்படியும், சூரியனும், சந்திரனும் பழைமை முறைப்படி ஒளியுடன் வரும்படியும் செய்த திருமால், மதயானை கஜேந்திரன் பயந்து நடுக்கமுற்று வருந்திநின்ற மடுவினிடையே வந்து உதவிய மேகவண்ணப் பெருமான், லக்ஷ்மியின் கணவன், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட முகுந்தன், தன்னைக் கொல்லவந்த சகடாசுரனை காலால் மோதிக் கொன்றவன், மருதமரம் குலுங்கி நொறுங்கிப்போகக் கோபித்த வரதன், மாலையைச் சூடியருளும் வாமன வடிவ மூர்த்தி, பெரிய கடல் நொந்து வற்றிப் போகுமாறு ஒரு அம்பைக் கையால் தொடுத்த பராக்ரமசாலி ஆகிய திருமாலின் மருகனே, இந்திரன் தவம் சிரத்தையுடன் செய்த பிரமபுரம் என்ற சீகாழிப்*** பதியிலும், குகனே என்று கூறுபவர் மனத்திலும், அன்போடு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமாளே. 
* பறிதலை என்பது: சமணர்களில் ஒருவர் குருவாக ஆகும்போது மற்ற குருமார், இப்போது துக்கம் பிற்பாடு சுகம் என்ற மந்திரத்தைச் சொல்லி, அவரது தலைமயிர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கும் வழக்கம்.** சலிகை என்றால் செல்வாக்கு - முருகனின் சலிகை முதலிய 16 அருமையான லக்ஷணங்களை இங்கு தொடங்கி விஜயமும் வரை வெகு அழகாக அருணகிரிநாதர் வரிசைப் படுத்தியது மிக்க இன்பம் தருகிறது.*** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 772 - சீகாழி 
ராகம் - ....; தாளம் -

தந்தத்தன தானன தந்தத் ...... தனதான

சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே 
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே 
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே 
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள் 
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே 
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே 
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே 
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.

கடலில் இருந்து எழுகின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பாலே, தென்றல் காற்று சந்தனச் சோலையின் நறு மணத்துடன் எழுந்து வருவதாலே, மாலைப் பொழுதாகிய இரவின் நெருக்கத்தாலே, அன்பு மிகுந்து எழும் இப் பேதைப் பெண் மயக்கம் கொண்டு தனித்திருக்கின்றாள். சங்குகள் உள்ள சமுத்திரத்தை, கலங்கிய தோற்றம் ததும்பும்படியாக, விஷம் போன்று விளங்கும் வேலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த அரசே, சந்தக் கவி நூல் சொல்லும் புலவர்களுடைய சொல்லில் விருப்பம் உடையவனே, சீகாழியில்* பொருந்தி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், சந்தன மணம், இரவு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 773 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -

தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்     தத்தனா தத்தனத் ...... தனதான

செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்     தெற்கிலூ தைக்கனற் ...... றணியாத 
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்     சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக் 
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்     கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு 
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்     கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய் 
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்     தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய 
தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்     தத்வரூ பக்கிரிப் ...... புரைசாடிக் 
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்     குத்துரா வுத்தபொற் ...... குமரோனே 
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்     கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.

செவ்வானத்து பிறை நிலவுக்கும், கரும்பு வில்லை ஏந்தும் மன்மதனுக்கும், இவை மட்டும் இல்லாமல் தெற்கிலிருந்து வரும் ஊதைக் காற்றுக்கும், நெருப்புப் போலச் சுடுகின்ற தன்மை குறையாத (இன்பகரமான ஓசையைத் தரும்) சித்திர வீணைக்கும், வசை மொழிகளைக் கொண்ட தாய்மார்களுக்கும், வீணாக உள்ளம் வாட்டம் அடைந்து, (விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது) பெரிதாகப் பாடல்களைப் பாடி, (அப்பாடல்களில் அவர்களைத்) துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் சேரும் அதிர்ஷ்டம் உள்ளவர் என்றும், கொடையில் கேட்டதைத் தரும் கற்பக மரத்தைப் போன்றவர் என்றும், மூவுலகங்களிலும் விளங்கும் சூரியன் என்றும், கற்ற புலவர்களின் சேமநிதி (நீங்கள்) என்றும், (பொய்யான புகழ் கூறிக்) குப்பையாகிய செல்வ யோகம் படைத்த மனிதர்களின் கைக்குள் நான் அகப்பட்டு வெட்கம் அடைந்து நிற்கின்ற நிலையை நீ கண் பார்ப்பாயாக. சக்கரத்தைக் கையில் கொண்ட திருமாலுக்கும், அந்தத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனுக்கும், என்றும் அழியாதவர் என்று புகழ் பெற்ற பரம சிவனுக்கும் எட்டுதற்கு அரியதான தத்துவ வேதத்தின் தோற்றத்தை உபதேசம் செய்த அந்த ஞான வடிவானவனே, கிரெளஞ்ச மலையின் பெருமையைக் குலைத்து, மாமரத்தில் புகுந்து ஒளித்திருந்த சூரனின் உடல் தொளை படும்படியாக (வேலினால்) குத்திய குதிரை (மயில்) வீரனே, அழகிய குமரனே, அரசனே, நீலோற்பலம், வெட்சி மாலை இவைகளை அணிந்த புயங்களை உடையவனே, சீகாழியில் வீற்றிருக்கும் முத்தமிழ் வல்ல பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 774 - சீகாழி 
ராகம் - ஹம்ஸநாதம் தாளம் - அங்கதாளம் - 5 - திஸ்ர்ருபகம் 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதன தாந்த தான தனதன தாந்த தான     தனதன தாந்த தான ...... தனதான

தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால     தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ் 
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்     வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும் 
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை     புழுககில் சாந்து பூசி ...... யரசாகி 
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய     மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ 
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை     மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக 
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே 
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு     கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக் 
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய     கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.

சூரியன், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்று சொல்லும்படியான பெருமையுடன், மதில் நீளமுடையதாக, மிகுந்த சூரிய ஒளியைப் பெற்றிருக்கும் மாளிகையில் முத்தாலும் அழகிய ரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் (அமர்ந்து) கீதம் நிரம்பிய பாடல்களைப் புகழ்ந்து பாடும் பாணர்கள் ஒன்றுகூடிப் பாடவும், இரண்டு பக்கங்களிலும் ஒரே மாதிரியான வளையல்களைப் பூண்ட கையை உடைய மாதர்கள் நின்று கவரி வீசவும், மாலைகளைச் சூடி, புனுகு, அகில், சந்தனம் இவற்றைப் பூசிக்கொண்டு, அரச பதவியில் இருந்து, இன்பமயமாக இறுமாப்புடனே வாழ்கின்ற, நல்வினை, தீவினை இரண்டிற்கும் கட்டுப்பட்ட இந்த சா£ரம் கடைசியில் ஒருபிடி சாம்பலாக மாறி அழிந்து போகலாமா? காட்டில் திரியும் வேடர்கள் அதிசயிக்க வானத்தின் உச்சியைத் தொடும்படியாக வளர்ந்து, ஆசையாக அவ்வேடர்கள் வளர்த்த மயிலாகிய வள்ளியும் தோழிமார்களும் அருகே இருக்க மயில்களும் மான்களும் சூழ, செழித்து வளர்ந்த வேங்கைமரமாகி வள்ளிமலை மேலே தோன்றிய மாய வடிவத்தோனே, பெருத்த சமண ஊமையர்கள் பலரும் (வாதிலே உன்னிடம் தோற்று) கழுமுனையில் தொங்க, திருநீறு உன் கருணைக்குப் பாத்திரமான பாண்டியநாட்டில் பரவ, வேதப்பொருள் கொண்ட தேவாரப்பாடல்களைத் தந்தருளிய ஒளிகொள் மேனியனே, பாலகன் ஞானசம்பந்தனாக வந்த முருகா, கழுமலம், பூந்தராய் என்ற பெயர்கொண்ட சீகாழிப்பதியில்* வீற்றிருப்போனே, கவுணியர் குலத்தில் வந்த அரசனே, தேவர் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 775 - சீகாழி 
ராகம் - பந்துவராளி தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தானாதன தானன தானன     தானாதன தானன தானன          தானாதன தானன தானன ...... தந்ததான

பூமாதுர மேயணி மான்மறை     வாய்நாலுடை யோன்மலி வானவர்          கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம் 
பூராயம தாய்மொழி நூல்களும்     ஆராய்வதி லாதட லாசுரர்          போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி 
நீமாறரு ளாயென ஈசனை     பாமாலைக ளால்தொழு தேதிரு          நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு 
நீரேர்தரு சானவி மாமதி     காகோதர மாதுளை கூவிளை          நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே 
போமாறினி வேறெது வோதென     வேயாரரு ளாலவ ¡£தரு          போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு 
பூலோகமொ டேயறு லோகமு     நேரோர் நொடி யேவரு வோய்சுர          சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங் 
காமாவறு சோம ஸமானன     தாமாமண மார்தரு நீபசு          தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக் 
காவாயடி நாளசு ரேசரை     யேசாடிய கூர்வடி வேலவ          காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.

தாமரைமலர் மீது அமரும் லக்ஷ்மிதேவியை மார்பிலே தரித்துள்ள திருமாலும், வேதம் சொல்லும் வாய் நான்கு உடையவனான பிரமனும், கூட்டமான தேவர்களின் தலைவனான இந்திரனும், முநிவர்கள் முதலிய யாவரும், இயம்பப்படும் வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில் ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள் செய்யும் போருக்குப் பயந்து, மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி, நீ, பகைவர்களை அழிக்கவல்ல, ஒரு மாற்றுப் பகைவனை தந்தருள்வாயாக என்று ஈசுவரனைப் பாமாலைகளால் பாடித்தொழுது, திருநீறால் அழகு விளங்கும் திருமேனியனே, தேன் பொதிந்த கொன்றை மலருடனே நீர் அழகுடன் ததும்பும் கங்கையையும், சிறந்த நிலவையும், பாம்பையும், மாதுளம் பூவையும், வில்வ இலையையும், நாவல் இலை, விளா இலை, முதலியன நிறைந்த சடையணியும் எங்கள் பெருமானே, நாங்கள் உய்ந்து போகும் வழி இனி உன்னையன்றி வேறு எது உள்ளது எனச் சொல்லி அருள்க என்று முறையிடவே, நிறைந்த கருணையினால் அந்தச் சிவபெருமான் தந்தருளிய வேலவனே, நீலத் தோகை மயில் மீது ஏறி நீண்ட இந்தப் பூலோகத்துடனே மீதி ஆறு லோகங்களையும் நேராக ஒரே நொடிப் பொழுதிலே சுற்றி வந்தவனே, தேவர்களின் சேனாதிபதி ஆனவனே, உன்னை அன்போடு, மன்மதனைப் போன்ற அழகனே, ஆறு பூரண சந்திரர்களுக்கு சமமான திருமுகங்களை உடையவனே, மணம் நிறைந்து வீசும் கடப்பமாலைகளை அணிந்தவனே, நல்ல திவ்விய ஒளியை உடையவனே என்றெல்லாம் போற்றித் துதிக்காமல் திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்வாயாக. அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரன் முதலியவர்களை சம்ஹரித்த கூரிய வேலாயுதத்தை உடையவனே, மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில்** வீற்றிருக்கும் தம்பிரானே. 
இப்பாடலின் முக்கால் பகுதி கந்த புராணச் சுருக்கமாக அமைந்துள்ளது.
* சானவி = ஜானவி, ஜன்னு என்ற முநிவரின் காது வழியே சென்றதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் உண்டு.
** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 776 - சீகாழி 
ராகம் - ...; தாளம் -

தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன     தனனத்தத் தானத் தானன ...... தனதான

மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்     மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக 
மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள்     வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர் 
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்     குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க் 
கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை     குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே 
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட     ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா 
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில     கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே 
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை     தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே 
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்     சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே.

மன்மதன் சம்பந்தமான காமச் சொற்களை உற்சாகத்துடன் பேசுபவர்கள். (காதில் உள்ள) பவளத் தோடு ஆடும்படி சீறிக் கோபிப்பவர்கள். கண்டோர் மருளும்படி பட்டு ஆடைகளை அணிபவர்கள். அழகாக, மவுனத்தாலேயே (தங்களுக்கு வேண்டியதைச்) சுட்டிக் காட்டி காரியத்தைச் சாதிப்பவர்கள். பிணங்குதல் மூலமாக தங்கள் ஆசையை வெளியிடுபவர்கள். பல வகையான முத்து மலைகளைச் சூடுபவர்கள். உடலை விலைக்கு விற்பவர்கள். மழலைப் பேச்சுக்களை சரசமாகப் பேசுபவர்கள். நரகமாகிய அச்சில் ஆடவரைச் சாய்வித்துத் துன்பப்படுத்துவர். தமது செய்கைக்குத் தடையாக வந்த கர்ப்பத்தைக் கலைப்பவர்கள். இத்தகைய வேசியர்பால் மோகம் மேற்பட்டு, (அதனால்) கொள்ளப்பட்டுக் கட்டுண்டு, அந்த ஆசையில் பற்று கொண்ட என்னை, பிறப்பால் வரும் துக்க நிகழ்ச்சிகளில் வீழ்ந்த வஞ்சகனாகிய என்னை, ஆம்பல் மலர் அணிந்த அழகிய திருவடிச் சேவையைத் தந்து அருள்வாயாக. ஏழு கிரியும் அவை காவலாக இருந்த சூரனும் கதறி அழவும், கரிய கடல் எரியவும், (எட்டு) திசைகளும் இடையூறு பட்டுப் பாழாகவும், (அசுர) சேனைகளை வாளுக்கு உணவாகும்படிச் செய்த வேலனே, சூரியன் வலம் வரும் பொன் மலையாகிய மேருவின் பக்கத்தில் உள்ள கயிலையில் வீற்றிருக்கின்ற பச்சை நிறமுள்ள குயில் போன்ற பார்வதியின் மார்பகத்திலுள்ள அழகிய சந்தனக் கலவை உன் சிரத்தின் மேற்படும்படிக் கட்டிக் கொள்ளும் குழந்தை முருகோனே, தேமல் உடையவளும், அழகிய அன்பை இதயத்தில் உடையவளும், கரிய குயில் போன்று அழகுடையவளும், பொலிவு நிறைந்த மயில் போன்ற, பதுமை போன்றவளுமாய் விளங்கும் வள்ளியை நாள்தோறும் அவளைத் தழுவும் பொருட்டு அவள் தோளை அணைந்தவனே, சிறந்த திலகப் பொட்டு விருப்பமுடன் நெற்றியில் அணியும் திரு முகத்தை உடையவனே, மயிலின் மேல் பொருந்தி ஏறி சீகாழியில் அமர்ந்து, அத்தலத்தில் சிவபெருமான் புகழும்படியாக அவர் காதைச் சிறப்பித்துத் (தோடுடைய செவியன்* என்ற) தேவாரப் பாவை ஓதிய (திருஞானசம்பந்தப்) பெருமாளே. 
* திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவாரம் சிவனாரின் செவியிலுள்ள தோடைப் புகழ்ந்தது.சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.

பாடல் 777 - சீகாழி 
ராகம் - ....; தாளம் -

தனதனன தத்ததன தனதனன தத்ததன     தனதனன தத்ததன ...... தனதான

விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி     விரிகதிரெ னப்பரவு ...... நிலவாலே 
விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு     விரைதருவி தட்கமல ...... கணையாலே 
அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்     அழலொடுகொ தித்துவரு ...... கடைநாளில் 
அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற     அவசமொட ணைத்தருள ...... வரவேணும் 
அடவிதனில் மிக்கபரு வரையவர ளித்ததிரு     அனையமயில் முத்தமணி ...... சுரயானை 
அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு     மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா 
கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி     கருணையொட ளித்ததிற ...... முருகோனே 
கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி     கழுமலந கர்க்குமர ...... பெருமாளே.

விஷம் போலப் பொருந்திய, வடமுகாக்கினி என்று கூறும்படியாக, உச்சிப்பகலின் சூரியனது வெப்பம் மிகுந்த கதிர்கள் என்று சொல்லும்படியாக, தனது கிரணங்களைப் பரப்பும் சந்திரனால் துன்பம் மிக அடைந்தும், (அச்சமயத்தில்) வருகின்ற ரதியின் கணவனான மன்மதன் கோபித்துச் செலுத்துகின்ற, வாசனை தருகின்ற இதழ்களை உடைய தாமரை அம்பினால் வலியப் போரைச் செய்யும் சமயத்தில், என்னைச் சார்ந்து, மிக்க நெருப்புத் தணல் போல கொதிப்புடன் படுகின்ற கடைசி நாளில் (என்னை) நமன் அணுகித் தாக்க, நான் மயக்கம் கொள்ளும் அச்சமயத்தில், நீ மனம் வைத்து பரவசத்துடன் என்னை அணைத்து அருள வர வேண்டும். காட்டில் நிறைந்திருந்த பெருத்த மலைவாசிகளாகிய வேடர்கள் போற்றி வளர்த்த, லக்ஷ்மி போன்ற மயிலாகிய வள்ளி, முத்து மாலை அணிந்த தேவயானை (ஆகிய இருவர்களின்) அழகிய மணி மாலைகள் உள்ள குடம் போன்ற மார்பகங்களின் மேல் மோகம் கொள்ளும் மிகுந்த காதலனே, அழகிய மணிகள் புனைந்த மயில் வீரனே, மதமும் பெருமையும் பொருந்திய யானை முகவராகிய கணபதிக்குத் தம்பியே, இமய மலை அரசன் மகளான பார்வதி (தேவர்களின் மீது) கருணை கொண்டு அருளிய வலிமை மிக்க முருகனே, தாமரை மலரை ஒத்த கண்களை உடைய திருமாலின் மருகனே, அடியார்கள் பணிகின்ற சீகாழியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவி பாடுவது போல் பாடியது.சந்திரன், மன்மதன், மலர் அம்பு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 778 - கரியவனகர் 
ராகம் - ...; தாளம் -

தனதன தனனத் தான தாத்தன     தனதன தனனத் தான தாத்தன          தனதன தனனத் தான தாத்தன ...... தனதான

அளிசுழ லளகக் காடு காட்டவும்     விழிகொடு கலவித் தீயை மூட்டவும்          அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள் 
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்     அழகிய மயிலிற் சாயல் காட்டவும்          அளவிய தெருவிற் போயு லாத்தவும் ...... அதிபார 
இளமுலை மிசையிற் றூசு நீக்கவும்     முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்          இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக 
எவரையு மளவிப் போய ணாப்பவும்     நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்          இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய் 
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்     குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட          நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட 
நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட     அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய          நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா 
களிமயில் தனில்புக் கேறு தாட்டிக     அழகிய கனகத் தாம மார்த்தொளிர்          கனகிரி புயமுத் தார மேற்றருள் ...... திருமார்பா 
கரியவ னகரிற் றேவ பார்ப்பதி     யருள்சுத குறநற் பாவை தாட்பணி          கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ...... பெருமாளே.

வண்டுகள் மொய்க்கும் கூந்தலாகிய காட்டைக் காட்டுதற்கும், கண்களால் காமத் தீயை மூட்டுதற்கும், படுக்கையில் எப்பொழுதும் பொழுது போக்கவும், இள வயது உள்ளவர்களின் வசத்தில் பழகி பொருள் கேட்பதற்கும், அழகிய தங்கள் மயில் போன்ற சாயலைக் காட்டவும், சந்திக்கும் பொருட்டு வீதியில் போய் உலாத்துதற்கும், மிகவும் கனத்த இளமையான மார்பின் மேலுள்ள ஆடையை (வேண்டுமென்றே) நீக்குதற்கும், முகமொடு முகம் வைத்து காம ஆசையை உண்டு பண்ணவும், நிறைய பணம் இல்லாதவர்களை தூரத்தே விரட்டி நீக்குதற்கும், இனிய சொற்களுடன் எல்லாருடனும் கலந்துபோய் ஏமாற்றவும், நினைக்கின்றவர்களாகிய விலை மகளிர் சம்பந்தப்பட்ட வரையில் என் ஆசையை நீக்க, என் வருத்தமெல்லாம் தொலைய, திருவடிகளைக் காட்டி உன் திருவருளைத் தந்து அருளுக. சுழற்சி உறும் போர்க்களத்தில் ஆறு போலச் சுழன்று ஓடும் ரத்தத்தில் முழுகி பேய்கள் கூச்சலிட, மாமிசத்தை உண்டு பருந்துகளும், காகங்களும், கழுகுகளும் விளையாட, கூட்டம் கூட்டமாக வரிசையாக நின்று நரிகள் ஆரவாரம் செய்ய, அதிர்ச்சி உறும் போரில் சேனைகளைக் கூட்டி வந்த அசுரர்கள் இறக்கும்படி சம்காரம் செய்யும் வேலைக் கொண்டு போர் புரியும் வீரனே, செருக்கைக் கொண்டிருந்த மயிலின் மேல் புகுந்து ஏறும் பலவானே, அழகிய பொன் மாலை நிறைந்து விளங்கும் பொன் மலை போன்ற புயங்களை உடையவனே, முத்து மாலை ஏற்று அணிந்துள்ள அழகிய மார்பனே, கரியவனகர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தேவனே, பார்வதி அருளிய மகனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் தாள்களைப் பணிகின்ற கருணா மூர்த்தியே, தமிழ்ப் பாடல் கேட்டு அன்பர்க்கு அருளும் பெருமாளே. 
* கரியவனகர் சீகாழிக்கு மேற்கே 4 மைலில் உள்ள கொண்டல் வண்ணக்குடி என்ற தலம்.

பாடல் 779 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - வாசஸ்பதி தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7

தனத்தன தானத் ...... தனதான

உரத்துறை போதத் ...... தனியான 
உனைச்சிறி தோதத் ...... தெரியாது 
மரத்துறை போலுற் ...... றடியேனும் 
மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ 
பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே 
பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே 
வரத்துறை நீதர்க் ...... கொருசேயே 
வயித்திய நாதப் ...... பெருமாளே.

உறுதி வாய்ந்த ஞானத்தின் தனிப்பொருளான உன்னைச் சிறிதளவேனும் போற்றத் தெரியாமல் மரக்கட்டை போன்று இருந்து அடியேனும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் இருள் போல் என் மனத்தை மூடி நான் கெட்டுப்போகலாமோ? மேலான நிலையிலுள்ள புனித வாழ்க்கையர்களின் செல்வமே, உன் திருவடியில் பணிவித்து வாழ்வு பெற அருள்வோனே, வரம் தருவதே தன் நீதியாகக் கொண்ட சிவனாரின் ஒப்பற்ற சேயே, வைத்தீசுரன்கோயில் நாதனாம் சிவனுக்குப் பெருமாளே. 

பாடல் 780 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - திலங் தாளம் - திஸ்ர்ருபகம் - 5 0/3 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தத்தன தான தான தத்தன தான தான     தத்தன தான தான ...... தனதான

எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி     யெத்தனை கோடி போன ...... தளவேதோ 
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி     யிப்படி யாவ தேது ...... இனிமேலோ 
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை     சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் 
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது     சித்திர ஞான பாத ...... மருள்வாயே 
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக     நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே 
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு     நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா 
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு     பத்திர பாத நீல ...... மயில்வீரா 
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்     பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.

எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை விட்டு, புது உடல்களில் ஓடிப்புகுந்தும், ஆடியும், இவ்வாறு எத்தனை கோடிப் பிறப்புக்கள் போனதோ? இதற்கு ஓர் அளவும் உண்டோ? இவ்வாறு மோகமும் போகமும் கலந்து, இப்படி பிறந்து இறந்து மீண்டும் இவ்வாறு பிறந்து ஆவதினால் என்ன பயன்? இனிமேல் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால், சீசசீ, சீச்சீ, மிக இழிவானது இந்த மாயமான வாழ்க்கை. இதன் சிக்கலில் அகப்பட்டு மாய்கின்ற அடியேனை, அறிவு என்னும் மேடையிலே ஆட்டுவித்து, மூன்று தமிழ்த் துறையிலும் வல்ல புலவர்கள் ஓதுகின்ற உன் அழகிய ஞானத் திருவடிகளை எனக்கு அருள்வாயாக. நாள்தோறும் உன்னைத் துதிப்பவர்களின் உள்ளமே நீ தங்கியுள்ள இருப்பிடமாகக் கொண்டு அதில் நடனமாடிடும் ஆறுமுகத்துக் கடவுளே, உருவ அருவமாக உள்ளவரும், பாதி மரகதப் பச்சை நிற உடல் கொண்டவரும், மூன்று நீண்ட இலைகளை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவருமான சிவபெருமான் அருளிய புதல்வனே, ஆயிரம் பெரிய படங்கொண்ட தலைகள் வாய்த்த ஆதிசேஷனை கீறிக் கிழிக்கும் வாள் போன்ற கூரிய நகங்களை உடைய நீல மயில் மீது வரும் வீரனே, பசுமையான இளம் கமுக மரத்தின் மடல் மீது வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்கும் வேளூரில்* விருப்புடன் அமரும் முத்தேவர் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) போற்றும் பெருமாளே. 
* புள்ளிருக்கும் வேளூர் இப்போது வைத்தீசுரன் கோயில் என்று அறியப்படுகிறது.சீர்காழிக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.

பாடல் 781 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - ...; தாளம் -

தான தத்தனந் தான தத்ததன     தான தத்தனந் தான தத்ததன          தான தத்தனந் தான தத்ததன ...... தனதான

பாட கச்சிலம் போடு செச்சைமணி     கோவெ னக்கலந் தாடு பொற்சரணர்          பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார் 
பார பொற்றனங் கோபு ரச்சிகர     மாமெ னப்படர்ந் தேம லிப்பரித          மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர் 
ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ     டாட ளிக்குலம் பாட நற்றெருவி          லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி 
ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்     வாரு முற்பணந் தாரு மிட்டமென          ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ 
சேட னுக்கசண் டாள ரக்கர்குல     மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்          சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல் 
சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி     யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்          சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா 
நாட கப்புனங் காவ லுற்றசுக     மோக னத்திமென் தோளி சித்ரவளி          நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே 
ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்     நாய கிக்குநன் பாக ரக்கணியும்          நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே.

கொலுசு, சிலம்பு இவற்றுடன் சிவந்த மணிகள், கோமேதகம் சேர்க்கப்பட்டது போல ஒன்று சேர்ந்து அசைகின்ற அழகிய பாதங்களை உடையவர். சித்திரப் பதுமை போன்றவர்கள். பட்டு உடை அணிந்துள்ள நூல் போல் நுண்ணியதான இடையை உடையவர்கள். கனத்த, அழகிய மார்பகம் கோபுர உச்சி என்று சொல்லும்படியாக வளர்ந்து களிப்பு கொள்பவர்கள். இன்பகரமான வெல்லம் நல்ல சர்க்கரை போல இனிய சொற்களைப் பேசும் மாதர்கள். மலர்க் கூட்டங்களைக் கொண்ட கரிய கூந்தலில் விளையாடும் வண்டுகளின் கூட்டம் பாட, அழகிய தெருக்களில் சென்று, பறவை இனம் போல பல பல சொற்களை அமைந்த ராகங்களைப் பாடி, மிகுந்த முகஸ்துதியான பேச்சுக்களைப் பேசி வஞ்சித்து, இன்ப மொழியால், வாருங்கள், முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், உங்கள் அன்பையும் கொடுங்கள் என்று சொல்லி, ஏணி வைத்து ஏறும்படி செய்து (பின்னர் இறங்க முடியாமல்) ஏணியை எடுத்துச் செல்பவர்களாகிய விலைமாதர்களின் செயல்களை நம்புதல் தகுமோ? ஆதி சேஷன் மெலிய, கொடும் பாதகர்களான அசுரர்கள் குலம் மாண்டு ஒழிய, எட்டு மலைகளும் அலை மிகுந்த ஏழு கடல்களும் ஒன்று சேர உலர்ந்து போகும்படியாக நின்று விளையாடிய வேல் ஏந்திய கைகளாகிய பன்னிரண்டு தோளின் மேல் விண்ணுலகத்தினர் பொன் மலரைப் பொழிய, முனிவர்கள் புகழ்ப் பாடல்கள் பாட, எட்டுத் திக்கிலும் உள்ள அரசர்கள் ஜே ஜே என்று தாளம் இட்டு முழங்க, செந்தாமரையில் வாழும் லக்ஷ்மி தேவி புகழும் வேலனே, நீ மனத்தில் விரும்பிச் சென்ற வள்ளி மலையில் இருக்கும் தினைப் புனத்தில் காவல் இருந்தவளும், உன்னைச் சுகமாக மயக்கியவளும், மெல்லிய தோளை உடையவளும் ஆகிய அழகிய வள்ளி நாயகிக்கு இன்பகரமான பாடல்களைப் பாடி, நாள் தோறும் அணிகலன்களை அணிவித்து மகிழ்பவனே, ஞானம் என்னும் மலையில் மகிழ்ந்து விளையாடும் பெருமான், தையல்நாயகி** என்னும் திருநாமம் உடைய தேவியை நல்ல தமது பாகத்தில் கொண்டவர், ருத்ராக்ஷ மாலை அணிந்துள்ள சிவபெருமான் மெச்சும்படி வந்து விளையாடி, முத்தம் அவருக்குத் தந்தருளும் பெருமாளே. 
* வைத்தீசுரன் கோயில் முருகனுக்கு முத்துக் குமரர் என்று பெயர்.
** தையல்நாயகி என்பது வைத்தீசுரன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் உமா தேவியின் பெயர்.

பாடல் 782 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - மனோலயம் - மத்யம ஸ்ருதி தாளம் - ஆதி - 2 களை - திஸ்ரநடை - 24

தான தான தத்த தந்த தான தான தத்த தந்த     தான தான தத்த தந்த ...... தனதான

மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி     மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய 
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி     வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல் 
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்     வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே 
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த     வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே 
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட     கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே 
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த     காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா 
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து     சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே 
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த     சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.

ஆசை என்ற ஒன்றினால் உருவெடுத்த, துளைகள் உள்ள இந்த உடம்பு, சோறு கொண்டு வளர்க்கப்படும் இந்த சா£ரம், மாறி மாறி எண்ணம் கொள்ளும் இந்த மனம், இவையெல்லாம் அநியாயமான பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்தவனாக நான் வாட்டம் உறுகின்றேன். ஐயனே, எனக்கு இரக்கப்பட்டு வந்தருள்வாய் ஐயா, இனிப் பிறப்பதும் இறப்பதும் இல்லாமல், உன் வேலாயுதத்தால் என் வினைக்கூட்டங்களை தூளாகும்படி எரித்து, உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க. அன்பு நிறைந்த உன் அடியார் திருக்கூட்டத்தில் யானும் கலந்து, உன்னைப் போல பரிசுத்த உள்ளம் பெறவே, மகிழ்ச்சி கொள்ளும் கந்த வேளே நமக்கு உற்ற துணையாகும் என்றிருக்க பரிந்து அருள்வாயாக. காற்றிலே பரந்ததுபோலப் பரவியிருந்த சூரர்கள் இறக்கும்படி ஜயம் கொண்ட, யமன் போன்ற வலிமையும், சூரியன் போன்று பேரொளியும் அமைந்த சக்திவேலை அழகிய கையிலே கொண்ட முருகனே, மன்மதனது பாணம் வருத்தினதால், கணக்கில்லாத மாதர்களைக் கலந்த* திருமாலாகிய ரிஷபத்தின்** மேல் ஏறிய தலைவன், எம் தந்தை சிவன் அருளிய பாலனே, சேல் மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே, உன் புகழை ஓதும் பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே, தேவர்களும், பெண்டிரும், சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும் புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன் கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே, சேவற்கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே. 
* கண்ணபிரான் நரகாசுர வதை செய்துப் பின் கொண்டுசென்ற மந்தரமலையின் சிகரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ, கந்தர்வ, சித்த கன்னிகைகள் பதினாயிரம் பேரையும் மணந்து கொண்டு, கண்ணன் துவாரகையில் வாழ்ந்தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
** திரிபுர சம்ஹாரத்துக்கு சிவன் எழுந்த தேர் அச்சு அறுந்து விழுந்த போது, தேர் நிலை கலங்க, திருமால் ரிஷப உருவத்தில் சிவபிரானைத் தாங்கினார் - சிவ புராணம்.

பாடல் 783 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் -....; தாளம் -

தானா தானன தாத்த தந்தன     தானா தானன தாத்த தந்தன          தானா தானன தாத்த தந்தன ...... தனதானா

மூலா தாரமொ டேற்றி யங்கியை     ஆறா தாரமொ டோட்டி யந்திர          மூலா வாயுவை யேற்று நன்சுழி ...... முனையூடே 
மூதா தாரம ரூப்பி லந்தர     நாதா கீதம தார்த்தி டும்பர          மூடே பாலொளி ஆத்து மந்தனை ...... விலகாமல் 
மாலா டூனொடு சேர்த்தி தம்பெற     நானா வேதம சாத்தி ரஞ்சொலும்          வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர ...... தவிசூடே 
மாதா நாதனும் வீற்றி ருந்திடும்     வீடே மூணொளி காட்டி சந்திர          வாகார் தேனமு தூட்டி யென்றனை ...... யுடனாள்வாய் 
சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி     மாதா ராபகல் காத்த மைந்தனை          சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ...... னெமையாளுந் 
தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்     வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்          தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா 
வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக     மூடார் சூரரை வாட்டி யந்தகன்          வீடூ டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே 
வேதா நால்தலை சீக்கொ ளும்படி     கோலா காலம தாட்டு மந்திர          வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே.

மூலாதார* கமலத்தில் அக்கினியை ஏற்றி, ஆறு ஆதாரங்களிலும் செல்லும்படி ஓட்டிச் செலுத்தி, ஆதார இயந்திரங்களின் வழியாக பிரதானமான பிராண வாயுவை நல்ல சுழி முனை** நாடியின் வழியே ஓடச் செய்து, முதல் ஆதாரமான ஆஞ்ஞை ஆதாரத்தின் பிறைச் சந்திர வடிவின் கோட்டில் (புருவத்தின் மத்தி இடமாகிய) ஆகாச நிலையில் இசைத் தொனிகள் ஒலி செய்யும் மேலான இடத்தில் (பிரமரந்திர நிலையில்) ஒளித்து நிற்கும் ஜீவாத்மாவை தவறிப் போகாத வழியில் ஆசை ஊடாடும் இந்த உடலில் ஈடுபட வைத்து இன்பம் பெருக, பலவகையான வேதங்களும் சிறந்த சாத்திர நூல்களும் சொல்லிப் புகழும் தழைத்த ஞான நிலையில் (துவாத சாந்த வெளியில்) ஏற்றி (ஐந்தெழுத்தாகிய) மந்திர பீடத்தினிடையே பார்வதியும் சிவபெருமானும் வீற்றிருந்து அருளும் திருச்சபையில் (அக்கினி, சூரியன், சந்திரன் என்னும்) முச்சுடர்களின் ஒளியை தரிசிக்கச் செய்து, அங்கே சந்திரக்கலையின் தேன் அமுதம் பொங்கி எழ அதனை எனக்கு ஊட்டி என்னை உடனிருந்து ஆண்டருள்க. சூலாயுதத்தை உடைய மாது, உமாதேவி, அருள் பொழியும் சம்புவின் மனைவி, தாய், இரவும் பகலும் காத்து அமைந்த அன்னை, சுடுகின்றபடி நம்மை ஈர்த்துச் செல்லும் வினைகளை வாட்டித் தொலைத்து, குழந்தைகளைக் காப்பது போல் நம்மைக் காத்து அருளுகின்ற பரிசுத்த தேவதை, பிரமன், திருமால், ருத்திரன் என்னும் மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் பதவியில் நிலைநாட்டிய எம்பெருமான் வைத்தீசுரன் கோயிலில் வாழ்கின்ற வைத்திய நாதராய் பல வினைகளைத் தீர்க்கும் சிவபெருமான் என்னும் உருவத் திருமேனி கொண்டவர் பாகத்தில் பொருந்தி இருப்பவளாகிய பார்வதிதேவி அருளிய குழந்தையாகிய வேலனே, எழு கடலையும் வற்றச் செய்து, வஞ்சகம் நிறைந்த மூடர்களாகிய சூரர்களை வாட்டி, யமபுரிக்கு அவர்களை அனுப்பிய கோபத்தை உடைய குதிரையாகிய மயில் வாகனனே, பிரமனுடைய நான்கு தலைகளையும் சீழ் கொள்ளும்படி குட்டி, குதூகலத்துடன் (பிரமனின் சிறைவாசத்தை) கொண்டாடிய மந்திர வேலனே, திருமாலின் மகளாகிய வள்ளிக்கு கருணை காட்டிய பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.

பாடல் 784 - வைத்தீசுரன் கோயில் 
ராகம் - ...; தாளம் -

தான தானதன தானதன தானதன     தான தானதன தானதன தானதன          தான தானதன தானதன தானதன ...... தனதான

மேக வார்குழல தாடதன பாரமிசை     யார மாடகுழை யாடவிழி யாடபொறி          மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதிபரி ...... மளமேற 
மீனு லாடையிடை யாடமயில் போலநடை     யோல மோலமென பாதமணி நூபுரமு          மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை 
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு     வோரை வாருமென வேசரச மோடுருகி          ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார 
ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு     வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட          ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ 
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி     நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை          நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள் 
நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை     வேத கீதவொலி பூரையிது பூரையென          நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா 
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்     தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக          சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே 
தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு     மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்          சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் ...... பெருமாளே.

மேகம் போல் கறுத்து நீண்ட கூந்தல் ஆடவும், மார்பின் பாரங்களின் மேல் முத்து மாலை ஆடவும், காதில் குண்டலங்கள் ஆடவும், கண்கள் ஆடவும், பொலிவு பரந்துள்ள உடல் நறு மணங்கள் வீசவும், பெண்குறியின் மேற்பட்டு நல்ல மணம் அதிகரிக்கவும், ஒளி வீசும் நூலாடை இடையில் ஆடவும், மயிலைப் போல நடை நடக்க, பாதத்தில் உள்ள ரத்தினச் சிலம்பு ஓலம் ஓலம் என்று முறையிடும் ஒலியுடன் சப்திக்க, ஒளியை ஆபரணங்கள் வீச, பால் போலவும் குயில் போலவும், முரசொலி போலவும் ஒலி பெருகவே சபையில் கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள். தெருவில் வரும் ஆடவர்களை வாருங்கள் என்று நயமுடன் இனிய வார்த்தைகள் சொல்லி, மன உருக்கத்துடன் ஆசை பூண்டவர்கள் போல தங்களுடைய வீட்டிற்குக் கொண்டு போய் தழுவுவார்கள். காமத்துக்கு ஆதாரமாயுள்ள அழகுள்ள மார்பகத்தில் முழுகி, சுகக் கடலில் அனுபவித்து வேர்வை பாய படுக்கையில் கோலாகலத்துடன் இன்பம் அனுபவிக்க, (அதனால் பின்னர்) வருத்தம் தருவதான சூலை நோய் மற்றும் பல நோய்களாகிய கடலில் சிக்கி வேதனைப் பட்டு இந்த உடலுடன் அலைவேனோ? நாக லோகத்தில் உள்ளவர்கள், சந்திர மண்டலத்தில் உள்ளவர்கள், சூரிய மண்டலத்தில் உள்ளவர்கள், பிரம லோகத்தில் இருப்பவர்கள், தேவர்கள், கணநாதர்கள், நந்திகண நாதர்கள், அந்தணர்கள், முதன்மையான யோக மார்க்கத்தில் ஏற்படும் ஜோதி விளங்கும் முனிவர்கள், நவ நாத சித்தர்கள், மனிதர்கள், நிலை பெற்ற நாராயண மூர்த்திகள், பதினெண் புராணங்கள், வேதங்களின் ஒலிகள் எல்லாம் இதுவே (அசுரர்களின்) முடிவு காலம், இதுவே முடிவு காலம் என்று சொல்ல, அசுரர் அழிந்து போக, அவர்கள் இருந்த கிரவுஞ்ச கிரி பொடிபடச் செலுத்திய வேலனே, மயில் போன்ற மாது, குற மாது, அமுத வல்லி எனப் பெயர் பூண்டிருந்த தேவயானையின் நல்ல துணையாய் அமைந்த மாது, வள்ளி நாயகி என்கின்ற மின்னொளி போன்றவளை சுகத்துடனும் விரக தாபத்துடனும் அழுந்தக் கட்டி, உனது மார்பில் அவளுடைய மார்பகத்தை விடாமல் அணைத்துத் தழுவியவனே, பன்னிரண்டு தோள்களும், ஆறு திருமுகங்களும், மயில், வேல், இவைகளின் அழகுக்கு மேம்பட்டுப் பொருந்தியுள்ள எழில் வடிவம் உள்ளவனே, தொழுது வணங்கி ஜடாயு, சம்பாதி என்னும் பறவை வடிவினரும், காவிரி ஆறும் சூழ்ந்து பரவும் புள்ளிருக்கும் வேளூர் என்ற வைத்தீசுரன் கோயிலில் வீற்றிருக்கும் முருகா, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 785 - திருக்கடவூர் 
ராகம் - பைரவி தாளம் - ஆதி - 2 களை - எடுப்பு - 1/4 இடம்

தாத்த தனத்தன தானன தானன     தாத்த தனத்தன தானன தானன          தாத்த தனத்தன தானன தானன ...... தனதான

ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர     வீட்டி லடைத்திசை வேகசை மூணதி          லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி 
ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ     ளாத்து வெனத்திரி யாபரி யாதவ          மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப் 
பூட்டு சரப்பளி யேமத னாமென     ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்          பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம் 
போற்றி நமக்கிரை யாமென வேகொள     நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்          பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே 
வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக     னாட்டை விடுத்திட வேபல சூதினில்          வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய் 
வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது     பார்த்து முடித்திட வேயொரு பாரத          மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே 
கோட்டை யழித்தசு ரார்பதி கோவென     மூட்டி யெரித்தப ராபர சேகர          கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா 
கூற்று மரித்திட வேயுதை பார்வதி     யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்          கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே.

பிரமனது ஓலையில் கண்ட விதியின்படி, (இந்த உயிரைக்) கொண்டு போய் நல்ல உடலாகிய வீட்டில் சேர்த்து, பொருந்தும்படியாக (அடிக்கும்) சவுக்குப்போன்ற, (சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும்)* மூன்று நாடிகளை அதில் பொருத்தி அடித்துச் செலுத்த, கடலில் படகு ஓடுவது போலத் தடுமாறி காலம் கழித்து, நல்லது என்று நினைத்து பொன், பெண் ஆகிய ஆசைகளை மேற்கொண்டு, தூ எனப் பலர் இகழத் திரிந்தும், வருந்தியும், தவம் சேர்ந்துள்ள இடமே எங்கிருக்கின்றது என்று தெரியாமலும், இந்த உடலை விரும்பிப் பாதுகாத்து, வைரம் அழுத்தமாகப் பதித்த கழுத்தணி விளங்க, மன்மதன் இவன் என்னும்படி, உடலை ஆட்டியும் அசைத்தும் இயல்பாகத் திரியும் காலத்தில், நிரம்பின மலம் சேர்ந்த குகையோ, அல்லது சோற்றுப் பொதியோ இந்த உடல் என்னும்படி, கழுகும் காகமும் விரும்பி நமக்கு (இவ்வுடல்) உணவாகும் என்று கொள்ளும்படி, பூமியில் யாவும் அடங்கியாயிற்று என்று (இவ்வுடல்) விழுகின்ற, இறந்து போகும் அந்தச் சமயத்தில் கால்களில் பாம்பை அழுத்தமாகக் கட்டியுள்ள அழகிய மயிலின் மீது அமர்வோனே, நீ அருள் புரிவாயாக. (அரக்கு) மாளிகையில் (பஞ்ச பாண்டவர்களை) இருக்கச் செய்து, நெருப்பை இட்ட பாதகனாகிய துரியோதனன் நாட்டை விட்டுப் போகும்படி பல சூதாட்டங்களில் தோற்கடிக்க, விதியின்படி குருகுலத்து அரசராம் பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று, மாறு வேடம் பூண்டு அஞ்ஞாத வாசம் செய்திருந்த நாளின் முடிவைப் பார்த்து, வனவாசம் முடிந்திடவே, ஒரு பாரதப் போரையே மேலே நடக்கும்படித் துவக்கிவைத்த பெரிய வீரனாகிய திருமாலின் மருகனே, (சூரனது மகேந்திரபுரியின்) கோட்டைகளை அழித்து, அசுரர்களின் தலைவனான சூரன் கோ என்று கூச்சலிட (அவனுடைய நகரத்தை) நெருப்பு மூட்டி எரித்த பராபரப் பொருளே, அழகனே, கோக்கப்பட்ட இரத்தின ஒளிக்கு நிகரான கூரிய வேலனே, யமன் இறந்து போகும்படியாக (இடது காலால்) உதைத்த பார்வதி தேவியார்க்கும் இனிமை தரும் பெண்ணாகிய, மானின் வயிற்றில் பிறந்த வள்ளியின் மலை போன்ற மார்பகங்களுக்கு உரிய தலைவனே, திருக்கடவூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** திருக்கடவூர் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 13 மைலில் உள்ளது.தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக சிவபிரான் யமனை உதைத்துத் தள்ளி, காலபைரவ மூர்த்தியாக இருக்கும் தலம்.

பாடல் 786 - திருக்கடவூர் 
ராகம் - ...; தாளம் -

தானதன தான தத்த தானதன தான தத்த     தானதன தான தத்த ...... தனதான

சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி     தூயவொளி காண முத்தி ...... விதமாகச் 
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து     சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி 
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்     மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி 
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து     வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய் 
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு     மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா 
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து     ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே 
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து     காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா 
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்     கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே.

சூலம் போல மூன்று கிளைகளாக* ஓடுகின்ற பாம்பு போன்ற பிராணவாயுவை வெளியேறாது அடக்கி, பரிசுத்தமான பர ஒளியைக் காணவும், முத்தி நிலை கை கூடவும், சூழ்ந்துள்ள ஆணவ இருளாகிய உருவத்தை அழிபடும்படியாக யோக நெருப்பில் அதை எரித்து, ஜோதி ரத்னபீடம் அமைந்துள்ள நிர்மலமான வீட்டை அடைந்து, அந்த மேலைப் பெரு வெளியிலே, ஆயிரத்தெட்டு இதழோடு கூடிய மேலான குரு கமலத்தில் (ஸஹஸ்ராரத்தில்)** சேர்ந்து, சிவ ஞான இன்ப ஒளியைப் பிரதிபலிக்கும் புனலில் மூழ்கி, வேல், மயில் இவைகளின் தரிசன ஒளியை அந்த நிலையில் கிடைக்கப் பெற்று, முக்தி நிலையைச் சிறப்புடன் பெறும் அருளைத் தந்தருளுக. ஓலமிட்டு அழும் அசுரர்களும், எட்டுத் திசைகளில் உள்ள கடல்களும், சக்ரவாளகிரியும் அழிபடவும், கிரெளஞ்ச மலையும் தொளை படும்படியாகவும் வேலைச் செலுத்திய மயில் வீரனே, சிறப்பான குற மானாகிய வள்ளியின் தினைப்புனக் காட்டுக்குச் சென்று, அவளுடைய காலை வருடி, அவளுடைய மனத்துள் பதியும்படி ஓம் என்னும் பிரணவ உபதேசமாகிய மூலப் பொருளோடு அவளை அணைந்தவனே, யமனுடன் (அவன் வாகனம்) எருமையும் அழிய, விதிப்படியே பூமியின் மேல் விழும்படி உதைத்துக் கிடத்தின காலகாலனாகிய சிவபிரானின்*** இடப் பாகத்தில் உள்ள பராசக்தி பார்வதி அருளிய பாலனே, ஊழிக் காலம் முதலாக வாழ்ந்து வரும் இந்தப் பூமிக்கு ஆதார நகராயுள்ள திருக்கடவூரில் இருக்கும் கோபுரத்தில் காட்டு மயில் போன்ற வாகனத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
*** தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக சிவபிரான் யமனை உதைத்துத் தள்ளி, கால ஸம்ஹார மூர்த்தியாக இருக்கும் தலம்.திருக்கடவூர் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 13 மைலில் உள்ளது.

பாடல் 787 - திருப்படிக்கரை 
ராகம் - ...; தாளம் -

தனத்த தத்தனத் தனத்த தத்தனத்     தனத்த தத்தனத் ...... தனதான

அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்     டழைத்தி தப்தடச் ...... சிலகூறி 
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்     தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத் 
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்     குளக்க ருத்தினிற் ...... ப்ரமைகூரா 
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்     துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ 
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்     றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச் 
சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்     றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர் 
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்     செயித்த வுத்தமத் ...... திருமாமன் 
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்     திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.

அருமை பாராட்டி அமைதியாகச் சிரித்து, மை பூசிய கண் கொண்டு அழைத்து, இன்பம் பெருகும்படி சில வார்த்தைகளைப் பேசி, இடுப்பினில் உள்ள பெண்குறிக்காக பணம் பெறும்பொருட்டு அதனை விற்பனை செய்து, கட்டியுள்ள பட்டாடையை அவிழ்த்து, அணைத்து, வாயிதழ் ஊறலைத் தந்து, காமலீலையில் உள்ளத்தை உருக வைத்து, குறைவிலா வகையில் பொருள் பறிக்கும் பொது மகளிரிடம் எனது உள்ளக் கருத்தில் மயக்கம் மிக்கு எழாது, செய்ப்பதி எனப்படும் வயலூர் என்ற தலத்தைப் போற்றி உரைத்து, உன்னைத் துதித்து, திருப்புகழ்ப் பாடல்களைச் சொல்வேனோ? பெருமை உள்ள குரங்குப் படையின் பலத்தினால் பெரிய மலைகளை எடுத்துப் போட்டு அணை கட்டி, கடலைக் குறுக்கே அடைத்து, (அணைக்கு) அப்பால் இருந்த அரக்கர்கள் பொடியாக, சண்டை மிக்கெழ, வீரம் உள்ள அம்பைச் செலுத்தி வீழ்த்தி வெற்றி கொண்ட மேலான அழகிய (ராமனாகிய) திருமாலும், சிறந்த தந்தையாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவனே. முத்தமிழ் வல்லானே, திருப்படிக்கரையில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* இந்தத் தலம் திருமண்ணிப் படிக்கரை எனவும், இலுப்பைப்பட்டு எனவும் வழங்கும். வைதீஸ்வரன்கோவிலுக்கு மேற்கே 6 மைலில் உள்ளது. 

பாடல் 788 - மாயூரம் 
ராகம் - ....; தாளம் -

தனதன தத்தத் தனந்த தானன     தனதன தத்தத் தனந்த தானன          தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான

அமுதினை மெத்தச் சொரிந்து மாவின     தினியப ழத்தைப் பிழிந்து பானற          வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய் 
அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்     வருபசி யர்க்குற் றவன்பி னாலுண          வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக் 
குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய     நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய          குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக் 
குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு     மவர்மய லிற்புக் கழிந்த பாவியை          குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே 
வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு     மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்          மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே 
மறுவறு கற்பிற் சிறந்த சீதையை     விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன்          வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே 
எமதும லத்தைக் களைந்து பாடென     அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய          இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே 
எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய     பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய          இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.

அமுதத்தை நிரம்ப ஊற்றி, மாமரத்தின் இனிப்பான பழத்தை அதனுடன் பிழிந்து, பாலும் அதனுடன் தேனையும் கலந்து கூட்டி, (அவையுடன்) தித்திக்கின்ற கற்கண்டையும் கலந்த அத்தனை சுவையுள்ள வாயிதழ் (ஊறலை) உடையவர்களாய், அழகான பொன் தட்டில் மொண்டு, காம நோயுடன் வருகின்ற மோகப் பசி உள்ளவர்கள் மேல் வைத்த அன்பினால் (அவர்கள்) உண்ணும்படி கொடுப்பவர்கள் போன்று இளைப்புள்ள காமிகளின் மோக மயக்கம் நீங்க, (அதரபானத்தால்) வாய் வெளுத்த வேசையர்களின், இடம் பரந்த நிலவொளி வீசும் முத்து மாலையை அணிந்த, பருத்து விளங்கும், அழகுடன் மிக்கெழுந்த, நிறைந்த பாரமான மார்பாம் மலை இளகும்படி அணைத்து, வயிற்றின் மேல் விழுகின்ற அந்த விலைமாதர்களின் மோக வலையில் பட்டு அழிந்த பாவியாகிய என்னை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக. தன் குலத்தினர் பெருக, உலகம் எல்லாம் கலக்கமுற, மூர்க்கமும் கொடுமையும் நிறைந்த இழிவான புத்தியைக் கொண்டு அழிவு தரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த ராவணன் சற்றும் பொருட்படுத்தாமல், குற்றம் அற்ற, கற்பில் மேம்பட்ட சீதைக்கு துக்கம் விளைவிக்க, குரங்குகளின் சேனையின் உதவியைக் கொண்டு அவனுடைய குலத்தை அறுத்து விளங்கும் (ராமனாம்) திருமாலின் மருகனே, என்னுடைய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களையும் நீக்கி, பாடுவாயாக என்று நீ எனக்குத் திருவருள் பாலிக்க, அதன் படியே உன்னைப் புகழ்ந்து உழுவலன்புடன் பாடிய பாடல்களை விரும்பி மேலான பேற்றினை எனக்கு அருளிய முருகனே, அழகிய சங்கு நிரம்பத் தவழ்ந்து உலாவுகின்ற காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் விளங்குகின்ற, ஒப்பு இல்லாத, ரத்தினமயமான மயிலாடு துறையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 789 - பாகை 
ராகம் - ...; தாளம் -

தான தானன தானம், தான தானன தானம்     தான தானன தானம் ...... தனதான

ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்     தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே 
ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்     றாயு வேதனை யேயென் ...... றுலையாதே 
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்     த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே 
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்     தேவ நாயக நானின் ...... றடைவேனோ 
பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்     பாவை பாகனு நாளும் ...... தவறாதே 
பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்     பாகை மாநக ராளுங் ...... குமரேசா 
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்     கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா 
கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்     கோல மாமயி லேறும் ...... பெருமாளே.

காம லீலைகளை விளைவிக்கும் சிறந்த மன்மதன் காமப் போரில் செலுத்தும் (மலர்ப்) பாணங்களால் மனம் நொந்து, உடல் வேர்வை வர மோகம் கொண்டு தளராமலும், முத்துப் போன்ற ஒளி வீசும் பற்களை உடைய விலைமாதரது சிவந்த சேல் மீன் போன்ற கண்களின் கட்டளைப்படி கீழ்ப்படிந்து ஆயுட் காலம் வரையில் துன்பமே என்னும்படி நிலை குலையாமலும், ஆதிசேஷனின் பெரிய பணாமுடியின் மேல் தாங்கப்படுகின்ற இந்தப் பூமியில் உள்ளவர்களுள் பெரிய கொடை வள்ளல்கள் யார் யார் என்று தேடி அலையாமலும், நான்கு வேதங்களும் தேடி நாடுகின்றனவும், (வள்ளியைத் தேடிக்) காட்டில் ஓடி அலைந்தனவுமான உனது திருவடிகளை தேவ நாயகனே, யான் என்று அடையப் பெறுவேனோ? நான்கு வேதங்களும் பாடுகின்ற பிரமனும், (அவனுக்குத்) தகப்பனாகிய திருமாலும், பார்வதி என்ற பெண்ணொரு பாகனாம் சிவபெருமானும், நாள் தோறும் தவறாமல், பக்குவமாக அன்று அலர்ந்த மலர்களைச் சூட்டுகின்ற திருமுடியை உடையவனே, கோட்டை மதில்கள் சூழ்ந்த அழகிய பாகை* நகரில் வீற்றிருக்கும் குமரேசனே, மதுரைப் பதி அரசனின் (கூன் பாண்டியனின்) கூன் அன்று தொலையும்படி, (சமணரோடு) வாதம் செய்த, உயர்ந்த வேதப் பொருள் கொண்ட தேவாரப் பாடல்களைப் பாடிய (திருஞானசம்பந்தராகிய) நாவன்மை மிக்க தமிழ் வீரனே, பல கோடி அசுரர்கள் கைகளும் கால்களும் அற்று விழும்படியாக, வெற்றி உலாச் செய்யும் அழகிய சிறந்த மயில் ஏறும் பெருமாளே. 
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.

பாடல் 790 - பாகை 
ராகம் - ஹிந்தோளம் தாளம் - ஆதி - 2 களை

தான தனந்தன தான தனந்தன     தான தனந்தன ...... தனதான

ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல     நோய்கள் வளைந்தற ...... இளையாதே 
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு     காடு பயின்றுயி ...... ரிழவாதே 
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்     வேறு படுந்தழல் ...... முழுகாதே 
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்     வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே 
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்     சேல்கள் மறிந்திட ...... வலைபீறா 
வாகை துதைந்தணி கேதகை மங்கிட     மோதி வெகுண்டிள ...... மதிதோயும் 
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை     சாடி நெடுங்கடல் ...... கழிபாயும் 
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி     தோகை விரும்பிய ...... பெருமாளே.

கோழை, காய்ச்சல், குளிர், வாதம் என்ற பல நோய்கள் என்னைச் சூழ்ந்து நான் மிகவும் இளைப்பு அடையாமல், வலிமையை இழந்து துன்பமடையும் சிறிய கூடாகிய இவ்வுடலில் புகுந்து சுடுகாட்டிற்குச் சேரும்படி உயிரை இழக்காமல், மூளை, எலும்புகள், நாடிகள், நரம்புகள் இவையெல்லாம் வெவ்வேறாகும்படி நெருப்பில் மூழ்கி வேகாமல், மூலப்பொருளான சிவயோக பதவியில் நான் வாழ்வுபெறும்படியாக உபதேசித்தருள்வாயாக. வாளை மீன்கள் தமக்கு அருகில் உள்ள குளத்தில் இருக்கும் கயல் சேல் மீன்கள் இவற்றை விரட்டி, வலைகளைக் கிழித்து, வெற்றி கொண்டாடி, வரிசையாக இருந்த தாழம்பூக்கள் உருக்குலையும்படி அவற்றை மோதிக் கோபிக்க, பிறைச்சந்திரன் படியும் உயரமான பாளைகளைக் கொண்ட நறுமணம் கமழும் கமுக மரக்காட்டில் அந்த மீன்கள் உச்சியில் சாடி, பெரிய கடலின் உப்பங்கழியில் பாயும், பாகை* என்ற வளமான தலத்தில் வீற்றிருந்து, வளப்பம் நிறைந்த தோகைமயிலான வள்ளியை விரும்பிய பெருமாளே. 
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள 'பாகசாலை' என்னும் தலம்.

பாடல் 791 - பாகை 
ராகம் - ...; தாளம் -

தனன தனதன தனன தனதன     தான தானன ...... தனதான

குவளை பொருதிரு குழையை முடுகிய     கோல வேல்விழி ...... மடவார்தங் 
கொடிய ம்ருகமத புளக தனகிரி     கூடி நாடொறு ...... மயலாகித் 
துவள வுருகிய சரச விதமது     சோர வாரிதி ...... யலையூடே 
சுழலு மெனதுயிர் மவுன பரமசு     கோம கோததி ...... படியாதோ 
கவள கரதல கரட விகடக     போல பூதர ...... முகமான 
கடவுள் கணபதி பிறகு வருமொரு     கார ணாகதிர் ...... வடிவேலா 
பவள மரகத கநக வயிரக     பாட கோபுர ...... அரிதேரின் 
பரியு மிடறிய புரிசை தழுவிய     பாகை மேவிய ...... பெருமாளே.

குவளை மலரை விட அழகானது என்று அதனுடன் போர் செய்வதாகி, இரு காதுகளிலும் உள்ள குண்டலங்களை விரட்டக் கூடியதாகி, அழகிய வேல் போன்றதாகிய கூரிய கண்களை உடைய விலைமாதர்களின் பொல்லாதனவும், கஸ்தூரி அணிந்தனவும், புளகம் கொண்டனவுமான மலை போன்ற மார்பகங்களை அணைந்து ஒவ்வொரு நாளும் மோகம் கொண்டவனாய், துவளும்படி உருகிய சரச லீலை விதங்களில் தளர்ச்சியுற, காமக் கடல்களின் அலைகளுக்கு உள்ளே சுழல்கின்ற என்னுடைய உயிர் மவுன நிலை என்கின்ற பரம சுகம் ஆகிய பெரிய கடலில் மூழ்கித் திளைக்காதோ? வாயளவு கொண்ட உணவை உட்கொள்ளும் துதிக்கையையும், மதம் பாயும் சுவடு கொண்ட அழகிய கன்னத்தையும், யானையின் முகத்தையும் கொண்ட கடவுளாகிய கணபதிக்குப் பின்னால் தோன்றிய ஒப்பற்ற மூலப் பொருளே, ஒளி வீசும் வடி வேலனே, பவளத்தின் செந்நிறத்தையும், மரகதத்தின் பச்சை நிறத்தையும், பொன்னின் மஞ்சள் நிறத்தையும், வைரத்தின் வெண்மை நிறத்தையும் கொண்ட கதவுகளையும், கோபுரத்தையும் கொண்டு, சூரியனது தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்கள் சூழ்ந்துள்ள பாகை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.

பாடல் 793 - திருவிடைக்கழி 
ராகம் -...; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்     தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா 
அவலக் கவலைச் சவலைக் கலைகற்     றதனிற் பொருள்சற் ...... றறியாதே 
குனகித் தனகிக் கனலொத் துருகிக்     குலவிக் கலவிக் ...... கொடியார்தங் 
கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்     குலைபட் டலையக் ...... கடவேனோ 
தினைவித் தினநற் புனமுற் றகுறத்     திருவைப் புணர்பொற் ...... புயவீரா 
தெளியத் தெளியப் பவளச் சடிலச்     சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே 
கனகச் சிகரக் குலவெற் புருவக்     கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா 
கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்     கழியிற் குமரப் ...... பெருமாளே.

நெருப்பு, நீர், காற்று முதலிய பஞ்ச பூதங்கள் சேர்ந்ததும், (சத்துவம், ராஜதம், தாமஸம் என்ற) முக்குணங்கள் வைக்கப்பட்டதும், நிரம்பப் பொய்யானதும், ரத்தம் கூடியதுமான இந்தக் குடிசையாகிய உடலை விரும்பி, பயனற்றதும், கவலைகளுக்கு இடமானதும், மனக் குழப்பம் தருவதுமான பல நூல்களைக் கற்று, அந்நூல்களில் உள்ள பொருளைக் கொஞ்சமும் அறியாமல், கொஞ்சிப் பேசியும், உள்ளம் களித்தும், நெருப்பில் பட்ட மெழுகு போல் உருகியும், நெருங்கி உறவாடிக் கூடியும் பசப்புகின்ற கொடி போன்ற பெண்களின் கொடுமையிலும், கடுமையிலும், குவளை மலர் போன்ற கண்களின் ஓரப்பார்வையிலும் நிலை தடுமாறி நான் அலைச்சல் உறுவேனோ? தினை விதைக்கப்பட்ட நல்ல புனக்கொல்லையில் இருந்த குறப்பெண்ணான வள்ளியை அணைகின்ற அழகிய தோள்களை உடைய வீரனே, தெள்ளத் தெளியும்படி ஒப்பற்ற பிரணவத்தை செந்நிறமான சடையை உடைய சிவ பெருமானுக்கு உபதேசித்தவனே, தங்க மயமான சிகரங்களை உடைய சிறந்த கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படிக் கோபித்துச் சண்டை செய்த ஒளி வீசும் வேலைக் கையில் ஏந்தியவனே, கடலின் உப்பு நீர்ப் பரப்பு கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் திருவிடைக்கழி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

பாடல் 793 - திருவிடைக்கழி 
ராகம் -...; தாளம் -

தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்     தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான

இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்     றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென் 
றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்     டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர் 
குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்     பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின் 
குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்     குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே 
அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்     கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி 
அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்     தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே 
கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்     கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக் 
கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்     கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.

யாசிப்பவர்களுக்கு மிக்க இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று சொல்லும்படியான எனக்கு, இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து, ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வர, பெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின் குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து, ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில் துன்பப்படும் பிறப்பு என்ற கடலை நான் தாண்டி உய்ய, இனி அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக. அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை பொடிபட்டு உதிர, எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி* என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே, துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை, வேங்கை மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படி, கணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

பாடல் 794 - திருவிடைக்கழி 
ராகம் - ஸெளராஷ்டிரம் தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2

தனன தத்தனத் தனன தத்தனத்     தனன தத்தனத் ...... தனதான

பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்     பயனு மெப்படிப் ...... பலவாழ்வும் 
பழைய முத்தியிற் பதமு நட்புறப்     பரவு கற்பகத் ...... தருவாழ்வும் 
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்     பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும் 
புலன கற்றிடப் பலவி தத்தினைப்     புகழ்ப லத்தினைத் ...... தரவேணும் 
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்     சரவ ணத்தினிற் ...... பயில்வோனே 
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்     தழுவு பொற்புயத் ...... திருமார்பா 
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்     திறல யிற்சுடர்க் ...... குமரேசா 
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்     றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.

புகழப்படுகின்ற முத்தமிழ் நூல்களின் பொருளையும், உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும், எத்தன்மைத்தான பலதரப்பட்ட வாழ்வையும், தொன்று தொட்டு வரும் முக்திச் செல்வ நிலையையும், யாவரும் விரும்பிப் போற்றும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும், குற்றமற்ற புத்தியுடன் ராஜயோகத்தைப் பெற்று விளங்கும் அற்புதமான சிறந்த வாழ்வையும், ஐம்புலச் சேஷ்டைகள் நீங்கப்பெற உன் பலவகைப் பெருமைகளைப் புகழும் அறிவுப் பலத்தையும் நாவன்மையையும் நீ தந்தருள வேண்டும். (தக்ஷயாகத்தில் நடைபெற்ற) சண்டையின்போது தகர்க்கப்பட்டு அறுந்துபோன கைகளைக் கொண்ட அக்கினிதேவனது கைத்தலங்கள் (முருகனின் ஆறு பொறிகளின் சூடு தாங்காமல்) கங்கையில் விட்டுவிட இணைந்திருக்கும் சரவணப் பொய்கையில் பொருந்தி வளர்ந்தவனே, தனியாக வள்ளிமலைக்காட்டில் தினைப்புனத்தைக் காத்த மறக்குலத்து வள்ளியை தழுவிய அழகு புயங்களையும் திருமார்பையும் உடையவனே, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலையைப் பிளந்து பகிர்ந்த ஞானமும் வலிமையும் வடிவான சுடர்வேலை உடைய குமரேசனே, செழிப்பான பூஞ்சோலைகளில் குராமரங்கள் உள்ள அழகிய திருவிடைக்கழியில்* மேவும் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

பாடல் 795 - திருவிடைக்கழி 
ராகம் - ரேவதி தாளம் - அங்கதாளம் - 5 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தனனதன தத்தனத் தனனதன தத்தனத்     தனனதன தத்தனத் ...... தனதான

படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்     பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு 
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்     பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும் 
உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்     குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன் 
உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்     துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே 
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்     கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா 
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்     குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே 
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்     தடலனுச வித்தகத் ...... துறையோனே 
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்     தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே.

மண், நீர், தீ, வலிமை கொண்ட வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், பொய், கருவிலே பிறப்பு கூடும் அவஸ்தை, ஸாத்வீகம், ராஜஸம், தாமதம் என்ற முக்குணங்கள், வெகு காலமாய்க் கூடிவரும் நோய்கள், மூளை, ஜீவதாது, ரத்தம், எலும்பு, உடலில் தோன்றும் பசி, உள்ளிருக்கும் மாமிசம் இவை யாவும் கூடிய அறிவற்ற சிறு குடிசையைப் பெரிதெனப் போற்றி இந்த தேகத்தைத் தாங்கி மிகக் கீழானதாகப் பெறப்பட்ட இந்தப் பிறவியிலே ஞானம் கலந்த சிந்தை இல்லாமல் நாயினும் கீழான நான்அலைந்து திரியும் தன்மை நீதி ஆகாது. வீரக் கழல் அணிந்த உன் திருவடிகளை எனக்கு அளித்து, உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்தில் என்னையும் ஒருசேர வைத்து அருள் புரிய வேண்டுகிறேன். கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான சேவலைக் கொடியாக உடையவனே, அழகான தினைப்புனத்து வள்ளிக் கொடி படரும் புயமலைகளை உடைய, ஒளி பொருந்திய வேலாயுதனே, குமரனே, போரில் சீறிப் பாயும் பாம்பை அணியும் தந்தை சிவபிரானின் மெய்ப் புதல்வனே, மூன்று தமிழிலும் மகிழும் வித்தகனே, விசேஷமான அழகிய மத்தகத்தோடு கூடிய பெரிய மலை போன்ற கணபதியின் தந்தை சிவபிரானுக்கு குருவே, அதே கணபதியின் பராக்ரமம் மிகுந்த தம்பியே, ஞான நிலையில் விளங்குபவனே, விருக்ஷங்கள் பொருந்தி விளங்கும் தலமும், பூமியின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் தன்னிடம் வந்து வேண்டினால் அவர்களுக்கு முத்தியைத் தரும் தலமுமாகிய திருவிடைக்கழித் தலத்தில் அமர்ந்த பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

பாடல் 796 - திருவிடைக்கழி 
ராகம் - கல்யாணி தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதனனத் தனதான தனதனனத் தனதான     தனதனனத் தனதான ...... தனதான

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான     பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப் 
படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது     பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர் 
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி     யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன் 
உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற     உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே 
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு     திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத் 
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்     ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே 
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல     அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா 
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை     அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.

பழி பாவங்களுக்கு இருப்பிடமான உடலாகிய இந்தக் குடிசையை எடுத்து இழிவான சொற்களை சொல்லும் செயல்களை உடைய மாதர்கள் தருகின்ற மாயமான படுகுழியில் வீழ்ந்து நல்லபடியாக கரையேறும் வழி உண்டோ என்று தடவிப் பார்த்தும் தெரியாமல், பழங்கொள்கைகளையே ஆராயாமல் பிதற்றும் இவ்வுலக முழுமூடர்கள் திருந்து விருப்பமுடன் ஓதும் பல குழப்பம்தரும் நூல்களைத் தேடி ஒரு பயனையும் தெளிந்து அறியாமல் இறப்பதன்முன்பு, உன் தாமரைப் பாதங்களை விரும்பி உருகி, உள்ளத்தில் பக்திரசம் அமுதமாக ஊற உன் திருப்புகழை ஓதுவதற்கு அருள்வாயாக. முழங்கும் உப்புக் கடல் மொகு மொகு என்று கொந்தளிக்கவும், பெரிய மேருமலை திடு திடு என்று பொடிபட்டு இடிபடவும், பலவகை பூதகணங்கள் விதவிதமாக திமிதிமி என்று கூத்தாடவும், சண்டையிட்ட சூரன் மாமர உருவில் இருந்து நெறுநெறு என்று முறிந்து விழவும், பல தேவர்களும் ஜெய ஜெய என்று வெற்றி கோஷம் இடவும், கோபித்து எழுந்த வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அழகு நிறைந்திட்ட கடப்பமாலையை அணிந்தவனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே, வேலனே, வெற்றியைத் தருவதும், முழங்கி ஒலிப்பதும் நீல நிறமானதுமான மயில் வாகனத்தில் ஏறும் வீரனே, திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செங்கோடு, பழநிநகர், வல்லக்கோட்டை ஆகிய தலங்களில் வாழும் தலைவனே, திருவிடைக்கழித் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

பாடல் 797 - திருவிடைக்கழி 
ராகம் - ...; தாளம் -

தனத்த தானன தனதன தனதன     தனத்த தானன தனதன தனதன          தனத்த தானன தனதன தனதன ...... தனதான

பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக     நகைத்து வாமென அமளிய ருகுவிரல்          பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... வுறவாடிப் 
பிதற்றி யேயள விடுபண மதுதம     திடத்தி லேவரு மளவுந லுரைகொடு          பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் ...... கனமாலாய் 
முருக்கி னேரித ழமுதுப ருகுமென     வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை          முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் ...... பொருள்தீரின் 
முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு     மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற          முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ ...... அருள்தாராய் 
நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற     வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு          நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி ...... கொளும்வேலா 
நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி     புரத்தி லேநகை புரிபர னடியவர்          நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய ...... புதல்வோனே 
செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை     மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்          திருக்கை வேல்வடி வழகிய குருபர ...... முருகோனே 
சிறக்கு மாதவ முனிவரர் மகபதி     யிருக்கு வேதனு மிமையவர் பரவிய          திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.

திரண்டு பெருகியுள்ள செல்வத்தை உடையவர்கள் தம்மிடம் வந்தால், மிகவும் சிரிப்புடன் வாருங்கள் என்று படுக்கை அருகில் (வந்தவரின்) விரலைப் பிடித்து (அழைத்துக் கொண்டு) போய் அவர் தொடை தம் தொடை மீது நெருங்கிப் பட, உறவு மொழிகளைப் பேசி விளையாடி, பல அன்பு மொழிகளைப் பிதற்றி தாம் கணக்கு வைத்திருந்த பணம் முழுதும் தம் வசம் வந்து சேரும் வரை நல்ல இன்பமான வார்த்தைகளால் பகட்டுப் பேச்சுக்களைப் பேசி மிக்க சல்லாபத்துடன் அணைவார்கள். பெருத்த அன்பு பூண்டவர்கள் போல முருக்கம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும் என்று கூறி, காம லீலைகளில் பல விதங்கள் காட்டி மலை போல் பருத்த மார்பகங்களின் மீது சாய்ந்து கொள்ளும்படி மயக்கம் ஊட்டுபவர். பொருள் தீர்ந்துபோன பிறகு, முறுக்கும் திருப்புமாய் கோபக் குறி காட்டி உதையும் உதைத்து வசை மொழிகளைப் பேசும் நன்றி கெட்டவர்கள் ஆகிய விலைமாதர்களின் ஆணையால் செய்யும் செயல்களில் ஈடுபடும் கருத்து அற்றுப் போக, என்னைத் திருப்பி உனது இரண்டு திருவடி மலர்களைத் தொழும்படியாக திருவருளைத் தந்து அருள்வாய். நெருங்கி வந்த அசுரர்களின் கூட்டம் அழிபடக் கோபித்து, மயிலின் முதுகில் வேகமாய் வந்து, இந்தப் பூமியில் போர் செய்தவர்களாகிய அந்த அசுரர்களின் உயிரைப் பலி கொண்ட வேலனே, கைந்நகத்தால் பிரமனுடைய தலையை கிள்ளிப் பறித்த இறைவன், திரிபுரத்தில் (தீயெழச்) சிரித்த பரமன், அடியவர் நினைத்தாலே அருள் பாலிக்கும் சிவ பெருமான் பெற்ற பிள்ளையே. அகந்தை கொண்ட வேடர்கள் வளர்த்த ஒப்பற்ற வள்ளியை நறு மணம் வீசும் மலர்ப் படுக்கையின் மேல் அணைந்த, திருக்கை வேலுடன் திருவுருவம் அழகுள்ள குருபரனே, முருகனே, சிறப்புற்ற மகா தவசிகளும் இந்திரனும் ரிக்வேதம் வல்ல பிரமனும் தேவர்களும் போற்றிப் பரவும் திருக் குரா மரத்தின் அடி நிழலில் (திருவிடைக்கழியில்*) விளங்கிப் பொலியும் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

பாடல் 798 - திருவிடைக்கழி 
ராகம் - காபி தாளம் - சதுஸ்ர ரூபகம் - திஸ்ர நடை - 9 - எடுப்பு - அதீதம் வீச்சில் 1 தள்ளி

தனத்த தானன தனதன ...... தனதான

மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே 
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே 
கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே 
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும் 
தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா 
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா 
திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே 
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.

நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை (விரகத்தின் காரணமாக) கொதித்துச் சூடு தராமலும், வளர்த்த தாயும் சுற்றத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், காரணமாக (கருவைத்து) நட்பு கொண்டாடிய அயலார்கள் பழிச் சொல் கூறாமலும் (இருக்க வேண்டுமானால்) உன் (அடையாளமாய்) கடம்ப மாலையை இனி அனுப்பி வைக்க வேண்டும். கற்பக விருட்சத்தின் கீழ் வளர்ந்த, கொடிபோன்ற இடையை உடைய தேவயானையின் மணவாளனே, சாமர்த்தியசாலியே, மரகத மணியின் நிறம் கொண்ட மயில்மீது வரும் வீரனே, திருவிடைக்கழியில் உள்ள திருக்குராமரத்தின் அடிநிழல் தன்னில் வீற்றிருப்பவனே, திருக்கையில் வேல் ஏந்திய, வடிவம் அழகிய பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

பாடல் 799 - திருவிடைக்கழி 
ராகம் - ....; தாளம் -

தனன தத்தன தனதன தனன தத்தன தனதன     தனன தத்தன தனதன ...... தனதான

முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்     முறைம சக்கிகள் திருடிகள் ...... மதவேணூல் 
மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை     முகமி னுக்கிகள் கசடிகள் ...... இடையேசூழ் 
கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம ளியின்மிசை     கனியி தழ்ச்சுருள் பிளவிலை ...... யொருபாதி 
கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி     கவலை யற்றிட நினதருள் ...... புரிவாயே 
அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்     அணிக ழுப்பெற நடவிய ...... மயில்வீரா 
அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர     அவர வர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே 
சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்     திருவி னைப்புண ரரிதிரு ...... மருகோனே 
திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்     திருவி டைக்கழி மருவிய ...... பெருமாளே.

எப்போதும் தங்கள் மார்பகத்தைக் குலுக்குபவர்கள். வஞ்சனை மனம் உடையவர். வடித்து எடுக்கப்பட்ட இழிந்தவர்கள். முட்டாள்கள். உறவு முறை கூறி மயங்கச் செய்பவர்கள். திருடிகள். மன்மதனுடைய காம நூலில் கூறியவாறு பேச்சினால் ஏய்ப்பவர்கள். செருக்கு உடையவர். சிணுங்கி அழுகின்ற மனத்தை உடையவர்கள். தக்க சிரிப்புடன் முகத்தை மினுக்குபவர்கள். குற்றம் உடையவர்கள். இடுப்பில் சூழ்ந்துள்ள ஆடையைத் தளர்த்தி விடுபவர்கள். இளைஞர்களின் பொருளை அபகரித்து, படுக்கையில் கனி போன்ற தங்கள் வாயிதழில் உள்ள சுருள் பாக்கு வெற்றிலையில் ஒரு பாதியை புணர்ச்சி நேரத்தில் கொடுக்கும் கெட்ட நடத்தை உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) கண் மயக்கில் நான் வசம் அழியும் கவலை என்னை விட்டு ஒழிய உன் திருவருளைப் புரிவாயாக. கடல் தீப்பிடிக்க, வடக்கிலுள்ள (கிரவுஞ்ச) மலை பொடியாக, சமணர்களின் கூட்டம் வரிசையாக அமைக்கப்பட்ட கழுமரங்களில் ஏற (திருஞான சம்பந்தராக வந்து) நடத்திய மயில் வீரனே, அரன், திருமால், பிரமன் மூவரும் முன்பு வழிபட்டுப் போற்ற, அவர்கள் மேல் மிக்க அன்பு பூண்டு அவரவர்க்கு ஒப்பற்ற ஒரு பிரணவப் பொருளை உபதேசித்த பெரியவனே, (சிவதனுசு ஆகிய) வில் மொளுக்கென்று முறிந்து விழ, மிதிலை நகரில் ஜனகன் ஆகிய அரசன் அருளிய லக்ஷ்மி போன்ற சீதையை மணந்த (ராமன்) திருமாலின் அழகிய மருகனே, திரண்டுள்ள பலா, கமுகு மரங்கள் சொரிகின்ற தேன், வாழை இவை எல்லாம் வளர்கின்ற திருவிடைக்கழி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

பாடல் 800 - தான் தோன்றி 
ராகம் - ....; தாளம் -

தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன     தாந்தாந்த தத்ததன ...... தனதான

சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர்     தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே 
சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு     தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே 
வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்     வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல் 
வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை     வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய் 
வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்     வான்தோன்று மற்றவரு ...... மடிபேண 
மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்     வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித் 
தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்     சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா 
தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ     தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.

சூழ்ந்து நிகழும் துன்பம் தரும் வினைகள் ஒன்று கூடி நிலை பெறுவதற்கு இடமானதும், நீரால் வளருவதுமான தூணை ஒத்த இந்த உடலும் உலகிடையே தளர்ச்சி உற்று, கட்டு குலைந்து, நெருப்பில் நுண்ணிய சாம்பற் பொடியாகிவிடும் குற்றம் வாய்ந்த தன்மையை மனத்தினுள் நன்கு ஆய்ந்து உணராமல், விரும்பி விரைவுடன் சென்று நல்ல கல்வி நூல்களில் ஆழ்ந்து ஆய்ந்து அறிந்து நிரம்பப் பொருள் தேடவேண்டி, பொற் கலப்பையைக் கொண்டு வயலை உழுபவர்கள் போல, மனம் வேகும் தன்மையும் ஒழிந்து, வினை பெருகும் நிலைமையும் நீங்கி, (நற்கதி) விளையும்படியான தகைமையில், உனது நல்ல திருவடிகளைத் தொழ ஆண்டருள்க. வாழ்வுற்று மேலான செந்நெறி வாய்க்கப் பெற்று, ஆய்ந்த ஒழுக்கத்தில் உள்ள நல்ல தவசிகளும், விண்ணுலகத்தில் வாழும் பிறரும் உன் திருவடியைப் போற்ற, பொன் வளையல்களை அணிந்த மாதர்கள் (வள்ளி, தேவயானை) தாம் இருவரும் அணைந்துள்ள நல்ல புயமும் தோன்ற, ஆகாயத்தை அளாவும்படி மயிலின் மீது ஏறி, கீழே மிக ஆழ்ந்துள்ள கடலில் விழுந்து நெருங்கியிருந்த (எழு) கிரியில் வாழ்ந்த அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படி போர் செய்த கூரிய வேலனே. தான் தோன்றி* அப்பர் என்னும் திருநாமத்தை உடைய சிவபெருமான் (தேவியுடன்) குடி கொண்டிருந்து பெற்ற நல்ல குமரனே, தானே தோன்றி (சுயம்பு மூர்த்தியாய்) நிற்க வல்ல பெருமாளே. 
* தான்தோன்றி இப்போது 'ஆக்கூர்' என வழங்கப்படுகிறது. மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.