LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[951 -1000]

பாடல் 951 - கொடும்பாளுர்
ராகம் - ....; தாளம் -
தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
     தனதனனந் தத்தத் ...... தனதான
கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
     கடனபயம் பட்டுக் ...... கசடாகுங் 
கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
     கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும் 
அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
     றரவியிடந் தப்பிக் ...... குறியாத 
அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
     றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ 
கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
     கொடிமருவுஞ் செச்சைப் ...... புயமார்பா 
கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
     குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச் 
சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
     திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந் 
திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
     திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.
கலை வல்லோர் மதிக்கும் கல்வியிலும், கலியுக சம்பந்தமான தளைகளில் ஏற்படும் கடமைகளிலும் அடைக்கலம் புகுந்தது போல, பயனற்ற செயல்களாகிய சடங்குகளைக் கூறும் ஆறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் பங்கிட்டுக் கொண்டு, கலகல என்ற பெருத்த ஓசையுடன், வெறிபிடித்தது போல ஒருவரோடு ஒருவர் தாக்கும் அளவில்லாத பெரிய வாதத்துக்கு இடம் தரும் பல கலை நூல்களிலும் ஆசையை விட்டொழித்து, (அந்த வாதங்கள் எழுப்பும்) ஒலியிலிருந்து தப்பிப் பிழைத்து, சுட்டிக் காட்ட முடியாத அறிவு இன்னது என்பதை அறிந்து, அந்த ஞானப் பற்றுடன் சிறிது காலம் நிலைத்திருந்து, திருவருள் உபதேசம் எனக்குக் கிடைப்பது கூடுமோ? கொலைஞர்கள் என்று கருதப்பட்ட, பாமரர்களான, குறவர்களிடம் வளர்ந்த இளமை வாய்ந்த பச்சைக் கொடி போன்ற (வள்ளி நாயகி) தழுவும் வெட்சி மாலை அணிந்த புயத்தையும், மார்பையும் கொண்டவனே, கொடுமை வாய்ந்த நெடிய மாமரமாகி நெருங்கிவந்து போரிட்ட அசுரன் சூரன் அழிபட்டு, ஒலிக்கும் கடல் பொங்கி எழ, சக்கரவாளம் எனப்படும் மலை பிளவுபட, எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகளும் பத்துத் திசைகளிலும்* சிதற, ஏழு உலகங்களிலும், முறுக்கி விடப்பட்ட மயிலாகிய அழகிய குதிரையைச் செலுத்தி விட்ட செட்டி எனப் பெயர் கொண்ட வல்லவனே, கொடும்பாளூர்** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* எட்டுத் திசைகளோடு ஊர்த்துவம் - ஆகாயம், அதோகதி - பாதாளம் இவையும் சேர்ந்தன.
** கொடும்பாளூர் திருச்சிக்கு அடுத்த விராலிமலையிலிருந்து 3 மைலில் உள்ளது.
பாடல் 952 - கீரனூர்
ராகம் - ...; தாளம் -
தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன
          தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்
     நாத கீதந டிப்பிலு ருக்கவும்
          ஏவ ராயினு மெத்திய ழைக்கவு ...... மதராஜன் 
ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும்
     வீதி மீதுத லைக்கடை நிற்கவும்
          ஏறு மாறும னத்தினி னைக்கவும் ...... விலைகூறி 
ஆர பாரத னத்தைய சைக்கவு
     மாலை யோதிகு லைத்துமு டிக்கவும்
          ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக 
ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு
     மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும்
          ஆன தோதக வித்தைகள் கற்பவ ...... ருறவாமோ 
பார மேருப ருப்பத மத்தென
     நேரி தாகஎ டுத்துட னட்டுமை
          பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப் 
பாதி வாலிபி டித்திட மற்றொரு
     பாதி தேவர்பி டித்திட லக்ஷ¤மி
          பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு 
கீர வாரிதி யைக்கடை வித்ததி
     காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
          பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... மருகோனே 
கேடி லாவள கைப்பதி யிற்பல
     மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய
          கீர னுருறை சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
கருணை நிறைந்த முகத்துடன் சிரித்து வரவழைப்பதற்கும், ஒலி நிறைந்த இசையாலும், நடனத்தாலும் மனத்தை உருக்குதற்கும், யாராயிருந்த போதிலும் வஞ்சித்து அழைப்பதற்கும், காமனுடைய அம்பு போல தாக்குகின்ற கண்களைக் கொண்டு (வந்தவரை) மயக்குதற்கும், தெருப் பக்கத்தில் தலை வாசல் படியில் நிற்பதற்கும், தாறுமாறான எண்ணங்களை மனதில் நினைப்பதற்கும், விலை பேசி முடித்து, முத்து மாலை அணிந்ததும் கனத்ததுமான மார்பை அசைப்பதற்கும், பூ மாலை அணிந்துள்ள கூந்தலை அவிழ்த்து முடிப்பதற்கும், ஆடை நெகிழும்படி வேண்டுமென்றே அவிழ்த்து இடுப்பில் சுற்றுதற்கும், அதிக மோகம் கொண்ட ஆசை உள்ளவர்கள் போல தங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தை எடுத்துச் சொல்லுவதற்கும், மேலே விழுந்து மிக்க துக்கத்தை உண்டு பண்ணுதற்கும் வேண்டியதான வஞ்சனை வித்தைகளைக் கற்றுள்ளவர்களாகிய விலைமாதர்களின் சம்பந்தம் நல்லதாகுமா? கனத்த மேரு மலையை மத்தாகத் தேர்ந்து எடுத்து, உடனே அதை (பாற்கடலில்) நாட்டி, உமையைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக விளங்குவதும், படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்ற) பாம்பை (அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி, ஒரு பாதியை வாலி பிடிக்க, மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்திட, லக்ஷ்மி, பாரிஜாதம் முதலான பல சித்திகளும், அரும் பொருட்களும் (பாற்கடலில் இருந்து) வெளிவரும்படி, பாற்கடலைக் கடைவித்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தருளிய கிருபா மூர்த்தியாகிய, பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகனே, அழிவு இல்லாத குபேரன் நகராகிய அளகாபுரி போல, பல மாடக் கூடங்களும் மலர்ச் சோலைகளும் நிறைந்த கீரனூரில்* வீற்றிருந்து, வேல் ஏந்தி அனைவருக்கும் திருவருள் புரியும் பெருமாளே. 
* பழநிக்கு வடக்கே 10 மைலில் தாராபுரம் செல்லும் வழியில் உள்ளது.
பாடல் 953 - குளந்தைநகர்
ராகம் - ....; தாளம் -
தனந்த தானனத் தனதன ...... தனதான
தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம் 
தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர் 
பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப் 
பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல் 
வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே 
மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே 
குரும்பை மாமுலைக் குறமகண் ...... மணவாளா 
குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.
அலைபோலப் புரளுகின்ற நீண்ட கூந்தல், வில்லைப் போன்ற நெற்றி, ஆலகால விஷத்தைப் போன்ற கண்கள், காண்போர் மனத்தைக் கவரும் பெரிய மார்பகங்கள், உடுக்கை போன்ற சுருங்கிய இடுப்பு இவைகளைக் கொண்ட அழகிய விலைமாதர்கள் மீதுள்ள நிரம்பிய மோகம் என்னும் இருள் நிறைந்த பெரிய குழியில் அகப்பட்டு, யமனுக்கு அஞ்சி உயிர் நடுங்க நான் தவிக்காதபடிச் செய்வாய். நீ எனக்கு வரம் தராவிட்டால் வேறு எவர் தான் கொடுப்பார்கள்? மனம் மகிழ்ந்து மயிலின் மீது ஏறி பூமியை வலமாகச் சுற்றி வந்தவனே, தென்னங் குரும்பை போன்ற சிறந்த மார்பகங்களைக் கொண்ட குறக் குலத்துப் பெண் வள்ளியின் கணவனே, குளந்தை என்று விளங்கும் பெரியகுளத்தில்* உள்ள கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெரியகுளம் மதுரை மாவட்டத்தில் உள்ளது.
பாடல் 954 - தனிச்சயம்
ராகம் - ....; தாளம் -
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான
இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
     கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம் 
எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
     தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி 
அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
     தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான் 
அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
     டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ 
கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
     கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங் 
குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
     குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே 
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
     தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ் 
சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
     தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.
சுருட்டிய வெற்றிலையைப் (பாக்குடன்) கொடுத்து படுக்கையில் இருக்க வைத்து, பயனற்ற முட்டாள்களுக்கு இன்பம் தரக்கூடிய பறவைகளின் குரல்களை தொண்டையிலிருந்து வெளிவிட்டு காமப் பற்றை எழுப்பியும், மை பூசப்படும் கயல் மீன் போன்ற கண்ணிலும் கழுத்திலும் முத்தம் தந்து அணைத்தும், எடுத்தும், வாயிதழைக் கடித்தும், மார்பிடத்தே தாவியும், அலைச்சல் உற்று நாணம் இல்லாமல், பெண்குறியைத் தொட்டு, மிக உழைத்து, துன்பம் அடைந்து, உயிர் களைத்துப் போகும் அளவுக்கு, மிகவும் தவிப்பு அடைந்து, உடல் இளைத்து, மார்பகங்களை மிகத்தழுவி, அலுத்துப் போகும் இந்த பிறப்பு இனியாவது நீங்காதோ? கொலை செய்வதில் பெருமை கொள்ளும் அரக்கர்களை கலங்கச் செய்தவனே, சேவல் கொடியைக் கையில் ஏந்தியவனே, அழகிய தலங்கள் தோறும் உன்னைப் பாடும் நோக்கத்தைக் கொண்ட நல்ல திருப்புகழில் மிக மேம்பட்ட கவி பாடும் குருஸ்தானத்தில் என்னை நிலைக்க வைத்துக் கட்டளை இட்டு அருள் புரிந்தவனே, தலையில் சுமை போல் பாரமான சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும், இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவர்க்கும் ஞானபோதகனே, சாமர்த்தியத்தில் முதல் இடத்தில் இருப்பவனே, மேற்குத் திசைக்குள் உள்ள உத்தமமான தனிச்சயம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் (சிவனாரின்) பிள்ளைப் பெருமாளே. 
* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது. பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.
பாடல் 955 - தனிச்சயம்
ராகம் - சங்கரானந்தப்ரியா தாளம் - ஆதி
தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
     கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
          தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி 
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
     டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
          டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண் 
டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
     பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
          றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும் 
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
     துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
          கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே 
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
     டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
          டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ 
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
     டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
          செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள் 
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
     திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
          தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா 
தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
     படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
          றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே.
எல்லாரும் புகழும்படி மிக திடகாத்திரமாக இருந்த உருவம் வதங்கி, கறுப்பாக இருந்த தலை மயிரும் வெளுத்து பஞ்சு போல் ஆகி, நன்றாக ஒலிகளைக் கேட்டிருந்த காது செவிடாகி, ஒளி பொருந்திய கண்கள் குருடாகி, பலத்துடன் அழுத்தமாயிருந்த வெள்ளை நிறம் கொண்ட பல்லும் நழுவி விழுதலுற்று, நான் என்ற இறுமாப்பு நிலை அழிந்து, மூச்சு வாங்கி, கிண் கிண் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகி, வேதனையுடன் தலை கிறுகிறு என்று பித்தமும் மேல் கொண்டு எழ, இரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக உடல் வெளுத்து, மனம், வாக்கு, செயல் இவைகள் ஒரு அளவு கடந்து ஒழுங்கீனமான நிலையை அடைந்து, சேர்ந்துள்ள மாதர்களும் எதிரே வந்து இகழ்ந்து பேச, யாவரும் (இவன்) அழுக்கன் என்று சொல்லும்படியாக உணர்ச்சி குறைந்து மரத்துப் போய், நாடி துடிப்பதும் கொஞ்சமே இருக்கின்றது, அது கூட இல்லை என்றே சொல்லலாம், என்னும் கஷ்டமான நிலையை அடைந்து, உயிர் வேதனைப்படும் அந்த நாளில் நீ எனக்கு அருள் புரிவாயாக. திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி யென்ற இத்தனை ஒலிகளையும் எழுப்பிக்கொண்டு, இடக்கையால் கொட்டும் தோற்கருவி துந்துமி, பேரிகை வகைகள் முழக்கமிட, போர்க்களத்தில் அசுரர்கள் கலக்கம் கொள்ள, சில பேய்கள் மண்டை ஓட்டை கையில் எடுத்து ஏந்தி இரத்தத்தைக் குடிக்க, கூட்டமான பருந்துகள் பிணங்களின் குடல்களைப் பிடுங்க, களிப்புறும் நரிகள் மாமிசத்தை சிந்திச் சிதற, சண்டை செய்யும் வேலனே, பெருமை வாய்ந்த மயில் மீதும், வயலூர் என்னும் தலத்திலும், அடியார்களின் அன்பான உள்ளத்திலும், தகுதி நிறைவுற்ற கொங்கு நாட்டில் உள்ள தனிச்சயம்* என்னும் தலத்திலும், இன்பத்துடன் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது.பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.
பாடல் 956 - மதுரை
ராகம் - ....; தாளம் -
தனதன தனனத் தந்த தானன
     தனதன தனனத் தந்த தானன
          தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான
அலகில வுணரைக் கொன்ற தோளென
     மலைதொளை யுருவச் சென்ற வேலென
          அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டா£க 
அடியென முடியிற் கொண்ட கூதள
     மெனவன சரியைக் கொண்ட மார்பென
          அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ 
கலகல கலெனக் கண்ட பேரொடு
     சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
          கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங் 
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
     மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
          கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென் 
இலகுக டலைகற் கண்டு தேனொடு
     மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்
          இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே 
எழுதென மொழியப் பண்டு பாரதம்
     வடகன சிகரச் செம்பொன் மேருவில்
          எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ 
வலம்வரு மளவிற் சண்ட மாருத
     விசையினும் விசையுற் றெண்டி சாமுக
          மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு 
மரகத கலபச் செம்புள் வாகன
     மிசைவரு முருகச் சிம்பு ளேயென
          மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.
கணக்கற்ற அசுரர்களைக் கொன்று அழித்த உனது தோளைப் புகழ்ந்தும், கிரெளஞ்ச மலையைத் தொளை படும்படி ஊடுருவிச் சென்ற உனது வேலைப் புகழ்ந்தும், அழகிய பொன்னாலாகிய தண்டைகள் சூழ்ந்துள்ள தாமரைபோன்ற உனது திருவடியைப் புகழ்ந்தும், வெண்தாளியினது தண்மையான பூவை அணிந்த உனது திருமுடியைப் புகழ்ந்தும், வேட்டுவச்சியான வள்ளியை அணைந்த மார்பு என்று உனது மார்பைப் புகழ்ந்தும், ஆறுமுகம் என்று உனது ஆறு திருமுகங்களைப் புகழ்ந்தும், உள்ளம் நெகிழ்ந்து என்னுடைய எலும்புகள் எல்லாம் உருகும்படியான அன்பு எனக்குக் கிட்டாதோ? கலகலகலவென்று பேரொலியுடன் கண்ட பேர்களுடன் கூச்சலிட்டு சமயக் குற்றங்களை எடுத்துப் பேசி வாதம் செய்வோர்கள் உரக்கக் கத்தும் பல தவறுகள் மிகுந்த, கொதிக்கும் கோபம் நிறைந்த, சொற்களால் ஆகிய பொய்ச் சாத்திர நூல்கள் ஒழிந்து, என் மீது ஐந்து பூதங்களின் செயல்களும் அடங்கி நீங்க, சொல்லப் போனால், ஓய்தல் இல்லாத அந்தக்கரணமாகிய மனம் ஒடுங்கி ஒழிய, நீ எனக்கு உபதேசித்து அருளிய ஞானத்துக்கு உள்ள பெருமைதான் எத்தனை ஆச்சரியமாய் உள்ளது. நல்ல விளக்கமுடைய கடலை, கற்கண்டு, தேன் இவைகளுடன் ருசிகரமான தினை மாவு, வெல்லப் பாகு இவற்றைக் கலந்து மகிழ்ச்சியுடன் உண்ணும் விநாயகர் ஒற்றைக் கொம்பால் வியாச முனிவர் எழுதும்படி வேண்ட, முன்பு, பாரதக் கதையை வடக்கே உள்ளதும் கனத்த உச்சிகளை உடையதுமான செம்பொன் மயமான மேரு மலையில், எழுதிய பவள மலையைப்போன்ற கணபதி, அன்று தந்தையாகிய சிவபெருமானைச் சுற்றி வந்து வலம் வரும் நேரத்துக்குள், சூறாவளியின் வேகத்திலும் வேகமாக எட்டு திசையிடங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்து, பாம்பை உண்டு உலாவுகின்றதும், பச்சைத் தோகையைக் கொண்டதும், வலிமையான பக்ஷியுமாகிய மயில் வாகனத்தின் மீது வந்த முருகனே, சிங்கத்தை அடக்கவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள்ளே (சரபப் பக்ஷியே*) என்று புகழ்ந்து, மதுரைத் தலத்தில் வழிபட்டு தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே. 
* நரசிம்மராக வந்த விஷ்ணு ஹிரண்யனின் வதைக்குப் பின் வெறி அடங்காமல் திரிந்தார். சிவபிரான் தமது இன்னொரு அம்சமாகிய சரபப்பக்ஷியாக வந்து நரசிம்மரின் ஆணவ ஆட்டத்தை அடக்கினார். முருகனும் அதுபோன்றே ஒரு சிவ அம்சம்.
பாடல் 957 - மதுரை
ராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி 2 களை - எடுப்பு - 3/4 இடம்
தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
     ஆறுமுக வித்த ...... கமரேசா 
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
     ஆரணமு ரைத்த ...... குருநாதா 
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
     சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா 
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
     வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே 
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்
     யாவரொரு வர்க்கு ...... மறியாத 
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
     மாமயில் நடத்து ...... முருகோனே 
தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
     சேரமரு வுற்ற ...... திரள்தோளா 
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
     வேல்கொடு தணித்த ...... பெருமாளே.
யானைமுக விநாயகனுக்கு நேராகப் பின்தோன்றிய அன்பனே, ஆறு திருமுகங்களை உடைய ஞான வித்தகனே, தேவர்களின் கடவுளே, ஆதிதேவன் சிவபிரானுக்கும் வேத முதல்வன் பிரமனுக்கும் வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, அசுரர் குலத்தையே வாளினால் வெட்டி வீழ்த்திய நிறைந்த சாமர்த்தியம் மிகுந்த பராக்கிரமசாலியே, உன் இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில் நல்வாழ்வோடு நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக. மேல் ஏழு உலகங்களுக்கும்* திருமாலுக்கும், பிரம்மனுக்கும் வேறு யாருக்குமே அறியமுடியாத சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர் சிவனும், பார்வதியும் மகிழ அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகனே, தேன் மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில் மான் ஒத்த கண்ணாள் குறத்தி வள்ளி உன்னைச் சேரும்படியாக அவளை அணைத்திட்ட திரண்ட புயங்களை உடையவனே, தேவர்களது மனத்தில் சூரனைப் பற்றித் தோன்றிய அச்சத்தை உன் வேலாயுதத்தால் போக்கிய பெருமாளே. 
* மேல் ஏழு உலகங்கள் - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹலோகம், தபலோகம், ஜனலோகம், சத்யலோகம்.
பாடல் 958 - மதுரை
ராகம் - தேவ மனோ.ரி தாளம் - ஆதி
தனன தனந்தன தனன தனந்தன
     தனன தனந்தன ...... தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
     பவனி வரும்படி ...... யதனாலே 
பகர வளங்களு நிகர விளங்கிய
     இருளை விடிந்தது ...... நிலவாலே 
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
     வரிசை தரும்பத ...... மதுபாடி 
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
     மகிழ வரங்களு ...... மருள்வாயே 
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
     அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே 
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
     குறமக ளிங்கித ...... மணவாளா 
கருதரு திண்புய சரவண குங்கும
     களபம ணிந்திடு ...... மணிமார்பா 
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
     யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.
யாவரும் துதிக்கும் நீண்ட கதிர்களை உடைய சூரியன் உலகுளோர் விரும்பும்படி உலா வரும் காட்சிதானோ (இந்தத் திருவடி) என்றும், சொல்லத்தக்க வளப்பங்களுக்கு ஒப்பாக விளங்குவதும், இருளைப் போக்கி உதிக்கும் நிலவொளிதானோ (இந்தத் திருவடி) என்றும், மலைகள் தோறும் எங்கும் உலாவி நிறைந்து வரிசையான காட்சியைத் தரும் உன் திருவடியை நான் பாடி, சொல் வளம், பொருள் வளத்துடன் செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ, அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக. ஹர ஹர, அழகா, ஆறுமுகனே, என்று உன்னைத் தியானித்து, அடியார்கள் வணங்க மகிழ்ச்சி கொள்பவனே, ஹிமவானின் மகளான பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற அம்மை உமாதேவி பெற்ற பிள்ளையே, குறமகள் வள்ளிக்கு இனிமையான மணவாளனே, நினைப்பதற்கு அருமையான திண்ணிய புயங்களை உடைய சரவணபவனே, குங்குமமும் சந்தனமும் சேர்த்து அணியும் அழகிய மார்பனே, பொன் மாடங்கள் நிறைந்த நகராகிய மதுரை என்ற செழிப்பான தலத்தில் விளங்கி வீற்றிருந்து அருளும் பெருமாளே. 
பாடல் 959 - மதுரை
ராகம் - ....; தாளம் -
தனத்த தாத்தன தனதன தனதன
     தனத்த தாத்தன தனதன தனதன
          தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதனத் தனதான
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
     ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்
          பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் ...... அளவளப் பதனாலே 
படுக்கை வீட்டுனு ளவுஷத முதவுவர்
     அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்
          பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென ...... அவரவர்க் குறவாயே 
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
     முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்
          அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு ...... நரகினிற் சுழல்வேனோ 
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்
     விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை
          அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து ...... கதிதனைத் தருவாயே 
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
     குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு
          தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த ...... முருகவித் தகவேளே 
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
     திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
          சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே 
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
     பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி
          செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை ...... மணமதுற் றிடுவோனே 
திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்
     கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
          திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும் ...... அறுமுகப் பெருமாளே.
பொருள் கொடாவிட்டால் சில பேர்களைப் பழிப்பார்கள். சில பேர்களை வாழ்த்துவார்கள். ஒருவர் வாயில் வைத்த வெற்றிலைச் சுருளை மற்றொருவர் கையில் கொடுத்து உதவுவார்கள். பணத்தின் மேலேயே நோக்கமாக இருப்பார்கள். (பொருள் கிட்டினால்) பிணத்தையும் தழுவுவார்கள். கலந்து பேசிக் கொண்டிருக்கும் போதே படுக்கை அறைக்குள் சென்று மருந்திடுவார்கள். அணைத்துக் கொள்வார்கள். கார்த்திகைப் பண்டிகை வருகின்றது, (செலவுக்குப் பொருள் வேண்டும்) என்று பொருளைப் பறிப்பார்கள். மாதத்துக்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்று வந்த ஒவ்வொருவரிடமும் உறவு பாராட்டுபவர்களாய் அழைப்பார்கள். வருபவருடைய சொத்து அனைத்தையும் பறிக்கக் கருதுவார்கள். (பொருள் கொடாதவரை) விரட்டி ஓட்டி விடுவார்கள். (இவ்வாறு) குடியை அழிக்கும் விலைமாதர்களின் உபத்திரவத்தால், (மற்றொரு மாட்டுடன்) பிணைத்துக் கட்டப்பட்ட எருது போல காம மயக்கம் என்னும் நரகத்தில் சுழற்சி அடைவேனோ? பயனற்றுக் கேடுறுவதாய் பெருங் குழியில் விழும் ஆபத்தினின்றும் என்னைக் காப்பாற்றி, உன் அடியாருடன் என்னைச் சேர்த்து ஆண்டு கொள்ளும் வகைக்கு உன் மனதில் அருள் கூர்ந்து நற்கதியைத் தருவாயாக. விரிவாகத் தழைத்துள்ள சாஸ்திரங்களில் மறைபொருளாக உள்ள தத்துவங்களை, ஞானம் நிறைந்த குரு மூர்த்தி போல விளங்கி, சைவ சித்தாந்தங்களை முறையோடு தந்தையாகிய சிவ பெருமானுடைய ஒப்பற்ற திருச் செவியில் உபதேசித்த முருகனே, ஞானியே, செவ்வேளே, தன்னுடைய சாமர்த்தியத்தால் புகழ் பெற்ற ஜானகியை துன்பத்துக்கு ஆளாக்கி திருடிச் சென்ற அரக்கனாகிய ராவணனுடைய உடலைத் துண்டாக்கி, வெற்றி நிலையில் அயோத்தி நகருக்குத் திரும்பி வந்தவனாகிய (ராமனாம்) திருமாலின் அழகிய மருமகனாய் அன்பு கூர்ந்தவனே, செழுமை வாய்ந்த வேலாயுதத்தினால் அசுரர்களுடைய உடல்களைப் பிளக்கும்படிச் செலுத்திய பின்னர், தேவர்களை அவர்களின் பொன்னுலகத்துக்கு அனுப்பி வைத்து, நெருங்கி நின்ற, தேவர்கள் தலைவனான இந்திரனுடைய மகளான, தேவயானையை திருமணம் செய்து கொண்டவனே, (திருஞான சம்பந்தராக வந்த உனது) சாமர்த்தியத்தால் பல சமணர்களை எதிர் எதிராக கழுமரங்களில் ஏற வைத்த அற்புத நிகழ்ச்சியை இன்பகரமாக நடத்தி, (தத்தம்) பிழை திருந்திய நிலையினராய் ஆக்கிப் பின், மதுரையில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
பாடல் 960 - மதுரை
ராகம் - ....; தாளம் -
தான தானதன தத்ததன தத்ததன
     தான தானதன தத்ததன தத்ததன
          தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான
சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
     மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ
          தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ...... தொங்கலாரஞ் 
சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு
     வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி
          சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச் 
சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை
     யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி
          சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ...... பங்கினூடே 
தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை
     பாவ மானபிற விக்கடலு ழப்பவனை
          தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது ...... மெந்தநாளோ 
வாத வூரனைம தித்தொருகு ருக்களென
     ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை
          வாசி யாமெனந டத்துவகை யுற்றரச ...... னன்புகாண 
மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை
     யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ்
          மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே 
வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி
     பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற
          வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ...... கொண்டசீலா 
வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு
     ராம ¡£ணமயி லொக்கமது ரைப்பதியின்
          மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.
குளிர்ந்த மணம் பொருந்திய மலர் அணிந்த கூந்தலை அலங்கரித்து, முகத்தில் உள்ள மயக்குவதான வேல் போன்ற கண்களைச் சுழற்றி, புன் சிரிப்பு முத்துப் போன்ற பற்களினின்று தோன்ற, தேமல் படர்ந்த மார்பகத்தில் உள்ள இளமை விளங்கும் மலை பொன்ற மார்பகங்களின் மீது பளபள என்று விளங்கும் முத்து மாலை சேர்ந்துள்ள சித்திரப் பதுமையோ என்னும்படி உடலை மினுக்கி, அதிக காமப் பற்றையும் நட்பையும் உண்டாக்கி, அரையில் கட்டி உள்ள கோடுகள் கொண்ட புடவையை கணுக்கால் அளவு தொங்கும்படி விட்டு, நடந்துவந்து, தோகை விளங்கும் மயிலின் இனமாம் என்று சொல்லும்படி, வந்தவர்களை விரட்டியும், நடித்தும் தங்கள் வலையில் வீழ்ந்த பேர்வழிகளை தம்மை இரந்து வேண்டும்படியான வழிக்குக் கொண்டுவர முயற்சித்து, இறப்பதற்கே நோயும் பிணியும் வரும்படிச் செய்து துன்பம் உண்டு பண்ணுபவர்களாகிய விலைமாதர்கள் பால், பாய்ந்து, காமத்தில் மூழ்கி, அறிவு கெட்டு துன்பம் அடைந்தவனை, பாவத்துக்குக் காரணமான பிறவிக் கடலில் உழல்பவனாகிய என்னை, மாலைகள் விளங்கும் திருவடிப் பத்தியில நீ இருத்தி வைப்பதும் என்றைக்கோ? திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகரைக் குறிக் கொண்டு ஒரு குரு மூர்த்தியாக நின்று (முக்திக்கு வழிகளான சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்தும், நரிகளின் கூட்டத்தை குதிரைகளாம் என்னும்படி திருவிளையாடலில் மகிழ்ச்சி பூண்டு பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட பொன்னாடையைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு மன்னனின் முன்பு சிரித்தும், வைகையாற்றங்கரை மீது கூத்தாடியும், (ஆற்றில் அணைகட்ட) மண் சுமந்து மகிழ்வுற்றும், மாது வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டும் விளையாடிய பித்தனாகிய சிவ பெருமான் பெற்றருளிய கந்த வேளே, வேதம் ஓதும் நன் மக்கள், பொன்னுலகத் தேவர்கள், தவசிகள், சித்தர்கள், மிக்க பெருமை வாய்ந்த ஒழுக்கம் நிறைந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டுக் கூச்சலிட, வேலைச் செலுத்தி அசுரர்களின் கூட்டம் இறக்கும்படி சிரித்த தூயவனே, (அவுணர்களால் கவரப்பட்ட) வேதத்தை மீட்டுத் தந்த** தாமரை போன்ற கண்களை உடையவரும், உடல் பச்சை நிறமுடையவரும் ஆகிய ராமர் பெற்ற மயில் போன்ற பெண்களான தேவயானை, வள்ளி இவர்கள் இருவருடன் மதுரை நகரில் வீற்றிருந்து வாழ்கின்றவனே, தேவர்களும், ஜீவன் முக்தர்களும், சிவனடியார்களும் வணங்குகின்ற தலைவனே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கி கடலுள் மறைந்தான். திருமால் மச்சாவதாரம் எடுத்து சோமுகனைக் கொன்று வேத நூல்களை மீட்டார்.
பாடல் 961 - மதுரை
ராகம் - ....; தாளம் -
தனனத் தந்தன தந்தன தனதன
     தனனத் தந்தன தந்தன தனதன
          தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
     யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி
          பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே 
புகலச் சங்கிசை கண்டம தனிலெழ
     உருவச் செந்துவர் தந்தத ரமுமருள்
          புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே 
பருகித் தின்றிட லஞ்சுக மெனமன
     துருகிக் குங்கும சந்தன மதிவியர்
          படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே 
பலருக் குங்கடை யென்றெனை யிகழவு
     மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு
          பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ 
திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
     வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்
          சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு 
திரமிற் றங்கிய கும்பக னொருபது
     தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு
          சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே 
மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்
     சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை
          மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே 
வடவெற் பங்கய லன்றணி குசசர
     வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்
          மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.
புருவமாகிய வில்லை ஏந்தி இரண்டு கண்களாகிய அம்புகளைத் தொடுத்தெறிய, மார்பகங்கள் ஆகிய இரண்டு மத யானைகள் சண்டை செய்ய, முத்தத்தைத் தருகின்ற இனிமை வாய்ந்த உபசார வழிகளாலே, பேசும்போது சங்கின் ஒலி போன்ற சப்தம் கழுத்தில் (புட் குரலாக) உண்டாக, நிறம் செம்மை வாய்ந்த பவளம் போன்ற வாயிதழ் தருகின்ற எழில் வாய்ந்த தாம்பூல எச்சில் சிலவற்றைக் கொடுக்க (உணர்ச்சி) எழும் மனதால், (அந்த எச்சிலைக்) குடித்து உண்ணுதல் நல்ல சுகமாம் என்று மனம் உருகி, குங்குமமும் சந்தனமும் அதிக வேர்வையினால் கலந்து படிய, களிப்பையும் இன்பத்தையும் தருகின்ற புணர்ச்சித் தொழிலாலே, நான் பலருக்கும் கீழானவன் என்று என்னை இவ்வுலகம் இகழும்படியாக, காம மயக்கத்தைத் தருகின்ற அரிய (விலை) மாதர்களை மிக்க பலமாக நம்பிப் பிடித்துக் கொண்டுள்ள தீயோனாகிய நானும் உனது திருவடியைப் பணிய மாட்டேனோ? லக்ஷ்மியாகிய சீதையை அழைத்துக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியம் என்னும் காட்டில் வந்த பொழுது, பயத்தோடு வந்து உலவிய (மா¡£சனாகிய) பொன்மானின் உடல் பாணத்தால் சிதறி அழியவும், துஷ்டர்களான கொடிய கரன், திரிசிரன்* என்னும் அசுரர்களையும், வலிமை கொண்டிருந்த கும்பகர்ணனையும், பத்துத் தலைகளைப் பெற்று தேவர்களை வென்றவனுமான ராவணனையும், (கோதண்டம் என்னும்) வில்லால் கொன்ற திருமாலின் நல்ல உள்ளம் மகிழ்கின்ற மருகனே, (வாசனை கொண்ட) மருக் கொழுந்தைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய உமா தேவி, சிவபெருமானுக்குத் தனது அன்பைத் தருகின்ற அம்பிகை, கெளரி, இமய மலை அரசன் பெற்ற சங்கரி தனது கருணையைக் காட்டும் முருகோனே, வடக்கே உள்ள இமய மலைக்கு அங்கே சமீபத்தில் உள்ள அழகிய தர்ப்பைகள் வளர்ந்துள்ள சரவணப் பொய்கையில் முன்பு வளர்ந்த தாமரை போன்ற திரு முகத்தை உடையவனே, தமிழ் வளர்ந்த மதுரையில் சங்கிலி** என்னும் மண்டபத்தில் வீற்றிருப்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* சூர்ப்பனகையின் சகோதரர்களான கரன், தூஷணன், திரிசிரன் என்ற மூவரும் தண்டகாரண்யத்தில் அவளது காதும், மூக்கும் லக்ஷ்மணனால் வெட்டப்பட்டபோது உதவிக்கு வந்தனர். அவர்களில் இருவரைக் கொன்றது ராமபாணம்.
** இது இப்போது கிளி மண்டபம் என வழங்கும்.
பாடல் 962 - மதுரை
ராகம் - ....; தாளம் -
தனன தான தானத் தனந்த
     தனன தான தானத் தனந்த
          தனன தான தானத் தனந்த ...... தனதான
முகமெ லாநெய் பூசித் தயங்கு
     நுதலின் மீதி லேபொட் டணிந்து
          முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர் 
முதிரு மார பாரத் தனங்கள்
     மிசையி லாவி யாய்நெக் கழிந்து
          முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச் 
செகமெ லாமு லாவிக் கரந்து
     திருட னாகி யேசற் றுழன்று
          திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல் 
தெளியு ஞான மோதிக் கரைந்து
     சிவபு ராண நூலிற் பயின்று
          செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும் 
அகர மாதி யாம க்ஷரங்க
     ளவனி கால்வி ணாரப் பொடங்கி
          அடைய வேக ரூபத் திலொன்றி ...... முதலாகி 
அமரர் காண வேயத் தமன்றில்
     அரிவை பாட ஆடிக் கலந்த
          அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே 
சகல வேத சாமுத் ரியங்கள்
     சமய மாறு லோகத் ரயங்கள்
          தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம் 
தவறி லாம லாளப் பிறந்த
     தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
          தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.
முகம் முழுமையும் வாசனைத் தைலத்தைப் பூசியும், விளங்கும் நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டும், வாசனை உள்ள பூ மாலையை கூந்தலில் அணிந்து கொண்டும் உள்ள அழகிய மாதர்களின் முற்றினதும் முத்து மாலை அணிந்தனவும் கனத்ததுமான மார்பகங்களில் உயிராய் (உள்ளம்) நெகிழ்ந்து அழிந்து எப்போதும் காம மயக்கத்தால் வசப்பட்டு நான் அலைந்து பொருள் தேடி, உலகம் முழுதும் உலவித் திரிந்தும், (பிறரிடமிருந்து) ஒளித்தும், திருட்டுத் தொழிலனாகி சற்று அலைந்து திமிர்பிடித்து அங்கும் இங்கும் ஓடிப் பறந்து திரியாமல், தெளிவைத் தரும் ஞான நூல்களை ஓதி ஒலித்தும், சிவ புராண நூல்களில் பயின்றும், மனம் நெருங்கிப் பொருந்துமாறு உன் திருவடிகளை அன்பு கூர்ந்து தந்தருள வேண்டும். அகரம் முதலான (51)* அக்ஷரங்கள், மண், காற்று, ஆகாயம், நிறைந்த நீர் இவைகளுடன் நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் எல்லாம் கூடி ஓர் உருவமாக அமைந்து (கூத்த பிரானாகிய நடராஜப் பெருமானாகி), முதற் பொருளாக விளங்கி, தேவர்கள் தரிசிக்க (தில்லைப்) பொன்னம்பலத்தில் பார்வதி தேவி பாட அங்கு ஆடி விளங்கிய மலம் அற்றவராகிய சிவபெருமான் முன்பு பெற்றருளிய முருகனே, எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞான சம்பந்தனே, பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே. 
* கோல் எழுத்துக் காலத்திலும், வட்டெழுத்துக் காலத்திலும் தமிழில் 16 உயிர்களும் 35 மெய்களும் சேர்ந்து 51 எழுத்துக்கள் இருந்தன. சதுர எழுத்து காலத்தில்தான் தமிழுக்கு 12 உயிர்களும் 18 மெய்களும் சேர்ந்து 30 எழுத்துக்களும் - அவற்றுக்கு உரிய உயிர்மெய் எழுத்துக்களும் - இருப்பதாக அறிஞர்கள் வகுத்தார்கள்.
பாடல் 963 - மதுரை
ராகம் - ....; தாளம் -
தானத்தன தானன தானன
     தானத்தன தானன தானன
          தானத்தன தானன தானன ...... தனதான
ஏலப்பனி நீரணி மாதர்கள்
     கானத்தினு மேயுற வாடிடு
          மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும் 
ஏமக்கிரி மீதினி லேகரு
     நீலக்கய மேறிய னேரென
          ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச் 
சோலைக்குயில் போல்மொழி யாலுமெ
     தூசுற்றிடு நூலிடை யாலுமெ
          தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும் 
சோமப்ரபை வீசிய மாமுக
     சாலத்திலு மாகடு வேல்விழி
          சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ 
ஆலப்பணி மீதினில் மாசறு
     மாழிக்கிடை யேதுயில் மாதவ
          னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன் 
ஆதித்திரு நேமியன் வாமன
     னீலப்புயல் நேர்தரு மேனியன்
          ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே 
கோலக்கய மாவுரி போர்வையர்
     ஆலக்கடு வார்கள நாயகர்
          கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா 
கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய
     சீரற்புத மாநக ராகிய
          கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.
வாசனைத் தைலமும், பன்னீரும் பூசும் (கூந்தலை உடைய) விலைமாதர்களின் இசைப் பாடல் மீதும், உறவாடிப் பேசும் அன்பு மொழிகள் மீதும், வளையல் அணிந்த கரங்களின் மீதும், பொன்மலையின் மீது கரிய யானை ஏறியது போன்று பொருந்தினவாய் விளங்கும் பெரிய மார்பகங்களின் மீதும் காம இச்சை கொண்டு, சோலையில் உள்ள குயிலின் குரல் போன்ற பேச்சுக்களாலும், ஆடை சுற்றியுள்ள நூல் போன்ற இடையாலும், குற்றம் இல்லாத வாழைத் தண்டுக்கு ஒப்பான தொடையாலும், நிலவொளி வீசிடும் அழகிய முகத்தின் மினுக்கு நடிப்பாலும், மிக்க விஷம் கொண்ட வேல் போன்ற கூரிய கண்களின் சூதிலும் அகப்பட்டு, நான் வீணாக நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? விஷம் கொண்ட பாம்பாகிய ஆதிசேஷன் மேல் குற்றம் இல்லாத பாற்கடலிடையே அறிதுயில் கொண்டுள்ள பெரியோன், யானையாம் கஜேந்திரனுக்கு அன்புடனே உதவி செய்தருளிய பெரிய மாயவன், ஆதி மூர்த்தியாய் விளங்கும் அழகிய சக்ராயுதன், வாமன அவதாரம் (குறள் வடிவம்) எடுத்தவன், நீல மேகம் போன்ற கரிய நிறம் கொண்டவன், மாலையாக துளசியை நிரம்பக் கொண்ட அழகிய மார்பை உடையவன் ஆகிய திருமாலின் மருகனே, அழகிய யானையின் பெரிய உரித்தோலை போர்வையாகக் கொண்டவர், ஆலகால விஷம் நிறைந்த கழுத்தைக் கொண்ட தலைவராகிய சிவபெருமானின் கண்களினின்று எழுந்த தீப்பொறியால் வெளிவந்த சிறந்த பிள்ளையான குமரேசனே, சிறந்த முத்தமிழ்ப் புலவர்கள் விளங்கிய சிறப்பைக் கொண்ட அற்புதமான பெருநகரமாகிய நான்மாடற்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 964 - மதுரை
ராகம் - மோ.னம் தாளம் - சது.ர .ம்பை - 7 /4 யு 0 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப் 
பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே 
மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் ...... குமரேசா 
சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே.
சகல கலைகளையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள ஞான ஒளியாகிய கடலிலே திளைத்துக் குளித்து, மண், பெண், பொன் என்ற மூவாசைகளாம் கடல்களை நீந்திக் கடந்து, பலத்ததான, உரத்த சப்தத்துடன் கூடிய சமய வாதங்களில் நான் மாறுபட்டுக் கிடக்காமல், இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வைத் தந்தருள்வாயாக. வள்ளிமலையிலே வாழ்ந்த, ஆச்சரியத் தோற்றம் கொண்ட, குறப்பெண்ணாம் வள்ளியின் மனத்திலே வீற்றிருக்கும் இளைஞனாம் குமரேசனே, வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்திய வேடன் உருவில் வந்தவனே, சேவற் கொடியை கரத்தில் கொண்டவனே, லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் (செல்வமும், கல்வியும்) ஒருங்கே கூடும் கூடற்பதியாகிய பவானியில் வாழும் பெருமாளே. 
பாடல் 965 - மதுரை
ராகம் - .ண்முகப்ரியா தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2 தகதிமி-2, தகதகிட-2 1/2
தானத் தனதான தானத் ...... தனதான
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப் 
பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே 
நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே 
கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே.
நீதித்தன்மை கொண்டதாய், சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய், உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும் நல்லறிவைத் தந்தருள்வாயாக. ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே, ஞான சமுத்திரமே, குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே, நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே. 
பாடல் 966 - மதுரை
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தந் தான தானன
     தனதன தத்தந் தான தானன
          தனதன தத்தந் தான தானன ...... தனதான
மனநினை சுத்தஞ் சூது காரிகள்
     அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்
          மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக 
வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்
     விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்
          வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே 
குனகிகள் பக்ஷம் போல பேசிகள்
     தனகிக ளிச்சம் பேசி கூசிகள்
          குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக் 
கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட
     அருளமு தத்தின் சேரு மோர்வழி
          குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய் 
தனதன தத்தந் தான தானன
     டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
          தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி 
தவில்முர சத்தந் தாரை பூரிகை
     வளைதுடி பொற்கொம் பார சூரரை
          சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா 
தினைவன நித்தங் காவ லாளியள்
     நகைமுறை முத்தின் பாவை மான்மகள்
          திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே 
திரிபுர நக்கன் பாதி மாதுறை
     யழகிய சொக்கன் காதி லோர்பொருள்
          செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.
மனத்தில் நினைக்கின்ற முற்றிய சூதான எண்ணங்களையே கொண்டவர்கள், அமர்க்களங்களைச் செய்யும் பேய் போன்ற விகாரம் படைத்தவர்கள், ஆணவ பலத்தை நாள் தோறும் வலியக் காட்டுகின்ற மாதர்கள், அழகாக (கையில்) வளையல், (காதில்) குழைகள், (மார்பில்) முத்து மாலை இவைகளை அணிந்துள்ள வீண் பொழுது போக்கிகள், பயனற்றவர்கள், பிறரால் மெச்சப்படுதலில் ஆசை கொண்டு ஆடிப் பாடுபவர்கள், வருவதற்கு மிக்க வெட்கம் கொண்டவர்கள் போல ஓடுபவர்கள், தெருவிலே கொஞ்சிப் பேசுபவர்கள், அன்பு கொண்டவர்கள் போலப் பேசுபவர்கள், சரசம் செய்பவர்கள், தங்கள் விருப்பத்தைப் பேசி நாணம் கொள்ளுபவர்கள், தந்திரம் உள்ளவர்கள், பிசாசு அனையவர்கள், கொள்ளைக்காரிகள், பொருளாசை கொண்டவர்கள், (இத்தகைய வேசியர் மீது) எனக்கு உள்ள மோகம் சிதறுண்டு விழுந்து ஒழிய, உனது திருவருளாகிய அமுதத்தைச் சேர்வதற்கு ஒரு வழியைக் காட்டும் அடையாளத்தில் என்னைச் சேர்ப்பித்து உன்னுடைய திருவடியைக் கூடுதற்கு அருள் புரிக. தனதன தத்தத் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு தகுதிகு தத்தத் தீத தோதக என்ற இத்தகைய ஒலிகளுடன் பறைகள், மேளம், போர்முரசுகள் ஒலி செய்யவும், நீண்ட ஊதுங் குழல், வளைந்த குழல், சங்கு, உடுக்கை, பொலிவுள்ள ஊது கொம்பு முதலியவை நிறைந்து ஒலி செய்யவும், அசுரர்களை போரில் யாவரும் சிதறுண்டு அழிந்து பொடிபட வேலைச் செலுத்தியவனே. தினைப் புனத்தை நாள்தோறும் காவல் செய்து கொண்டிருந்தவள், பற்களின் வரிசை முத்துப் போல உள்ள பதுமை போன்ற அழகி, மான் வயிற்றில் பிறந்த அழகியாகிய வள்ளி, மகிழ்ச்சியில் விளக்கம் பெற தினமும் கூடி விளையாடிய முருகனே, முப்புரங்களைச் சிரித்தே எரித்தவனும், இடது பாதியில் பார்வதி உறையும் அழகிய சொக்கநாதனாகிய சிவபெருமான் காதில் ஒப்பற்ற பிரணவப் பொருள் புகும்படி ஓதி அருளி, தென் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 967 - மதுரை
ராகம் - ....; தாளம் -
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
     மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும் 
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
     முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி 
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
     பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும் 
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
     பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே 
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
     தெய்த்ததென தெய்தததென ...... தெனனான 
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
     செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும் 
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
     சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா 
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
     ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.
முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும், முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள், முப்பத்து மூன்று* வகையான தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப, (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால், அருச்சுனன் (மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து) தேரைச் செலுத்திய, பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த முருகக் கடவுளே, பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக. தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்குவென்ற ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி, உடுக்கை ஆகியவை ஒலிக்க, தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும் தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம் புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய குழந்தையே, நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும், பொற்றாமரைக் குளம் அமைந்த பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் பின்வருமாறு:ஆதித்தர் 12, ருத்திரர் 11, வசுக்கள் 8, மருத்தவர் 2 - ஆக 33 வகையின.
பாடல் 968 - . புரு.மங்கை
ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தந்தன
     தானதன தந்த தந்தன
          தானதன தந்த தந்தன ...... தனதான
ஆடல்மத னம்பின் மங்கைய
     ராலவிழி யின்பி றங்கொளி
          யாரமத லமப் கொங்கையின் ...... மயலாகி 
ஆதிகுரு வின்ப தங்களை
     நீதியுட னன்பு டன்பணி
          யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே 
வேடரென நின்ற ஐம்புல
     னாலுகர ணங்க ளின்தொழில்
          வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென் 
வேடைகெட வந்து சிந்தனை
     மாயையற வென்று துன்றிய
          வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே 
தாடகையு ரங்க டிந்தொளிர்
     மாமுனிம கஞ்சி றந்தொரு
          தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண் 
ஜாநகித னங்க லந்தபின்
     ஊரில்மகு டங்க டந்தொரு
          தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே 
சேடன்முடி யுங்க லங்கிட
     வாடைமுழு தும்ப ரந்தெழ
          தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ் 
சீர்மயில மஞ்சு துஞ்சிய
     சோலைவளர் செம்பொ னுந்திய
          ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே.
போருக்கு எழுந்த மன்மதன் வீசும் மலர்ப் பாணங்களாலும், விலைமாதர்களின் ஆலகால விஷம் போன்ற கண்களில் காட்டும் பொய்யான அன்பினாலும், ஒளி கொண்டு விளங்குவதும், முத்து மாலை அசைவதுமான மார்பகங்களில் மயக்கம் கொண்டு, ஆதியாகிய சிவபெருமானுக்கும் குருவாகிய உனது திருவடிகளை உண்மையுடனும் அன்புடனும் பணிந்து வழிபடாமல், மனம் சோர்வடைந்து, வருந்தி என் உடல் அழிவுறாமல், வேடர்கள் போல் நிற்கும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களின் செயல்களும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நாலு அந்தக்கரணங்களின் செயல்களும், என்னைத் தாக்காத வகையில் நான் வேறுபட்டு நின்று உன்னை உணர்ந்து உன் அருளைப் பெறும்படி, என்னுடைய ஆசைகள் அழிய நீ என் எண்ணத்தில் வந்து கலந்து, மாயா சக்திகள் ஒடுங்கும்படி வெற்றி கொண்டு, சிறந்த வேதங்களின் முடிவில் விளங்கும் மேலான பொருளை உபதேசிப்பாயாக. தாடகை என்னும் அரக்கியின் வலிமையை அழித்து, விளங்குகின்ற பெருமை வாய்ந்த விசுவாமித்ர முனிவரின் யாகத்தைச் சிறப்புற நடத்திக் கொடுத்து, ஒப்பற்ற (அகலிகையின்) சாபம் நீங்குமாறு (கால் துகள் படும்படி) நடந்து, (ஜனக ராஜன் முன்னிலையில்) வலிமையான சிவதனுசை முறித்து, இயற்கை அழகு பெற்ற சீதையை மணம் புரிந்து மார்புற அணைந்த திருமணத்துக்குப் பிறகு, அயோத்தியில் தன் பட்டத்தைத் துறந்து, ஒப்பற்ற (மாற்றாந்) தாயாகிய கைகேயியின் சொற்படி நடந்த சிறப்பைக்கொண்டவனாகிய இராமனின் மருகனே, ஆதிசேஷனின் முடிகளும் கலக்கம் கொள்ள, காற்று எங்கும் பரவி வீச, தேவர்கள் களிப்பு மிகுந்து மேற்கிளர்ந்து எழ, நடனத்தைச் செய்யும் அழகிய பெருமை வாய்ந்த மயிலை வாகனமாகக் கொண்டவனே, மேகம் படிந்துள்ள சோலைகள் விளங்குவதும், செவ்விய செல்வம் பெருகி நிற்பதுவுமான ஸ்ரீபுருஷமங்கை (நாங்குநேரி)* என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.
பாடல் 969 - . புரு.மங்கை
ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
     தானதன தந்த தந்த ...... தனதானா
கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து
     காதலுறு சிந்தை யுந்து ...... மடமானார் 
காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த
     காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார் 
பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க
     பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே 
பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை
     பீடையற வந்து நின்ற ...... னருள்தாராய் 
ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த
     ஏகமயி லங்க துங்க ...... வடிவேலா 
ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்
     ஈடெறஇ ருந்த செந்தில் ...... நகர்வாழ்வே 
தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த
     சீரலர்கு ளுந்து யர்ந்த ...... பொழிலோடே 
சேரவெயி லங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த
     ஸ்ரீபுருட மங்கை தங்கு ...... பெருமாளே.
மேகம் போன்ற கூந்தல் கலைந்து அலை பாய்வதாலும், நீண்ட குண்டலங்கள் அதற்கு ஒக்க அசைவுறுதலாலும், காம இச்சை கொண்ட எண்ணத்தை மேலெழுப்பும் இளம் பெண்கள் காமுகராகிய ஆடவர் உள்ளம் கலங்கும்படி செய்து, சண்டையிடுவதற்கு முந்தி வந்தது போல முன்னே எதிர்ப்பட்டு வருவதும், வைரம் போல உறுதியும் கடினமும் கொண்ட, குடம் போலவும், யானைத் தந்தம் போலவும் உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களை உடையவர்களின் பேரைச் சொல்லவந்தால் (அவர்களுடைய சேட்டையால்) பெண் குரங்கு, (அவர்களுடைய விஷத்தன்மையால்) பாம்பு, (அவர்களின் ஆணவத்தால்) யானை என்று சொல்லத் தக்கவர்கள், மன்மதனுக்கு உறுப்பாக அமைந்த விலைமாதர்கள் தங்கள் கண்கள் என்னும் வலையாலே, சிறந்த (என்) அறிவு சிதறிப் போய், மனம் நொந்து காம இச்சையால் அலைபாயும் மனத்தின் துன்பம் அற்றுப் போக, நீ வந்து உன்னுடைய திருவருளைத் தருவாயாக. அழகு பொருந்திய தண்டையை அணிந்த திருவடி அசைய வருகின்ற கந்தனே, ஒப்பற்ற (சூரனாகிய) மயிலை* அங்க அடையாளமாகக் கொண்டவனே, கூரிய வேலை ஏந்தியவனே, பெருமை பொருந்திய உமா தேவியின் மகனே, (சூரனுடைய இரு கூறில் ஒன்றாய் உன்னைச்) சந்தித்த* கோழியைக் கொடியாகக் கொண்டு, தேவர்கள் உய்யும் பொருட்டு வீற்றிருந்த திருச்செந்தூரின் செல்வனே, தேர்கள் நிரம்பிய நாற்சந்திகள் கொண்ட வீதிகளை உடையதும், நறு மணம் வீசும் சிறந்த மலர்கள் குளிர்ச்சியுடன் மேம்பட்டு விளங்கும் சோலைகளுடன் ஒன்று சேரவே விளங்கும் பரிசுத்தமான தடாகங்கள் பொருந்தியுள்ள ஸ்ரீபுருஷமங்கையில் (நாங்குநேரியில்**) வீற்றிருக்கும் பெருமாளே. 
* முருகனின் வேல் சூரனின் உடலைப் பிளந்ததும் ஒரு பகுதி மயிலாகவும், இன்னொரு பகுதி சேவலாகவும் முருகனைச் சரணடைந்தன.
** நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.
பாடல் 970 - . புரு.மங்கை
ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான
வேனின்மத னைந்து பாணம்விட நொந்து
     வீதிதொறு நின்ற ...... மடவார்பால் 
வேளையென வந்து தாளினில்வி ழுந்து
     வேடைகெட நண்பு ...... பலபேசித் 
தேனினும ணந்த வாயமுத முண்டு
     சீதளத னங்க ...... ளினின்மூழ்கித் 
தேடியத னங்கள் பாழ்படமு யன்று
     சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ 
ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ
     ராலிலையி லன்று ...... துயில்மாயன் 
ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த
     ஆரணமு குந்தன் ...... மருகோனே 
வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த
     மானொடுவி ளங்கு ...... மணிமார்பா 
மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை
     மாநகர மர்ந்த ...... பெருமாளே.
வேனில் பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்த, மனம் வேதனை அடைந்து, தெரு மூலைகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே இதுவே சமயம் என்று வந்து அவர்கள் காலில் விழுந்து, ஆசை தீர நட்பான பல பேச்சுக்களைப் பேசி, தேனைக் காட்டிலும் அதிக நறு மணம் கொண்ட வாயிதழ் ஊறலை உண்டு, (அம்மாதர்களின்) குளிர்ந்த மார்பகங்களில் முழுகி, தேடி வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிக்க முயற்சி செய்து, அடைய வேண்டிய கதியை (வீட்டுப் பேற்றை) அடைதல் இல்லாமல் அலைந்து திரிவேனோ? பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச் செலுத்தியும், பெரிய பூமியை (ஓர் திருவடி கொண்டு) அளந்தும், ஓர் ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன், இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும் கலந்து உவகையுடன் பருகியவனும், வேதம் போற்றும் முகுந்தனுமாகிய திருமாலின் மருகனே, தேவர்கள் புகழ்ந்து போற்றிய தேவயானையுடனும், வேடர்கள் மகளாகிய மான் போன்ற வள்ளியுடனும் விளங்கும் அழகிய மார்பனே, பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.
பாடல் 971 - இலஞ்சி
ராகம் - ....; தாளம் -
தனந்த தனதன தனந்த தனதன
     தனந்த தனதன ...... தனதான
கரங்க மலமின தரம்ப வளம்வளை
     களம்ப கழிவிழி ...... மொழிபாகு 
கரும்ப முதுமலை குரும்பை குருகுப
     கரும்பி டியினடை ...... யெயின்மாதோ 
டரங்க நககன தனங்கு தலையிசை
     யலங்க நியமுற ...... மயில்மீதே 
அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
     யவந்த கனகல ...... வருவாயே 
தரங்க முதியம கரம்பொ ருததிரை
     சலந்தி நதிகும ...... ரெனவான 
தலம்ப ரவமறை புலம்ப வருசிறு
     சதங்கை யடிதொழு ...... பவராழி 
இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
     னிரண்டு புயமலை ...... கிழவோனே 
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
     இலஞ்சி மருவிய ...... பெருமாளே.
கைகள் தாமரைக்கு ஒப்பாகும். ஒளி பொருந்திய வாயிதழ் பவளத்துக்கு ஒப்பாகும். கழுத்து சங்குக்கு ஒப்பாகும். கண் அம்புக்கு ஒப்பாகும். பேச்சு சர்க்கரைப் பாகு, கரும்பு, அமுது இவைகளுக்கு ஒப்பாகும். மார்பகங்கள் தென்னங் குரும்பைப் போன்று திடமானவை. நடை பிரசித்தி பெற்ற பெண் யானையின் நடைக்குச் சமமாகும். இத்தகைய வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியுடன் (நீ அணைந்து வருவதால்) மலை போன்ற கனத்த மார்புகள் அழுந்துதல் உற, மழலைச் சொல் போல, இன்னிசை கூடிய வள்ளியின் மொழி பின்புலத்தில் கேட்க, நிச்சயமாகவே நீ மயிலின் மேல் ஏறி வீற்றிருந்து, பிறப்பாகிய வினையை ஒழித்து, என்னைப் பிடிக்க வரும் அந்தக் கொடிய யமன் அணுகாமல் இருக்க வருவாயாக. அலைகள் நிறைந்ததும், பெரிய மீன்கள் சண்டையிட்டு விளையாடுவதும், அலைகளை வீசுவதும், கடல் போன்றதும் ஆகிய கங்கை நதி பெற்ற குமரனே (காங்கேயனே) என்று, விண்ணோர் போற்ற, வேதம் ஒலி செய்து வாழ்த்த, சிறிய கிண்கிணிகள் அணிந்துள்ள உனது திருவடிகளைத் தொழுபவரும், பாற்கடலிடையே கருணையுடன் பள்ளி கொண்ட பழையவரும், ஸ்ரீரங்கத்துப் பெருமானும் ஆகிய திருமாலின் மருகனே, பன்னிரண்டு தோள் மலைகளை உடைய குறிஞ்சி வேந்தே, விளக்கம் பூண்டுள்ள தமிழ் விளங்க திருஞானசம்பந்தராக வந்து தமிழ் மொழிந்தவனே, திரு இலஞ்சி* நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.
பாடல் 972 - இலஞ்சி
ராகம் - ....; தாளம் -
தந்தன தான தனந்தன தானத்
     தந்தன தான தனந்தன தானத்
          தந்தன தான தனந்தன தானத் ...... தனதான
கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
     சங்குட னாழி கழன்றிட மேகக்
          கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர் 
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்
     கண்கயல் மேனி சிவந்திட கோவைக்
          கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே 
சந்திர ஆர மழிந்திட நூலிற்
     பங்கிடை யாடை துவண்டிட நேசத்
          தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன் 
சந்திர மேனி முகங்களு நீலச்
     சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்
          சந்திர வாகு சதங்கையு மோசற் ...... றருள்வாயே 
சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்
     கொண்டுநல் தூது நடந்தவ ராகத்
          தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி 
தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்
     சங்கரி மோக சவுந்தரி கோலச்
          சுந்தரி காளி பயந்தரு ளானைக் ...... கிளையோனே 
இந்திர வேதர் பயங்கெட சூரைச்
     சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்
          கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே 
எண்புன மேவி யிருந்தவள் மோகப்
     பெண்திரு வாளை மணந்திய லார்சொற்
          கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் ...... பெருமாளே.
தலை மயிர்ச் சுருளின் கீழ் உள்ள காதோலைகள் குலுங்கி அசைய, வாளி என்ற காதணியும் சங்கு வளையல்களும், மோதிரமும் கழல, கருமேகம் போன்ற கூந்தலில் உள்ள பூ மாலை சரிய, நறுமணப் பன்னீர் சேர்ந்த மார்பகங்கள் நெஞ்சில் துவள, அம்பு போன்றதும் கயல் மீன் போன்றதுமான கண்ணும் உடலும் சிவக்க, கொவ்வைப் பழம் போலிருந்து கொஞ்சும் வாயிதழ் இனிப்பான ஊறலைக் கொடுக்க, காம இச்சைக் கடலில் சந்திர ஆரம் என்ற பொன் மாலை அலைந்து குலைய, நூல் போன்ற பாகமான இடையில் ஆடை குலைந்து துவண்டுபோக, அன்பு தரும்படி காம இச்சையும் பொங்கி எழுந்து நான் முழுகுகின்ற சமயத்தில், உனது நிலவொளி உடலும், திருமுகங்களும், நீல மயிலின் மேல் ஏறி அமர்ந்திடும் திருவடியில் உள்ளதுமான நிலவொளியையும் கிங்கிணியையுமே சற்று அருள்வாயாக. சுந்தர மூர்த்தி நாயனாருடைய பாடல்களை மகிழ்ந்து ஏற்று தமது இரண்டு திருவடிகளைக் கொண்டு நல்ல தூது நடந்த சிவபெருமானுடைய தேகத்தில் சேர்ந்தவளாக அவனுடன் நடனமாடி இருந்தவள், ஞானவல்லியாகிய சிவகாமி அம்மை, அடியார்களுடைய உடலில் இடம் கொண்டு அமர்ந்தவள், நீலநிறச் சங்கரி, மோக அழகி, எழில்மிகு சுந்தரி, காளி (ஆகிய பார்வதி) பெற்றருளிய யானை முகக் கணபதிக்குத் தம்பியே, இந்திரர்கள், பிரமாதி தேவர்களின் அச்சம் நீங்குமாறு சூரன் அழிந்து அடங்குமாறு வேலைச் செலுத்தி, நல்ல மயிலின் மேல் இன்பகரமாக வீற்றிருக்கும் வேதப் பொருளானவனே, மதிக்கத் தக்க தினைப் புனத்தில் வாழ்பவள், (உனக்கு) மோகம் தந்த மங்கை, லக்ஷ்மிகரம் பொருந்தியவள் ஆகிய வள்ளியை திருமணம் செய்த தகுதி நிறைந்த புகழுக்கு உரியவனே, மதில்கள் ஓங்கி உயர்ந்துள்ள இலஞ்சி* என்னும் பதியில் வீற்றிருக்கும் முருகப் பெருமாளே. 
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.
பாடல் 973 - இலஞ்சி
ராகம் - ....; தாளம் -
தனந்தன தந்த தனந்தன தந்த
     தனந்தன தந்த ...... தனதானா
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
     துரந்தெறி கின்ற ...... விழிவேலால் 
சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு
     சுருண்டும யங்கி ...... மடவார்தோள் 
விரும்பிவ ரம்பு கடந்துந டந்து
     மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே 
விளங்குக டம்பு விழைந்தணி தண்டை
     விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய் 
பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற
     பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே 
புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்
     புரந்தரன் வஞ்சி ...... மணவாளா 
இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
     குரும்பைம ணந்த ...... மணிமார்பா 
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.
அணிந்துள்ள மலரின் மேல் வண்டுகள் திகழும் கரு மேகம் போன்ற நீண்ட கூந்தலைப் பார்த்தும், வேகமாக செலுத்தி வீசப்பட்ட வேல் போன்ற கண்ணைப் பார்த்தும், (என் மனம்) சுழற்சி அடைந்து, மிகவும் வாட்டமுற்று, சோர்வுற்று, மயக்கம் உற்று, விலைமாதர்களின் தோள்களை விருப்பம் கொண்டு அளவு கடந்து நடந்தும், மெலிந்தும் தளர்ந்தும் (நான்) இறந்து போகாமல், விளங்குகின்ற உனது கடப்ப மாலையை விரும்பி, அழகிய தண்டையையும், பல இன்னிசை வகைகளை ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தருவாயாக. நன்றாகப் பொருந்தி அமைந்து, மேன்மை பெற நின்ற பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழித்தவனே. உன்னைப் புகழ்ந்தும், (உனது ஆற்றலைக்) கண்டு மகிழ்ந்தும், வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானையின் கணவனே, தினைப் புனத்தைக் காத்த மங்கையாகிய வள்ளியின் நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பனே, (சரவணக்) குளத்தில் வந்த காரணத்தால் குளவன் (குளத்தில் உற்பவித்தவன்) என்று திருப் பெயர் கொண்டு, இலஞ்சி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.
பாடல் 974 - இலஞ்சி
ராகம் - ....; தாளம் -
தான தனந்த தான தனந்த
     தனா தனந்த ...... தனதான
மாலையில் வந்து மாலை வழங்கு
     மாலை யநங்கன் ...... மலராலும் 
வாடை யெழுந்து வாடை செறிந்து
     வாடை யெறிந்த ...... அனலாலுங் 
கோல மழிந்து சால மெலிந்து
     கோமள வஞ்சி ...... தளராமுன் 
கூடிய கொங்கை நீடிய அன்பு
     கூரவு மின்று ...... வரவேணும் 
கால னடுங்க வேலது கொண்டு
     கானில் நடந்த ...... முருகோனே 
கான மடந்தை நாண மொழிந்து
     காத லிரங்கு ...... குமரேசா 
சோலை வளைந்து சாலி விளைந்து
     சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே 
சூரிய னஞ்ச வாரியில் வந்த
     சூரனை வென்ற ...... பெருமாளே.
அந்திப் பொழுதில் வந்து காம இச்சையைத் தருகின்ற (மகிழம் பூ) மாலையை அணிந்த மன்மதன் எய்கின்ற மலர்ப் பாணங்களாலும், வாடைக் காற்று கிளம்பி, (அதனுடன் கலந்து வரும் மலர்களின்) வாசனைகள் மிகுந்து வடவா முகாக்கினி போல வீசி எறியும் நெருப்பாலும், தனது அழகு எல்லாம் அழிந்து, மிகவும் மெலிந்து, அந்த இளமை வாய்ந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் சோர்வு அடைவதற்கு முன்பு, இளமை கூடிய மார்பு அன்பு மிக்கு விம்மும் படியாகவும் நீ இன்று வந்து அருள வேண்டும். யமன் நடுங்கவும், கையிலே வேலாயுதத்தைக் கொண்டு, (பொய்யாமொழிப் புலவர் வரும்) காட்டில் (வேடனாய்) நடந்த முருகனே,* வள்ளி மலைக் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளி நாணும்படியாக அவளிடம் பேசி, அவள்மீது உனக்கிருந்த காதலை வெளிப்படுத்திய குமரேசனே, சோலைகள் சுற்றியும் உள்ள, நெற்பயிர் உள்ள வயல்கள் விளைந்து சூழ்ந்துள்ள, இலஞ்சி** என்னும் நகரில் (வீற்றிருந்து) மகிழ்ச்சி கொண்டவனே, சூரியன் தான் உதிப்பது எப்படி என்று பயப்படும்படியாக, கடலில் நின்று கொண்டிருந்த (மாமரமாகிய) சூரனை வென்ற பெருமாளே. 
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
** இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், வடக்கே இருந்து வீசும் வாடைக் காற்று - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 975 - திருக்குற்றாலம்
ராகம் - ....; தாளம் -
தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான
ஏடுக்கொத் தாரலர் வார்குழ
     லாடப்பட் டாடைநி லாவிய
          ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர் 
ஏதத்தைப் பேசுப ணாளிகள்
     வீசத்துக் காசைகொ டாடிகள்
          ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர் 
மாடொக்கக் கூடிய காமுகர்
     மூழ்குற்றுக் காயமொ டேவரு
          வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய் 
மாசுற்றுப் பாசம்வி டாசம
     னூர்புக்குப் பாழ்நர கேவிழு
          மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே 
தாடுட்டுட் டூடுடு டீடிமி
     டூடுட்டுட் டூடுடு டாடமி
          தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி 
தானொத்தப் பூதப சாசுகள்
     வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
          சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே 
கூடற்கச் சாலைசி ராமலை
     காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்
          கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான 
கோதிற்பத் தாரொடு மாதவ
     சீலச்சித் தாதியர் சூழ்தரு
          கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
இதழ்களை உடைய கொத்தான மலர்களைக் கொண்ட நீண்ட கூந்தல் அசைந்தலைய, பட்டு ஆடை விளங்கும், (ஆடவர்களுக்குத்) துன்பம் தருவதான அழகிய தோள்கள் மீது மூடிய விஷம் போன்ற விலைமாதர். குற்றம் கண்டே பேசும், பணத்தை ஆட்சி செய்வதிலேயே நோக்கம் வைத்துள்ளவர்கள். ஒரு மாகாணி அளவே ஆசை கொண்டவர்களாக நடிப்பவர்கள். ஏறிவிட்ட பின் ஏணியை வீழ்த்தித் தள்ளி விடுபவர்கள். முழுமையான வஞ்சகர்கள். மாடு போலப் புணரும் காமம் கொண்டவர்கள் ஆகிய மாதர்கள் வசம் முழுகி அதனால் உடலில் வந்த இழிவானதான ஒரு வகை வயிற்று உளைவு நோயும், மற்ற நோய்களும் அதிகப்பட்டு, கேடு அடைந்து இறந்து, பாசக் கயிற்றை விடாத யமனுடைய உலகத்தில் புகுந்து பாழும் நரகத்தில் விழும் தீமையைச் செதுக்கிக் கழித்து, உன்னுடைய அன்பை அருள் புரிவாயாக. தாடுட்டுட் டூடுடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்தத் தானதனா இவ்வாறு ஒலிக்கும் பலவகைப் பேரிகளுடன், ஒத்த குரலில் பூதங்களும் பேய்களும் ஓலமிடும்படி, சூரர்களுடைய படைகள் இறக்க, அழகிய மயிலின் மேல் ஏறிய பெருமை வாய்ந்தவனே, மதுரை, கச்சிக் கச்சாலை, திருசிராப் பள்ளி, திருவானைக்கா, அழகிய சீகாழி, வைத்தீசுரன் கோயில், விளங்கும் வல்லக் கோட்டை, திருக்கச்சூர், கருவூர் ஆகிய தலங்களிலும் மேன்மை வாய்ந்ததும், குற்றமில்லாத பக்தர்களுடன் பெரிய தவம் செய்த பரிசுத்தமான சித்தராகிய பெரியோர்கள் கருதி வலம் வந்ததுமான அழகிய குற்றாலத்தில்* உலவுகின்ற பெருமாளே. 
* குற்றாலம் தென்காசிக்கு அருகே 5 மைலில் உள்ளது.
பாடல் 976 - திருக்குற்றாலம்
ராகம் - . ரஞ்சனி தாளம் - தி.ர த்ருபுடை
தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான
வேதத்திற் கேள்வி யிலாதது
     போதத்திற் காண வொணாதது
          வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர் 
வீதித்துத் தேடரி தானது
     ஆதித்தற் காய வொணாதது
          வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம் 
வாதத்துக் கேயவி யாதது
     காதத்திற் பூவிய லானது
          வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு 
மாயத்திற் காய மதாசல
     தீதர்க்குத் தூரம தாகிய
          வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே 
காதத்திற் காயம தாகும
     தீதித்தித் தீதிது தீதென
          காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார் 
காணப்பட் டேகொடு நோய்கொடு
     வாதைப்பட் டேமதி தீதக
          லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே 
கோதைப்பித் தாயொரு வேடுவ
     ரூபைப்பெற் றேவன வேடுவர்
          கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே 
கோதிற்பத் தாரொடு மாதவ
     சீலச்சித் தாதியர் சூழ்தரு
          கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
வேதங்களினால் ஆராயப் படாதது அது. அறிவு கொண்டு காண முடியாதது அது. ஒரு மாகாணி அளவு கூட (பதினாறில் ஒரு பங்கு அங்குலம்) நம்மிடத்தினின்று தூரம் இல்லாதது அது. நற்கதியை வேண்டுவோர் பகுத்தறிவோடு தேட அரிதானது அது. சூரியனால் சுட்டுப் பொசுக்க இயலாதது அது. காட்டுத்தீயின் கடுமை கொண்ட நெருப்பிலும் வேகாதது அது. கடுங்காற்றினாலும் தன் ஒளி குன்றாதது அது. காத தூரம் (10 மைல் அளவு) சென்றாலும் நறுமணம் வீசும் மலரின் தன்மையானது அது. பெரிய ஜோதியாக விளங்குவது அது. ஆணவ மதம் ஊறுகின்ற மாயம் பொருந்திய உடலில் அகந்தை என்ற மதநீர் உள்ள தீயவர்களுக்கு எட்ட முடியாத தூரத்தில் உள்ளது அது. (இத்தனைச் சிறப்புப் பெற்ற) அத்தகைய பெருவாழ்வை (முக்தி நிலையை) என்னை ஒரு பொருட்டாக மதித்து இனி அருள்வாயாக. கொலைத்தொழிலில் மிகவும் ஈடுபட்ட மதியைத் திருத்தி, இது தீய செயல், இது தீய செயல் என்று அன்பு மேலிட்டுப் பலமுறை நீ ஓதியும் நற்கதியை அடையும் வழியைக் காணாதவர்களை (அசுரர்களை) கண்ணெதிரிலேயே தெரியும் பொல்லா நோயால் அவர்கள் வேதனைப்பட்டும் கூட கெட்ட புத்தி நீங்காமல் கேடுற்று அந்த அசுரர்கள் தடுமாற, பின்னர் அவர்களை அழிப்போனே, வள்ளி என்ற பெண்மேல் காதல் பித்து மேலிட ஒரு வேடனின் உருவத்தைத் தாங்கி, காட்டு வேடுவர்களின் வீட்டுக்கே குடியாகவந்த முருகனே, குற்றமற்ற பக்தர்களுடன், சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் வந்து வலம்வரும் அழகிய திருக்குற்றாலத் தலத்தில்* உலாவும் பெருமாளே. 
* திருக்குற்றாலம் தென்காசிக்கு மேற்கே 4 மைலில் உள்ளது.நடராஜ மூர்த்தி நடனம் ஆடிய ஐந்து சபைகளில் சித்ர சபை இங்குள்ளது.
பாடல் 977 - திருக்குற்றாலம்
ராகம் - ....; தாளம் -
தத்தான தனத்த தத்தன
     தத்தான தனத்த தத்தன
          தத்தான தனத்த தத்தன ...... தனதான
முத்தோலை தனைக்கி ழித்தயி
     லைப்போரி கலிச்சி வத்துமு
          கத்தாம ரையிற்செ ருக்கிடும் ...... விழிமானார் 
முற்றாதி ளகிப்ப ணைத்தணி
     கச்சார மறுத்த நித்தில
          முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே 
வித்தார கவித்தி றத்தினர்
     பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு
          வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ 
மெய்த்தேவர் துதித்தி டத்தரு
     பொற்பார்க மலப்ப தத்தினை
          மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே 
பத்தான முடித்த லைக்குவ
     டிற்றாட வரக்க ருக்கிறை
          பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே 
பற்பாசன் மிகைச்சி ரத்தைய
     றுத்தாத வனைச்சி னத்துறு
          பற்போக வுடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே 
கொத்தார்க தலிப்ப ழக்குலை
     வித்தார வருக்கை யிற்சுளை
          கொத்தோடு திரக்க தித்தெழு ...... கயலாரங் 
கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி
     சிற்றாறு தனிற்க ளித்திடு
          குற்றால ரிடத்தி லுற்றருள் ...... பெருமாளே.
முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கி, வேலாயுதத்தைப் போரில் மாறுபட்டுப் பகைத்து, செந்நிறம் கொண்டு, முகமாகிய தாமரை மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய மாதர்களின் முற்றாமல் நெகிழ்ந்து பெருத்துள்ளதாய், அழகிய கச்சு மேலுள்ள மாலையை அற்றுப் போகும்படி செய்த, நல்ல முத்து மாலை அழுத்துவதால் உண்டாகும் நகக் குறியைக் கொண்டதும், வித்தார* வகையைச் சேர்ந்த கவிகளைப் பாட வல்ல புலவர்களின் ஓலை நூல்களுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள மலை போன்ற மார்பகத்தில் தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ? உண்மைத் தேவர்கள் போற்ற அவர்களுக்கு உதவும் அழகு நிறந்த தாமரைத் திருவடிகளை நானும் மெய்யான பக்தியுடன் வாழ்த்த அருள் புரிவாயாக. பத்துத் தலைகளான மலைகள் அறுபட்டு அசைந்து விழ, அசுரர்களுக்குத் தலைவனாகிய ராவணன் (போரில்) அழிந்து உயிர் விடும்படி வெற்றி கொண்டவனாகிய திருமாலின் மருகனே, பத்ம பீடத்தில் இருக்கும் பிரமனுடைய அதிகமாயிருந்த ஐந்தாவது தலையை அறுத்துத் தள்ளி, சூரியனைக் கோபித்து பற்கள் உதிரும்படி (தக்ஷயாகத்தில்) உடைத்தெறிந்த பரம்பொருளாகிய சிவ பெருமான் மகிழ்ச்சி கொள்ளும் பெருமானே, கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும் விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாக அப்படியே உதிரும்படி குதித்துத் தாவுகின்ற கயல் மீன்கள் முத்துக்களைக் கொட்டி நீர்ச் சுழிகளில் தள்ளி ஒதுக்கி, சிறிய ஆற்றில் மகிழும் குற்றாலத்துச்** சிவபெருமான் அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமாளே. 
* நால்வகைக் கவிகள் - ஆசு, மதுரம், வித்தாரம், சித்திரம்.** குற்றாலம் தென்காசிக்கு 5 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 978 - ஆய்க்குடி
ராகம் - சாருகேசி தாளம் - கண்டசாபு - 2 1/2
தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
     தாத்தனத் தானதன ...... தனதான
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
     மாப்புடைத் தாளரசர் ...... பெருவாழ்வும் 
மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
     வாழ்க்கைவிட் டேறுமடி ...... யவர்போலக் 
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
     கோத்தமெய்க் கோலமுடன் ...... வெகுரூபக் 
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
     கூத்தினிப் பூரையிட ...... அமையாதோ 
தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
     சாய்த்தொடுப் பாரவுநிள் ...... கழல்தாவிச் 
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
     தாழ்க்கவஜ் ராயுதனு ...... மிமையோரும் 
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
     மாய்க்குடிக் காவலவு ...... ததிமீதே 
ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை
     ஆர்ப்பெழச் சாடவல ...... பெருமாளே.
வாள் வீச்சுப் படுவதால் சேனைகள் யாவையும் அழியும்படி பகைவர்களை விரட்டியடிக்கும் செருக்குடன் அரசாட்சி புரியும் மன்னர்களது பெருவாழ்வும் இறுதியில் ஒரே கணப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகக் கடவதுதான் என்ற நிலையாமையை உணர்ந்து இல்லறத்தை விட்டுக் கரையேறும் உன் அடியார்கள் போல, ஒரு குறிக்கோளுடன் வாழவும், உன் திருவடிமலரினைப் பார்த்து யான் இளைப்பாறவும், வினைவசமாகி உழலும் இந்த உடம்பாகிய உருவத்தை பலவித அலங்காரங்களைச் செய்து துன்பங்களில் சிக்குண்டு வரும் இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டு இனிமேல் முடிவு பெறவே முடியாதோ? கால் பட்டாலே கோபத்துடன் சீறி எழும் விஷப் பாம்பைப் போல பாலன் மார்க்கண்டேயனிடம் (யமன்) குறிவைத்துத் தொடரவும், தமது நீண்ட திருவடியை நீட்டி பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட யமனை உதைத்த பரமசிவனார் (உன்னிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக) தமது முடியைத் தாழ்த்தி வணங்க, வஜ்ராயுதனாம் இந்திரனும், தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்க, பொன்னிறமான பிரம்மனை சிறையிலிட்ட ஆய்க்குடி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அரசனே, கடலிலே போர் புரிந்த அந்தச் சூரன் முதலிய அசுரர்களையும், திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால் அந்த கிரெளஞ்சகிரியையும் பேரொலி உண்டாகும்படி அழிக்கவல்ல பெருமாளே. 
* ஆய்க்குடி தென்காசியிலிருந்து வடகிழக்கே 5 மைலில் உள்ள தலம் - பால் பாயச நிவேதனம் சிறப்பு.
பாடல் 979 - திருப்புத்தூர்
ராகம் - ....; தாளம் -
தனத்தத் தான தனன தனதன
     தனத்தத் தான தனன தனதன
          தனத்தத் தான தனன தனதன ...... தனதான
கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
     ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய
          கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரங் 
களிற்றுக் கோடு கலச மலிநவ
     மணிச்செப் போடை வனச நறுமலர்
          கனத்துப் பாளை முறிய வருநிக ...... ரிளநீர்போற் 
பொருப்பைச் சாடும் வலியை யுடையன
     அறச்சற் றான இடையை நலிவன
          புதுக்கச் சார வடமொ டடர்வன ...... எனநாளும் 
புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
     ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்
          பொகட்டெப் போது சரியை கிரியைசெய் ...... துயிர்வாழ்வேன் 
இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
     பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ
          எயிற்றுப் போவி யமர ருடலவர் ...... தலைமாலை 
எலுப்புக் கோவை யணியு மவர்மிக
     அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
          எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் ...... நவநீத 
திருட்டுப் பாணி யிடப முதுகிடை
     சமுக்கிட் டேறி யதிர வருபவர்
          செலுத்துப் பூத மலகை யிலகிய ...... படையாளி 
செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
     ளெருக்குச் சூடி குமர வயலியல்
          திருப்புத் தூரில் மருவி யுறைதரு ...... பெருமாளே.
(இப்பாடலின் பின்பாதி சிவபெருமானை வர்ணிக்கிறது). கரும்பு வில்லை உடைய மன்மதன் போன்ற இளைஞர்கள் வியந்து மயங்கும்படி, காம இச்சை உலவுகின்றதும் நீண்டதுமான கடைக்கண் பார்வையைக் கொண்ட இனிய விலைமாதர்களின் தனபாரங்கள் யானையின் தந்தம், குடம், நிறைந்த நவரத்தினச் சிமிழ், நீரோடையில் தாமரையின் நறுமண மலர், பாரத்துடன் தென்னம் பாளையும் முறியும்படி எழுந்துள்ள ஒளியுள்ள இள நீரைப் போல, மலையையும் மோதி வெல்லக்கூடிய வலிமையைக் கொண்டவை, மிகவும் இளைத்துள்ள இடையை மெலியும்படி செய்பவை, புதிய கச்சுடனும் முத்து மாலையுடனும் நெருங்குபவை என்றெல்லாம் நாள் தோறும் அம்மாதர்களுக்குப் புகழ்ச்சிப் பாடல்களை அடிமைப்பட்ட அந்த அந்தக் காதலர்கள் ஆசையுடன் எடுத்தாண்டு பேசுகின்ற இழிவான தொழிலைப் போகவிட்டு, நான் எப்பொழுது சரியை, கிரியை ஆகிய மார்க்கங்களில்* நின்று உழைத்து உயிர் வாழ்வேன்? அஞ்ஞானம் என்ற இருட்டு நிறைந்த இப் பூமியில், யமனுடைய உடல் பதைக்கும்படி, காலால் அவன் விழும்படி உதைத்தவர், திரிபுரங்களின் வலிமையை ஒழித்தவர், தேவர்களின் உடல் அவர்களின் தலைகள் மாலை ஆகிய எலும்பு வடத்தை மாலையாக அணிந்தவர், மிகவும் நடுங்கச் செய்து, காளி அஞ்சும்படி ஒரு நொடிப் பொழுதில் எதிர்த்து நடனம் புரிந்த வயிரவ, பயிரவ மூர்த்தி, வெண்ணெயைத் திருடிய கைகளை உடைய திருமாலாகிய ரிஷபத்தின் முதுகின் மேல் சேணம் போட்டு ஏறி முழக்கத்துடன் வருபவர், செலுத்தப்படும் பூதம் பேய்க் கணம் ஆகியவை விளங்குகின்ற படையைக் கொண்டவர், சடையில் பூளை மலர், சந்திரன், கொன்றை, வெள்ளெருக்கு இவைகளைச் சூடியுள்ளவராகிய சிவ பெருமானின் குமரனே. வயல்கள் பொருந்திய திருப்புத்தூரில்** பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** திருப்புத்தூர் குன்றக்குடிக்கு அருகில் உள்ளது.
பாடல் 980 - திருப்புத்தூர்
ராகம் - ....; தாளம் -
தான தாத்த தனத்தத் தானன
     தான தாத்த தனத்தத் தானன
          தான தாத்த தனத்தத் தானன ...... தனதான
வேலை தோற்க விழித்துக் காதினில்
     ஓலை காட்டி நகைத்துப் போதொரு
          வீடு காட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி 
மேனி காட்டி வளைத்துப் போர்முலை
     யானை காட்டி மறைத்தத் தோதக
          வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல் 
கால மேற்க வுழப்பிக் கூறிய
     காசு கேட்ட துகைப்பற் றாஇடை
          காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல் 
காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்
     மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்
          காம நோய்ப்ப டுசித்தத் தீவினை ...... யொழியேனோ 
ஆல கோட்டு மிடற்றுச் சோதிக
     பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட
          மாடி தாத்தி ரிபட்சித் தாவென ...... வுமிழ்வாளி 
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
     னோடை பூத்த தளக்கட் சானவி
          யாறு தேக்கி ய கற்றைச் சேகர ...... சடதாரி 
சீல மாப்ப திமத்தப் பாரிட
     சேனை போற்றி டுமப்பர்க் கோதிய
          சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு ...... முருகோனே 
சேல றாக்க யல்தத்தச் சூழ்வய
     லூர வேற்க ரவிப்ரர்க் காதர
          தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே.
வேலாயுதமும் தோற்றுப் போகும்படியான கண்களால் பார்த்து, காதில் உள்ள ஓலையைக் காட்டிச் சிரித்து, போக வேண்டிய ஒரு வீட்டையும் காட்டி, அணிந்த மேலாடையை நெகிழும்படி விட்டு, உடலைக் காட்டி ஆடவர்களின் மனத்தைக் கவர்ந்து, போருக்கு எழுந்தது போன்ற மார்பகமாகிய யானையைக் காட்டியும் (பின்) மறைத்தும், வஞ்சகத்தின் முழு சக்தியையும் காட்டி எதிர்த்துச் சண்டையிட்டு எதிரே வருபவர்களிடத்தே, சமயத்துக்குத் தக்கபடி பேசும் வார்த்தைகளை மழுப்பி, தாம் சொன்ன காசைக் கேட்டு, அதைக் கைப்பற்றிய பின்னர், மத்தியில் மனம் வேறுபட்டுப் பிரிந்து (அவர்களை விரட்டி), (பின்னும் அவர் பொருள் தந்தால்) வருந்துதலுடன் வரவேற்கவந்தவர்கள் போல நடித்து, தமது அன்பைக் காட்டும் மலர் விரித்த அழகிய படுக்கையில் ஏமாற்றுகின்ற அசட்டு வேசிகள் மீது காம இச்சை என்னும் நோய் வாய்ப்படும் மனத்தால் ஏற்படும் தீ வினையினின்றும் நீங்கிப் பிழையேனோ? ஆலகால விஷத்தின் அடையாளத்தைக் காட்டும் கழுத்தை உடைய ஜோதிப் பெருமான், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவன், பார்வதி அன்பு வைத்து மகிழ நடனம் ஆடுபவன், பூமியை உண்டு மீண்டும் கொடு என்று கேட்க உமிழ்ந்து (கண்ணனாக) விளையாடிய திருமாலை அம்பாக (திரிபுரம் அழித்த போது) போரில் அமைத்துக் கொண்ட வில்லைக் கையில் கொண்ட வலிமையாளன், நீர் நிலைகளில் பூத்த பூ இதழ்களின் தேன் கலந்த கங்கை ஆறு நிறைந்து தோன்றும் திரண்ட முடியாகிய சடையைத் தரித்துள்ளவன், பரிசுத்தமான சிறந்த கடவுள், களிப்பு நிறைந்த பூதப் படைகள் போற்றிட நிற்கும் அப்பர் ஆகிய சிவபெருமானுக்கு (பிரணவமாகிய) ஞானப் பொருளை உபதேசித்த புகழையே மிகக் கொண்டுள்ள முருகனே, சேல் மீன்களும், நீங்காத கயல் மீன்களும் குதிக்கும் சுனைகள் சூழ்ந்துள்ள வயலூரில் வீற்றிருப்பவனே, வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, அந்தணர்க்கு பற்றுக் கோடாக உள்ளவனே, தீரனே, பரிசுத்தனே, திருப்புத்தூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்புத்தூர் காரைக்குடிக்கு அருகில் உள்ளது.
பாடல் 981 - திருவாடனை
ராகம் - ராகமாலிகை தாளம் - கண்டசாபு - 2 1/2
தானான தத்ததன தானான தத்ததன
     தானான தத்ததன ...... தனதான
ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட
     லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால் 
ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
     ஓயா முழக்கமெழ ...... அழுதோய 
நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
     நாறா தெடுத்தடவி ...... யெரியூடே 
நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
     நாடா தெனக்குனருள் ...... புரிவாயே 
மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
     மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே 
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
     வானோரு மட்டகுல ...... கிரியாவும் 
ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
     மாலால முற்றவமு ...... தயில்வோன்முன் 
ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்
     ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.
மாமிசமும், உள்ளே நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல் கேடுற்று அழியும்படி உயிர் போய்விட்டால், ஊரார்கள் கூட்டமாக வந்து ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில் நெருங்கி ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி அழுது, பின் ஓய்ந்து, பலவிதமான பல்லக்கின் மேலே பிணத்தைக் கிடத்தி, அப்பிணம் துர்நாற்றம் வீசுமுன்பு அதை எடுத்துக்கொண்டுபோய் சுடுகாட்டில் நெருப்பின் மத்தியிலே கூசாமல் வைத்து விட்டுவிட அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள இந்தப் பிறவியை நான் விரும்பாதபடி எனக்கு உன் திருவருளைத் தந்தருள்வாயாக. பெரிய நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம் செய்த மாயவன் திருமாலும், தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமனும், அஷ்டதிக் பாலகர்களும், தேவர்களும், சிறந்த அஷ்டகிரிகளில் உள்ளவர்களும், நீங்காத அரக்கர்களுடன், வானிலுள்ள கணங்கள் யாவும் பிழைக்கும்படியாக, பாற்கடலில் எழுந்த ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான் முன்னொருநாள் ஆசாரத்துடனும், பக்தியுடனும் கேட்க, அவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருளியவனும், திருவாடானை* என்ற தலத்தில் நாள்தோறும் வீற்றிருப்பவனுமான பெருமாளே. 
* திருவாடானை மானாமதுரையில் இருந்து சிவகங்கை வழியில் 44 மைலில் உள்ளது.
பாடல் 982 - உ த்தரகோசமங்கை
ராகம் - ....; தாளம் -
தத்தன தானத் தனதன தந்தத்
     தத்தன தானத் தனதன தந்தத்
          தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
     திற்புத சேனைக் கதிபதி யின்பக்
          கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன் 
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
     றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
          கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய 
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
     பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
          பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான் 
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
     றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
          றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ 
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
     குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
          கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித் 
திக்கய மாடச் சிலசில பம்பைத்
     தத்தன தானத் தடுடுடு வென்கச்
          செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி 
உற்பன மாகத் தடிபடு சம்பத்
     தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
          றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா 
உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
     சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
          றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே.
(வேண்டுவோர்க்கு வேண்டியதைத் தரும்) கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பகரமான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், சோறு, வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், வாழை, மா, பலா என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, (உன்) எழில்மிகு திருவடியை (முற்பிறப்பில்) வணங்கி, உனக்கு வாகனமாக (இப்பிறவியில்) அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சுநாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னைத் துதித்து, மனம் கசிந்து தியானித்து, நன்றாக நான் உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ நிலையையும் பெற்று, மெய்ஞ் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அப்போது உண்டாவதாகச் சொல்லப்படுகின்ற உடலில் ஊறும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ? போர்ச்செருக்குள்ள உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் குப்பைகளாக உள்ள உடல்களை உடைய அசுரர்களின் பிணங்களும் எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகளெல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளில் உள்ள யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்*) அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்க, தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்க, சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோற்றம் கொடுக்க, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊராகிய பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, அங்கே உள்ள செல்வங்களையும் அடைந்து பொன் மலர்களைச் சிந்த, வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே, உண்மைப் பொருளை அறிந்த ஞானியாகிய குற மகள் வள்ளியும், (ஐராவதமாகிய) யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட அந்த வாகனமாகிய மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை** என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 
* அஷ்ட திக்கஜங்கள்:ஐராவதம், புண்டா£கம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் என்பன.
** உத்தரகோசமங்கை ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 983 - இராமேசுரம்
ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சது.ரத்ருவம் - கண்டநடை - 35 - எடுப்பு - /4/4/4 0
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன தானதன தானதன
          தானதன தானதன தானதன தானதன ...... தனதான
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
     வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
          வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி 
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
     வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
          மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த் 
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
     கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
          சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற் 
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
     சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
          சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ 
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
     யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
          நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே 
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
     லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
          ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா 
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
     வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
          மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக 
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
     பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ
          யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.
கட்டிளமை வயதை அடைந்து, அழகு நிரம்பப்பெற்று, மன்மதன் போல் விளங்கி, ஊதியம் தரும் பல வாணிபப் பணிகளை மேற்கொண்டு நடத்தி, மயக்க அறிவைப்பெற்று காம விளையாட்டுக்கள் ஆடி, பயனற்ற வாழ்க்கையையே நிலையானது என்று கருதி, அதிலேயே மனம் உறுதிபெற்று, மாட கூடம் கொண்ட செல்வனாயப் பொருளைத் தேடி, நறு மணம் உள்ள புனுகு, மற்றும் இதழ்களோடு கூடிய மலர்கள் இவற்றில் மனத்தைச் செலுத்தியவனாக, மகிழ்ச்சியுடன் வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அணிந்தவனாய், காமப் பற்றைக்கொண்டு பொது மகளிரை விரும்பி அவர்கள் மீது மோகம் கொண்டு அவர்கள் பின் சுழல, (அங்ஙனம்) சில நாட்கள் கழிய, உடலில் தோல் சுருங்கலுற்று, மயிர் வெண்ணிறம் பூண்டு, கண்கள் பார்வை இழந்து, இரண்டு கால்களும் தடுமாற்றம் அடைந்து, காதுகள் கேட்கும் தொழில் அற்று, உயிர், தளை, கடவுள் என்னும் முதற் பொருள்களைப் பற்றிய அறிவு யாவும் மறைதலுற்று, சுகமெல்லாம் கெட்டு, கையில் தடி ஏந்தித் திரிகின்ற முதுமைப் பருவத்தில், சூலை நோய், சொறி நோய், கோழை, இழுப்பு, வாயு மிகுதலால் வரும் பிணிகள், நீரிழிவு, இரத்தமின்மையால் வரும் சோகை, கண்ட மாலை, காய்ச்சல் இவைகளுடன் சேர்ந்துள்ள கக்குவான் இருமல், இவை எல்லாம் சூழ்ந்து, அடிக்காரணமாகிய இந்தக் கூளம் போன்ற உடல் துர் நாற்றம் அடைந்து நான் மடிந்து போவேனோ? நான்கு முகங்களைக் கொண்டவனும், யாவற்றுக்கும் ஆதாரமான பிரணவத்தின் பொருளைச் சொல்லத் தெரியாதவனுமாகிய பிரமனை, விழும்படியாகத் தாக்கி, சரியான பொருளைச் சொல்லுக என்று அவனுடைய நான்கு முகங்களுடன் குடுமியும் சிதறுண்டு அலைய தாளமிடுவது போல் குட்டிய இளையவனே, நறுமணம் வீசும் கொன்றையை அணிந்த ஜடையை உடைய சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ள தேவி பார்வதி முதலில் ஈன்ற குழந்தையாகிய கணபதி மகிழும் சகோதர நண்பனே, வள்ளி மலைக் காட்டில் பொருந்தி இருந்த ஞானக் குறப் பெண் வள்ளியை, தினைப் புனச்சோலையில் திருமணம் செய்துகொண்ட புகழை உடைய மயில் வீரனே, கூச்சலிட்டு வந்த தாடகை, சுபாகு, வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு, வாலி மற்றும் நீலி, பகன், ஒப்பற்ற விராதன், அலைகள் எழுந்து வீசும் கடல், இவைகளுடன் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் யாவும் போரில் இறந்து பொடிபட்டழிய, களிப்புடன் நெருப்பு அம்பை வீசும் வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களைக் கையில் ஏந்தியவனும், லக்ஷ்மியை மார்பில் தரித்தவனுமான ஹரி, கேசவன் ஆகிய திருமாலின் மருகனே என்று வேதங்கள் ஓதிப் புகழும் இராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 984 - இராமேசுரம்
ராகம் - ....; தாளம் -
தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான
வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர்
     மீதே பணிக்கும்வகை ...... யறியாதே 
மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி
     லூடே யணைத்துதவு ...... மதனாலே 
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
     ளேதோ வெனக்கலவி ...... பலகோடி 
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
     சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ 
மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி
     னூடே கிநிற்குமிரு ...... கழலோனே 
மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை
     வீரா குறச்சிறுமி ...... மணவாளா 
ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை
     நாணா துரைக்குமொரு ...... பெரியோனே 
நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு
     ராமே சுரத்திலுறை ...... பெருமாளே.
தேவர்கள் போற்றுகின்ற உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது பணி செய்யும் வகையை உணராமல், மான் விழியரான விலைமாதர்களின் கடைக் கண்ணில் பட்டு, பூந்தாதுக்கள் நிறைந்த மெத்தையில் அணைத்துப் பெறும் அந்த நிகழ்ச்சியால், தேன் தானோ, கரும்பிலிருந்து வரும் சர்க்கரைக் கட்டியோ, இதற்குச் சமமான இன்பம் ஏதேனும் உள்ளதோ, என்று கூறி பல கோடிக் கணக்கான புணர்ச்சிகளை அடங்காத மோகத்தோடு பாம்பின் படம் போன்ற பெண்குறியாகிய சேற்றில் விளையாடுதலால் நான் அடைந்துள்ள துயரத்தை விலக்க மாட்டேனோ? மேல் நாடாகிய விண்ணுலகத்தையும் போரில் வென்று அடைந்து மேம்பட்ட அசுரர்கள் தலைவனான சூரனின் எதிரே போரில் புகுந்து நின்ற இரண்டு திருவடிகளை உடையவனே, மயில் என்னும் உக்கிரமான வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி பெற்ற வீரனே, குறப் பெண் வள்ளியின் கணவனே, ஞானப் பரம் பொருளாகிய சிவபெருமானுக்கு வேதாகமங்களின் பொருளைத் தயங்காமல் உபதேசித்த ஒப்பற்ற பெரியோனே, திருமாலுக்கு மருகனே, சிறப்பு பெற்று விளங்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 985 - இந்தம்பலம்
ராகம் - ....; தாளம் -
தனன தனதனன தந்தந் தனத்ததன
     தனன தனதனன தந்தந் தனத்ததன
          தனன தனதனன தந்தந் தனத்ததன ...... தனதான
அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை
     அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய
          லளவு மசலமது கண்டங் கொருத்தருள ...... வறியாத 
தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ
     டகில புவனநதி யண்டங் களுக்குமுத
          லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் ...... நடுவான 
கமல துரியமயி லிந்துங் கதிர்ப்பரவு
     கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ
          ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத ...... சிவயோகம் 
கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி
     குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது
          கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை ...... யருள்வாயே 
திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித
     டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட
          திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த ...... திகுதீதோ 
செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென
     அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு
          திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் ...... களமீதே 
அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள
     அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள
          அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள ...... விடும்வேலா 
அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக
     அழகு புயமொடணை யினபங் களித்துமகிழ்
          அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் ...... பெருமாளே.
மாசு இல்லாததாய், (ஆறு ஆதாரங்ளுக்கு அப்பால் உள்ளதாய் 1008 இதழோடு கூடிய) தாமரையாகிய ஸஹஸ்ரார* குருகமல உருவிடத்தே (பிராணவாயுவைச் செலுத்தி அப்போது உண்டாகும்) சங்க நாதம் ஒலிக்க, அற்புதமான ஆகாச வெளி எங்கணும் பொலிவுறும் செயலை அளவிட்டு அறியும் நிலை பெற்றதான தன்மையை ரகசியமாய் உணர்ந்தும், அவ்விடத்தில் எவராலும் தனது உண்மைத் தன்மையை அறிய முடியாததாகும். (வடமொழியில்) உயிரும் மெய்யும் ஆகிய உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்களுக்கும், சகல லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிறச் சுத்த ஜோதிப் பேரொளியை எல்லா இடங்களிலும் வீசிப் பொருந்தியதாய், முதலும் நடுவுமான யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான (பிரமரந்திரம் என்ற) பேரின்ப கமலத்தில், சந்திரனுடைய காந்தி பரந்துள்ளதும், பொன்னொளி வீசும், அழகிய ஸ்படிக நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில், சுழி முனை நாடியின்** உச்சியில, (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்) ஐந்து இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை உனது கருணையினால் அறியும்படியான வழியை (நான்) அடைவதற்கு, பார்வதியின் குமரனே, குமர குருவே என்றென்று பல முறை கூற முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர, அதற்கு வேண்டிய இளமை வலிமையைத் தந்து, உன் திருவடியில் என்னை சேர்த்துக் கொள்ளுவாயாக. பறையும், பலவிதமான மத்தள வகையும் திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ (அதே) தாளத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், ஆதி சேஷனின் முடிகளும், அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பும் வெற்றிச் சின்னங்களை சங்கங்கள் முழங்க, அசுரர்கள் சண்டை செய்து மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பூமாரி பொழிய, அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க, திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய, வேலாயுதத்தைச் செலுத்தியவனே, திருமாலின் மகளான வள்ளியின் மார்பகங்களில் உனது உடல் புதையும்படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து, அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம்*** என்ற ஊரில் ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
*** இந்தம்பலம் என்ற ஊர் விபரம் தெரியவில்லை.
பாடல் 986 - எழுகரைநாடு
ராகம் - மனோலயம் தாளம் - ஆதி
தனதன தாத்தன தனதன தாத்தன
     தனதன தாத்தன ...... தந்ததான
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
     விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல் 
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
     விழைவுகு ராப்புனை ...... யுங்குமார 
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
     முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி 
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
     முழுதும லாப்பொருள் தந்திடாயோ 
பரகதி காட்டிய விரகசி லோச்சய
     பரமப ராக்ரம ...... சம்பராரி 
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
     பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே 
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
     எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா 
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
     எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.
தந்திரம் ஏதும் இல்லாத நேரான பார்வையோடு உன்னை நோக்கிக் கருதியும், உன்னை நினைந்து மனம் உருகியும், உன்னைத் துதித்து வாழ்த்தியும், கண்களில் நீர் நிறைந்து வழிய, பக்தி மேலும் மேலும் பெருகவும், இரவும் பகலும் மற்ற விஷயங்களில் சிந்தனை அற்றுப்போக, விருப்பமுடன் குராமலரை அணியும் குமரனே, முருகனே, ஆறெழுத்து அண்ணலே, சரவணபவனே, கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் அருந்தி அருளிய அரசனே, என்றெல்லாம் பாடி, மொழிகள் குழறும்படி உன்னைத் தொழுது, ஓயாமல் அழுது யான் உன்னால் ஆட்கொள்ளப்பட, உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த ஞானப் பொருளை அடியேனுக்குத் தரமாட்டாயா? உபதேச* மூலமாக மோக்ஷ வீட்டைக் காட்டிய சாமர்த்தியசாலியே, மலை அரசனே, மிக்க பராக்கிரமசாலியே, மன்மதன் சாம்பலாய் அழிய நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த பசுபதி சிவபிரான் போற்றிய பகவதியாகிய பார்வதி பெற்றளித்த பெருவாழ்வே, அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும், அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும், கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு மலைகளும் அதிர்ந்து ஆர்ப்பரிக்கவும், வெற்றி கொண்ட வேலனே, தேவர்களின் உலகில் யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய எழுகரைநாடு** என்ற தலத்தவர் தம்பிரானே. 
* அருணகிரிநாதரின் வாழ்க்கையில் முருகன் உபதேசித்து பரகதியைக் காட்டியது குறிப்பிடப்படுகிறது.
** எழுகரைநாடு இலங்கையில் உள்ள திருத்தலம். சிலர் இத்தலம் குடகு நாட்டில் உள்ளதாகவும் சொல்வர்.
பாடல் 987 - ஒடுக்கத்துச் செறிவாய்
ராகம் - ....; தாளம் -
தனத்தத் தத்தன தாத்த தத்தன
     தனத்தத் தத்தன தாத்த தத்தன
          தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
     மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்
          வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள ...... வதனாலே 
மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்
     சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை
          மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ...... மதியாதே 
கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு
     சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்
          கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது ...... கரிசாணி 
கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு
     பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்
          கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை ...... யொழியேனோ 
அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை
     நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்
          அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன ...... கிரிதோய்வாய் 
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
     சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்
          அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி ...... லுறைமாயன் 
உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்
     விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்
          உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் ...... மருகோனே 
உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
     மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்
          ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை ...... பெருமாளே.
வழக்காடும் சொற்களில் பயின்றுள்ளதால் வஞ்சனைக்கு இடமான மருந்துகளையும் பச்சிலைகளையும் ஊட்டுகின்ற பயலினிகள். (ஆண்களைத் தம் பால்) வளைத்து இழுத்து, மன்மதனுடைய காம நூலில் கூறியுள்ள வஞ்சக வழிகளால் (தம்மிடம் வந்தவர்களின்) கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்க வல்லவர்கள். சுகத்தை அடைந்து வஞ்சிப்பவர்கள். ஊரில் தம்மைத் துதிப்பவர்களை மயக்கி சூது நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவர்கள். மதிப்பு வைக்காமலே கழுத்தைக் கட்டி, ஏமாற்றி, நட்பு காட்டிச் சிரித்து, பல்லில் (வெற்றிலை உண்ட) கறையைக் காட்டி, கையில் உண்டான பொருளைப் பிடுங்கி, அது ரத்தினக் கல்லானால் (அதன்) நிறம் முதலியனவற்றையும், (தங்கம் கிடைத்தால்) அதன் மாற்றறிய உரைத்துப் பார்க்க, குற்றம் இவைகளை அறிய உரைகல்லால் உரசி, கணக்குப் பார்த்து, காலம் கடத்தி, ஒரு சண்டை இட்டு, குழப்பம் உண்டு பண்ணும் விபசாரிகள். இந்த வேசிகளுடன் ஒருங்கே இணைந்து புக்கிருக்கும் பாழான புத்தியை நான் விலக்க மாட்டேனோ? நெருப்பு போன்ற கண்ணையும் பொய்யையும் சூதையும் கொண்ட, மடமை நிறைந்த அசுரர்களை நசுக்கிப் பொடியாகும்படி முறித்துத் தள்ளி, அந்தக் கணத்திலேயே அவர்களை அழித்து, குறப் பெண் வள்ளியின் அழகிய மார்பாகிய மலையைத் தழுவுவனே, தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு(*1) சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும், கடலில் (ஆதி சேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு (முனிவர் உருவில் வந்தபோது) (லக்ஷ்மியாகிய) மானின் இடத்தே பிறந்த அழகிய கொடி போன்ற சிறந்த குயில் அனைய வள்ளியின் மீது காதல் கொண்டு அவளை அணைந்த தோளை உடைய கருணைக் கடலே, உறிக்குள்ளே கையை நீட்டிய (வெண்ணெய் திருடிய) கண்ணனின் மருகனே, உண்மைப் பொருளைத் தெரிவிக்க (ருத்திர சன்மன் என்னும்) செட்டியாக(*2) பல சங்கப் புலவர்கள் கூறிய தமிழ்ப் பொருள்களை ஆராய்ந்து மதித்து, நிறைந்த நால்வகைக் கவிகளிலும்(*3) வல்ல கவிகளுடன் சேர்ந்து, ஒடுக்கத்து செறிவாய்(*4) என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
(*1) திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்டனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும். ஆழ்வாரின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, அவரது கவியின் ஈற்றடியில் வசப்பட்டு, காஞ்சியிலிருந்து வெளியேறியும் மீண்டும் குடியேறியும் செய்ததனால் பெருமாளுக்குச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது.
(*2) மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் - திருவிளையாடல் புராணம். 
(*3) தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
பாடல் 988 - காமத்தூர்
ராகம் - ....; தாளம் -
தானத் தானத் தானத் தானத்
     தானத் தானத் ...... தனதானா
ஆகத் தேதப் பாமற் சேரிக்
     கார்கைத் தேறற் ...... கணையாலே 
ஆலப் பாலைப் போலக் கோலத்
     தாயக் காயப் ...... பிறையாலே 
போகத் தேசற் றேதற் பாயற்
     பூவிற் றீயிற் ...... கருகாதே 
போதக் காதற் போகத் தாளைப்
     பூரித் தாரப் ...... புணராயே 
தோகைக் கேயுற் றேறித் தோயச்
     சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா 
சோதிக் காலைப் போதக் கூவத்
     தூவற் சேவற் ...... கொடியோனே 
பாகொத் தேசொற் பாகத் தாளைப்
     பாரித் தார்நற் ...... குமரேசா 
பாரிற் காமத் தூரிற் சீலப்
     பாலத் தேவப் ...... பெருமாளே.
உடலிலே வந்து குறி தப்பாமல் தைக்கின்ற (மன்மதனுடைய) கையில் உள்ள கரும்பு வில்லினின்று புறப்படும் மது நிறைந்த மலர்ப் பாணங்களாலும், விஷம் கொண்டதாய், பால் போலும் வெண்மையானஅழகு வாய்ந்த வடிவம் உடைய நிலவாலும், புணர்ச்சி இன்பத்தில் ஆசைப்பட்டு, தன் படுக்கையில் நெருப்புப்பட்ட பூவைப்போலக் கருகிப் போகாமல், அவள் பிழைத்துப் போகும்படி, ஆசை வைத்துள்ள இன்பத்துக்கு இடமான (உனது) திருவடியில் (என் மகள்) மகிழ்ச்சி அடைய, நன்கு அவளைச் சேர்ந்து அருள மாட்டாயா? (இந்திரனாகிய) மயில் மேல் பொருந்தி ஏறி, கடல் நீரில் நின்ற சூரன் அழிந்து ஓடும்படி போர் செய்த வேலனே, சூரியன் காலையில் உதிக்கும்படிக் கூவுகின்ற, அந்த இறகு உடைய கோழிக் கொடியை உடையவனே, சர்க்கரைப் பாகுக்கு ஒத்த இனிமையான சொற்களின் பக்குவம் உடைய வள்ளியை விரும்பி உள்ளம் மகிழும் நல்ல குமரேசனே, இந்த உலகத்தில் காமத்தூர் என்னும் தலத்தில் தூய்மை கொண்ட குழந்தையாக அமர்ந்த தெய்வப் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 989 - முள்வாய்
ராகம் - ....; தாளம் -
தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த
     தன்னா தனந்த தந்த ...... தனதான
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
     வெவ்வே ழன்று ழன்று ...... மொழிகூற 
விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க
     மென்னா ளறிந்த டைந்து ...... உயிர்போமுன் 
பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து
     பொய்யார் மனங்கள் தங்கு ...... மதுபோலப் 
பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு
     புன்னா யுளுங்க வின்று ...... புகுவாயே 
பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து
     பன்னா கணைந்து சங்க ...... முறவாயிற் 
பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று
     பண்ணூ துகின்ற கொண்டல் ...... மருகோனே 
முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து
     முன்னோர் பொருங்கை யென்று ...... முனையாட 
மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு
     முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே.
(வீட்டில் உள்ள) பெண்டிர், பெற்ற மக்கள், தான் பிறந்த நாடு, சுற்றத்தினர் யாவரும் கும்பலாகக் கூடியும், தனியாகவும் அங்கும் இங்கும் சென்று சென்று (என்னைப் பற்றிப்) பேச்சுக்கள் பேசி, ஆகாயத்தில் யமன் (கண்ணுக்குத்) தெரியாமல் மறைவாக இருந்து, மண் மேல் உள்ள இந்த உடம்பினின்று உயிர் அடஙகும் அந்த மெலிவு நாளைத் தெரிந்து வர, என் உயிர் போவதற்கு முன்பாக, பொன்னாலாகிய சதங்கை, தண்டை (ஆகியவற்றைக் கழலிலும்), முப்புரி நூல், கடப்ப மாலை (இவைகளைத் தோள்களிலும்) அணிந்துகொண்டு, மெய்ம்மையாளர்களின் மனங்களில் நீ வாசம் செய்து அவர்களுக்கு உதவுவது போல, இந்தப் பொல்லாதவனாகிய நான் வணங்கி உன்னை வேண்டுகின்ற சொல்லை நீ பொருட்படுத்தித் தெரிந்து கொண்டு, மனம் வருந்தும் இந்த இழிந்த நாயேனாகிய அடியேன் உள்ளத்திலும் அழகுறப் புகுந்து அருளுவாயாக. பல நாட்களாக வணங்கி வரும் அடியார்களாகிய தேவர்கள் தங்கள் பொன்னுலகத்தை அடைய அவர்களுக்கு உனது மேலான அழகிய கை கொடுத்து உதவி செய்தவனே, பாம்பணையில் படுக்கை கொண்டு, (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கை திருவாயில் வைத்து, பல சாஸ்திரங்களும் இச் சங்கத் தொனியில் முழங்குகின்றது என்னும்படி தேவர்களும் மயங்கி நின்று கேட்க, பலவித பண்களையும் ஊதிய மேகவண்ணனாகிய திருமாலின் மருகனே, மன்மதன் முன்னதாக நின்று (தனது) கரும்பு வில்லை எய்ய வேண்டிய இடத்தை அறிந்து முன்னதாகவே ஒரு போர் செய்யும் தொழிலை மேற்கொண்டது போல போர் புரிய நெருங்கி கச்சு நிமிர்ந்துள்ள மார்பினை உடையவர்களும், உண்மைக் குணம் கொண்டவர்களுமான மாதர்கள் வந்து வணங்குகின்ற முள்வாய்* என்னும் தலத்தில் விளக்கமுற நிற்கும் பெருமாளே. 
* முள்வாய் ஆந்திராவில் உள்ள சித்தூர் நகரத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 990 - வாகைமாநகர்
ராகம் - ....; தாளம் -
தான தான தனத்த, தான தான தனத்த
     தான தான தனத்த ...... தனதான
ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
     மால கால விழிக்கு ...... முறுகாதல் 
ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு
     மார பார முலைக்கு ...... மழகான 
ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு
     மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி 
ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி
     லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ 
வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
     மீறு காத லளிக்கு ...... முகமாய 
மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து
     மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது 
மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
     வாயி லூறல் குடித்து ...... மயல்தீர 
வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற
     வாகை மாந கர்பற்று ...... பெருமாளே.
கரும்பு போல் இனிக்கும் பேச்சுக்கும், ஆளையே ஊடுருவி அறுக்கும் ஆலகால விஷம் போன்ற கண்களுக்கும், காம இச்சை என்னும் ஆசையைக் கொண்ட விலைமாதர்கள் அழைக்கின்ற ஓசை கொண்ட குரலின் தொனிக்கும், முத்து மாலை அணிந்த பாரமான மார்பகங்களுக்கும், அழகிய காதோலைக்கும், பொருந்திய குண்டல அணிக்கும், நெற்றிப்பட்டம் அணிந்துள்ள பெண் யானையின் நடை போன்ற நடைக்கும், குரவைக் கூத்தில் சாய்வது போல சாய்ந்துள்ள இடுப்புக்கும் நான் மோகம் கொண்டவனாகி, காம ஊறல் பரவும் அந்த இதழாகிய உறுப்பிலும், அந்த ஊறலை அறியும் காரமான அநுபவத்திலும் நினைவு கொண்டு வேகமாகச் செல்லும் ஆசையிலேயே அலைச்சல் உறுவேனோ? கை வளை விற்கும் வேலை ஆகும் பொருட்டு வளை விற்கும் செட்டியாய் வேடர் மகளான வள்ளிக்கு மிக்கெழும் ஆசையை ஊட்டிய மாயம் பூண்ட திருவுருவத்தை உடையவனே, பொருந்திய வேட்கையைக் கொடுத்தும், பெருமை வாய்ந்த அழகு உருவங்களைக் காட்டியும், இறுதியாக (நீ யார் என்ற) உண்மையை அறிவித்தும் (தினைப்புனத்தின்) பரண் மீதிலே மலர் மாலையை வள்ளியின் கூந்தலில் முடித்தும், அந்த மாதாகிய வள்ளியின் பாதங்களை வருடியும், அவள் வாயிதழ் ஊறலைப் பருகியும் மோகம் தீர அழகிய தோள்களில் அவளை அணைத்தும், ஆகாயத்தை அளாவும் மரங்கள் இருக்கும் சோலைகள் உள்ள வாகை மா நகரில்** (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே. 
* நீடு கோலம் - வேட்டுவனாக, வேங்கையாக, வளைச் செட்டியாக, விருத்தனாக, இறுதியில் தெய்வமாகக் கோலங்கள் காட்டியதைக் குறிக்கிறது).
** வாகை மாநகர் செய்யார் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவோத்தூர் வட்டத்தில் உள்ளது.
பாடல் 991 - விசுவை
ராகம் - ...; தாளம் -
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான
திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து
     முடிமலர் கொண்டொ ...... ரழகாகச் 
செயவரு துங்க முகமும்வி ளங்க
     முலைகள்கு லுங்க ...... வருமோக 
அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து
     அறிவுமெ லிந்து ...... தளராதே 
அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு
     னடியிணை யன்பொ ...... டருள்வாயே 
வரையைமு னிந்து விழவெக டிந்து
     வடிவெலெ றிந்த ...... திறலோனே 
மதுரித செஞ்சொல் குறமட மங்கை
     நகிலது பொங்க ...... வரும்வேலா 
விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த
     விடையரர் தந்த ...... முருகோனே 
விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு
     விசுவைவி ளங்கு ...... பெருமாளே.
திருகு ஜடைபில்லையை அணிந்துள்ள கூந்தலை வகிர்ந்து வாரி, தலைமுடியில் மலர்களைத் தொடுத்து ஒரு வகையான அழகு விளங்கும்படிச் செய்வதால் வரும் சிறப்பான முகம் பிரகாசிக்க, மார்பகங்கள் குலுங்க வருகின்ற, காம மயக்கத்தைத் தரும் விலைமாதர்களின் வலையிலே விழுந்து, புத்தி கெட்டுச் சோர்வு அடையாமல், தேவர்கள் மகிழ்ச்சியுற்று தொழுது வணங்குகின்ற உனது இரண்டு திருவடிகளையும் அன்புடன் தந்து அருள்வாயாக. கிரெளஞ்ச மலையைக் கோபித்து, அது அழிபட்டு விழும்படிக் கண்டித்து, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய திறமை வாய்ந்தவனே, இனிமை வாய்ந்த செவ்விய சொற்களை உடைய இளம் குற மகளாகிய அழகிய வள்ளி நாயகியின் மார்பகங்கள் பூரிக்குமாறு வருகின்ற வேலனே, நறு மணம் வீசும் கொன்றை மலர், அறுகம் புல் இவைகளைச் சூடியுள்ளவரும் ரிஷப (நந்தி) வாகனத்தை உடையவருமான சிவபெருமான் ஈன்றருளிய முருகனே, நறு மணம் மிக்க சந்தன மரச் சோலைகள் விளங்கும் விசுவை என்னும் தலத்தில் விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 992 - பொதுப்பாடல்கள்
ராகம் - .¥நாத விநோதினி தாளம் - அங்கதாளம் - 8 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தான தத்தன தானா தனாதன
     தான தத்தன தானா தனாதன
          தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம
     நாத நிஷ்கள நாதா நமோநம
          பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண 
பூபன் மைத்துன பூபா நமோநம
     நீப புஷ்பக தாளா நமோநம
          போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும் 
மாத மிழ்த்ரய சேயே நமோநம
     வேத னத்ரய வேளே நமோநம
          வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத 
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
     யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
          மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ 
கீத நிர்த்தவெ தாளா டவீநட
     நாத புத்திர பாகீ ரதீகிரு
          பாச முத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா 
கேக யப்பிர தாபா முலாதிப
     மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
          பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டா£கா 
வேத வித்தக வேதா விநோதகி
     ராத லக்ஷ்மிகி ¡£டா மகாசல
          வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா 
வீர நிட்டுர வீராதி காரண
     தீர நிர்ப்பய தீராபி ராமவி
          நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே.
ஞானம் நிறைந்தவனாய், குணங்களுக்கு எட்டாமல் இருக்கும் ஞானமூர்த்தியே, போற்றி, போற்றி, தலைவனே, உருவம் அற்ற மூர்த்தியே, போற்றி, போற்றி, எல்லாக் கலைகளின் சாரமாக உள்ள தெய்வமே, போற்றி, போற்றி, ஐந்து மலர்க்கணைகளை உடைய அரசன் மன்மதனின் மைத்துனனாம்* அரசனே, போற்றி, போற்றி, கடப்ப மலர்களைத் தரித்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, இன்பங்களுக்கு உரிய சொர்க்க பூமியைக் காத்தவனே, போற்றி, போற்றி, சங்கப்பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி, ரிக், யசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களும்** தொழும் தெய்வமே, போற்றி, போற்றி, வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் என்ற மூவுலகங்களும் போற்றும் செல்வமே, போற்றி, போற்றி, என்றெல்லாம் கூறிப் போற்றி உன் பாதத் தாமரையில் விழாமல், மகா சமுத்திரமாகிய ஏழ் பிறப்பில் நான் மூழ்கி, மனத்தில் உதிக்கும் எண்ணங்களாம் மாயையின் சுழற்சிக்குள்ளே வெளிவர முடியாமல் அகப்பட்டுக் கலங்குதல் நன்றோ? பாடல் ஆடல் கொண்ட வேதாள கணங்களுடன் சுடுகாட்டில் நடனம் செய்யும் சிவபிரானுடையவும் பாகீரதியாம் கங்கையுடையவும் புத்திரனே, கருணைக் கடலே, மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின் மகளான தேவயானையின் மணாளனே, மயில் வாகனக் கீர்த்திமானே, மூலாதார மூர்த்தியே, மாலைகள் அணிந்த குமரக் கடவுளே, விசாகனே, கிருபாளனே, பவள நிறத்தோனே, ஆறு திருமுகங்களாம் தாமரைகளை உடையவனே, வேதங்களில் வல்லவனே, பிரம்மனுடன் வேடிக்கை விளையாடலைப் புரிந்தவனே, வேடர் குலத்து லக்ஷமியாம் வள்ளியுடன் சிருங்கார லீலைகள் புரிந்தவனே, பெரும் மலைகளில் எல்லாம் குடியிருக்கும் வீரனே, பராக்கிரமசாலியே, மீகுந்த கவனத்தோடு செயல்படுவோனே, பூரணமான சூரத்துவம் உடையவனே, வீரனுக்கு இருக்கவேண்டிய கொடூரம் கொண்ட வீரனே, மூல காரணப் பொருளே, தீரனே, பயமற்ற ¨தரியசாலியே, அழகனே, விநாயகருக்குப் பிரியமானவனே, வேலாயுதனே, தேவர்கள் தம் தலைவனே. 
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை விட்டதன் காரணம் அதனில் உயிர்களுக்கு ஆக்கமேயன்றி கேடு விளைவிக்கும் மந்திரங்களும் கூறப்படுவதால் மற்ற மூன்றை மட்டும் குறிப்பிட்டார்.
பாடல் 993 - பொதுப்பாடல்கள்
ராகம் - .¡வேரி தாளம் - அங்கதாளம் - 8 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிடதக-2 1/2
தான தத்தன தானா தனாதன
     தான தத்தன தானா தனாதன
          தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
     வேத னைப்படு காமாவி காரனை
          ஊன முற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி 
யோக மற்றுழல் ஆசாப சாசனை
     மோக முற்றிய மோடாதி மோடனை
          ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி 
பாத கக்கொலை யேசூழ்க பாடனை
     நீதி சற்றுமி லாகீத நாடனை
          பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ...... மண்ணின்மீதில் 
பாடு பட்டலை மாகோப லோபனை
     வீடு பட்டழி கோமாள வீணனை
          பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ...... தெந்தநாளோ 
ஆதி சற்குண சீலா நமோநம
     ஆட கத்திரி சூலா நமோநம
          ஆத ரித்தருள் பாலா நமோநம ...... உந்தியாமை 
ஆன வர்க்கினி யானே நமோநம
     ஞான முத்தமிழ் தேனே நமோநம
          ஆர ணற்கரி யானே நமோநம ...... மன்றுளாடும் 
தோதி தித்திமி தீதா நமோநம
     வேத சித்திர ரூபா நமோநம
          சோப மற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச 
தூத னைத்துகை பாதா நமோநம
     நாத சற்குரு நாதா நமோநம
          ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே.
ஓதத்தக்க முத்தமிழைத் தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனை, துன்பப்படுகின்ற விகாரமுடைய காமுகனை, பழி கொண்டு திரியும் அசுத்தமான இழிவு உள்ளவனை, எங்கும் வியாபித்திருக்கும் யோக நிலையைக் கடைப்பிடிக்காமல் திரியும் ஆசையாகிய பேய் போன்றவனை, காம மயக்கம் மிகுந்த மூடர்களுக்குள் தலைமையான மூடனை, பயன் தரக் கூடிய தவத்தைத் தேடாத கேடுடையவனை, அன்றில் பறவை முதலான உயிர்களை பாபத்துக்கு ஈடான கொலை செய்யவே கருதுகின்ற வஞ்சகனை, ஒழுக்க நெறி கொஞ்சமும் இல்லாத இசைப் பாட்டுக்களில் களிப்புறுவானை, பாபம் செய்பவர்கள் எல்லோரையும் விட பெரிய துரோகம் செய்பவனை, இந்த உலகில் பாடுபட்டு அலைகின்ற பெரிய கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனை, கெடுதல் பட்டு அழிகின்ற, களித்து வீண் பொழுது போக்குபவனை, உலக மாயையில் சிக்குண்டு வாழ்பவனாகிய என்னை ஆட்கொள்ளுவது எந்நாளோ? முதல்வனே, சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியே, போற்றி, போற்றி, பொன்னாலாகிய, மூன்று தலைகளை உடைய சூலாயுதனே, போற்றி, போற்றி, என்னை அன்புடன் பாதுகாக்கும் காவல் தெய்வமே, போற்றி, போற்றி, கடலில் ஆமை வடிவமாகச் சென்றவராகிய திருமாலுக்கு விருப்பமானவனே, போற்றி, போற்றி, ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனே, போற்றி, போற்றி, வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு எட்டாத அருமையானவனே, போற்றி, போற்றி, அம்பலத்தில் நடனம் செய்யும் தோதி தித்திமி தீதா என்று தாளங்களுடன் கூத்தாடுபவனே, போற்றி, போற்றி, வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவனே, போற்றி, போற்றி, துக்க நிலையில் இல்லாதவர் துதிக்கும் கடவுளே, போற்றி, போற்றி, யம தர்மராஜன் அனுப்பி வைத்த காலனை உதைத்த பாதங்களை உடையவனே, போற்றி, போற்றி, நாதனே, சற்குரு நாதனே, போற்றி, போற்றி, ஒளியில் பேரொளியே, மகா தேவரான சிவபெருமானுக்கும் தனிப் பெரும் தலைவனே. 
பாடல் 994 - பொதுப்பாடல்கள்
ராகம் - .¡மா தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதகிட-2 1/2, தகதிமி-2
தான தத்தனா தானா தனாதன
     தான தத்தனா தானா தனாதன
          தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான
வேத வித்தகா சாமீ நமோநம
     வேல்மி குத்தமா சூரா நமோநம
          வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத 
வீர பத்மசீர் பாதா நமோநம
     நீல மிக்ககூ தாளா நமோநம
          மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத 
போத மொத்தபேர் போதா நமோநம
     பூத மற்றுமே யானாய் நமோநம
          பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும் 
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
     ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
          பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டா£க 
மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்
     மீதி ருக்குமே ரார்மாபு லோமசை
          வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும் 
வேத வித்தகீ வீமா விராகிணி
     வீறு மிக்கமா வீணா கரேமக
          மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... யங்கராகீ 
ஆதி சத்திசா மாதேவி பார்வதி
     நீலி துத்தியார் நீணாக பூஷணி
          ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும் 
ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
     சூரை யட்டுநீள் பேரா நமோநம
          ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே.
வேதங்கள் உணர்ந்த பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றி வேலினைச் சிறப்பாக ஏந்தும் மஹா சூரனே, போற்றி, போற்றி அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவனே, போற்றி, போற்றி ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக விளங்குபவனே, வீரனே, தாமரை போன்ற அழகிய திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி நீல நிறத்தில் மிகுந்த கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றி மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகனனே, போற்றி, போற்றி சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி, போற்றி பஞ்ச பூதங்களாயும் பிறவாயும் ஆனவனே, போற்றி, போற்றி பரிபூரணப் பொருளாக வாழ்பவனே, போற்றி, போற்றி பரிசுத்தமான மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றி பன்னிரண்டு நீண்ட புஜங்களை உடையவனே, போற்றி, போற்றி ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பனே, போற்றி, போற்றி வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும் ஸரஸ்வதியோடு, செந்தாமரை மீது அமர்ந்த அழகு நிறைந்த லக்ஷ்மியும், இந்திராணியும், வீரம் மிகுந்த ஸப்த மாதாக்களும்,* மற்றுமுள்ள எல்லா தெய்வ மகளிரும் எதிரே நின்று நாள்தோறும் வேத ஞானியே, பயங்கரியே, பற்று அற்றவளே, சிறப்புமிக்க அழகிய (விபஞ்சி என்ற) வீணையை கையில் ஏந்தியவளே, மகாமேரு மலையில் தங்கி வாழும் சிறப்பை உடையவளே, சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே, உடம்பெல்லாம் பரிமள கந்தங்களைப் பூசியவளே, ஆதிசக்தியே, சாமவேதம் போற்றும் தேவியே, பார்வதியே, நீல நிறத்தவளே, புள்ளிகள் நிறைந்த நீண்ட நாகங்களை ஆபரணமாக அணிந்தவளே, அன்னையே, என்றும் இருப்பவளே, சடையுள்ள துர்கா தேவி, என்றெல்லாம் துதி செய்து வணங்குகின்ற மஹாதேவி பெற்ற சீராளனே, போற்றி, போற்றி சூரனை வதைத்துப் பேரும் புகழும் பெற்றவனே, போற்றி, போற்றி வேதம் ஓதுவோர்களின் செல்வமே, போற்றி, போற்றி அனைவருக்கும் பெருமாளாக விளங்குபவனே. 
* ஸப்த மாதாக்கள் - அபிராமி, மஹேஸ்வரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.
பாடல் 995 - பொதுப்பாடல்கள்
ராகம் - ஆரபி தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
     தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
     தாமெ னாப்பர மார்த்தம ...... துணராதே 
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட
     நேக நாட்டொடு காட்டொடு ...... தடுமாறிப் 
பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
     பூவி னாற்றம றாத்தன ...... கிரிதோயும் 
பொக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்
     போது போக்கியெ னாக்கையை ...... விடலாமோ 
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ
     தீத தீ¨க்ஷப ¡£¨க்ஷக ...... ளறவோதுந் 
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி
     யாக ராத்திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே 
மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷர
     மேரு வீழ்த்தப ராக்ரம ...... வடிவேலா 
வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட
     வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.
உயிரைக் காத்து உய்விப்பது மேலான தகுதிவாய்ந்த செயலாதலால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற புருஷார்த்தங்கள் இவை என உணர்ந்து, மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளாமல், யானையின் மீதும், குதிரையின் மீதும், பல படைகள் புகழ்ந்திட வீட்டிலும், பல நாட்டிலும், காட்டிலும் அலைந்து தடுமாற்றம் உற்று, மாதர் மயக்கில் உருகி, புதுப்புது நடனங்களுடனும், பாட்டுக்களுடனும், மலரின் நறுமணம் நீங்காத மார்பகங்களாகிய மலைகளில் தோய்கின்ற சுகம் அனுபவிப்பதிலும், ஊடல் செய்வதிலுமான வாழ்க்கையின் விளையாடல்களிலே இரவும் பகலுமாக வீணாகப் பொழுதைப் போக்கி எனது உடலை விட்டுப் போதல் நன்றாகுமோ? தேவி பார்வதி இணைந்த மேலான பரிசுத்த மூர்த்தியாம் சிவபிரானுக்கு ஒப்பற்ற ஆத்ம தத்துவங்களுக்கு மேற்பட்டதான உபதேசங்களையும், பிரணவ விளக்கங்களையும் முழுமையாக ஓதின தேவனே, ஞான சூரியனே, நால்வகைக் கவிகளையும்* (திருஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்துப்) பாடி அருளிய அழகனே, மோக்ஷ நிலையாகிய விடுதலையை அளிக்கும் தியாக மூர்த்தியே, இரவிலே சுடர்விடும் (நக்ஷத்திரங்களாகிய) கார்த்திகைப் பெண்கள் பெற்ற பெருஞ்செல்வமே, விரும்பி உன்னை அடைந்தவர்களுக்கு அருளை அள்ளி அள்ளி வழங்கும் பன்னிரு கண்களை உடையவனே, சரவணபவ என்ற ஆறெழுத்துக்கு உரிய மூர்த்தியே, கிரெளஞ்ச மலையை வீழ்த்திய பராக்கிரம சாலியே, கூரிய வேலாயுதனே, வீரனே, அசுரர்கள் அலறும் கூச்சல் எழவும், வேதத்தலைவனாம் பிரமன் (பிரணவத்துக்குப் பொருள் கூறத்தெரியாமல்) நாவடங்கிப் போகவும், கடல் ஓலமிட்டுக் கலங்கவும் வேலை விரைவில் செலுத்திய பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
பாடல் 996 - பொதுப்பாடல்கள்
ராகம் - ....; தாளம் -
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
     தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ
     மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே 
ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி
     யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி 
தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு
     சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன் 
சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய
     தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே 
நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு
     ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய 
நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல்
     நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே 
வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு
     வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய 
மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ
     வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.
ஒன்றாகி, பலவாகி, சிவ அனுபூதியாகி, தெளிவுப் பொருளாகி, மங்கலப் பொருளாயுள்ளது இதுவே என்று குரு செய்த உபதேசத்தை நான் உணர்ந்து அதன்படி நடக்காமல், ஏழு உலகங்களுக்கும் புலி நானே என்று, குதிரை, தேர், யானை இவற்றின் மீது ஏறும் மிகுந்த செருக்குடனேஅரசாட்சியை வகித்து, மாதர்களிடத்தே ஒரு போதும் நீங்காத காம இச்சையால் அழிவைத் தரும் தளர்ச்சியால் தீய வழியிலே இந்த உடலை நான் இழப்பதற்கு முன்பாக, ஒளிவளர் உண்மையை அடியேன் கண்டு உணர, (நீ ஞானசம்பந்தராய் வந்து), சிவ சாரூபம் வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் பாலித்ததும்* எட்டாததுமான மேலான பொருளை உபதேசித்து அருள்வாயாக. பாம்புப் படுக்கை (ஆதிசேஷன்) மேல் துயிலும் திருமாலுக்கும், அயன் எனப்படும் பிரமனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு ஒரு ஞான உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கின நாதனே, தமது கருத்தை வைத்துப் பல பொழுதும் ஆசை கொண்டவராய் உன் திருப்புகழைச் சொல்லிப் போற்றும் புலவர்களுக்கு திருவருள் பாலித்து, திருவடியை அருள்கின்ற செல்வமே, வேகத்தை மேற்கொண்ட பாம்பைத் துவைக்கும் மயிலின் மீது ஏறி வேலாயுதத்தால் வீரம் பொருந்திய மாமரமாக நின்ற சூரனைஅழித்து, சிறப்புற்ற கிரெளஞ்ச மலை சாய்ந்து அழிய, விண்ணுலகத்தோர் பூமாரி பொழிந்து வேலாயுத மூர்த்தியே போற்றி எனக் கூறி வணங்க, கடல் கலங்கி ஓலமிட, வேலைச் செலுத்திய பெருமாளே. 
* காஞ்சியில் திருமேற்றளி என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் - காஞ்சிப்புராணம்.
பாடல் 997 - பொதுப்பாடல்கள்
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதானா
தோடு மென்குழை யூடே போரிடு
     வாணெ டுங்கயல் போலே யாருயிர்
          சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் ...... விழிமானார் 
சூத கந்தனி லேமா லாயவர்
     ஓது மன்றறி யாதே யூழ்வினை
          சூழும் வெந்துய ராலே தானுயிர் ...... சுழலாதே 
ஆடு வெம்பண காகோ தாசன
     மூறு கண்டிட மேல்வீழ் தோகையி
          லாரும் வண்கும ரேசா ஆறிரு ...... புயவேளே 
ஆரு நின்றரு ளாலே தாடொழ
     ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற
          ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற ...... அருள்வாயே 
ஓடு வெங்கதி ரோடே சோமனு
     மூழி யண்டமும் லோகா லோகமு
          மூரு மந்தர நானா தேவரு ...... மடிபேண 
ஊழி டம்புயன் வேலா வாலய
     மூடு தங்கிய மாலா ராதர
          வோத வெண்டிரை சூர்மார் பூடுற ...... விடும்வேலா 
வேடு கொண்டுள வேடா வேடைய
     வேழ வெம்புலி போலே வேடர்கள்
          மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய் 
மேக மென்குழ லாய்நீ கேளினி
     வேறு தஞ்சமு நீயே யாமென
          வேளை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.
தோடும் மெல்லிய குண்டலமும் அணிந்துள்ள காதில் போர் செய்யும் ஒளி பொருந்திய பெரிய கயல் மீனைப் போல் விளங்கி அரிய உயிரையும் கொள்ளை கொள்ளும் வேல் போல் பாய்வதான கண்களை உடைய விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த உள்ளத்தினிடத்தே மோகம் கொண்டவனாய் அவர்கள் பேசுகின்ற சொற்களின் உண்மை நிலையை அன்று உணராமல், தலை விதி சூழ்ச்சி செய்து தருகின்ற கொடிய துன்பத்தால் என் உயிர் சுழன்று சஞ்சலம் அடையாமல், ஆடும் கொடிய படத்தை உடைய பாம்பாகிய உணவைச் சுவைத்து உண்பதற்காக அதன் மேல் விழுகின்ற மயிலை வாகனமாகக் கொண்டு நிறைந்து விளங்கும் வளப்பம் கொண்ட குமரேசனே, பன்னிரு தோள்களை உடையவனே, யாரும் நின்று உன் திருவருளால் உன் திருவடிகளைத் தொழ (அவர்களுக்கு) மன வலிமையைக் தந்து அருளும் செல்வனே, இழிவான நிலை ஒழிவதற்கு, ஆதி நாயகனான சிவ பெருமான் தந்தருளிய பெருமானே, அடியேன் நல் வாழ்வு பெற அருள்வாயாக. தினமும் ஓடிக் கொண்டிருக்கும் கொடிய வெப்பமுடைய சூரியனுடன் சந்திரனும், ஊழிக் காலம் வரை அழியாத அண்டங்களும், பல உலகங்களும், அங்குள்ள ஊர்களும், விண்ணில் உள்ள பலவகையான தேவர்களும் உன் அடிகளைப் போற்றித் தொழ, அவரவர்க்கு விதியை விதிக்கின்ற பிரமனும், பாற்கடலில் தங்கியிருக்கின்ற திருமாலும் உனது அன்பும் உதவியையும் வேண்ட, வெண்ணிற அலை வீசும் கடலிடையை நின்ற சூரனுடைய மார்பை ஊடுருவிப் பிளக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவனே, வேடனைப் போல் வேடம் கொண்டவனே, கொடுமை வாய்ந்த புலி போல இருந்த வேடர்கள் வாழ்கின்ற திண்ணிய (தினைப்) புனத்தில் இருந்த வள்ளி நாயகியிடம் மிகவும் காம மயக்கம் கொண்டவனாய், மேகம் போன்ற மெல்லிய கூந்தலை உடையவளே, நீ கேட்பாயாக. எனக்கு புகலிடம் நீயே ஆவாய் என்று கூறி அந்த மாதிடம் தருணம் பார்த்து காத்திருந்து காவல் செய்த தலைவனே, தேவர்கள் பெருமாளே. 
பாடல் 998 - பொதுப்பாடல்கள்
ராகம் - துர்கா தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதான
நாலி ரண்டித ழாலே கோலிய
     ஞால முண்டக மேலே தானிள
          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே 
ஞால முண்டபி ராணா தாரனும்
     யோக மந்திர மூலா தாரனு
          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக 
மேலி ருந்தகி ¡£டா பீடமு
     நூல றிந்தம ணீமா மாடமு
          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக 
வீசி நின்றுள தூபா தீபவி
     சால மண்டப மீதே யேறிய
          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய் 
ஆல கந்தரி மோடா மோடிகு
     மாரி பிங்கலை நானா தேசிய
          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும் 
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
     ஆதி யம்பிகை ஞாதா வானவ
          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி 
கால சங்கரி சீலா சீலித்ரி
     சூலி மந்த்ரச பாஷா பாஷணி
          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி 
காம தந்திர லீலா லோகினி
     வாம தந்திர நூலாய் வாள்சிவ
          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
ஆறு இதழ்த் தாமரையால் வகுக்கப்பட்ட, தொங்கிப் பொருந்தி உள்ள அந்தத் தாமரையின் மேல் உள்ள (சுவாதிஷ்டானம் என்னும்) ஆதார நிலையில், உதிக்கும் செஞ் சூரியன் என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள, ஆடம்பரமான பிரமனும், அந்த ஆதாரத்தின் மேல் நிலையில் (மணி பூரகம் என்னும் ஆதார நிலையில் உள்ள) பூமியை உண்டவரும், உயிர்களைக் காக்கும் தொழிலைக் கொண்டவருமாகிய திருமாலும், யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) உள்ள ருத்திரனும், (இம்மூவரும்) தேடி நிற்கும், ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாய் (புருவ மத்தியில் உள்ள சதாசிவ மூர்த்தியும்) நடு நிலையில் வீற்றிருக்க, இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமும், சாஸ்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும், மேன்மை வாய்ந்த ஒளி கோடிக் கணக்காய் விளங்கும் (உனது) இடமாகக் கொண்டு, வீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதனே, வீர குரு மூர்த்தியே, எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக. விஷம் பொருந்திய கழுத்தை உடையவள், ஆடம்பரமுள்ள துர்க்கை, மூப்பு இல்லாதவள், பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள், ஆசையற்றவள், சுமங்கலி, எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள், எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள், துர்க்கைத் தாய், ஆதி நாயகி, அம்பிகை, எல்லாம் அறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன் அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி, காலனை அழித்தவள், பரிசுத்த தேவதைகள் யாவரிலும் தூயவள், முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப் பேசுபவள், கறுத்த நீல நிறக் கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், நித்ய கல்யாணி, காம சாஸ்திரம் கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள், சக்தி வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆராயப்படுபவள், அத்தகைய சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவர்களின் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 999 - பொதுப்பாடல்கள்
ராகம் - ....; தாளம் -
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான
போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி
     னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான 
போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக
     ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண 
ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட
     ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென் 
ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி
     யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே 
காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி
     வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின் 
காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை
     மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை 
சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு
     மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே 
சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி
     வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே.
தாமரைப் பூவில் வீற்றிருந்து அதை விட்டு நீங்காத, நான்கு வேதங்களையும் ஓதிய பிரமனாலும், கருட வாகனத்தை விரும்பிய திருமாலாலும் அறிவதற்கு அரிதான வகையில், தக்க சமயத்தில் (அவர்கள் இருவரும் வாதிட்டபோது), உயர்ந்து எழுந்த செவ்விய தீப்பிழம்பாக பெருத்த வானம் எல்லாம் நிறைவுற்று நின்ற நீங்காத புகழ் பெற்றவனாகிய அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன் உண்மை நெறியைத் தான் காணும் பொருட்டு, அன்பையும் இன்பத்தையும் ஊட்டிய சிறந்த குருநாதன் என்னும் வகையில் (உன்னைப்) போற்றி செய்ய, இருந்த உனது திருவடிகளை எனது நா எண்ணித் துதித்திட என்னுடைய ஆசை உன்னை எண்ணியபடியே உன் மேல் கவிகளைப் பாடும் இன்ப நிலையைப் பார்த்து அடியேனாகிய நானும் உன்னை அறிந்து போற்றும்படியான ஒரு நாளும் எனக்குக் கிட்டுமோ? காதை நெருக்குவது போல அதன் அருகில் சென்று பல சச்சரவுகளைச் செய்யும் கயல் மீன் போன்ற கண்ணாலும், கொவ்வைக் கனி போன்ற வாயிதழின் இனிய சுவையாலும் நிரம்ப அழகு பெற்ற குறப் பெண் வள்ளியின் கருமை நிறைந்த கூந்தலால், மலை போன்ற மார்பகங்களால், ஆடை அணிந்துள்ள இடுப்பினால், நெருங்கப் பொருந்தியுள்ள உன் காதோலையே (நான் உனக்கு அடிமை என்று) எழுதித் தந்த சாசனப் பத்திரம் என்று கூறி, ஐயோ பாவம் என்று சொல்லும்படியான நிலையை அடைந்து, பேச்சும் தடுமாற்றம் அடைந்து, மனமும் சோர்வு அடைந்து திரிந்தவனே, சமுத்திரம் அன்று எரிந்து கொந்தளிக்கும்படி கொடுமை வாய்ந்த சூரர்கள் மடிந்து சிதற, வலிய வேலாயுதத்தை அவர்கள் மார்பில் வேகமாகச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1000 - பொதுப்பாடல்கள்
ராகம் - சிம்மேந்திர மத்யமம் தாளம் - தி.ரத்ருவம் - 2 களை - 22 - எடுப்பு - /3/3/3 0
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான
வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
     லோசன அம்புக ளாற்செயல் ...... தடுமாறி 
மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு
     வேளைபு குந்தப ராக்ரம ...... மதுபாடி 
நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி
     னாலுல கங்களு மேத்திய ...... இருதாளில் 
நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம
     நாடஅ ருந்தவம் வாய்ப்பது ...... மொருநாளே 
ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ
     ராயிர வெம்பகு வாய்ப்பணி ...... கயிறாக 
ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு
     ளாயனு மன்றெயில் தீப்பட ...... அதிபார 
வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய
     வாழ்வென வஞ்சக ராக்ஷதர் ...... குலமாள 
வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்
     வானுல குங்குடி யேற்றிய ...... பெருமாளே.
வேடர்களுடைய செழுமை வாய்ந்த தினைப் புனத்தைக் காவல் காத்து, (அங்கு) பரண் மீது இருந்த வள்ளிப்பிராட்டியாருடைய கண்கள் ஆகிய அம்புகள் பாய்வதால் செயல் தடுமாற்றம் அடைந்ததுபோல நடித்து, உடல் சோர்வு அடைந்து மனம் உருகி நின்று, பரிதபிக்கத் தக்க நிலையில் (கிழவேடம் பூண்டு) தினைப் புனத்திற்கு சிறந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்த திறமையைக் கவிகளில் அமைத்துப் புகழ்ந்து பாடி, உலகத்தோர் (உனது கருணையை) அறிந்து உய்யும்படி ஓலமிட்டு உரைக்கின்ற நாவல்ல புலவர்களைக் கட்டி வசீகரிக்கும், பதினான்கு உலகில் உள்ளோரும் போற்றும் உனது இரண்டு திருவடிகளில், மணம் கமழும் கடப்பமாலையை அணிந்த உன் திருவடிகளில், அன்புடன் வைத்துக் காக்கின்ற உனது திறமையை, நாடி நிற்க, அருமையான தவச் செயலால் அடியேனுக்கும் கூடும்படியான ஒரு நாள் கிட்டுமோ? பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து, ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து, இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமாலும், முன்பு, முப்புரங்களும் தீயில் அழிவதற்காக, அதிக கனமாக வடக்கே உள்ள பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த வீரனுமாகிய சிவபெருமானும், எங்களது சுமையைக் குறைத்த* செல்வமே என்று உன்னைத் துதிக்க, வஞ்சக அரக்கர்களின் கூட்டம் அழிய, இந்திரனின் கொடிய சிறையை நீக்கி அவனை விடுவித்து, அவன் ஊராகிய பான்னுலகத்தையும் மற்றும் செல்வங்களையும் முழுவதுமாக மீட்டுத் தந்து, அவனுடைய விண்ணுலகத்தில் குடி ஏற்றி வைத்த பெருமாளே. 
* திருமாலின் தொழிலாகிய காத்தல் தொழிலை தேவர்களைக் காத்ததால் முருகனே செய்தான்.சிவனின் அழித்தல் தொழிலை அரக்கர்களை அழித்து முருகனே செய்தான்.எனவே இருவரின் தொழில் பாரத்தையும் குறைத்தான்.

பாடல் 951 - கொடும்பாளுர்
ராகம் - ....; தாளம் -

தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்     தனதனனந் தத்தத் ...... தனதான

கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்     கடனபயம் பட்டுக் ...... கசடாகுங் 
கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்     கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும் 
அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்     றரவியிடந் தப்பிக் ...... குறியாத 
அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்     றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ 
கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்     கொடிமருவுஞ் செச்சைப் ...... புயமார்பா 
கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்     குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச் 
சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்     திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந் 
திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்     திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.

கலை வல்லோர் மதிக்கும் கல்வியிலும், கலியுக சம்பந்தமான தளைகளில் ஏற்படும் கடமைகளிலும் அடைக்கலம் புகுந்தது போல, பயனற்ற செயல்களாகிய சடங்குகளைக் கூறும் ஆறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் பங்கிட்டுக் கொண்டு, கலகல என்ற பெருத்த ஓசையுடன், வெறிபிடித்தது போல ஒருவரோடு ஒருவர் தாக்கும் அளவில்லாத பெரிய வாதத்துக்கு இடம் தரும் பல கலை நூல்களிலும் ஆசையை விட்டொழித்து, (அந்த வாதங்கள் எழுப்பும்) ஒலியிலிருந்து தப்பிப் பிழைத்து, சுட்டிக் காட்ட முடியாத அறிவு இன்னது என்பதை அறிந்து, அந்த ஞானப் பற்றுடன் சிறிது காலம் நிலைத்திருந்து, திருவருள் உபதேசம் எனக்குக் கிடைப்பது கூடுமோ? கொலைஞர்கள் என்று கருதப்பட்ட, பாமரர்களான, குறவர்களிடம் வளர்ந்த இளமை வாய்ந்த பச்சைக் கொடி போன்ற (வள்ளி நாயகி) தழுவும் வெட்சி மாலை அணிந்த புயத்தையும், மார்பையும் கொண்டவனே, கொடுமை வாய்ந்த நெடிய மாமரமாகி நெருங்கிவந்து போரிட்ட அசுரன் சூரன் அழிபட்டு, ஒலிக்கும் கடல் பொங்கி எழ, சக்கரவாளம் எனப்படும் மலை பிளவுபட, எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகளும் பத்துத் திசைகளிலும்* சிதற, ஏழு உலகங்களிலும், முறுக்கி விடப்பட்ட மயிலாகிய அழகிய குதிரையைச் செலுத்தி விட்ட செட்டி எனப் பெயர் கொண்ட வல்லவனே, கொடும்பாளூர்** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* எட்டுத் திசைகளோடு ஊர்த்துவம் - ஆகாயம், அதோகதி - பாதாளம் இவையும் சேர்ந்தன.
** கொடும்பாளூர் திருச்சிக்கு அடுத்த விராலிமலையிலிருந்து 3 மைலில் உள்ளது.

பாடல் 952 - கீரனூர்
ராகம் - ...; தாளம் -

தான தானன தத்தன தத்தன     தான தானன தத்தன தத்தன          தான தானன தத்தன தத்தன ...... தனதான

ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்     நாத கீதந டிப்பிலு ருக்கவும்          ஏவ ராயினு மெத்திய ழைக்கவு ...... மதராஜன் 
ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும்     வீதி மீதுத லைக்கடை நிற்கவும்          ஏறு மாறும னத்தினி னைக்கவும் ...... விலைகூறி 
ஆர பாரத னத்தைய சைக்கவு     மாலை யோதிகு லைத்துமு டிக்கவும்          ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக 
ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு     மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும்          ஆன தோதக வித்தைகள் கற்பவ ...... ருறவாமோ 
பார மேருப ருப்பத மத்தென     நேரி தாகஎ டுத்துட னட்டுமை          பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப் 
பாதி வாலிபி டித்திட மற்றொரு     பாதி தேவர்பி டித்திட லக்ஷ¤மி          பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு 
கீர வாரிதி யைக்கடை வித்ததி     காரி யாயமு தத்தைய ளித்தக்ரு          பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... மருகோனே 
கேடி லாவள கைப்பதி யிற்பல     மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய          கீர னுருறை சத்தித ரித்தருள் ...... பெருமாளே.

கருணை நிறைந்த முகத்துடன் சிரித்து வரவழைப்பதற்கும், ஒலி நிறைந்த இசையாலும், நடனத்தாலும் மனத்தை உருக்குதற்கும், யாராயிருந்த போதிலும் வஞ்சித்து அழைப்பதற்கும், காமனுடைய அம்பு போல தாக்குகின்ற கண்களைக் கொண்டு (வந்தவரை) மயக்குதற்கும், தெருப் பக்கத்தில் தலை வாசல் படியில் நிற்பதற்கும், தாறுமாறான எண்ணங்களை மனதில் நினைப்பதற்கும், விலை பேசி முடித்து, முத்து மாலை அணிந்ததும் கனத்ததுமான மார்பை அசைப்பதற்கும், பூ மாலை அணிந்துள்ள கூந்தலை அவிழ்த்து முடிப்பதற்கும், ஆடை நெகிழும்படி வேண்டுமென்றே அவிழ்த்து இடுப்பில் சுற்றுதற்கும், அதிக மோகம் கொண்ட ஆசை உள்ளவர்கள் போல தங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தை எடுத்துச் சொல்லுவதற்கும், மேலே விழுந்து மிக்க துக்கத்தை உண்டு பண்ணுதற்கும் வேண்டியதான வஞ்சனை வித்தைகளைக் கற்றுள்ளவர்களாகிய விலைமாதர்களின் சம்பந்தம் நல்லதாகுமா? கனத்த மேரு மலையை மத்தாகத் தேர்ந்து எடுத்து, உடனே அதை (பாற்கடலில்) நாட்டி, உமையைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக விளங்குவதும், படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்ற) பாம்பை (அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி, ஒரு பாதியை வாலி பிடிக்க, மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்திட, லக்ஷ்மி, பாரிஜாதம் முதலான பல சித்திகளும், அரும் பொருட்களும் (பாற்கடலில் இருந்து) வெளிவரும்படி, பாற்கடலைக் கடைவித்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தருளிய கிருபா மூர்த்தியாகிய, பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகனே, அழிவு இல்லாத குபேரன் நகராகிய அளகாபுரி போல, பல மாடக் கூடங்களும் மலர்ச் சோலைகளும் நிறைந்த கீரனூரில்* வீற்றிருந்து, வேல் ஏந்தி அனைவருக்கும் திருவருள் புரியும் பெருமாளே. 
* பழநிக்கு வடக்கே 10 மைலில் தாராபுரம் செல்லும் வழியில் உள்ளது.

பாடல் 953 - குளந்தைநகர்
ராகம் - ....; தாளம் -

தனந்த தானனத் தனதன ...... தனதான

தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம் 
தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர் 
பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப் 
பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல் 
வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே 
மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே 
குரும்பை மாமுலைக் குறமகண் ...... மணவாளா 
குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.

அலைபோலப் புரளுகின்ற நீண்ட கூந்தல், வில்லைப் போன்ற நெற்றி, ஆலகால விஷத்தைப் போன்ற கண்கள், காண்போர் மனத்தைக் கவரும் பெரிய மார்பகங்கள், உடுக்கை போன்ற சுருங்கிய இடுப்பு இவைகளைக் கொண்ட அழகிய விலைமாதர்கள் மீதுள்ள நிரம்பிய மோகம் என்னும் இருள் நிறைந்த பெரிய குழியில் அகப்பட்டு, யமனுக்கு அஞ்சி உயிர் நடுங்க நான் தவிக்காதபடிச் செய்வாய். நீ எனக்கு வரம் தராவிட்டால் வேறு எவர் தான் கொடுப்பார்கள்? மனம் மகிழ்ந்து மயிலின் மீது ஏறி பூமியை வலமாகச் சுற்றி வந்தவனே, தென்னங் குரும்பை போன்ற சிறந்த மார்பகங்களைக் கொண்ட குறக் குலத்துப் பெண் வள்ளியின் கணவனே, குளந்தை என்று விளங்கும் பெரியகுளத்தில்* உள்ள கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெரியகுளம் மதுரை மாவட்டத்தில் உள்ளது.

பாடல் 954 - தனிச்சயம்
ராகம் - ....; தாளம் -

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்     கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம் 
எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்     தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி 
அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்     தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான் 
அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்     டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ 
கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்     கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங் 
குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்     குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே 
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்     தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ் 
சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்     தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.

சுருட்டிய வெற்றிலையைப் (பாக்குடன்) கொடுத்து படுக்கையில் இருக்க வைத்து, பயனற்ற முட்டாள்களுக்கு இன்பம் தரக்கூடிய பறவைகளின் குரல்களை தொண்டையிலிருந்து வெளிவிட்டு காமப் பற்றை எழுப்பியும், மை பூசப்படும் கயல் மீன் போன்ற கண்ணிலும் கழுத்திலும் முத்தம் தந்து அணைத்தும், எடுத்தும், வாயிதழைக் கடித்தும், மார்பிடத்தே தாவியும், அலைச்சல் உற்று நாணம் இல்லாமல், பெண்குறியைத் தொட்டு, மிக உழைத்து, துன்பம் அடைந்து, உயிர் களைத்துப் போகும் அளவுக்கு, மிகவும் தவிப்பு அடைந்து, உடல் இளைத்து, மார்பகங்களை மிகத்தழுவி, அலுத்துப் போகும் இந்த பிறப்பு இனியாவது நீங்காதோ? கொலை செய்வதில் பெருமை கொள்ளும் அரக்கர்களை கலங்கச் செய்தவனே, சேவல் கொடியைக் கையில் ஏந்தியவனே, அழகிய தலங்கள் தோறும் உன்னைப் பாடும் நோக்கத்தைக் கொண்ட நல்ல திருப்புகழில் மிக மேம்பட்ட கவி பாடும் குருஸ்தானத்தில் என்னை நிலைக்க வைத்துக் கட்டளை இட்டு அருள் புரிந்தவனே, தலையில் சுமை போல் பாரமான சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும், இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவர்க்கும் ஞானபோதகனே, சாமர்த்தியத்தில் முதல் இடத்தில் இருப்பவனே, மேற்குத் திசைக்குள் உள்ள உத்தமமான தனிச்சயம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் (சிவனாரின்) பிள்ளைப் பெருமாளே. 
* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது. பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.

பாடல் 955 - தனிச்சயம்
ராகம் - சங்கரானந்தப்ரியா தாளம் - ஆதி

தனத்த தந்தன தனதன தந்தத்     தனத்த தந்தன தனதன தந்தத்          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்     கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்          தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி 
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்     டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்          டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண் 
டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்     பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்          றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும் 
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்     துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்          கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே 
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்     டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்          டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ 
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்     டிடக்கை துந்துமி முரசு முழங்கச்          செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள் 
தரித்து மண்டையி லுதிர மருந்தத்     திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்          தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா 
தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்     படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்          றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே.

எல்லாரும் புகழும்படி மிக திடகாத்திரமாக இருந்த உருவம் வதங்கி, கறுப்பாக இருந்த தலை மயிரும் வெளுத்து பஞ்சு போல் ஆகி, நன்றாக ஒலிகளைக் கேட்டிருந்த காது செவிடாகி, ஒளி பொருந்திய கண்கள் குருடாகி, பலத்துடன் அழுத்தமாயிருந்த வெள்ளை நிறம் கொண்ட பல்லும் நழுவி விழுதலுற்று, நான் என்ற இறுமாப்பு நிலை அழிந்து, மூச்சு வாங்கி, கிண் கிண் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகி, வேதனையுடன் தலை கிறுகிறு என்று பித்தமும் மேல் கொண்டு எழ, இரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக உடல் வெளுத்து, மனம், வாக்கு, செயல் இவைகள் ஒரு அளவு கடந்து ஒழுங்கீனமான நிலையை அடைந்து, சேர்ந்துள்ள மாதர்களும் எதிரே வந்து இகழ்ந்து பேச, யாவரும் (இவன்) அழுக்கன் என்று சொல்லும்படியாக உணர்ச்சி குறைந்து மரத்துப் போய், நாடி துடிப்பதும் கொஞ்சமே இருக்கின்றது, அது கூட இல்லை என்றே சொல்லலாம், என்னும் கஷ்டமான நிலையை அடைந்து, உயிர் வேதனைப்படும் அந்த நாளில் நீ எனக்கு அருள் புரிவாயாக. திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி யென்ற இத்தனை ஒலிகளையும் எழுப்பிக்கொண்டு, இடக்கையால் கொட்டும் தோற்கருவி துந்துமி, பேரிகை வகைகள் முழக்கமிட, போர்க்களத்தில் அசுரர்கள் கலக்கம் கொள்ள, சில பேய்கள் மண்டை ஓட்டை கையில் எடுத்து ஏந்தி இரத்தத்தைக் குடிக்க, கூட்டமான பருந்துகள் பிணங்களின் குடல்களைப் பிடுங்க, களிப்புறும் நரிகள் மாமிசத்தை சிந்திச் சிதற, சண்டை செய்யும் வேலனே, பெருமை வாய்ந்த மயில் மீதும், வயலூர் என்னும் தலத்திலும், அடியார்களின் அன்பான உள்ளத்திலும், தகுதி நிறைவுற்ற கொங்கு நாட்டில் உள்ள தனிச்சயம்* என்னும் தலத்திலும், இன்பத்துடன் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது.பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.

பாடல் 956 - மதுரை
ராகம் - ....; தாளம் -

தனதன தனனத் தந்த தானன     தனதன தனனத் தந்த தானன          தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான

அலகில வுணரைக் கொன்ற தோளென     மலைதொளை யுருவச் சென்ற வேலென          அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டா£க 
அடியென முடியிற் கொண்ட கூதள     மெனவன சரியைக் கொண்ட மார்பென          அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ 
கலகல கலெனக் கண்ட பேரொடு     சிலுகிடு சமயப் பங்க வாதிகள்          கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங் 
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு     மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன          கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென் 
இலகுக டலைகற் கண்டு தேனொடு     மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்          இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே 
எழுதென மொழியப் பண்டு பாரதம்     வடகன சிகரச் செம்பொன் மேருவில்          எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ 
வலம்வரு மளவிற் சண்ட மாருத     விசையினும் விசையுற் றெண்டி சாமுக          மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு 
மரகத கலபச் செம்புள் வாகன     மிசைவரு முருகச் சிம்பு ளேயென          மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.

கணக்கற்ற அசுரர்களைக் கொன்று அழித்த உனது தோளைப் புகழ்ந்தும், கிரெளஞ்ச மலையைத் தொளை படும்படி ஊடுருவிச் சென்ற உனது வேலைப் புகழ்ந்தும், அழகிய பொன்னாலாகிய தண்டைகள் சூழ்ந்துள்ள தாமரைபோன்ற உனது திருவடியைப் புகழ்ந்தும், வெண்தாளியினது தண்மையான பூவை அணிந்த உனது திருமுடியைப் புகழ்ந்தும், வேட்டுவச்சியான வள்ளியை அணைந்த மார்பு என்று உனது மார்பைப் புகழ்ந்தும், ஆறுமுகம் என்று உனது ஆறு திருமுகங்களைப் புகழ்ந்தும், உள்ளம் நெகிழ்ந்து என்னுடைய எலும்புகள் எல்லாம் உருகும்படியான அன்பு எனக்குக் கிட்டாதோ? கலகலகலவென்று பேரொலியுடன் கண்ட பேர்களுடன் கூச்சலிட்டு சமயக் குற்றங்களை எடுத்துப் பேசி வாதம் செய்வோர்கள் உரக்கக் கத்தும் பல தவறுகள் மிகுந்த, கொதிக்கும் கோபம் நிறைந்த, சொற்களால் ஆகிய பொய்ச் சாத்திர நூல்கள் ஒழிந்து, என் மீது ஐந்து பூதங்களின் செயல்களும் அடங்கி நீங்க, சொல்லப் போனால், ஓய்தல் இல்லாத அந்தக்கரணமாகிய மனம் ஒடுங்கி ஒழிய, நீ எனக்கு உபதேசித்து அருளிய ஞானத்துக்கு உள்ள பெருமைதான் எத்தனை ஆச்சரியமாய் உள்ளது. நல்ல விளக்கமுடைய கடலை, கற்கண்டு, தேன் இவைகளுடன் ருசிகரமான தினை மாவு, வெல்லப் பாகு இவற்றைக் கலந்து மகிழ்ச்சியுடன் உண்ணும் விநாயகர் ஒற்றைக் கொம்பால் வியாச முனிவர் எழுதும்படி வேண்ட, முன்பு, பாரதக் கதையை வடக்கே உள்ளதும் கனத்த உச்சிகளை உடையதுமான செம்பொன் மயமான மேரு மலையில், எழுதிய பவள மலையைப்போன்ற கணபதி, அன்று தந்தையாகிய சிவபெருமானைச் சுற்றி வந்து வலம் வரும் நேரத்துக்குள், சூறாவளியின் வேகத்திலும் வேகமாக எட்டு திசையிடங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்து, பாம்பை உண்டு உலாவுகின்றதும், பச்சைத் தோகையைக் கொண்டதும், வலிமையான பக்ஷியுமாகிய மயில் வாகனத்தின் மீது வந்த முருகனே, சிங்கத்தை அடக்கவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள்ளே (சரபப் பக்ஷியே*) என்று புகழ்ந்து, மதுரைத் தலத்தில் வழிபட்டு தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே. 
* நரசிம்மராக வந்த விஷ்ணு ஹிரண்யனின் வதைக்குப் பின் வெறி அடங்காமல் திரிந்தார். சிவபிரான் தமது இன்னொரு அம்சமாகிய சரபப்பக்ஷியாக வந்து நரசிம்மரின் ஆணவ ஆட்டத்தை அடக்கினார். முருகனும் அதுபோன்றே ஒரு சிவ அம்சம்.

பாடல் 957 - மதுரை
ராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி 2 களை - எடுப்பு - 3/4 இடம்

தானதன தத்த தானதன தத்த     தானதன தத்த ...... தனதான

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த     ஆறுமுக வித்த ...... கமரேசா 
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்     ஆரணமு ரைத்த ...... குருநாதா 
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த     சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா 
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்     வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே 
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்     யாவரொரு வர்க்கு ...... மறியாத 
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க     மாமயில் நடத்து ...... முருகோனே 
தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி     சேரமரு வுற்ற ...... திரள்தோளா 
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை     வேல்கொடு தணித்த ...... பெருமாளே.

யானைமுக விநாயகனுக்கு நேராகப் பின்தோன்றிய அன்பனே, ஆறு திருமுகங்களை உடைய ஞான வித்தகனே, தேவர்களின் கடவுளே, ஆதிதேவன் சிவபிரானுக்கும் வேத முதல்வன் பிரமனுக்கும் வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, அசுரர் குலத்தையே வாளினால் வெட்டி வீழ்த்திய நிறைந்த சாமர்த்தியம் மிகுந்த பராக்கிரமசாலியே, உன் இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில் நல்வாழ்வோடு நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக. மேல் ஏழு உலகங்களுக்கும்* திருமாலுக்கும், பிரம்மனுக்கும் வேறு யாருக்குமே அறியமுடியாத சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர் சிவனும், பார்வதியும் மகிழ அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகனே, தேன் மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில் மான் ஒத்த கண்ணாள் குறத்தி வள்ளி உன்னைச் சேரும்படியாக அவளை அணைத்திட்ட திரண்ட புயங்களை உடையவனே, தேவர்களது மனத்தில் சூரனைப் பற்றித் தோன்றிய அச்சத்தை உன் வேலாயுதத்தால் போக்கிய பெருமாளே. 
* மேல் ஏழு உலகங்கள் - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹலோகம், தபலோகம், ஜனலோகம், சத்யலோகம்.

பாடல் 958 - மதுரை
ராகம் - தேவ மனோ.ரி தாளம் - ஆதி

தனன தனந்தன தனன தனந்தன     தனன தனந்தன ...... தனதான

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய     பவனி வரும்படி ...... யதனாலே 
பகர வளங்களு நிகர விளங்கிய     இருளை விடிந்தது ...... நிலவாலே 
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது     வரிசை தரும்பத ...... மதுபாடி 
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு     மகிழ வரங்களு ...... மருள்வாயே 
அரஹர சுந்தர அறுமுக என்றுனி     அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே 
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத     குறமக ளிங்கித ...... மணவாளா 
கருதரு திண்புய சரவண குங்கும     களபம ணிந்திடு ...... மணிமார்பா 
கனக மிகும்பதி மதுரை வளம்பதி     யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.

யாவரும் துதிக்கும் நீண்ட கதிர்களை உடைய சூரியன் உலகுளோர் விரும்பும்படி உலா வரும் காட்சிதானோ (இந்தத் திருவடி) என்றும், சொல்லத்தக்க வளப்பங்களுக்கு ஒப்பாக விளங்குவதும், இருளைப் போக்கி உதிக்கும் நிலவொளிதானோ (இந்தத் திருவடி) என்றும், மலைகள் தோறும் எங்கும் உலாவி நிறைந்து வரிசையான காட்சியைத் தரும் உன் திருவடியை நான் பாடி, சொல் வளம், பொருள் வளத்துடன் செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ, அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக. ஹர ஹர, அழகா, ஆறுமுகனே, என்று உன்னைத் தியானித்து, அடியார்கள் வணங்க மகிழ்ச்சி கொள்பவனே, ஹிமவானின் மகளான பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற அம்மை உமாதேவி பெற்ற பிள்ளையே, குறமகள் வள்ளிக்கு இனிமையான மணவாளனே, நினைப்பதற்கு அருமையான திண்ணிய புயங்களை உடைய சரவணபவனே, குங்குமமும் சந்தனமும் சேர்த்து அணியும் அழகிய மார்பனே, பொன் மாடங்கள் நிறைந்த நகராகிய மதுரை என்ற செழிப்பான தலத்தில் விளங்கி வீற்றிருந்து அருளும் பெருமாளே. 

பாடல் 959 - மதுரை
ராகம் - ....; தாளம் -

தனத்த தாத்தன தனதன தனதன     தனத்த தாத்தன தனதன தனதன          தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதனத் தனதான

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை     ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்          பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் ...... அளவளப் பதனாலே 
படுக்கை வீட்டுனு ளவுஷத முதவுவர்     அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்          பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென ...... அவரவர்க் குறவாயே 
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை     முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்          அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு ...... நரகினிற் சுழல்வேனோ 
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்     விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை          அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து ...... கதிதனைத் தருவாயே 
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள     குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு          தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த ...... முருகவித் தகவேளே 
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்     திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து          சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே 
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது     பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி          செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை ...... மணமதுற் றிடுவோனே 
திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்     கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு          திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும் ...... அறுமுகப் பெருமாளே.

பொருள் கொடாவிட்டால் சில பேர்களைப் பழிப்பார்கள். சில பேர்களை வாழ்த்துவார்கள். ஒருவர் வாயில் வைத்த வெற்றிலைச் சுருளை மற்றொருவர் கையில் கொடுத்து உதவுவார்கள். பணத்தின் மேலேயே நோக்கமாக இருப்பார்கள். (பொருள் கிட்டினால்) பிணத்தையும் தழுவுவார்கள். கலந்து பேசிக் கொண்டிருக்கும் போதே படுக்கை அறைக்குள் சென்று மருந்திடுவார்கள். அணைத்துக் கொள்வார்கள். கார்த்திகைப் பண்டிகை வருகின்றது, (செலவுக்குப் பொருள் வேண்டும்) என்று பொருளைப் பறிப்பார்கள். மாதத்துக்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்று வந்த ஒவ்வொருவரிடமும் உறவு பாராட்டுபவர்களாய் அழைப்பார்கள். வருபவருடைய சொத்து அனைத்தையும் பறிக்கக் கருதுவார்கள். (பொருள் கொடாதவரை) விரட்டி ஓட்டி விடுவார்கள். (இவ்வாறு) குடியை அழிக்கும் விலைமாதர்களின் உபத்திரவத்தால், (மற்றொரு மாட்டுடன்) பிணைத்துக் கட்டப்பட்ட எருது போல காம மயக்கம் என்னும் நரகத்தில் சுழற்சி அடைவேனோ? பயனற்றுக் கேடுறுவதாய் பெருங் குழியில் விழும் ஆபத்தினின்றும் என்னைக் காப்பாற்றி, உன் அடியாருடன் என்னைச் சேர்த்து ஆண்டு கொள்ளும் வகைக்கு உன் மனதில் அருள் கூர்ந்து நற்கதியைத் தருவாயாக. விரிவாகத் தழைத்துள்ள சாஸ்திரங்களில் மறைபொருளாக உள்ள தத்துவங்களை, ஞானம் நிறைந்த குரு மூர்த்தி போல விளங்கி, சைவ சித்தாந்தங்களை முறையோடு தந்தையாகிய சிவ பெருமானுடைய ஒப்பற்ற திருச் செவியில் உபதேசித்த முருகனே, ஞானியே, செவ்வேளே, தன்னுடைய சாமர்த்தியத்தால் புகழ் பெற்ற ஜானகியை துன்பத்துக்கு ஆளாக்கி திருடிச் சென்ற அரக்கனாகிய ராவணனுடைய உடலைத் துண்டாக்கி, வெற்றி நிலையில் அயோத்தி நகருக்குத் திரும்பி வந்தவனாகிய (ராமனாம்) திருமாலின் அழகிய மருமகனாய் அன்பு கூர்ந்தவனே, செழுமை வாய்ந்த வேலாயுதத்தினால் அசுரர்களுடைய உடல்களைப் பிளக்கும்படிச் செலுத்திய பின்னர், தேவர்களை அவர்களின் பொன்னுலகத்துக்கு அனுப்பி வைத்து, நெருங்கி நின்ற, தேவர்கள் தலைவனான இந்திரனுடைய மகளான, தேவயானையை திருமணம் செய்து கொண்டவனே, (திருஞான சம்பந்தராக வந்த உனது) சாமர்த்தியத்தால் பல சமணர்களை எதிர் எதிராக கழுமரங்களில் ஏற வைத்த அற்புத நிகழ்ச்சியை இன்பகரமாக நடத்தி, (தத்தம்) பிழை திருந்திய நிலையினராய் ஆக்கிப் பின், மதுரையில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 

பாடல் 960 - மதுரை
ராகம் - ....; தாளம் -

தான தானதன தத்ததன தத்ததன     தான தானதன தத்ததன தத்ததன          தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான

சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக     மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ          தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ...... தொங்கலாரஞ் 
சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு     வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி          சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச் 
சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை     யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி          சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ...... பங்கினூடே 
தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை     பாவ மானபிற விக்கடலு ழப்பவனை          தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது ...... மெந்தநாளோ 
வாத வூரனைம தித்தொருகு ருக்களென     ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை          வாசி யாமெனந டத்துவகை யுற்றரச ...... னன்புகாண 
மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை     யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ்          மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே 
வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி     பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற          வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ...... கொண்டசீலா 
வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு     ராம ¡£ணமயி லொக்கமது ரைப்பதியின்          மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.

குளிர்ந்த மணம் பொருந்திய மலர் அணிந்த கூந்தலை அலங்கரித்து, முகத்தில் உள்ள மயக்குவதான வேல் போன்ற கண்களைச் சுழற்றி, புன் சிரிப்பு முத்துப் போன்ற பற்களினின்று தோன்ற, தேமல் படர்ந்த மார்பகத்தில் உள்ள இளமை விளங்கும் மலை பொன்ற மார்பகங்களின் மீது பளபள என்று விளங்கும் முத்து மாலை சேர்ந்துள்ள சித்திரப் பதுமையோ என்னும்படி உடலை மினுக்கி, அதிக காமப் பற்றையும் நட்பையும் உண்டாக்கி, அரையில் கட்டி உள்ள கோடுகள் கொண்ட புடவையை கணுக்கால் அளவு தொங்கும்படி விட்டு, நடந்துவந்து, தோகை விளங்கும் மயிலின் இனமாம் என்று சொல்லும்படி, வந்தவர்களை விரட்டியும், நடித்தும் தங்கள் வலையில் வீழ்ந்த பேர்வழிகளை தம்மை இரந்து வேண்டும்படியான வழிக்குக் கொண்டுவர முயற்சித்து, இறப்பதற்கே நோயும் பிணியும் வரும்படிச் செய்து துன்பம் உண்டு பண்ணுபவர்களாகிய விலைமாதர்கள் பால், பாய்ந்து, காமத்தில் மூழ்கி, அறிவு கெட்டு துன்பம் அடைந்தவனை, பாவத்துக்குக் காரணமான பிறவிக் கடலில் உழல்பவனாகிய என்னை, மாலைகள் விளங்கும் திருவடிப் பத்தியில நீ இருத்தி வைப்பதும் என்றைக்கோ? திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகரைக் குறிக் கொண்டு ஒரு குரு மூர்த்தியாக நின்று (முக்திக்கு வழிகளான சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்தும், நரிகளின் கூட்டத்தை குதிரைகளாம் என்னும்படி திருவிளையாடலில் மகிழ்ச்சி பூண்டு பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட பொன்னாடையைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு மன்னனின் முன்பு சிரித்தும், வைகையாற்றங்கரை மீது கூத்தாடியும், (ஆற்றில் அணைகட்ட) மண் சுமந்து மகிழ்வுற்றும், மாது வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டும் விளையாடிய பித்தனாகிய சிவ பெருமான் பெற்றருளிய கந்த வேளே, வேதம் ஓதும் நன் மக்கள், பொன்னுலகத் தேவர்கள், தவசிகள், சித்தர்கள், மிக்க பெருமை வாய்ந்த ஒழுக்கம் நிறைந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டுக் கூச்சலிட, வேலைச் செலுத்தி அசுரர்களின் கூட்டம் இறக்கும்படி சிரித்த தூயவனே, (அவுணர்களால் கவரப்பட்ட) வேதத்தை மீட்டுத் தந்த** தாமரை போன்ற கண்களை உடையவரும், உடல் பச்சை நிறமுடையவரும் ஆகிய ராமர் பெற்ற மயில் போன்ற பெண்களான தேவயானை, வள்ளி இவர்கள் இருவருடன் மதுரை நகரில் வீற்றிருந்து வாழ்கின்றவனே, தேவர்களும், ஜீவன் முக்தர்களும், சிவனடியார்களும் வணங்குகின்ற தலைவனே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கி கடலுள் மறைந்தான். திருமால் மச்சாவதாரம் எடுத்து சோமுகனைக் கொன்று வேத நூல்களை மீட்டார்.

பாடல் 961 - மதுரை
ராகம் - ....; தாளம் -

தனனத் தந்தன தந்தன தனதன     தனனத் தந்தன தந்தன தனதன          தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான

புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி     யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி          பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே 
புகலச் சங்கிசை கண்டம தனிலெழ     உருவச் செந்துவர் தந்தத ரமுமருள்          புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே 
பருகித் தின்றிட லஞ்சுக மெனமன     துருகிக் குங்கும சந்தன மதிவியர்          படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே 
பலருக் குங்கடை யென்றெனை யிகழவு     மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு          பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ 
திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை     வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்          சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு 
திரமிற் றங்கிய கும்பக னொருபது     தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு          சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே 
மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்     சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை          மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே 
வடவெற் பங்கய லன்றணி குசசர     வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்          மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.

புருவமாகிய வில்லை ஏந்தி இரண்டு கண்களாகிய அம்புகளைத் தொடுத்தெறிய, மார்பகங்கள் ஆகிய இரண்டு மத யானைகள் சண்டை செய்ய, முத்தத்தைத் தருகின்ற இனிமை வாய்ந்த உபசார வழிகளாலே, பேசும்போது சங்கின் ஒலி போன்ற சப்தம் கழுத்தில் (புட் குரலாக) உண்டாக, நிறம் செம்மை வாய்ந்த பவளம் போன்ற வாயிதழ் தருகின்ற எழில் வாய்ந்த தாம்பூல எச்சில் சிலவற்றைக் கொடுக்க (உணர்ச்சி) எழும் மனதால், (அந்த எச்சிலைக்) குடித்து உண்ணுதல் நல்ல சுகமாம் என்று மனம் உருகி, குங்குமமும் சந்தனமும் அதிக வேர்வையினால் கலந்து படிய, களிப்பையும் இன்பத்தையும் தருகின்ற புணர்ச்சித் தொழிலாலே, நான் பலருக்கும் கீழானவன் என்று என்னை இவ்வுலகம் இகழும்படியாக, காம மயக்கத்தைத் தருகின்ற அரிய (விலை) மாதர்களை மிக்க பலமாக நம்பிப் பிடித்துக் கொண்டுள்ள தீயோனாகிய நானும் உனது திருவடியைப் பணிய மாட்டேனோ? லக்ஷ்மியாகிய சீதையை அழைத்துக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியம் என்னும் காட்டில் வந்த பொழுது, பயத்தோடு வந்து உலவிய (மா¡£சனாகிய) பொன்மானின் உடல் பாணத்தால் சிதறி அழியவும், துஷ்டர்களான கொடிய கரன், திரிசிரன்* என்னும் அசுரர்களையும், வலிமை கொண்டிருந்த கும்பகர்ணனையும், பத்துத் தலைகளைப் பெற்று தேவர்களை வென்றவனுமான ராவணனையும், (கோதண்டம் என்னும்) வில்லால் கொன்ற திருமாலின் நல்ல உள்ளம் மகிழ்கின்ற மருகனே, (வாசனை கொண்ட) மருக் கொழுந்தைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய உமா தேவி, சிவபெருமானுக்குத் தனது அன்பைத் தருகின்ற அம்பிகை, கெளரி, இமய மலை அரசன் பெற்ற சங்கரி தனது கருணையைக் காட்டும் முருகோனே, வடக்கே உள்ள இமய மலைக்கு அங்கே சமீபத்தில் உள்ள அழகிய தர்ப்பைகள் வளர்ந்துள்ள சரவணப் பொய்கையில் முன்பு வளர்ந்த தாமரை போன்ற திரு முகத்தை உடையவனே, தமிழ் வளர்ந்த மதுரையில் சங்கிலி** என்னும் மண்டபத்தில் வீற்றிருப்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* சூர்ப்பனகையின் சகோதரர்களான கரன், தூஷணன், திரிசிரன் என்ற மூவரும் தண்டகாரண்யத்தில் அவளது காதும், மூக்கும் லக்ஷ்மணனால் வெட்டப்பட்டபோது உதவிக்கு வந்தனர். அவர்களில் இருவரைக் கொன்றது ராமபாணம்.
** இது இப்போது கிளி மண்டபம் என வழங்கும்.

பாடல் 962 - மதுரை
ராகம் - ....; தாளம் -

தனன தான தானத் தனந்த     தனன தான தானத் தனந்த          தனன தான தானத் தனந்த ...... தனதான

முகமெ லாநெய் பூசித் தயங்கு     நுதலின் மீதி லேபொட் டணிந்து          முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர் 
முதிரு மார பாரத் தனங்கள்     மிசையி லாவி யாய்நெக் கழிந்து          முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச் 
செகமெ லாமு லாவிக் கரந்து     திருட னாகி யேசற் றுழன்று          திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல் 
தெளியு ஞான மோதிக் கரைந்து     சிவபு ராண நூலிற் பயின்று          செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும் 
அகர மாதி யாம க்ஷரங்க     ளவனி கால்வி ணாரப் பொடங்கி          அடைய வேக ரூபத் திலொன்றி ...... முதலாகி 
அமரர் காண வேயத் தமன்றில்     அரிவை பாட ஆடிக் கலந்த          அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே 
சகல வேத சாமுத் ரியங்கள்     சமய மாறு லோகத் ரயங்கள்          தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம் 
தவறி லாம லாளப் பிறந்த     தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று          தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.

முகம் முழுமையும் வாசனைத் தைலத்தைப் பூசியும், விளங்கும் நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டும், வாசனை உள்ள பூ மாலையை கூந்தலில் அணிந்து கொண்டும் உள்ள அழகிய மாதர்களின் முற்றினதும் முத்து மாலை அணிந்தனவும் கனத்ததுமான மார்பகங்களில் உயிராய் (உள்ளம்) நெகிழ்ந்து அழிந்து எப்போதும் காம மயக்கத்தால் வசப்பட்டு நான் அலைந்து பொருள் தேடி, உலகம் முழுதும் உலவித் திரிந்தும், (பிறரிடமிருந்து) ஒளித்தும், திருட்டுத் தொழிலனாகி சற்று அலைந்து திமிர்பிடித்து அங்கும் இங்கும் ஓடிப் பறந்து திரியாமல், தெளிவைத் தரும் ஞான நூல்களை ஓதி ஒலித்தும், சிவ புராண நூல்களில் பயின்றும், மனம் நெருங்கிப் பொருந்துமாறு உன் திருவடிகளை அன்பு கூர்ந்து தந்தருள வேண்டும். அகரம் முதலான (51)* அக்ஷரங்கள், மண், காற்று, ஆகாயம், நிறைந்த நீர் இவைகளுடன் நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் எல்லாம் கூடி ஓர் உருவமாக அமைந்து (கூத்த பிரானாகிய நடராஜப் பெருமானாகி), முதற் பொருளாக விளங்கி, தேவர்கள் தரிசிக்க (தில்லைப்) பொன்னம்பலத்தில் பார்வதி தேவி பாட அங்கு ஆடி விளங்கிய மலம் அற்றவராகிய சிவபெருமான் முன்பு பெற்றருளிய முருகனே, எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞான சம்பந்தனே, பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே. 
* கோல் எழுத்துக் காலத்திலும், வட்டெழுத்துக் காலத்திலும் தமிழில் 16 உயிர்களும் 35 மெய்களும் சேர்ந்து 51 எழுத்துக்கள் இருந்தன. சதுர எழுத்து காலத்தில்தான் தமிழுக்கு 12 உயிர்களும் 18 மெய்களும் சேர்ந்து 30 எழுத்துக்களும் - அவற்றுக்கு உரிய உயிர்மெய் எழுத்துக்களும் - இருப்பதாக அறிஞர்கள் வகுத்தார்கள்.

பாடல் 963 - மதுரை
ராகம் - ....; தாளம் -

தானத்தன தானன தானன     தானத்தன தானன தானன          தானத்தன தானன தானன ...... தனதான

ஏலப்பனி நீரணி மாதர்கள்     கானத்தினு மேயுற வாடிடு          மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும் 
ஏமக்கிரி மீதினி லேகரு     நீலக்கய மேறிய னேரென          ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச் 
சோலைக்குயில் போல்மொழி யாலுமெ     தூசுற்றிடு நூலிடை யாலுமெ          தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும் 
சோமப்ரபை வீசிய மாமுக     சாலத்திலு மாகடு வேல்விழி          சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ 
ஆலப்பணி மீதினில் மாசறு     மாழிக்கிடை யேதுயில் மாதவ          னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன் 
ஆதித்திரு நேமியன் வாமன     னீலப்புயல் நேர்தரு மேனியன்          ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே 
கோலக்கய மாவுரி போர்வையர்     ஆலக்கடு வார்கள நாயகர்          கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா 
கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய     சீரற்புத மாநக ராகிய          கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.

வாசனைத் தைலமும், பன்னீரும் பூசும் (கூந்தலை உடைய) விலைமாதர்களின் இசைப் பாடல் மீதும், உறவாடிப் பேசும் அன்பு மொழிகள் மீதும், வளையல் அணிந்த கரங்களின் மீதும், பொன்மலையின் மீது கரிய யானை ஏறியது போன்று பொருந்தினவாய் விளங்கும் பெரிய மார்பகங்களின் மீதும் காம இச்சை கொண்டு, சோலையில் உள்ள குயிலின் குரல் போன்ற பேச்சுக்களாலும், ஆடை சுற்றியுள்ள நூல் போன்ற இடையாலும், குற்றம் இல்லாத வாழைத் தண்டுக்கு ஒப்பான தொடையாலும், நிலவொளி வீசிடும் அழகிய முகத்தின் மினுக்கு நடிப்பாலும், மிக்க விஷம் கொண்ட வேல் போன்ற கூரிய கண்களின் சூதிலும் அகப்பட்டு, நான் வீணாக நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? விஷம் கொண்ட பாம்பாகிய ஆதிசேஷன் மேல் குற்றம் இல்லாத பாற்கடலிடையே அறிதுயில் கொண்டுள்ள பெரியோன், யானையாம் கஜேந்திரனுக்கு அன்புடனே உதவி செய்தருளிய பெரிய மாயவன், ஆதி மூர்த்தியாய் விளங்கும் அழகிய சக்ராயுதன், வாமன அவதாரம் (குறள் வடிவம்) எடுத்தவன், நீல மேகம் போன்ற கரிய நிறம் கொண்டவன், மாலையாக துளசியை நிரம்பக் கொண்ட அழகிய மார்பை உடையவன் ஆகிய திருமாலின் மருகனே, அழகிய யானையின் பெரிய உரித்தோலை போர்வையாகக் கொண்டவர், ஆலகால விஷம் நிறைந்த கழுத்தைக் கொண்ட தலைவராகிய சிவபெருமானின் கண்களினின்று எழுந்த தீப்பொறியால் வெளிவந்த சிறந்த பிள்ளையான குமரேசனே, சிறந்த முத்தமிழ்ப் புலவர்கள் விளங்கிய சிறப்பைக் கொண்ட அற்புதமான பெருநகரமாகிய நான்மாடற்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 964 - மதுரை
ராகம் - மோ.னம் தாளம் - சது.ர .ம்பை - 7 /4 யு 0 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான

கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப் 
பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே 
மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் ...... குமரேசா 
சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே.

சகல கலைகளையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள ஞான ஒளியாகிய கடலிலே திளைத்துக் குளித்து, மண், பெண், பொன் என்ற மூவாசைகளாம் கடல்களை நீந்திக் கடந்து, பலத்ததான, உரத்த சப்தத்துடன் கூடிய சமய வாதங்களில் நான் மாறுபட்டுக் கிடக்காமல், இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வைத் தந்தருள்வாயாக. வள்ளிமலையிலே வாழ்ந்த, ஆச்சரியத் தோற்றம் கொண்ட, குறப்பெண்ணாம் வள்ளியின் மனத்திலே வீற்றிருக்கும் இளைஞனாம் குமரேசனே, வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்திய வேடன் உருவில் வந்தவனே, சேவற் கொடியை கரத்தில் கொண்டவனே, லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் (செல்வமும், கல்வியும்) ஒருங்கே கூடும் கூடற்பதியாகிய பவானியில் வாழும் பெருமாளே. 

பாடல் 965 - மதுரை
ராகம் - .ண்முகப்ரியா தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2 தகதிமி-2, தகதகிட-2 1/2

தானத் தனதான தானத் ...... தனதான

நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப் 
பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே 
நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே 
கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே.

நீதித்தன்மை கொண்டதாய், சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய், உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும் நல்லறிவைத் தந்தருள்வாயாக. ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே, ஞான சமுத்திரமே, குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே, நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே. 

பாடல் 966 - மதுரை
ராகம் - ....; தாளம் -

தனதன தத்தந் தான தானன     தனதன தத்தந் தான தானன          தனதன தத்தந் தான தானன ...... தனதான

மனநினை சுத்தஞ் சூது காரிகள்     அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்          மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக 
வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்     விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்          வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே 
குனகிகள் பக்ஷம் போல பேசிகள்     தனகிக ளிச்சம் பேசி கூசிகள்          குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக் 
கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட     அருளமு தத்தின் சேரு மோர்வழி          குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய் 
தனதன தத்தந் தான தானன     டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு          தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி 
தவில்முர சத்தந் தாரை பூரிகை     வளைதுடி பொற்கொம் பார சூரரை          சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா 
தினைவன நித்தங் காவ லாளியள்     நகைமுறை முத்தின் பாவை மான்மகள்          திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே 
திரிபுர நக்கன் பாதி மாதுறை     யழகிய சொக்கன் காதி லோர்பொருள்          செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.

மனத்தில் நினைக்கின்ற முற்றிய சூதான எண்ணங்களையே கொண்டவர்கள், அமர்க்களங்களைச் செய்யும் பேய் போன்ற விகாரம் படைத்தவர்கள், ஆணவ பலத்தை நாள் தோறும் வலியக் காட்டுகின்ற மாதர்கள், அழகாக (கையில்) வளையல், (காதில்) குழைகள், (மார்பில்) முத்து மாலை இவைகளை அணிந்துள்ள வீண் பொழுது போக்கிகள், பயனற்றவர்கள், பிறரால் மெச்சப்படுதலில் ஆசை கொண்டு ஆடிப் பாடுபவர்கள், வருவதற்கு மிக்க வெட்கம் கொண்டவர்கள் போல ஓடுபவர்கள், தெருவிலே கொஞ்சிப் பேசுபவர்கள், அன்பு கொண்டவர்கள் போலப் பேசுபவர்கள், சரசம் செய்பவர்கள், தங்கள் விருப்பத்தைப் பேசி நாணம் கொள்ளுபவர்கள், தந்திரம் உள்ளவர்கள், பிசாசு அனையவர்கள், கொள்ளைக்காரிகள், பொருளாசை கொண்டவர்கள், (இத்தகைய வேசியர் மீது) எனக்கு உள்ள மோகம் சிதறுண்டு விழுந்து ஒழிய, உனது திருவருளாகிய அமுதத்தைச் சேர்வதற்கு ஒரு வழியைக் காட்டும் அடையாளத்தில் என்னைச் சேர்ப்பித்து உன்னுடைய திருவடியைக் கூடுதற்கு அருள் புரிக. தனதன தத்தத் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு தகுதிகு தத்தத் தீத தோதக என்ற இத்தகைய ஒலிகளுடன் பறைகள், மேளம், போர்முரசுகள் ஒலி செய்யவும், நீண்ட ஊதுங் குழல், வளைந்த குழல், சங்கு, உடுக்கை, பொலிவுள்ள ஊது கொம்பு முதலியவை நிறைந்து ஒலி செய்யவும், அசுரர்களை போரில் யாவரும் சிதறுண்டு அழிந்து பொடிபட வேலைச் செலுத்தியவனே. தினைப் புனத்தை நாள்தோறும் காவல் செய்து கொண்டிருந்தவள், பற்களின் வரிசை முத்துப் போல உள்ள பதுமை போன்ற அழகி, மான் வயிற்றில் பிறந்த அழகியாகிய வள்ளி, மகிழ்ச்சியில் விளக்கம் பெற தினமும் கூடி விளையாடிய முருகனே, முப்புரங்களைச் சிரித்தே எரித்தவனும், இடது பாதியில் பார்வதி உறையும் அழகிய சொக்கநாதனாகிய சிவபெருமான் காதில் ஒப்பற்ற பிரணவப் பொருள் புகும்படி ஓதி அருளி, தென் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 967 - மதுரை
ராகம் - ....; தாளம் -

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன     தத்ததன தத்ததன ...... தனதான

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட     மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும் 
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்     முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி 
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி     பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும் 
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்     பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே 
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு     தெய்த்ததென தெய்தததென ...... தெனனான 
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு     செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும் 
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ     சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா 
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள     ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.

முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும், முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள், முப்பத்து மூன்று* வகையான தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப, (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால், அருச்சுனன் (மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து) தேரைச் செலுத்திய, பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த முருகக் கடவுளே, பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக. தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்குவென்ற ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி, உடுக்கை ஆகியவை ஒலிக்க, தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும் தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம் புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய குழந்தையே, நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும், பொற்றாமரைக் குளம் அமைந்த பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் பின்வருமாறு:ஆதித்தர் 12, ருத்திரர் 11, வசுக்கள் 8, மருத்தவர் 2 - ஆக 33 வகையின.

பாடல் 968 - . புரு.மங்கை
ராகம் - ....; தாளம் -

தானதன தந்த தந்தன     தானதன தந்த தந்தன          தானதன தந்த தந்தன ...... தனதான

ஆடல்மத னம்பின் மங்கைய     ராலவிழி யின்பி றங்கொளி          யாரமத லமப் கொங்கையின் ...... மயலாகி 
ஆதிகுரு வின்ப தங்களை     நீதியுட னன்பு டன்பணி          யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே 
வேடரென நின்ற ஐம்புல     னாலுகர ணங்க ளின்தொழில்          வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென் 
வேடைகெட வந்து சிந்தனை     மாயையற வென்று துன்றிய          வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே 
தாடகையு ரங்க டிந்தொளிர்     மாமுனிம கஞ்சி றந்தொரு          தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண் 
ஜாநகித னங்க லந்தபின்     ஊரில்மகு டங்க டந்தொரு          தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே 
சேடன்முடி யுங்க லங்கிட     வாடைமுழு தும்ப ரந்தெழ          தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ் 
சீர்மயில மஞ்சு துஞ்சிய     சோலைவளர் செம்பொ னுந்திய          ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே.

போருக்கு எழுந்த மன்மதன் வீசும் மலர்ப் பாணங்களாலும், விலைமாதர்களின் ஆலகால விஷம் போன்ற கண்களில் காட்டும் பொய்யான அன்பினாலும், ஒளி கொண்டு விளங்குவதும், முத்து மாலை அசைவதுமான மார்பகங்களில் மயக்கம் கொண்டு, ஆதியாகிய சிவபெருமானுக்கும் குருவாகிய உனது திருவடிகளை உண்மையுடனும் அன்புடனும் பணிந்து வழிபடாமல், மனம் சோர்வடைந்து, வருந்தி என் உடல் அழிவுறாமல், வேடர்கள் போல் நிற்கும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களின் செயல்களும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நாலு அந்தக்கரணங்களின் செயல்களும், என்னைத் தாக்காத வகையில் நான் வேறுபட்டு நின்று உன்னை உணர்ந்து உன் அருளைப் பெறும்படி, என்னுடைய ஆசைகள் அழிய நீ என் எண்ணத்தில் வந்து கலந்து, மாயா சக்திகள் ஒடுங்கும்படி வெற்றி கொண்டு, சிறந்த வேதங்களின் முடிவில் விளங்கும் மேலான பொருளை உபதேசிப்பாயாக. தாடகை என்னும் அரக்கியின் வலிமையை அழித்து, விளங்குகின்ற பெருமை வாய்ந்த விசுவாமித்ர முனிவரின் யாகத்தைச் சிறப்புற நடத்திக் கொடுத்து, ஒப்பற்ற (அகலிகையின்) சாபம் நீங்குமாறு (கால் துகள் படும்படி) நடந்து, (ஜனக ராஜன் முன்னிலையில்) வலிமையான சிவதனுசை முறித்து, இயற்கை அழகு பெற்ற சீதையை மணம் புரிந்து மார்புற அணைந்த திருமணத்துக்குப் பிறகு, அயோத்தியில் தன் பட்டத்தைத் துறந்து, ஒப்பற்ற (மாற்றாந்) தாயாகிய கைகேயியின் சொற்படி நடந்த சிறப்பைக்கொண்டவனாகிய இராமனின் மருகனே, ஆதிசேஷனின் முடிகளும் கலக்கம் கொள்ள, காற்று எங்கும் பரவி வீச, தேவர்கள் களிப்பு மிகுந்து மேற்கிளர்ந்து எழ, நடனத்தைச் செய்யும் அழகிய பெருமை வாய்ந்த மயிலை வாகனமாகக் கொண்டவனே, மேகம் படிந்துள்ள சோலைகள் விளங்குவதும், செவ்விய செல்வம் பெருகி நிற்பதுவுமான ஸ்ரீபுருஷமங்கை (நாங்குநேரி)* என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.

பாடல் 969 - . புரு.மங்கை
ராகம் - ....; தாளம் -

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த     தானதன தந்த தந்த ...... தனதானா

கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து     காதலுறு சிந்தை யுந்து ...... மடமானார் 
காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த     காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார் 
பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க     பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே 
பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை     பீடையற வந்து நின்ற ...... னருள்தாராய் 
ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த     ஏகமயி லங்க துங்க ...... வடிவேலா 
ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்     ஈடெறஇ ருந்த செந்தில் ...... நகர்வாழ்வே 
தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த     சீரலர்கு ளுந்து யர்ந்த ...... பொழிலோடே 
சேரவெயி லங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த     ஸ்ரீபுருட மங்கை தங்கு ...... பெருமாளே.

மேகம் போன்ற கூந்தல் கலைந்து அலை பாய்வதாலும், நீண்ட குண்டலங்கள் அதற்கு ஒக்க அசைவுறுதலாலும், காம இச்சை கொண்ட எண்ணத்தை மேலெழுப்பும் இளம் பெண்கள் காமுகராகிய ஆடவர் உள்ளம் கலங்கும்படி செய்து, சண்டையிடுவதற்கு முந்தி வந்தது போல முன்னே எதிர்ப்பட்டு வருவதும், வைரம் போல உறுதியும் கடினமும் கொண்ட, குடம் போலவும், யானைத் தந்தம் போலவும் உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களை உடையவர்களின் பேரைச் சொல்லவந்தால் (அவர்களுடைய சேட்டையால்) பெண் குரங்கு, (அவர்களுடைய விஷத்தன்மையால்) பாம்பு, (அவர்களின் ஆணவத்தால்) யானை என்று சொல்லத் தக்கவர்கள், மன்மதனுக்கு உறுப்பாக அமைந்த விலைமாதர்கள் தங்கள் கண்கள் என்னும் வலையாலே, சிறந்த (என்) அறிவு சிதறிப் போய், மனம் நொந்து காம இச்சையால் அலைபாயும் மனத்தின் துன்பம் அற்றுப் போக, நீ வந்து உன்னுடைய திருவருளைத் தருவாயாக. அழகு பொருந்திய தண்டையை அணிந்த திருவடி அசைய வருகின்ற கந்தனே, ஒப்பற்ற (சூரனாகிய) மயிலை* அங்க அடையாளமாகக் கொண்டவனே, கூரிய வேலை ஏந்தியவனே, பெருமை பொருந்திய உமா தேவியின் மகனே, (சூரனுடைய இரு கூறில் ஒன்றாய் உன்னைச்) சந்தித்த* கோழியைக் கொடியாகக் கொண்டு, தேவர்கள் உய்யும் பொருட்டு வீற்றிருந்த திருச்செந்தூரின் செல்வனே, தேர்கள் நிரம்பிய நாற்சந்திகள் கொண்ட வீதிகளை உடையதும், நறு மணம் வீசும் சிறந்த மலர்கள் குளிர்ச்சியுடன் மேம்பட்டு விளங்கும் சோலைகளுடன் ஒன்று சேரவே விளங்கும் பரிசுத்தமான தடாகங்கள் பொருந்தியுள்ள ஸ்ரீபுருஷமங்கையில் (நாங்குநேரியில்**) வீற்றிருக்கும் பெருமாளே. 
* முருகனின் வேல் சூரனின் உடலைப் பிளந்ததும் ஒரு பகுதி மயிலாகவும், இன்னொரு பகுதி சேவலாகவும் முருகனைச் சரணடைந்தன.
** நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.

பாடல் 970 - . புரு.மங்கை
ராகம் - ....; தாளம் -

தானதன தந்த தானதன தந்த     தானதன தந்த ...... தனதான

வேனின்மத னைந்து பாணம்விட நொந்து     வீதிதொறு நின்ற ...... மடவார்பால் 
வேளையென வந்து தாளினில்வி ழுந்து     வேடைகெட நண்பு ...... பலபேசித் 
தேனினும ணந்த வாயமுத முண்டு     சீதளத னங்க ...... ளினின்மூழ்கித் 
தேடியத னங்கள் பாழ்படமு யன்று     சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ 
ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ     ராலிலையி லன்று ...... துயில்மாயன் 
ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த     ஆரணமு குந்தன் ...... மருகோனே 
வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த     மானொடுவி ளங்கு ...... மணிமார்பா 
மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை     மாநகர மர்ந்த ...... பெருமாளே.

வேனில் பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்த, மனம் வேதனை அடைந்து, தெரு மூலைகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே இதுவே சமயம் என்று வந்து அவர்கள் காலில் விழுந்து, ஆசை தீர நட்பான பல பேச்சுக்களைப் பேசி, தேனைக் காட்டிலும் அதிக நறு மணம் கொண்ட வாயிதழ் ஊறலை உண்டு, (அம்மாதர்களின்) குளிர்ந்த மார்பகங்களில் முழுகி, தேடி வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிக்க முயற்சி செய்து, அடைய வேண்டிய கதியை (வீட்டுப் பேற்றை) அடைதல் இல்லாமல் அலைந்து திரிவேனோ? பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச் செலுத்தியும், பெரிய பூமியை (ஓர் திருவடி கொண்டு) அளந்தும், ஓர் ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன், இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும் கலந்து உவகையுடன் பருகியவனும், வேதம் போற்றும் முகுந்தனுமாகிய திருமாலின் மருகனே, தேவர்கள் புகழ்ந்து போற்றிய தேவயானையுடனும், வேடர்கள் மகளாகிய மான் போன்ற வள்ளியுடனும் விளங்கும் அழகிய மார்பனே, பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.

பாடல் 971 - இலஞ்சி
ராகம் - ....; தாளம் -

தனந்த தனதன தனந்த தனதன     தனந்த தனதன ...... தனதான

கரங்க மலமின தரம்ப வளம்வளை     களம்ப கழிவிழி ...... மொழிபாகு 
கரும்ப முதுமலை குரும்பை குருகுப     கரும்பி டியினடை ...... யெயின்மாதோ 
டரங்க நககன தனங்கு தலையிசை     யலங்க நியமுற ...... மயில்மீதே 
அமர்ந்து பவவினை களைந்து வருகொடி     யவந்த கனகல ...... வருவாயே 
தரங்க முதியம கரம்பொ ருததிரை     சலந்தி நதிகும ...... ரெனவான 
தலம்ப ரவமறை புலம்ப வருசிறு     சதங்கை யடிதொழு ...... பவராழி 
இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப     னிரண்டு புயமலை ...... கிழவோனே 
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு     இலஞ்சி மருவிய ...... பெருமாளே.

கைகள் தாமரைக்கு ஒப்பாகும். ஒளி பொருந்திய வாயிதழ் பவளத்துக்கு ஒப்பாகும். கழுத்து சங்குக்கு ஒப்பாகும். கண் அம்புக்கு ஒப்பாகும். பேச்சு சர்க்கரைப் பாகு, கரும்பு, அமுது இவைகளுக்கு ஒப்பாகும். மார்பகங்கள் தென்னங் குரும்பைப் போன்று திடமானவை. நடை பிரசித்தி பெற்ற பெண் யானையின் நடைக்குச் சமமாகும். இத்தகைய வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியுடன் (நீ அணைந்து வருவதால்) மலை போன்ற கனத்த மார்புகள் அழுந்துதல் உற, மழலைச் சொல் போல, இன்னிசை கூடிய வள்ளியின் மொழி பின்புலத்தில் கேட்க, நிச்சயமாகவே நீ மயிலின் மேல் ஏறி வீற்றிருந்து, பிறப்பாகிய வினையை ஒழித்து, என்னைப் பிடிக்க வரும் அந்தக் கொடிய யமன் அணுகாமல் இருக்க வருவாயாக. அலைகள் நிறைந்ததும், பெரிய மீன்கள் சண்டையிட்டு விளையாடுவதும், அலைகளை வீசுவதும், கடல் போன்றதும் ஆகிய கங்கை நதி பெற்ற குமரனே (காங்கேயனே) என்று, விண்ணோர் போற்ற, வேதம் ஒலி செய்து வாழ்த்த, சிறிய கிண்கிணிகள் அணிந்துள்ள உனது திருவடிகளைத் தொழுபவரும், பாற்கடலிடையே கருணையுடன் பள்ளி கொண்ட பழையவரும், ஸ்ரீரங்கத்துப் பெருமானும் ஆகிய திருமாலின் மருகனே, பன்னிரண்டு தோள் மலைகளை உடைய குறிஞ்சி வேந்தே, விளக்கம் பூண்டுள்ள தமிழ் விளங்க திருஞானசம்பந்தராக வந்து தமிழ் மொழிந்தவனே, திரு இலஞ்சி* நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.

பாடல் 972 - இலஞ்சி
ராகம் - ....; தாளம் -

தந்தன தான தனந்தன தானத்     தந்தன தான தனந்தன தானத்          தந்தன தான தனந்தன தானத் ...... தனதான

கொந்தள வோலை குலுங்கிட வாளிச்     சங்குட னாழி கழன்றிட மேகக்          கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர் 
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்     கண்கயல் மேனி சிவந்திட கோவைக்          கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே 
சந்திர ஆர மழிந்திட நூலிற்     பங்கிடை யாடை துவண்டிட நேசத்          தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன் 
சந்திர மேனி முகங்களு நீலச்     சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்          சந்திர வாகு சதங்கையு மோசற் ...... றருள்வாயே 
சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்     கொண்டுநல் தூது நடந்தவ ராகத்          தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி 
தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்     சங்கரி மோக சவுந்தரி கோலச்          சுந்தரி காளி பயந்தரு ளானைக் ...... கிளையோனே 
இந்திர வேதர் பயங்கெட சூரைச்     சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்          கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே 
எண்புன மேவி யிருந்தவள் மோகப்     பெண்திரு வாளை மணந்திய லார்சொற்          கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் ...... பெருமாளே.

தலை மயிர்ச் சுருளின் கீழ் உள்ள காதோலைகள் குலுங்கி அசைய, வாளி என்ற காதணியும் சங்கு வளையல்களும், மோதிரமும் கழல, கருமேகம் போன்ற கூந்தலில் உள்ள பூ மாலை சரிய, நறுமணப் பன்னீர் சேர்ந்த மார்பகங்கள் நெஞ்சில் துவள, அம்பு போன்றதும் கயல் மீன் போன்றதுமான கண்ணும் உடலும் சிவக்க, கொவ்வைப் பழம் போலிருந்து கொஞ்சும் வாயிதழ் இனிப்பான ஊறலைக் கொடுக்க, காம இச்சைக் கடலில் சந்திர ஆரம் என்ற பொன் மாலை அலைந்து குலைய, நூல் போன்ற பாகமான இடையில் ஆடை குலைந்து துவண்டுபோக, அன்பு தரும்படி காம இச்சையும் பொங்கி எழுந்து நான் முழுகுகின்ற சமயத்தில், உனது நிலவொளி உடலும், திருமுகங்களும், நீல மயிலின் மேல் ஏறி அமர்ந்திடும் திருவடியில் உள்ளதுமான நிலவொளியையும் கிங்கிணியையுமே சற்று அருள்வாயாக. சுந்தர மூர்த்தி நாயனாருடைய பாடல்களை மகிழ்ந்து ஏற்று தமது இரண்டு திருவடிகளைக் கொண்டு நல்ல தூது நடந்த சிவபெருமானுடைய தேகத்தில் சேர்ந்தவளாக அவனுடன் நடனமாடி இருந்தவள், ஞானவல்லியாகிய சிவகாமி அம்மை, அடியார்களுடைய உடலில் இடம் கொண்டு அமர்ந்தவள், நீலநிறச் சங்கரி, மோக அழகி, எழில்மிகு சுந்தரி, காளி (ஆகிய பார்வதி) பெற்றருளிய யானை முகக் கணபதிக்குத் தம்பியே, இந்திரர்கள், பிரமாதி தேவர்களின் அச்சம் நீங்குமாறு சூரன் அழிந்து அடங்குமாறு வேலைச் செலுத்தி, நல்ல மயிலின் மேல் இன்பகரமாக வீற்றிருக்கும் வேதப் பொருளானவனே, மதிக்கத் தக்க தினைப் புனத்தில் வாழ்பவள், (உனக்கு) மோகம் தந்த மங்கை, லக்ஷ்மிகரம் பொருந்தியவள் ஆகிய வள்ளியை திருமணம் செய்த தகுதி நிறைந்த புகழுக்கு உரியவனே, மதில்கள் ஓங்கி உயர்ந்துள்ள இலஞ்சி* என்னும் பதியில் வீற்றிருக்கும் முருகப் பெருமாளே. 
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.

பாடல் 973 - இலஞ்சி
ராகம் - ....; தாளம் -

தனந்தன தந்த தனந்தன தந்த     தனந்தன தந்த ...... தனதானா

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு     துரந்தெறி கின்ற ...... விழிவேலால் 
சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு     சுருண்டும யங்கி ...... மடவார்தோள் 
விரும்பிவ ரம்பு கடந்துந டந்து     மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே 
விளங்குக டம்பு விழைந்தணி தண்டை     விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய் 
பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற     பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே 
புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்     புரந்தரன் வஞ்சி ...... மணவாளா 
இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்     குரும்பைம ணந்த ...... மணிமார்பா 
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.

அணிந்துள்ள மலரின் மேல் வண்டுகள் திகழும் கரு மேகம் போன்ற நீண்ட கூந்தலைப் பார்த்தும், வேகமாக செலுத்தி வீசப்பட்ட வேல் போன்ற கண்ணைப் பார்த்தும், (என் மனம்) சுழற்சி அடைந்து, மிகவும் வாட்டமுற்று, சோர்வுற்று, மயக்கம் உற்று, விலைமாதர்களின் தோள்களை விருப்பம் கொண்டு அளவு கடந்து நடந்தும், மெலிந்தும் தளர்ந்தும் (நான்) இறந்து போகாமல், விளங்குகின்ற உனது கடப்ப மாலையை விரும்பி, அழகிய தண்டையையும், பல இன்னிசை வகைகளை ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தருவாயாக. நன்றாகப் பொருந்தி அமைந்து, மேன்மை பெற நின்ற பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழித்தவனே. உன்னைப் புகழ்ந்தும், (உனது ஆற்றலைக்) கண்டு மகிழ்ந்தும், வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானையின் கணவனே, தினைப் புனத்தைக் காத்த மங்கையாகிய வள்ளியின் நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பனே, (சரவணக்) குளத்தில் வந்த காரணத்தால் குளவன் (குளத்தில் உற்பவித்தவன்) என்று திருப் பெயர் கொண்டு, இலஞ்சி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.

பாடல் 974 - இலஞ்சி
ராகம் - ....; தாளம் -

தான தனந்த தான தனந்த     தனா தனந்த ...... தனதான

மாலையில் வந்து மாலை வழங்கு     மாலை யநங்கன் ...... மலராலும் 
வாடை யெழுந்து வாடை செறிந்து     வாடை யெறிந்த ...... அனலாலுங் 
கோல மழிந்து சால மெலிந்து     கோமள வஞ்சி ...... தளராமுன் 
கூடிய கொங்கை நீடிய அன்பு     கூரவு மின்று ...... வரவேணும் 
கால னடுங்க வேலது கொண்டு     கானில் நடந்த ...... முருகோனே 
கான மடந்தை நாண மொழிந்து     காத லிரங்கு ...... குமரேசா 
சோலை வளைந்து சாலி விளைந்து     சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே 
சூரிய னஞ்ச வாரியில் வந்த     சூரனை வென்ற ...... பெருமாளே.

அந்திப் பொழுதில் வந்து காம இச்சையைத் தருகின்ற (மகிழம் பூ) மாலையை அணிந்த மன்மதன் எய்கின்ற மலர்ப் பாணங்களாலும், வாடைக் காற்று கிளம்பி, (அதனுடன் கலந்து வரும் மலர்களின்) வாசனைகள் மிகுந்து வடவா முகாக்கினி போல வீசி எறியும் நெருப்பாலும், தனது அழகு எல்லாம் அழிந்து, மிகவும் மெலிந்து, அந்த இளமை வாய்ந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் சோர்வு அடைவதற்கு முன்பு, இளமை கூடிய மார்பு அன்பு மிக்கு விம்மும் படியாகவும் நீ இன்று வந்து அருள வேண்டும். யமன் நடுங்கவும், கையிலே வேலாயுதத்தைக் கொண்டு, (பொய்யாமொழிப் புலவர் வரும்) காட்டில் (வேடனாய்) நடந்த முருகனே,* வள்ளி மலைக் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளி நாணும்படியாக அவளிடம் பேசி, அவள்மீது உனக்கிருந்த காதலை வெளிப்படுத்திய குமரேசனே, சோலைகள் சுற்றியும் உள்ள, நெற்பயிர் உள்ள வயல்கள் விளைந்து சூழ்ந்துள்ள, இலஞ்சி** என்னும் நகரில் (வீற்றிருந்து) மகிழ்ச்சி கொண்டவனே, சூரியன் தான் உதிப்பது எப்படி என்று பயப்படும்படியாக, கடலில் நின்று கொண்டிருந்த (மாமரமாகிய) சூரனை வென்ற பெருமாளே. 
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
** இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், வடக்கே இருந்து வீசும் வாடைக் காற்று - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 975 - திருக்குற்றாலம்
ராகம் - ....; தாளம் -

தானத்தத் தானன தானன     தானத்தத் தானன தானன          தானத்தத் தானன தானன ...... தனதான

ஏடுக்கொத் தாரலர் வார்குழ     லாடப்பட் டாடைநி லாவிய          ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர் 
ஏதத்தைப் பேசுப ணாளிகள்     வீசத்துக் காசைகொ டாடிகள்          ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர் 
மாடொக்கக் கூடிய காமுகர்     மூழ்குற்றுக் காயமொ டேவரு          வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய் 
மாசுற்றுப் பாசம்வி டாசம     னூர்புக்குப் பாழ்நர கேவிழு          மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே 
தாடுட்டுட் டூடுடு டீடிமி     டூடுட்டுட் டூடுடு டாடமி          தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி 
தானொத்தப் பூதப சாசுகள்     வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்          சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே 
கூடற்கச் சாலைசி ராமலை     காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்          கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான 
கோதிற்பத் தாரொடு மாதவ     சீலச்சித் தாதியர் சூழ்தரு          கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.

இதழ்களை உடைய கொத்தான மலர்களைக் கொண்ட நீண்ட கூந்தல் அசைந்தலைய, பட்டு ஆடை விளங்கும், (ஆடவர்களுக்குத்) துன்பம் தருவதான அழகிய தோள்கள் மீது மூடிய விஷம் போன்ற விலைமாதர். குற்றம் கண்டே பேசும், பணத்தை ஆட்சி செய்வதிலேயே நோக்கம் வைத்துள்ளவர்கள். ஒரு மாகாணி அளவே ஆசை கொண்டவர்களாக நடிப்பவர்கள். ஏறிவிட்ட பின் ஏணியை வீழ்த்தித் தள்ளி விடுபவர்கள். முழுமையான வஞ்சகர்கள். மாடு போலப் புணரும் காமம் கொண்டவர்கள் ஆகிய மாதர்கள் வசம் முழுகி அதனால் உடலில் வந்த இழிவானதான ஒரு வகை வயிற்று உளைவு நோயும், மற்ற நோய்களும் அதிகப்பட்டு, கேடு அடைந்து இறந்து, பாசக் கயிற்றை விடாத யமனுடைய உலகத்தில் புகுந்து பாழும் நரகத்தில் விழும் தீமையைச் செதுக்கிக் கழித்து, உன்னுடைய அன்பை அருள் புரிவாயாக. தாடுட்டுட் டூடுடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்தத் தானதனா இவ்வாறு ஒலிக்கும் பலவகைப் பேரிகளுடன், ஒத்த குரலில் பூதங்களும் பேய்களும் ஓலமிடும்படி, சூரர்களுடைய படைகள் இறக்க, அழகிய மயிலின் மேல் ஏறிய பெருமை வாய்ந்தவனே, மதுரை, கச்சிக் கச்சாலை, திருசிராப் பள்ளி, திருவானைக்கா, அழகிய சீகாழி, வைத்தீசுரன் கோயில், விளங்கும் வல்லக் கோட்டை, திருக்கச்சூர், கருவூர் ஆகிய தலங்களிலும் மேன்மை வாய்ந்ததும், குற்றமில்லாத பக்தர்களுடன் பெரிய தவம் செய்த பரிசுத்தமான சித்தராகிய பெரியோர்கள் கருதி வலம் வந்ததுமான அழகிய குற்றாலத்தில்* உலவுகின்ற பெருமாளே. 
* குற்றாலம் தென்காசிக்கு அருகே 5 மைலில் உள்ளது.

பாடல் 976 - திருக்குற்றாலம்
ராகம் - . ரஞ்சனி தாளம் - தி.ர த்ருபுடை

தானத்தத் தானன தானன     தானத்தத் தானன தானன          தானத்தத் தானன தானன ...... தனதான

வேதத்திற் கேள்வி யிலாதது     போதத்திற் காண வொணாதது          வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர் 
வீதித்துத் தேடரி தானது     ஆதித்தற் காய வொணாதது          வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம் 
வாதத்துக் கேயவி யாதது     காதத்திற் பூவிய லானது          வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு 
மாயத்திற் காய மதாசல     தீதர்க்குத் தூரம தாகிய          வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே 
காதத்திற் காயம தாகும     தீதித்தித் தீதிது தீதென          காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார் 
காணப்பட் டேகொடு நோய்கொடு     வாதைப்பட் டேமதி தீதக          லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே 
கோதைப்பித் தாயொரு வேடுவ     ரூபைப்பெற் றேவன வேடுவர்          கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே 
கோதிற்பத் தாரொடு மாதவ     சீலச்சித் தாதியர் சூழ்தரு          கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.

வேதங்களினால் ஆராயப் படாதது அது. அறிவு கொண்டு காண முடியாதது அது. ஒரு மாகாணி அளவு கூட (பதினாறில் ஒரு பங்கு அங்குலம்) நம்மிடத்தினின்று தூரம் இல்லாதது அது. நற்கதியை வேண்டுவோர் பகுத்தறிவோடு தேட அரிதானது அது. சூரியனால் சுட்டுப் பொசுக்க இயலாதது அது. காட்டுத்தீயின் கடுமை கொண்ட நெருப்பிலும் வேகாதது அது. கடுங்காற்றினாலும் தன் ஒளி குன்றாதது அது. காத தூரம் (10 மைல் அளவு) சென்றாலும் நறுமணம் வீசும் மலரின் தன்மையானது அது. பெரிய ஜோதியாக விளங்குவது அது. ஆணவ மதம் ஊறுகின்ற மாயம் பொருந்திய உடலில் அகந்தை என்ற மதநீர் உள்ள தீயவர்களுக்கு எட்ட முடியாத தூரத்தில் உள்ளது அது. (இத்தனைச் சிறப்புப் பெற்ற) அத்தகைய பெருவாழ்வை (முக்தி நிலையை) என்னை ஒரு பொருட்டாக மதித்து இனி அருள்வாயாக. கொலைத்தொழிலில் மிகவும் ஈடுபட்ட மதியைத் திருத்தி, இது தீய செயல், இது தீய செயல் என்று அன்பு மேலிட்டுப் பலமுறை நீ ஓதியும் நற்கதியை அடையும் வழியைக் காணாதவர்களை (அசுரர்களை) கண்ணெதிரிலேயே தெரியும் பொல்லா நோயால் அவர்கள் வேதனைப்பட்டும் கூட கெட்ட புத்தி நீங்காமல் கேடுற்று அந்த அசுரர்கள் தடுமாற, பின்னர் அவர்களை அழிப்போனே, வள்ளி என்ற பெண்மேல் காதல் பித்து மேலிட ஒரு வேடனின் உருவத்தைத் தாங்கி, காட்டு வேடுவர்களின் வீட்டுக்கே குடியாகவந்த முருகனே, குற்றமற்ற பக்தர்களுடன், சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் வந்து வலம்வரும் அழகிய திருக்குற்றாலத் தலத்தில்* உலாவும் பெருமாளே. 
* திருக்குற்றாலம் தென்காசிக்கு மேற்கே 4 மைலில் உள்ளது.நடராஜ மூர்த்தி நடனம் ஆடிய ஐந்து சபைகளில் சித்ர சபை இங்குள்ளது.

பாடல் 977 - திருக்குற்றாலம்
ராகம் - ....; தாளம் -

தத்தான தனத்த தத்தன     தத்தான தனத்த தத்தன          தத்தான தனத்த தத்தன ...... தனதான

முத்தோலை தனைக்கி ழித்தயி     லைப்போரி கலிச்சி வத்துமு          கத்தாம ரையிற்செ ருக்கிடும் ...... விழிமானார் 
முற்றாதி ளகிப்ப ணைத்தணி     கச்சார மறுத்த நித்தில          முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே 
வித்தார கவித்தி றத்தினர்     பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு          வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ 
மெய்த்தேவர் துதித்தி டத்தரு     பொற்பார்க மலப்ப தத்தினை          மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே 
பத்தான முடித்த லைக்குவ     டிற்றாட வரக்க ருக்கிறை          பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே 
பற்பாசன் மிகைச்சி ரத்தைய     றுத்தாத வனைச்சி னத்துறு          பற்போக வுடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே 
கொத்தார்க தலிப்ப ழக்குலை     வித்தார வருக்கை யிற்சுளை          கொத்தோடு திரக்க தித்தெழு ...... கயலாரங் 
கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி     சிற்றாறு தனிற்க ளித்திடு          குற்றால ரிடத்தி லுற்றருள் ...... பெருமாளே.

முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கி, வேலாயுதத்தைப் போரில் மாறுபட்டுப் பகைத்து, செந்நிறம் கொண்டு, முகமாகிய தாமரை மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய மாதர்களின் முற்றாமல் நெகிழ்ந்து பெருத்துள்ளதாய், அழகிய கச்சு மேலுள்ள மாலையை அற்றுப் போகும்படி செய்த, நல்ல முத்து மாலை அழுத்துவதால் உண்டாகும் நகக் குறியைக் கொண்டதும், வித்தார* வகையைச் சேர்ந்த கவிகளைப் பாட வல்ல புலவர்களின் ஓலை நூல்களுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள மலை போன்ற மார்பகத்தில் தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ? உண்மைத் தேவர்கள் போற்ற அவர்களுக்கு உதவும் அழகு நிறந்த தாமரைத் திருவடிகளை நானும் மெய்யான பக்தியுடன் வாழ்த்த அருள் புரிவாயாக. பத்துத் தலைகளான மலைகள் அறுபட்டு அசைந்து விழ, அசுரர்களுக்குத் தலைவனாகிய ராவணன் (போரில்) அழிந்து உயிர் விடும்படி வெற்றி கொண்டவனாகிய திருமாலின் மருகனே, பத்ம பீடத்தில் இருக்கும் பிரமனுடைய அதிகமாயிருந்த ஐந்தாவது தலையை அறுத்துத் தள்ளி, சூரியனைக் கோபித்து பற்கள் உதிரும்படி (தக்ஷயாகத்தில்) உடைத்தெறிந்த பரம்பொருளாகிய சிவ பெருமான் மகிழ்ச்சி கொள்ளும் பெருமானே, கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும் விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாக அப்படியே உதிரும்படி குதித்துத் தாவுகின்ற கயல் மீன்கள் முத்துக்களைக் கொட்டி நீர்ச் சுழிகளில் தள்ளி ஒதுக்கி, சிறிய ஆற்றில் மகிழும் குற்றாலத்துச்** சிவபெருமான் அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமாளே. 
* நால்வகைக் கவிகள் - ஆசு, மதுரம், வித்தாரம், சித்திரம்.** குற்றாலம் தென்காசிக்கு 5 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 978 - ஆய்க்குடி
ராகம் - சாருகேசி தாளம் - கண்டசாபு - 2 1/2

தாத்தனத் தானதன தாத்தனத் தானதன     தாத்தனத் தானதன ...... தனதான

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு     மாப்புடைத் தாளரசர் ...... பெருவாழ்வும் 
மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்     வாழ்க்கைவிட் டேறுமடி ...... யவர்போலக் 
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை     கோத்தமெய்க் கோலமுடன் ...... வெகுரூபக் 
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு     கூத்தினிப் பூரையிட ...... அமையாதோ 
தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை     சாய்த்தொடுப் பாரவுநிள் ...... கழல்தாவிச் 
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி     தாழ்க்கவஜ் ராயுதனு ...... மிமையோரும் 
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு     மாய்க்குடிக் காவலவு ...... ததிமீதே 
ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை     ஆர்ப்பெழச் சாடவல ...... பெருமாளே.

வாள் வீச்சுப் படுவதால் சேனைகள் யாவையும் அழியும்படி பகைவர்களை விரட்டியடிக்கும் செருக்குடன் அரசாட்சி புரியும் மன்னர்களது பெருவாழ்வும் இறுதியில் ஒரே கணப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகக் கடவதுதான் என்ற நிலையாமையை உணர்ந்து இல்லறத்தை விட்டுக் கரையேறும் உன் அடியார்கள் போல, ஒரு குறிக்கோளுடன் வாழவும், உன் திருவடிமலரினைப் பார்த்து யான் இளைப்பாறவும், வினைவசமாகி உழலும் இந்த உடம்பாகிய உருவத்தை பலவித அலங்காரங்களைச் செய்து துன்பங்களில் சிக்குண்டு வரும் இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டு இனிமேல் முடிவு பெறவே முடியாதோ? கால் பட்டாலே கோபத்துடன் சீறி எழும் விஷப் பாம்பைப் போல பாலன் மார்க்கண்டேயனிடம் (யமன்) குறிவைத்துத் தொடரவும், தமது நீண்ட திருவடியை நீட்டி பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட யமனை உதைத்த பரமசிவனார் (உன்னிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக) தமது முடியைத் தாழ்த்தி வணங்க, வஜ்ராயுதனாம் இந்திரனும், தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்க, பொன்னிறமான பிரம்மனை சிறையிலிட்ட ஆய்க்குடி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அரசனே, கடலிலே போர் புரிந்த அந்தச் சூரன் முதலிய அசுரர்களையும், திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால் அந்த கிரெளஞ்சகிரியையும் பேரொலி உண்டாகும்படி அழிக்கவல்ல பெருமாளே. 
* ஆய்க்குடி தென்காசியிலிருந்து வடகிழக்கே 5 மைலில் உள்ள தலம் - பால் பாயச நிவேதனம் சிறப்பு.

பாடல் 979 - திருப்புத்தூர்
ராகம் - ....; தாளம் -

தனத்தத் தான தனன தனதன     தனத்தத் தான தனன தனதன          தனத்தத் தான தனன தனதன ...... தனதான

கருப்புச் சாப னனைய இளைஞர்கள்     ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய          கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரங் 
களிற்றுக் கோடு கலச மலிநவ     மணிச்செப் போடை வனச நறுமலர்          கனத்துப் பாளை முறிய வருநிக ...... ரிளநீர்போற் 
பொருப்பைச் சாடும் வலியை யுடையன     அறச்சற் றான இடையை நலிவன          புதுக்கச் சார வடமொ டடர்வன ...... எனநாளும் 
புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்     ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்          பொகட்டெப் போது சரியை கிரியைசெய் ...... துயிர்வாழ்வேன் 
இருட்டுப் பாரில் மறலி தனதுடல்     பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ          எயிற்றுப் போவி யமர ருடலவர் ...... தலைமாலை 
எலுப்புக் கோவை யணியு மவர்மிக     அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்          எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் ...... நவநீத 
திருட்டுப் பாணி யிடப முதுகிடை     சமுக்கிட் டேறி யதிர வருபவர்          செலுத்துப் பூத மலகை யிலகிய ...... படையாளி 
செடைக்குட் பூளை மதிய மிதழிவெ     ளெருக்குச் சூடி குமர வயலியல்          திருப்புத் தூரில் மருவி யுறைதரு ...... பெருமாளே.

(இப்பாடலின் பின்பாதி சிவபெருமானை வர்ணிக்கிறது). கரும்பு வில்லை உடைய மன்மதன் போன்ற இளைஞர்கள் வியந்து மயங்கும்படி, காம இச்சை உலவுகின்றதும் நீண்டதுமான கடைக்கண் பார்வையைக் கொண்ட இனிய விலைமாதர்களின் தனபாரங்கள் யானையின் தந்தம், குடம், நிறைந்த நவரத்தினச் சிமிழ், நீரோடையில் தாமரையின் நறுமண மலர், பாரத்துடன் தென்னம் பாளையும் முறியும்படி எழுந்துள்ள ஒளியுள்ள இள நீரைப் போல, மலையையும் மோதி வெல்லக்கூடிய வலிமையைக் கொண்டவை, மிகவும் இளைத்துள்ள இடையை மெலியும்படி செய்பவை, புதிய கச்சுடனும் முத்து மாலையுடனும் நெருங்குபவை என்றெல்லாம் நாள் தோறும் அம்மாதர்களுக்குப் புகழ்ச்சிப் பாடல்களை அடிமைப்பட்ட அந்த அந்தக் காதலர்கள் ஆசையுடன் எடுத்தாண்டு பேசுகின்ற இழிவான தொழிலைப் போகவிட்டு, நான் எப்பொழுது சரியை, கிரியை ஆகிய மார்க்கங்களில்* நின்று உழைத்து உயிர் வாழ்வேன்? அஞ்ஞானம் என்ற இருட்டு நிறைந்த இப் பூமியில், யமனுடைய உடல் பதைக்கும்படி, காலால் அவன் விழும்படி உதைத்தவர், திரிபுரங்களின் வலிமையை ஒழித்தவர், தேவர்களின் உடல் அவர்களின் தலைகள் மாலை ஆகிய எலும்பு வடத்தை மாலையாக அணிந்தவர், மிகவும் நடுங்கச் செய்து, காளி அஞ்சும்படி ஒரு நொடிப் பொழுதில் எதிர்த்து நடனம் புரிந்த வயிரவ, பயிரவ மூர்த்தி, வெண்ணெயைத் திருடிய கைகளை உடைய திருமாலாகிய ரிஷபத்தின் முதுகின் மேல் சேணம் போட்டு ஏறி முழக்கத்துடன் வருபவர், செலுத்தப்படும் பூதம் பேய்க் கணம் ஆகியவை விளங்குகின்ற படையைக் கொண்டவர், சடையில் பூளை மலர், சந்திரன், கொன்றை, வெள்ளெருக்கு இவைகளைச் சூடியுள்ளவராகிய சிவ பெருமானின் குமரனே. வயல்கள் பொருந்திய திருப்புத்தூரில்** பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** திருப்புத்தூர் குன்றக்குடிக்கு அருகில் உள்ளது.

பாடல் 980 - திருப்புத்தூர்
ராகம் - ....; தாளம் -

தான தாத்த தனத்தத் தானன     தான தாத்த தனத்தத் தானன          தான தாத்த தனத்தத் தானன ...... தனதான

வேலை தோற்க விழித்துக் காதினில்     ஓலை காட்டி நகைத்துப் போதொரு          வீடு காட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி 
மேனி காட்டி வளைத்துப் போர்முலை     யானை காட்டி மறைத்தத் தோதக          வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல் 
கால மேற்க வுழப்பிக் கூறிய     காசு கேட்ட துகைப்பற் றாஇடை          காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல் 
காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்     மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்          காம நோய்ப்ப டுசித்தத் தீவினை ...... யொழியேனோ 
ஆல கோட்டு மிடற்றுச் சோதிக     பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட          மாடி தாத்தி ரிபட்சித் தாவென ...... வுமிழ்வாளி 
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக     னோடை பூத்த தளக்கட் சானவி          யாறு தேக்கி ய கற்றைச் சேகர ...... சடதாரி 
சீல மாப்ப திமத்தப் பாரிட     சேனை போற்றி டுமப்பர்க் கோதிய          சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு ...... முருகோனே 
சேல றாக்க யல்தத்தச் சூழ்வய     லூர வேற்க ரவிப்ரர்க் காதர          தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே.

வேலாயுதமும் தோற்றுப் போகும்படியான கண்களால் பார்த்து, காதில் உள்ள ஓலையைக் காட்டிச் சிரித்து, போக வேண்டிய ஒரு வீட்டையும் காட்டி, அணிந்த மேலாடையை நெகிழும்படி விட்டு, உடலைக் காட்டி ஆடவர்களின் மனத்தைக் கவர்ந்து, போருக்கு எழுந்தது போன்ற மார்பகமாகிய யானையைக் காட்டியும் (பின்) மறைத்தும், வஞ்சகத்தின் முழு சக்தியையும் காட்டி எதிர்த்துச் சண்டையிட்டு எதிரே வருபவர்களிடத்தே, சமயத்துக்குத் தக்கபடி பேசும் வார்த்தைகளை மழுப்பி, தாம் சொன்ன காசைக் கேட்டு, அதைக் கைப்பற்றிய பின்னர், மத்தியில் மனம் வேறுபட்டுப் பிரிந்து (அவர்களை விரட்டி), (பின்னும் அவர் பொருள் தந்தால்) வருந்துதலுடன் வரவேற்கவந்தவர்கள் போல நடித்து, தமது அன்பைக் காட்டும் மலர் விரித்த அழகிய படுக்கையில் ஏமாற்றுகின்ற அசட்டு வேசிகள் மீது காம இச்சை என்னும் நோய் வாய்ப்படும் மனத்தால் ஏற்படும் தீ வினையினின்றும் நீங்கிப் பிழையேனோ? ஆலகால விஷத்தின் அடையாளத்தைக் காட்டும் கழுத்தை உடைய ஜோதிப் பெருமான், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவன், பார்வதி அன்பு வைத்து மகிழ நடனம் ஆடுபவன், பூமியை உண்டு மீண்டும் கொடு என்று கேட்க உமிழ்ந்து (கண்ணனாக) விளையாடிய திருமாலை அம்பாக (திரிபுரம் அழித்த போது) போரில் அமைத்துக் கொண்ட வில்லைக் கையில் கொண்ட வலிமையாளன், நீர் நிலைகளில் பூத்த பூ இதழ்களின் தேன் கலந்த கங்கை ஆறு நிறைந்து தோன்றும் திரண்ட முடியாகிய சடையைத் தரித்துள்ளவன், பரிசுத்தமான சிறந்த கடவுள், களிப்பு நிறைந்த பூதப் படைகள் போற்றிட நிற்கும் அப்பர் ஆகிய சிவபெருமானுக்கு (பிரணவமாகிய) ஞானப் பொருளை உபதேசித்த புகழையே மிகக் கொண்டுள்ள முருகனே, சேல் மீன்களும், நீங்காத கயல் மீன்களும் குதிக்கும் சுனைகள் சூழ்ந்துள்ள வயலூரில் வீற்றிருப்பவனே, வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, அந்தணர்க்கு பற்றுக் கோடாக உள்ளவனே, தீரனே, பரிசுத்தனே, திருப்புத்தூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்புத்தூர் காரைக்குடிக்கு அருகில் உள்ளது.

பாடல் 981 - திருவாடனை
ராகம் - ராகமாலிகை தாளம் - கண்டசாபு - 2 1/2

தானான தத்ததன தானான தத்ததன     தானான தத்ததன ...... தனதான

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட     லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால் 
ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி     ஓயா முழக்கமெழ ...... அழுதோய 
நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது     நாறா தெடுத்தடவி ...... யெரியூடே 
நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி     நாடா தெனக்குனருள் ...... புரிவாயே 
மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு     மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே 
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்     வானோரு மட்டகுல ...... கிரியாவும் 
ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு     மாலால முற்றவமு ...... தயில்வோன்முன் 
ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்     ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.

மாமிசமும், உள்ளே நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல் கேடுற்று அழியும்படி உயிர் போய்விட்டால், ஊரார்கள் கூட்டமாக வந்து ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில் நெருங்கி ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி அழுது, பின் ஓய்ந்து, பலவிதமான பல்லக்கின் மேலே பிணத்தைக் கிடத்தி, அப்பிணம் துர்நாற்றம் வீசுமுன்பு அதை எடுத்துக்கொண்டுபோய் சுடுகாட்டில் நெருப்பின் மத்தியிலே கூசாமல் வைத்து விட்டுவிட அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள இந்தப் பிறவியை நான் விரும்பாதபடி எனக்கு உன் திருவருளைத் தந்தருள்வாயாக. பெரிய நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம் செய்த மாயவன் திருமாலும், தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமனும், அஷ்டதிக் பாலகர்களும், தேவர்களும், சிறந்த அஷ்டகிரிகளில் உள்ளவர்களும், நீங்காத அரக்கர்களுடன், வானிலுள்ள கணங்கள் யாவும் பிழைக்கும்படியாக, பாற்கடலில் எழுந்த ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான் முன்னொருநாள் ஆசாரத்துடனும், பக்தியுடனும் கேட்க, அவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருளியவனும், திருவாடானை* என்ற தலத்தில் நாள்தோறும் வீற்றிருப்பவனுமான பெருமாளே. 
* திருவாடானை மானாமதுரையில் இருந்து சிவகங்கை வழியில் 44 மைலில் உள்ளது.

பாடல் 982 - உ த்தரகோசமங்கை
ராகம் - ....; தாளம் -

தத்தன தானத் தனதன தந்தத்     தத்தன தானத் தனதன தந்தத்          தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான

கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்     திற்புத சேனைக் கதிபதி யின்பக்          கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன் 
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்     றொப்பையி னேறிட் டருளிய தந்திக்          கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய 
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்     பொற்சரி நாதப் பரிபுர என்றுப்          பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான் 
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்     றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்          றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ 
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்     குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்          கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித் 
திக்கய மாடச் சிலசில பம்பைத்     தத்தன தானத் தடுடுடு வென்கச்          செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி 
உற்பன மாகத் தடிபடு சம்பத்     தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்          றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா 
உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்     சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்          றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே.

(வேண்டுவோர்க்கு வேண்டியதைத் தரும்) கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பகரமான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், சோறு, வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், வாழை, மா, பலா என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, (உன்) எழில்மிகு திருவடியை (முற்பிறப்பில்) வணங்கி, உனக்கு வாகனமாக (இப்பிறவியில்) அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சுநாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னைத் துதித்து, மனம் கசிந்து தியானித்து, நன்றாக நான் உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ நிலையையும் பெற்று, மெய்ஞ் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அப்போது உண்டாவதாகச் சொல்லப்படுகின்ற உடலில் ஊறும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ? போர்ச்செருக்குள்ள உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் குப்பைகளாக உள்ள உடல்களை உடைய அசுரர்களின் பிணங்களும் எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகளெல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளில் உள்ள யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்*) அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்க, தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்க, சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோற்றம் கொடுக்க, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊராகிய பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, அங்கே உள்ள செல்வங்களையும் அடைந்து பொன் மலர்களைச் சிந்த, வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே, உண்மைப் பொருளை அறிந்த ஞானியாகிய குற மகள் வள்ளியும், (ஐராவதமாகிய) யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட அந்த வாகனமாகிய மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை** என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 
* அஷ்ட திக்கஜங்கள்:ஐராவதம், புண்டா£கம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் என்பன.
** உத்தரகோசமங்கை ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 983 - இராமேசுரம்
ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சது.ரத்ருவம் - கண்டநடை - 35 - எடுப்பு - /4/4/4 0

தானதன தானதன தானதன தானதன     தானதன தானதன தானதன தானதன          தானதன தானதன தானதன தானதன ...... தனதான

வாலவய தாகியழ காகிமத னாகிபணி     வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்          வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி 
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்     வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை          மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த் 
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு     கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி          சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற் 
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு     சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்          சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ 
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை     யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென          நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே 
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத     லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி          ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா 
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்     வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு          மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக 
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை     பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ          யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.

கட்டிளமை வயதை அடைந்து, அழகு நிரம்பப்பெற்று, மன்மதன் போல் விளங்கி, ஊதியம் தரும் பல வாணிபப் பணிகளை மேற்கொண்டு நடத்தி, மயக்க அறிவைப்பெற்று காம விளையாட்டுக்கள் ஆடி, பயனற்ற வாழ்க்கையையே நிலையானது என்று கருதி, அதிலேயே மனம் உறுதிபெற்று, மாட கூடம் கொண்ட செல்வனாயப் பொருளைத் தேடி, நறு மணம் உள்ள புனுகு, மற்றும் இதழ்களோடு கூடிய மலர்கள் இவற்றில் மனத்தைச் செலுத்தியவனாக, மகிழ்ச்சியுடன் வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அணிந்தவனாய், காமப் பற்றைக்கொண்டு பொது மகளிரை விரும்பி அவர்கள் மீது மோகம் கொண்டு அவர்கள் பின் சுழல, (அங்ஙனம்) சில நாட்கள் கழிய, உடலில் தோல் சுருங்கலுற்று, மயிர் வெண்ணிறம் பூண்டு, கண்கள் பார்வை இழந்து, இரண்டு கால்களும் தடுமாற்றம் அடைந்து, காதுகள் கேட்கும் தொழில் அற்று, உயிர், தளை, கடவுள் என்னும் முதற் பொருள்களைப் பற்றிய அறிவு யாவும் மறைதலுற்று, சுகமெல்லாம் கெட்டு, கையில் தடி ஏந்தித் திரிகின்ற முதுமைப் பருவத்தில், சூலை நோய், சொறி நோய், கோழை, இழுப்பு, வாயு மிகுதலால் வரும் பிணிகள், நீரிழிவு, இரத்தமின்மையால் வரும் சோகை, கண்ட மாலை, காய்ச்சல் இவைகளுடன் சேர்ந்துள்ள கக்குவான் இருமல், இவை எல்லாம் சூழ்ந்து, அடிக்காரணமாகிய இந்தக் கூளம் போன்ற உடல் துர் நாற்றம் அடைந்து நான் மடிந்து போவேனோ? நான்கு முகங்களைக் கொண்டவனும், யாவற்றுக்கும் ஆதாரமான பிரணவத்தின் பொருளைச் சொல்லத் தெரியாதவனுமாகிய பிரமனை, விழும்படியாகத் தாக்கி, சரியான பொருளைச் சொல்லுக என்று அவனுடைய நான்கு முகங்களுடன் குடுமியும் சிதறுண்டு அலைய தாளமிடுவது போல் குட்டிய இளையவனே, நறுமணம் வீசும் கொன்றையை அணிந்த ஜடையை உடைய சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ள தேவி பார்வதி முதலில் ஈன்ற குழந்தையாகிய கணபதி மகிழும் சகோதர நண்பனே, வள்ளி மலைக் காட்டில் பொருந்தி இருந்த ஞானக் குறப் பெண் வள்ளியை, தினைப் புனச்சோலையில் திருமணம் செய்துகொண்ட புகழை உடைய மயில் வீரனே, கூச்சலிட்டு வந்த தாடகை, சுபாகு, வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு, வாலி மற்றும் நீலி, பகன், ஒப்பற்ற விராதன், அலைகள் எழுந்து வீசும் கடல், இவைகளுடன் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் யாவும் போரில் இறந்து பொடிபட்டழிய, களிப்புடன் நெருப்பு அம்பை வீசும் வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களைக் கையில் ஏந்தியவனும், லக்ஷ்மியை மார்பில் தரித்தவனுமான ஹரி, கேசவன் ஆகிய திருமாலின் மருகனே என்று வேதங்கள் ஓதிப் புகழும் இராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 984 - இராமேசுரம்
ராகம் - ....; தாளம் -

தானா தனத்ததன தானா தனத்ததன     தானா தனத்ததன ...... தனதான

வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர்     மீதே பணிக்கும்வகை ...... யறியாதே 
மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி     லூடே யணைத்துதவு ...... மதனாலே 
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக     ளேதோ வெனக்கலவி ...... பலகோடி 
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு     சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ 
மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி     னூடே கிநிற்குமிரு ...... கழலோனே 
மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை     வீரா குறச்சிறுமி ...... மணவாளா 
ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை     நாணா துரைக்குமொரு ...... பெரியோனே 
நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு     ராமே சுரத்திலுறை ...... பெருமாளே.

தேவர்கள் போற்றுகின்ற உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது பணி செய்யும் வகையை உணராமல், மான் விழியரான விலைமாதர்களின் கடைக் கண்ணில் பட்டு, பூந்தாதுக்கள் நிறைந்த மெத்தையில் அணைத்துப் பெறும் அந்த நிகழ்ச்சியால், தேன் தானோ, கரும்பிலிருந்து வரும் சர்க்கரைக் கட்டியோ, இதற்குச் சமமான இன்பம் ஏதேனும் உள்ளதோ, என்று கூறி பல கோடிக் கணக்கான புணர்ச்சிகளை அடங்காத மோகத்தோடு பாம்பின் படம் போன்ற பெண்குறியாகிய சேற்றில் விளையாடுதலால் நான் அடைந்துள்ள துயரத்தை விலக்க மாட்டேனோ? மேல் நாடாகிய விண்ணுலகத்தையும் போரில் வென்று அடைந்து மேம்பட்ட அசுரர்கள் தலைவனான சூரனின் எதிரே போரில் புகுந்து நின்ற இரண்டு திருவடிகளை உடையவனே, மயில் என்னும் உக்கிரமான வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி பெற்ற வீரனே, குறப் பெண் வள்ளியின் கணவனே, ஞானப் பரம் பொருளாகிய சிவபெருமானுக்கு வேதாகமங்களின் பொருளைத் தயங்காமல் உபதேசித்த ஒப்பற்ற பெரியோனே, திருமாலுக்கு மருகனே, சிறப்பு பெற்று விளங்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 985 - இந்தம்பலம்
ராகம் - ....; தாளம் -

தனன தனதனன தந்தந் தனத்ததன     தனன தனதனன தந்தந் தனத்ததன          தனன தனதனன தந்தந் தனத்ததன ...... தனதான

அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை     அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய          லளவு மசலமது கண்டங் கொருத்தருள ...... வறியாத 
தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ     டகில புவனநதி யண்டங் களுக்குமுத          லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் ...... நடுவான 
கமல துரியமயி லிந்துங் கதிர்ப்பரவு     கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ          ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத ...... சிவயோகம் 
கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி     குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது          கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை ...... யருள்வாயே 
திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித     டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட          திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த ...... திகுதீதோ 
செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென     அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு          திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் ...... களமீதே 
அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள     அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள          அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள ...... விடும்வேலா 
அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக     அழகு புயமொடணை யினபங் களித்துமகிழ்          அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் ...... பெருமாளே.

மாசு இல்லாததாய், (ஆறு ஆதாரங்ளுக்கு அப்பால் உள்ளதாய் 1008 இதழோடு கூடிய) தாமரையாகிய ஸஹஸ்ரார* குருகமல உருவிடத்தே (பிராணவாயுவைச் செலுத்தி அப்போது உண்டாகும்) சங்க நாதம் ஒலிக்க, அற்புதமான ஆகாச வெளி எங்கணும் பொலிவுறும் செயலை அளவிட்டு அறியும் நிலை பெற்றதான தன்மையை ரகசியமாய் உணர்ந்தும், அவ்விடத்தில் எவராலும் தனது உண்மைத் தன்மையை அறிய முடியாததாகும். (வடமொழியில்) உயிரும் மெய்யும் ஆகிய உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்களுக்கும், சகல லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிறச் சுத்த ஜோதிப் பேரொளியை எல்லா இடங்களிலும் வீசிப் பொருந்தியதாய், முதலும் நடுவுமான யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான (பிரமரந்திரம் என்ற) பேரின்ப கமலத்தில், சந்திரனுடைய காந்தி பரந்துள்ளதும், பொன்னொளி வீசும், அழகிய ஸ்படிக நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில், சுழி முனை நாடியின்** உச்சியில, (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்) ஐந்து இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை உனது கருணையினால் அறியும்படியான வழியை (நான்) அடைவதற்கு, பார்வதியின் குமரனே, குமர குருவே என்றென்று பல முறை கூற முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர, அதற்கு வேண்டிய இளமை வலிமையைத் தந்து, உன் திருவடியில் என்னை சேர்த்துக் கொள்ளுவாயாக. பறையும், பலவிதமான மத்தள வகையும் திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ (அதே) தாளத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், ஆதி சேஷனின் முடிகளும், அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பும் வெற்றிச் சின்னங்களை சங்கங்கள் முழங்க, அசுரர்கள் சண்டை செய்து மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பூமாரி பொழிய, அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க, திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய, வேலாயுதத்தைச் செலுத்தியவனே, திருமாலின் மகளான வள்ளியின் மார்பகங்களில் உனது உடல் புதையும்படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து, அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம்*** என்ற ஊரில் ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
*** இந்தம்பலம் என்ற ஊர் விபரம் தெரியவில்லை.

பாடல் 986 - எழுகரைநாடு
ராகம் - மனோலயம் தாளம் - ஆதி

தனதன தாத்தன தனதன தாத்தன     தனதன தாத்தன ...... தந்ததான

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்     விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல் 
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற     விழைவுகு ராப்புனை ...... யுங்குமார 
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை     முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி 
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட     முழுதும லாப்பொருள் தந்திடாயோ 
பரகதி காட்டிய விரகசி லோச்சய     பரமப ராக்ரம ...... சம்பராரி 
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய     பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே 
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட     எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா 
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய     எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.

தந்திரம் ஏதும் இல்லாத நேரான பார்வையோடு உன்னை நோக்கிக் கருதியும், உன்னை நினைந்து மனம் உருகியும், உன்னைத் துதித்து வாழ்த்தியும், கண்களில் நீர் நிறைந்து வழிய, பக்தி மேலும் மேலும் பெருகவும், இரவும் பகலும் மற்ற விஷயங்களில் சிந்தனை அற்றுப்போக, விருப்பமுடன் குராமலரை அணியும் குமரனே, முருகனே, ஆறெழுத்து அண்ணலே, சரவணபவனே, கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் அருந்தி அருளிய அரசனே, என்றெல்லாம் பாடி, மொழிகள் குழறும்படி உன்னைத் தொழுது, ஓயாமல் அழுது யான் உன்னால் ஆட்கொள்ளப்பட, உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த ஞானப் பொருளை அடியேனுக்குத் தரமாட்டாயா? உபதேச* மூலமாக மோக்ஷ வீட்டைக் காட்டிய சாமர்த்தியசாலியே, மலை அரசனே, மிக்க பராக்கிரமசாலியே, மன்மதன் சாம்பலாய் அழிய நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த பசுபதி சிவபிரான் போற்றிய பகவதியாகிய பார்வதி பெற்றளித்த பெருவாழ்வே, அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும், அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும், கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு மலைகளும் அதிர்ந்து ஆர்ப்பரிக்கவும், வெற்றி கொண்ட வேலனே, தேவர்களின் உலகில் யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய எழுகரைநாடு** என்ற தலத்தவர் தம்பிரானே. 
* அருணகிரிநாதரின் வாழ்க்கையில் முருகன் உபதேசித்து பரகதியைக் காட்டியது குறிப்பிடப்படுகிறது.
** எழுகரைநாடு இலங்கையில் உள்ள திருத்தலம். சிலர் இத்தலம் குடகு நாட்டில் உள்ளதாகவும் சொல்வர்.

பாடல் 987 - ஒடுக்கத்துச் செறிவாய்
ராகம் - ....; தாளம் -

தனத்தத் தத்தன தாத்த தத்தன     தனத்தத் தத்தன தாத்த தத்தன          தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான

வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு     மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்          வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள ...... வதனாலே 
மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்     சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை          மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ...... மதியாதே 
கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு     சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்          கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது ...... கரிசாணி 
கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு     பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்          கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை ...... யொழியேனோ 
அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை     நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்          அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன ...... கிரிதோய்வாய் 
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்     சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்          அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி ...... லுறைமாயன் 
உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்     விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்          உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் ...... மருகோனே 
உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்     மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்          ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை ...... பெருமாளே.

வழக்காடும் சொற்களில் பயின்றுள்ளதால் வஞ்சனைக்கு இடமான மருந்துகளையும் பச்சிலைகளையும் ஊட்டுகின்ற பயலினிகள். (ஆண்களைத் தம் பால்) வளைத்து இழுத்து, மன்மதனுடைய காம நூலில் கூறியுள்ள வஞ்சக வழிகளால் (தம்மிடம் வந்தவர்களின்) கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்க வல்லவர்கள். சுகத்தை அடைந்து வஞ்சிப்பவர்கள். ஊரில் தம்மைத் துதிப்பவர்களை மயக்கி சூது நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவர்கள். மதிப்பு வைக்காமலே கழுத்தைக் கட்டி, ஏமாற்றி, நட்பு காட்டிச் சிரித்து, பல்லில் (வெற்றிலை உண்ட) கறையைக் காட்டி, கையில் உண்டான பொருளைப் பிடுங்கி, அது ரத்தினக் கல்லானால் (அதன்) நிறம் முதலியனவற்றையும், (தங்கம் கிடைத்தால்) அதன் மாற்றறிய உரைத்துப் பார்க்க, குற்றம் இவைகளை அறிய உரைகல்லால் உரசி, கணக்குப் பார்த்து, காலம் கடத்தி, ஒரு சண்டை இட்டு, குழப்பம் உண்டு பண்ணும் விபசாரிகள். இந்த வேசிகளுடன் ஒருங்கே இணைந்து புக்கிருக்கும் பாழான புத்தியை நான் விலக்க மாட்டேனோ? நெருப்பு போன்ற கண்ணையும் பொய்யையும் சூதையும் கொண்ட, மடமை நிறைந்த அசுரர்களை நசுக்கிப் பொடியாகும்படி முறித்துத் தள்ளி, அந்தக் கணத்திலேயே அவர்களை அழித்து, குறப் பெண் வள்ளியின் அழகிய மார்பாகிய மலையைத் தழுவுவனே, தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு(*1) சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும், கடலில் (ஆதி சேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு (முனிவர் உருவில் வந்தபோது) (லக்ஷ்மியாகிய) மானின் இடத்தே பிறந்த அழகிய கொடி போன்ற சிறந்த குயில் அனைய வள்ளியின் மீது காதல் கொண்டு அவளை அணைந்த தோளை உடைய கருணைக் கடலே, உறிக்குள்ளே கையை நீட்டிய (வெண்ணெய் திருடிய) கண்ணனின் மருகனே, உண்மைப் பொருளைத் தெரிவிக்க (ருத்திர சன்மன் என்னும்) செட்டியாக(*2) பல சங்கப் புலவர்கள் கூறிய தமிழ்ப் பொருள்களை ஆராய்ந்து மதித்து, நிறைந்த நால்வகைக் கவிகளிலும்(*3) வல்ல கவிகளுடன் சேர்ந்து, ஒடுக்கத்து செறிவாய்(*4) என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
(*1) திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்டனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும். ஆழ்வாரின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, அவரது கவியின் ஈற்றடியில் வசப்பட்டு, காஞ்சியிலிருந்து வெளியேறியும் மீண்டும் குடியேறியும் செய்ததனால் பெருமாளுக்குச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது.
(*2) மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் - திருவிளையாடல் புராணம். 
(*3) தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் 988 - காமத்தூர்
ராகம் - ....; தாளம் -

தானத் தானத் தானத் தானத்     தானத் தானத் ...... தனதானா

ஆகத் தேதப் பாமற் சேரிக்     கார்கைத் தேறற் ...... கணையாலே 
ஆலப் பாலைப் போலக் கோலத்     தாயக் காயப் ...... பிறையாலே 
போகத் தேசற் றேதற் பாயற்     பூவிற் றீயிற் ...... கருகாதே 
போதக் காதற் போகத் தாளைப்     பூரித் தாரப் ...... புணராயே 
தோகைக் கேயுற் றேறித் தோயச்     சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா 
சோதிக் காலைப் போதக் கூவத்     தூவற் சேவற் ...... கொடியோனே 
பாகொத் தேசொற் பாகத் தாளைப்     பாரித் தார்நற் ...... குமரேசா 
பாரிற் காமத் தூரிற் சீலப்     பாலத் தேவப் ...... பெருமாளே.

உடலிலே வந்து குறி தப்பாமல் தைக்கின்ற (மன்மதனுடைய) கையில் உள்ள கரும்பு வில்லினின்று புறப்படும் மது நிறைந்த மலர்ப் பாணங்களாலும், விஷம் கொண்டதாய், பால் போலும் வெண்மையானஅழகு வாய்ந்த வடிவம் உடைய நிலவாலும், புணர்ச்சி இன்பத்தில் ஆசைப்பட்டு, தன் படுக்கையில் நெருப்புப்பட்ட பூவைப்போலக் கருகிப் போகாமல், அவள் பிழைத்துப் போகும்படி, ஆசை வைத்துள்ள இன்பத்துக்கு இடமான (உனது) திருவடியில் (என் மகள்) மகிழ்ச்சி அடைய, நன்கு அவளைச் சேர்ந்து அருள மாட்டாயா? (இந்திரனாகிய) மயில் மேல் பொருந்தி ஏறி, கடல் நீரில் நின்ற சூரன் அழிந்து ஓடும்படி போர் செய்த வேலனே, சூரியன் காலையில் உதிக்கும்படிக் கூவுகின்ற, அந்த இறகு உடைய கோழிக் கொடியை உடையவனே, சர்க்கரைப் பாகுக்கு ஒத்த இனிமையான சொற்களின் பக்குவம் உடைய வள்ளியை விரும்பி உள்ளம் மகிழும் நல்ல குமரேசனே, இந்த உலகத்தில் காமத்தூர் என்னும் தலத்தில் தூய்மை கொண்ட குழந்தையாக அமர்ந்த தெய்வப் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 989 - முள்வாய்
ராகம் - ....; தாளம் -

தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த     தன்னா தனந்த தந்த ...... தனதான

மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து     வெவ்வே ழன்று ழன்று ...... மொழிகூற 
விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க     மென்னா ளறிந்த டைந்து ...... உயிர்போமுன் 
பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து     பொய்யார் மனங்கள் தங்கு ...... மதுபோலப் 
பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு     புன்னா யுளுங்க வின்று ...... புகுவாயே 
பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து     பன்னா கணைந்து சங்க ...... முறவாயிற் 
பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று     பண்ணூ துகின்ற கொண்டல் ...... மருகோனே 
முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து     முன்னோர் பொருங்கை யென்று ...... முனையாட 
மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு     முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே.

(வீட்டில் உள்ள) பெண்டிர், பெற்ற மக்கள், தான் பிறந்த நாடு, சுற்றத்தினர் யாவரும் கும்பலாகக் கூடியும், தனியாகவும் அங்கும் இங்கும் சென்று சென்று (என்னைப் பற்றிப்) பேச்சுக்கள் பேசி, ஆகாயத்தில் யமன் (கண்ணுக்குத்) தெரியாமல் மறைவாக இருந்து, மண் மேல் உள்ள இந்த உடம்பினின்று உயிர் அடஙகும் அந்த மெலிவு நாளைத் தெரிந்து வர, என் உயிர் போவதற்கு முன்பாக, பொன்னாலாகிய சதங்கை, தண்டை (ஆகியவற்றைக் கழலிலும்), முப்புரி நூல், கடப்ப மாலை (இவைகளைத் தோள்களிலும்) அணிந்துகொண்டு, மெய்ம்மையாளர்களின் மனங்களில் நீ வாசம் செய்து அவர்களுக்கு உதவுவது போல, இந்தப் பொல்லாதவனாகிய நான் வணங்கி உன்னை வேண்டுகின்ற சொல்லை நீ பொருட்படுத்தித் தெரிந்து கொண்டு, மனம் வருந்தும் இந்த இழிந்த நாயேனாகிய அடியேன் உள்ளத்திலும் அழகுறப் புகுந்து அருளுவாயாக. பல நாட்களாக வணங்கி வரும் அடியார்களாகிய தேவர்கள் தங்கள் பொன்னுலகத்தை அடைய அவர்களுக்கு உனது மேலான அழகிய கை கொடுத்து உதவி செய்தவனே, பாம்பணையில் படுக்கை கொண்டு, (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கை திருவாயில் வைத்து, பல சாஸ்திரங்களும் இச் சங்கத் தொனியில் முழங்குகின்றது என்னும்படி தேவர்களும் மயங்கி நின்று கேட்க, பலவித பண்களையும் ஊதிய மேகவண்ணனாகிய திருமாலின் மருகனே, மன்மதன் முன்னதாக நின்று (தனது) கரும்பு வில்லை எய்ய வேண்டிய இடத்தை அறிந்து முன்னதாகவே ஒரு போர் செய்யும் தொழிலை மேற்கொண்டது போல போர் புரிய நெருங்கி கச்சு நிமிர்ந்துள்ள மார்பினை உடையவர்களும், உண்மைக் குணம் கொண்டவர்களுமான மாதர்கள் வந்து வணங்குகின்ற முள்வாய்* என்னும் தலத்தில் விளக்கமுற நிற்கும் பெருமாளே. 
* முள்வாய் ஆந்திராவில் உள்ள சித்தூர் நகரத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 990 - வாகைமாநகர்
ராகம் - ....; தாளம் -

தான தான தனத்த, தான தான தனத்த     தான தான தனத்த ...... தனதான

ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு     மால கால விழிக்கு ...... முறுகாதல் 
ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு     மார பார முலைக்கு ...... மழகான 
ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு     மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி 
ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி     லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ 
வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு     மீறு காத லளிக்கு ...... முகமாய 
மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து     மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது 
மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து     வாயி லூறல் குடித்து ...... மயல்தீர 
வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற     வாகை மாந கர்பற்று ...... பெருமாளே.

கரும்பு போல் இனிக்கும் பேச்சுக்கும், ஆளையே ஊடுருவி அறுக்கும் ஆலகால விஷம் போன்ற கண்களுக்கும், காம இச்சை என்னும் ஆசையைக் கொண்ட விலைமாதர்கள் அழைக்கின்ற ஓசை கொண்ட குரலின் தொனிக்கும், முத்து மாலை அணிந்த பாரமான மார்பகங்களுக்கும், அழகிய காதோலைக்கும், பொருந்திய குண்டல அணிக்கும், நெற்றிப்பட்டம் அணிந்துள்ள பெண் யானையின் நடை போன்ற நடைக்கும், குரவைக் கூத்தில் சாய்வது போல சாய்ந்துள்ள இடுப்புக்கும் நான் மோகம் கொண்டவனாகி, காம ஊறல் பரவும் அந்த இதழாகிய உறுப்பிலும், அந்த ஊறலை அறியும் காரமான அநுபவத்திலும் நினைவு கொண்டு வேகமாகச் செல்லும் ஆசையிலேயே அலைச்சல் உறுவேனோ? கை வளை விற்கும் வேலை ஆகும் பொருட்டு வளை விற்கும் செட்டியாய் வேடர் மகளான வள்ளிக்கு மிக்கெழும் ஆசையை ஊட்டிய மாயம் பூண்ட திருவுருவத்தை உடையவனே, பொருந்திய வேட்கையைக் கொடுத்தும், பெருமை வாய்ந்த அழகு உருவங்களைக் காட்டியும், இறுதியாக (நீ யார் என்ற) உண்மையை அறிவித்தும் (தினைப்புனத்தின்) பரண் மீதிலே மலர் மாலையை வள்ளியின் கூந்தலில் முடித்தும், அந்த மாதாகிய வள்ளியின் பாதங்களை வருடியும், அவள் வாயிதழ் ஊறலைப் பருகியும் மோகம் தீர அழகிய தோள்களில் அவளை அணைத்தும், ஆகாயத்தை அளாவும் மரங்கள் இருக்கும் சோலைகள் உள்ள வாகை மா நகரில்** (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே. 
* நீடு கோலம் - வேட்டுவனாக, வேங்கையாக, வளைச் செட்டியாக, விருத்தனாக, இறுதியில் தெய்வமாகக் கோலங்கள் காட்டியதைக் குறிக்கிறது).
** வாகை மாநகர் செய்யார் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவோத்தூர் வட்டத்தில் உள்ளது.

பாடல் 991 - விசுவை
ராகம் - ...; தாளம் -

தனதன தந்த தனதன தந்த     தனதன தந்த ...... தனதான

திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து     முடிமலர் கொண்டொ ...... ரழகாகச் 
செயவரு துங்க முகமும்வி ளங்க     முலைகள்கு லுங்க ...... வருமோக 
அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து     அறிவுமெ லிந்து ...... தளராதே 
அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு     னடியிணை யன்பொ ...... டருள்வாயே 
வரையைமு னிந்து விழவெக டிந்து     வடிவெலெ றிந்த ...... திறலோனே 
மதுரித செஞ்சொல் குறமட மங்கை     நகிலது பொங்க ...... வரும்வேலா 
விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த     விடையரர் தந்த ...... முருகோனே 
விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு     விசுவைவி ளங்கு ...... பெருமாளே.

திருகு ஜடைபில்லையை அணிந்துள்ள கூந்தலை வகிர்ந்து வாரி, தலைமுடியில் மலர்களைத் தொடுத்து ஒரு வகையான அழகு விளங்கும்படிச் செய்வதால் வரும் சிறப்பான முகம் பிரகாசிக்க, மார்பகங்கள் குலுங்க வருகின்ற, காம மயக்கத்தைத் தரும் விலைமாதர்களின் வலையிலே விழுந்து, புத்தி கெட்டுச் சோர்வு அடையாமல், தேவர்கள் மகிழ்ச்சியுற்று தொழுது வணங்குகின்ற உனது இரண்டு திருவடிகளையும் அன்புடன் தந்து அருள்வாயாக. கிரெளஞ்ச மலையைக் கோபித்து, அது அழிபட்டு விழும்படிக் கண்டித்து, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய திறமை வாய்ந்தவனே, இனிமை வாய்ந்த செவ்விய சொற்களை உடைய இளம் குற மகளாகிய அழகிய வள்ளி நாயகியின் மார்பகங்கள் பூரிக்குமாறு வருகின்ற வேலனே, நறு மணம் வீசும் கொன்றை மலர், அறுகம் புல் இவைகளைச் சூடியுள்ளவரும் ரிஷப (நந்தி) வாகனத்தை உடையவருமான சிவபெருமான் ஈன்றருளிய முருகனே, நறு மணம் மிக்க சந்தன மரச் சோலைகள் விளங்கும் விசுவை என்னும் தலத்தில் விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 992 - பொதுப்பாடல்கள்
ராகம் - .¥நாத விநோதினி தாளம் - அங்கதாளம் - 8 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1

தான தத்தன தானா தனாதன     தான தத்தன தானா தனாதன          தான தத்தன தானா தனாதன ...... தந்ததான

போத நிர்க்குண போதா நமோநம     நாத நிஷ்கள நாதா நமோநம          பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண 
பூபன் மைத்துன பூபா நமோநம     நீப புஷ்பக தாளா நமோநம          போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும் 
மாத மிழ்த்ரய சேயே நமோநம     வேத னத்ரய வேளே நமோநம          வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத 
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி     யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ          மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ 
கீத நிர்த்தவெ தாளா டவீநட     நாத புத்திர பாகீ ரதீகிரு          பாச முத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா 
கேக யப்பிர தாபா முலாதிப     மாலி கைக்கும ரேசா விசாகக்ரு          பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டா£கா 
வேத வித்தக வேதா விநோதகி     ராத லக்ஷ்மிகி ¡£டா மகாசல          வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா 
வீர நிட்டுர வீராதி காரண     தீர நிர்ப்பய தீராபி ராமவி          நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே.

ஞானம் நிறைந்தவனாய், குணங்களுக்கு எட்டாமல் இருக்கும் ஞானமூர்த்தியே, போற்றி, போற்றி, தலைவனே, உருவம் அற்ற மூர்த்தியே, போற்றி, போற்றி, எல்லாக் கலைகளின் சாரமாக உள்ள தெய்வமே, போற்றி, போற்றி, ஐந்து மலர்க்கணைகளை உடைய அரசன் மன்மதனின் மைத்துனனாம்* அரசனே, போற்றி, போற்றி, கடப்ப மலர்களைத் தரித்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, இன்பங்களுக்கு உரிய சொர்க்க பூமியைக் காத்தவனே, போற்றி, போற்றி, சங்கப்பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி, ரிக், யசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களும்** தொழும் தெய்வமே, போற்றி, போற்றி, வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் என்ற மூவுலகங்களும் போற்றும் செல்வமே, போற்றி, போற்றி, என்றெல்லாம் கூறிப் போற்றி உன் பாதத் தாமரையில் விழாமல், மகா சமுத்திரமாகிய ஏழ் பிறப்பில் நான் மூழ்கி, மனத்தில் உதிக்கும் எண்ணங்களாம் மாயையின் சுழற்சிக்குள்ளே வெளிவர முடியாமல் அகப்பட்டுக் கலங்குதல் நன்றோ? பாடல் ஆடல் கொண்ட வேதாள கணங்களுடன் சுடுகாட்டில் நடனம் செய்யும் சிவபிரானுடையவும் பாகீரதியாம் கங்கையுடையவும் புத்திரனே, கருணைக் கடலே, மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின் மகளான தேவயானையின் மணாளனே, மயில் வாகனக் கீர்த்திமானே, மூலாதார மூர்த்தியே, மாலைகள் அணிந்த குமரக் கடவுளே, விசாகனே, கிருபாளனே, பவள நிறத்தோனே, ஆறு திருமுகங்களாம் தாமரைகளை உடையவனே, வேதங்களில் வல்லவனே, பிரம்மனுடன் வேடிக்கை விளையாடலைப் புரிந்தவனே, வேடர் குலத்து லக்ஷமியாம் வள்ளியுடன் சிருங்கார லீலைகள் புரிந்தவனே, பெரும் மலைகளில் எல்லாம் குடியிருக்கும் வீரனே, பராக்கிரமசாலியே, மீகுந்த கவனத்தோடு செயல்படுவோனே, பூரணமான சூரத்துவம் உடையவனே, வீரனுக்கு இருக்கவேண்டிய கொடூரம் கொண்ட வீரனே, மூல காரணப் பொருளே, தீரனே, பயமற்ற ¨தரியசாலியே, அழகனே, விநாயகருக்குப் பிரியமானவனே, வேலாயுதனே, தேவர்கள் தம் தலைவனே. 
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை விட்டதன் காரணம் அதனில் உயிர்களுக்கு ஆக்கமேயன்றி கேடு விளைவிக்கும் மந்திரங்களும் கூறப்படுவதால் மற்ற மூன்றை மட்டும் குறிப்பிட்டார்.

பாடல் 993 - பொதுப்பாடல்கள்
ராகம் - .¡வேரி தாளம் - அங்கதாளம் - 8 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிடதக-2 1/2

தான தத்தன தானா தனாதன     தான தத்தன தானா தனாதன          தான தத்தன தானா தனாதன ...... தந்ததான

ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை     வேத னைப்படு காமாவி காரனை          ஊன முற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி 
யோக மற்றுழல் ஆசாப சாசனை     மோக முற்றிய மோடாதி மோடனை          ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி 
பாத கக்கொலை யேசூழ்க பாடனை     நீதி சற்றுமி லாகீத நாடனை          பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ...... மண்ணின்மீதில் 
பாடு பட்டலை மாகோப லோபனை     வீடு பட்டழி கோமாள வீணனை          பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ...... தெந்தநாளோ 
ஆதி சற்குண சீலா நமோநம     ஆட கத்திரி சூலா நமோநம          ஆத ரித்தருள் பாலா நமோநம ...... உந்தியாமை 
ஆன வர்க்கினி யானே நமோநம     ஞான முத்தமிழ் தேனே நமோநம          ஆர ணற்கரி யானே நமோநம ...... மன்றுளாடும் 
தோதி தித்திமி தீதா நமோநம     வேத சித்திர ரூபா நமோநம          சோப மற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச 
தூத னைத்துகை பாதா நமோநம     நாத சற்குரு நாதா நமோநம          ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே.

ஓதத்தக்க முத்தமிழைத் தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனை, துன்பப்படுகின்ற விகாரமுடைய காமுகனை, பழி கொண்டு திரியும் அசுத்தமான இழிவு உள்ளவனை, எங்கும் வியாபித்திருக்கும் யோக நிலையைக் கடைப்பிடிக்காமல் திரியும் ஆசையாகிய பேய் போன்றவனை, காம மயக்கம் மிகுந்த மூடர்களுக்குள் தலைமையான மூடனை, பயன் தரக் கூடிய தவத்தைத் தேடாத கேடுடையவனை, அன்றில் பறவை முதலான உயிர்களை பாபத்துக்கு ஈடான கொலை செய்யவே கருதுகின்ற வஞ்சகனை, ஒழுக்க நெறி கொஞ்சமும் இல்லாத இசைப் பாட்டுக்களில் களிப்புறுவானை, பாபம் செய்பவர்கள் எல்லோரையும் விட பெரிய துரோகம் செய்பவனை, இந்த உலகில் பாடுபட்டு அலைகின்ற பெரிய கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனை, கெடுதல் பட்டு அழிகின்ற, களித்து வீண் பொழுது போக்குபவனை, உலக மாயையில் சிக்குண்டு வாழ்பவனாகிய என்னை ஆட்கொள்ளுவது எந்நாளோ? முதல்வனே, சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியே, போற்றி, போற்றி, பொன்னாலாகிய, மூன்று தலைகளை உடைய சூலாயுதனே, போற்றி, போற்றி, என்னை அன்புடன் பாதுகாக்கும் காவல் தெய்வமே, போற்றி, போற்றி, கடலில் ஆமை வடிவமாகச் சென்றவராகிய திருமாலுக்கு விருப்பமானவனே, போற்றி, போற்றி, ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனே, போற்றி, போற்றி, வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு எட்டாத அருமையானவனே, போற்றி, போற்றி, அம்பலத்தில் நடனம் செய்யும் தோதி தித்திமி தீதா என்று தாளங்களுடன் கூத்தாடுபவனே, போற்றி, போற்றி, வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவனே, போற்றி, போற்றி, துக்க நிலையில் இல்லாதவர் துதிக்கும் கடவுளே, போற்றி, போற்றி, யம தர்மராஜன் அனுப்பி வைத்த காலனை உதைத்த பாதங்களை உடையவனே, போற்றி, போற்றி, நாதனே, சற்குரு நாதனே, போற்றி, போற்றி, ஒளியில் பேரொளியே, மகா தேவரான சிவபெருமானுக்கும் தனிப் பெரும் தலைவனே. 

பாடல் 994 - பொதுப்பாடல்கள்
ராகம் - .¡மா தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதகிட-2 1/2, தகதிமி-2

தான தத்தனா தானா தனாதன     தான தத்தனா தானா தனாதன          தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான

வேத வித்தகா சாமீ நமோநம     வேல்மி குத்தமா சூரா நமோநம          வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத 
வீர பத்மசீர் பாதா நமோநம     நீல மிக்ககூ தாளா நமோநம          மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத 
போத மொத்தபேர் போதா நமோநம     பூத மற்றுமே யானாய் நமோநம          பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும் 
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம     ஆறி ரட்டிநீள் தோளா நமோநம          பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டா£க 
மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்     மீதி ருக்குமே ரார்மாபு லோமசை          வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும் 
வேத வித்தகீ வீமா விராகிணி     வீறு மிக்கமா வீணா கரேமக          மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... யங்கராகீ 
ஆதி சத்திசா மாதேவி பார்வதி     நீலி துத்தியார் நீணாக பூஷணி          ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும் 
ஆர்யை பெற்றசீ ராளா நமோநம     சூரை யட்டுநீள் பேரா நமோநம          ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே.

வேதங்கள் உணர்ந்த பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றி வேலினைச் சிறப்பாக ஏந்தும் மஹா சூரனே, போற்றி, போற்றி அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவனே, போற்றி, போற்றி ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக விளங்குபவனே, வீரனே, தாமரை போன்ற அழகிய திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி நீல நிறத்தில் மிகுந்த கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றி மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகனனே, போற்றி, போற்றி சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி, போற்றி பஞ்ச பூதங்களாயும் பிறவாயும் ஆனவனே, போற்றி, போற்றி பரிபூரணப் பொருளாக வாழ்பவனே, போற்றி, போற்றி பரிசுத்தமான மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றி பன்னிரண்டு நீண்ட புஜங்களை உடையவனே, போற்றி, போற்றி ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பனே, போற்றி, போற்றி வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும் ஸரஸ்வதியோடு, செந்தாமரை மீது அமர்ந்த அழகு நிறைந்த லக்ஷ்மியும், இந்திராணியும், வீரம் மிகுந்த ஸப்த மாதாக்களும்,* மற்றுமுள்ள எல்லா தெய்வ மகளிரும் எதிரே நின்று நாள்தோறும் வேத ஞானியே, பயங்கரியே, பற்று அற்றவளே, சிறப்புமிக்க அழகிய (விபஞ்சி என்ற) வீணையை கையில் ஏந்தியவளே, மகாமேரு மலையில் தங்கி வாழும் சிறப்பை உடையவளே, சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே, உடம்பெல்லாம் பரிமள கந்தங்களைப் பூசியவளே, ஆதிசக்தியே, சாமவேதம் போற்றும் தேவியே, பார்வதியே, நீல நிறத்தவளே, புள்ளிகள் நிறைந்த நீண்ட நாகங்களை ஆபரணமாக அணிந்தவளே, அன்னையே, என்றும் இருப்பவளே, சடையுள்ள துர்கா தேவி, என்றெல்லாம் துதி செய்து வணங்குகின்ற மஹாதேவி பெற்ற சீராளனே, போற்றி, போற்றி சூரனை வதைத்துப் பேரும் புகழும் பெற்றவனே, போற்றி, போற்றி வேதம் ஓதுவோர்களின் செல்வமே, போற்றி, போற்றி அனைவருக்கும் பெருமாளாக விளங்குபவனே. 
* ஸப்த மாதாக்கள் - அபிராமி, மஹேஸ்வரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.

பாடல் 995 - பொதுப்பாடல்கள்
ராகம் - ஆரபி தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2

தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன     தான தாத்தன தாத்தன ...... தனதானா

ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி     தாமெ னாப்பர மார்த்தம ...... துணராதே 
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட     நேக நாட்டொடு காட்டொடு ...... தடுமாறிப் 
பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு     பூவி னாற்றம றாத்தன ...... கிரிதோயும் 
பொக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்     போது போக்கியெ னாக்கையை ...... விடலாமோ 
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ     தீத தீ¨க்ஷப ¡£¨க்ஷக ...... ளறவோதுந் 
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி     யாக ராத்திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே 
மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷர     மேரு வீழ்த்தப ராக்ரம ...... வடிவேலா 
வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட     வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.

உயிரைக் காத்து உய்விப்பது மேலான தகுதிவாய்ந்த செயலாதலால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற புருஷார்த்தங்கள் இவை என உணர்ந்து, மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளாமல், யானையின் மீதும், குதிரையின் மீதும், பல படைகள் புகழ்ந்திட வீட்டிலும், பல நாட்டிலும், காட்டிலும் அலைந்து தடுமாற்றம் உற்று, மாதர் மயக்கில் உருகி, புதுப்புது நடனங்களுடனும், பாட்டுக்களுடனும், மலரின் நறுமணம் நீங்காத மார்பகங்களாகிய மலைகளில் தோய்கின்ற சுகம் அனுபவிப்பதிலும், ஊடல் செய்வதிலுமான வாழ்க்கையின் விளையாடல்களிலே இரவும் பகலுமாக வீணாகப் பொழுதைப் போக்கி எனது உடலை விட்டுப் போதல் நன்றாகுமோ? தேவி பார்வதி இணைந்த மேலான பரிசுத்த மூர்த்தியாம் சிவபிரானுக்கு ஒப்பற்ற ஆத்ம தத்துவங்களுக்கு மேற்பட்டதான உபதேசங்களையும், பிரணவ விளக்கங்களையும் முழுமையாக ஓதின தேவனே, ஞான சூரியனே, நால்வகைக் கவிகளையும்* (திருஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்துப்) பாடி அருளிய அழகனே, மோக்ஷ நிலையாகிய விடுதலையை அளிக்கும் தியாக மூர்த்தியே, இரவிலே சுடர்விடும் (நக்ஷத்திரங்களாகிய) கார்த்திகைப் பெண்கள் பெற்ற பெருஞ்செல்வமே, விரும்பி உன்னை அடைந்தவர்களுக்கு அருளை அள்ளி அள்ளி வழங்கும் பன்னிரு கண்களை உடையவனே, சரவணபவ என்ற ஆறெழுத்துக்கு உரிய மூர்த்தியே, கிரெளஞ்ச மலையை வீழ்த்திய பராக்கிரம சாலியே, கூரிய வேலாயுதனே, வீரனே, அசுரர்கள் அலறும் கூச்சல் எழவும், வேதத்தலைவனாம் பிரமன் (பிரணவத்துக்குப் பொருள் கூறத்தெரியாமல்) நாவடங்கிப் போகவும், கடல் ஓலமிட்டுக் கலங்கவும் வேலை விரைவில் செலுத்திய பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் 996 - பொதுப்பாடல்கள்
ராகம் - ....; தாளம் -

தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன     தான தாத்தன தாத்தன ...... தனதானா

ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ     மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே 
ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி     யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி 
தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு     சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன் 
சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய     தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே 
நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு     ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய 
நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல்     நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே 
வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு     வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய 
மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ     வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.

ஒன்றாகி, பலவாகி, சிவ அனுபூதியாகி, தெளிவுப் பொருளாகி, மங்கலப் பொருளாயுள்ளது இதுவே என்று குரு செய்த உபதேசத்தை நான் உணர்ந்து அதன்படி நடக்காமல், ஏழு உலகங்களுக்கும் புலி நானே என்று, குதிரை, தேர், யானை இவற்றின் மீது ஏறும் மிகுந்த செருக்குடனேஅரசாட்சியை வகித்து, மாதர்களிடத்தே ஒரு போதும் நீங்காத காம இச்சையால் அழிவைத் தரும் தளர்ச்சியால் தீய வழியிலே இந்த உடலை நான் இழப்பதற்கு முன்பாக, ஒளிவளர் உண்மையை அடியேன் கண்டு உணர, (நீ ஞானசம்பந்தராய் வந்து), சிவ சாரூபம் வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் பாலித்ததும்* எட்டாததுமான மேலான பொருளை உபதேசித்து அருள்வாயாக. பாம்புப் படுக்கை (ஆதிசேஷன்) மேல் துயிலும் திருமாலுக்கும், அயன் எனப்படும் பிரமனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு ஒரு ஞான உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கின நாதனே, தமது கருத்தை வைத்துப் பல பொழுதும் ஆசை கொண்டவராய் உன் திருப்புகழைச் சொல்லிப் போற்றும் புலவர்களுக்கு திருவருள் பாலித்து, திருவடியை அருள்கின்ற செல்வமே, வேகத்தை மேற்கொண்ட பாம்பைத் துவைக்கும் மயிலின் மீது ஏறி வேலாயுதத்தால் வீரம் பொருந்திய மாமரமாக நின்ற சூரனைஅழித்து, சிறப்புற்ற கிரெளஞ்ச மலை சாய்ந்து அழிய, விண்ணுலகத்தோர் பூமாரி பொழிந்து வேலாயுத மூர்த்தியே போற்றி எனக் கூறி வணங்க, கடல் கலங்கி ஓலமிட, வேலைச் செலுத்திய பெருமாளே. 
* காஞ்சியில் திருமேற்றளி என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் - காஞ்சிப்புராணம்.

பாடல் 997 - பொதுப்பாடல்கள்
ராகம் - ....; தாளம் -

தான தந்தன தானா தானன     தான தந்தன தானா தானன          தான தந்தன தானா தானன ...... தனதானா

தோடு மென்குழை யூடே போரிடு     வாணெ டுங்கயல் போலே யாருயிர்          சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் ...... விழிமானார் 
சூத கந்தனி லேமா லாயவர்     ஓது மன்றறி யாதே யூழ்வினை          சூழும் வெந்துய ராலே தானுயிர் ...... சுழலாதே 
ஆடு வெம்பண காகோ தாசன     மூறு கண்டிட மேல்வீழ் தோகையி          லாரும் வண்கும ரேசா ஆறிரு ...... புயவேளே 
ஆரு நின்றரு ளாலே தாடொழ     ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற          ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற ...... அருள்வாயே 
ஓடு வெங்கதி ரோடே சோமனு     மூழி யண்டமும் லோகா லோகமு          மூரு மந்தர நானா தேவரு ...... மடிபேண 
ஊழி டம்புயன் வேலா வாலய     மூடு தங்கிய மாலா ராதர          வோத வெண்டிரை சூர்மார் பூடுற ...... விடும்வேலா 
வேடு கொண்டுள வேடா வேடைய     வேழ வெம்புலி போலே வேடர்கள்          மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய் 
மேக மென்குழ லாய்நீ கேளினி     வேறு தஞ்சமு நீயே யாமென          வேளை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.

தோடும் மெல்லிய குண்டலமும் அணிந்துள்ள காதில் போர் செய்யும் ஒளி பொருந்திய பெரிய கயல் மீனைப் போல் விளங்கி அரிய உயிரையும் கொள்ளை கொள்ளும் வேல் போல் பாய்வதான கண்களை உடைய விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த உள்ளத்தினிடத்தே மோகம் கொண்டவனாய் அவர்கள் பேசுகின்ற சொற்களின் உண்மை நிலையை அன்று உணராமல், தலை விதி சூழ்ச்சி செய்து தருகின்ற கொடிய துன்பத்தால் என் உயிர் சுழன்று சஞ்சலம் அடையாமல், ஆடும் கொடிய படத்தை உடைய பாம்பாகிய உணவைச் சுவைத்து உண்பதற்காக அதன் மேல் விழுகின்ற மயிலை வாகனமாகக் கொண்டு நிறைந்து விளங்கும் வளப்பம் கொண்ட குமரேசனே, பன்னிரு தோள்களை உடையவனே, யாரும் நின்று உன் திருவருளால் உன் திருவடிகளைத் தொழ (அவர்களுக்கு) மன வலிமையைக் தந்து அருளும் செல்வனே, இழிவான நிலை ஒழிவதற்கு, ஆதி நாயகனான சிவ பெருமான் தந்தருளிய பெருமானே, அடியேன் நல் வாழ்வு பெற அருள்வாயாக. தினமும் ஓடிக் கொண்டிருக்கும் கொடிய வெப்பமுடைய சூரியனுடன் சந்திரனும், ஊழிக் காலம் வரை அழியாத அண்டங்களும், பல உலகங்களும், அங்குள்ள ஊர்களும், விண்ணில் உள்ள பலவகையான தேவர்களும் உன் அடிகளைப் போற்றித் தொழ, அவரவர்க்கு விதியை விதிக்கின்ற பிரமனும், பாற்கடலில் தங்கியிருக்கின்ற திருமாலும் உனது அன்பும் உதவியையும் வேண்ட, வெண்ணிற அலை வீசும் கடலிடையை நின்ற சூரனுடைய மார்பை ஊடுருவிப் பிளக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவனே, வேடனைப் போல் வேடம் கொண்டவனே, கொடுமை வாய்ந்த புலி போல இருந்த வேடர்கள் வாழ்கின்ற திண்ணிய (தினைப்) புனத்தில் இருந்த வள்ளி நாயகியிடம் மிகவும் காம மயக்கம் கொண்டவனாய், மேகம் போன்ற மெல்லிய கூந்தலை உடையவளே, நீ கேட்பாயாக. எனக்கு புகலிடம் நீயே ஆவாய் என்று கூறி அந்த மாதிடம் தருணம் பார்த்து காத்திருந்து காவல் செய்த தலைவனே, தேவர்கள் பெருமாளே. 

பாடல் 998 - பொதுப்பாடல்கள்
ராகம் - துர்கா தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தான தந்தன தானா தானன     தான தந்தன தானா தானன          தான தந்தன தானா தானன ...... தனதான

நாலி ரண்டித ழாலே கோலிய     ஞால முண்டக மேலே தானிள          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே 
ஞால முண்டபி ராணா தாரனும்     யோக மந்திர மூலா தாரனு          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக 
மேலி ருந்தகி ¡£டா பீடமு     நூல றிந்தம ணீமா மாடமு          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக 
வீசி நின்றுள தூபா தீபவி     சால மண்டப மீதே யேறிய          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய் 
ஆல கந்தரி மோடா மோடிகு     மாரி பிங்கலை நானா தேசிய          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும் 
ஆன சம்ப்ரமி மாதா மாதவி     ஆதி யம்பிகை ஞாதா வானவ          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி 
கால சங்கரி சீலா சீலித்ரி     சூலி மந்த்ரச பாஷா பாஷணி          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி 
காம தந்திர லீலா லோகினி     வாம தந்திர நூலாய் வாள்சிவ          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

ஆறு இதழ்த் தாமரையால் வகுக்கப்பட்ட, தொங்கிப் பொருந்தி உள்ள அந்தத் தாமரையின் மேல் உள்ள (சுவாதிஷ்டானம் என்னும்) ஆதார நிலையில், உதிக்கும் செஞ் சூரியன் என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள, ஆடம்பரமான பிரமனும், அந்த ஆதாரத்தின் மேல் நிலையில் (மணி பூரகம் என்னும் ஆதார நிலையில் உள்ள) பூமியை உண்டவரும், உயிர்களைக் காக்கும் தொழிலைக் கொண்டவருமாகிய திருமாலும், யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) உள்ள ருத்திரனும், (இம்மூவரும்) தேடி நிற்கும், ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாய் (புருவ மத்தியில் உள்ள சதாசிவ மூர்த்தியும்) நடு நிலையில் வீற்றிருக்க, இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமும், சாஸ்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும், மேன்மை வாய்ந்த ஒளி கோடிக் கணக்காய் விளங்கும் (உனது) இடமாகக் கொண்டு, வீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதனே, வீர குரு மூர்த்தியே, எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக. விஷம் பொருந்திய கழுத்தை உடையவள், ஆடம்பரமுள்ள துர்க்கை, மூப்பு இல்லாதவள், பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள், ஆசையற்றவள், சுமங்கலி, எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள், எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள், துர்க்கைத் தாய், ஆதி நாயகி, அம்பிகை, எல்லாம் அறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன் அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி, காலனை அழித்தவள், பரிசுத்த தேவதைகள் யாவரிலும் தூயவள், முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப் பேசுபவள், கறுத்த நீல நிறக் கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், நித்ய கல்யாணி, காம சாஸ்திரம் கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள், சக்தி வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆராயப்படுபவள், அத்தகைய சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவர்களின் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 999 - பொதுப்பாடல்கள்
ராகம் - ....; தாளம் -

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன     தானன தந்தன தாத்தன ...... தனதான

போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி     னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான 
போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக     ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண 
ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட     ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென் 
ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி     யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே 
காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி     வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின் 
காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை     மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை 
சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு     மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே 
சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி     வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே.

தாமரைப் பூவில் வீற்றிருந்து அதை விட்டு நீங்காத, நான்கு வேதங்களையும் ஓதிய பிரமனாலும், கருட வாகனத்தை விரும்பிய திருமாலாலும் அறிவதற்கு அரிதான வகையில், தக்க சமயத்தில் (அவர்கள் இருவரும் வாதிட்டபோது), உயர்ந்து எழுந்த செவ்விய தீப்பிழம்பாக பெருத்த வானம் எல்லாம் நிறைவுற்று நின்ற நீங்காத புகழ் பெற்றவனாகிய அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன் உண்மை நெறியைத் தான் காணும் பொருட்டு, அன்பையும் இன்பத்தையும் ஊட்டிய சிறந்த குருநாதன் என்னும் வகையில் (உன்னைப்) போற்றி செய்ய, இருந்த உனது திருவடிகளை எனது நா எண்ணித் துதித்திட என்னுடைய ஆசை உன்னை எண்ணியபடியே உன் மேல் கவிகளைப் பாடும் இன்ப நிலையைப் பார்த்து அடியேனாகிய நானும் உன்னை அறிந்து போற்றும்படியான ஒரு நாளும் எனக்குக் கிட்டுமோ? காதை நெருக்குவது போல அதன் அருகில் சென்று பல சச்சரவுகளைச் செய்யும் கயல் மீன் போன்ற கண்ணாலும், கொவ்வைக் கனி போன்ற வாயிதழின் இனிய சுவையாலும் நிரம்ப அழகு பெற்ற குறப் பெண் வள்ளியின் கருமை நிறைந்த கூந்தலால், மலை போன்ற மார்பகங்களால், ஆடை அணிந்துள்ள இடுப்பினால், நெருங்கப் பொருந்தியுள்ள உன் காதோலையே (நான் உனக்கு அடிமை என்று) எழுதித் தந்த சாசனப் பத்திரம் என்று கூறி, ஐயோ பாவம் என்று சொல்லும்படியான நிலையை அடைந்து, பேச்சும் தடுமாற்றம் அடைந்து, மனமும் சோர்வு அடைந்து திரிந்தவனே, சமுத்திரம் அன்று எரிந்து கொந்தளிக்கும்படி கொடுமை வாய்ந்த சூரர்கள் மடிந்து சிதற, வலிய வேலாயுதத்தை அவர்கள் மார்பில் வேகமாகச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1000 - பொதுப்பாடல்கள்
ராகம் - சிம்மேந்திர மத்யமம் தாளம் - தி.ரத்ருவம் - 2 களை - 22 - எடுப்பு - /3/3/3 0

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன     தானன தந்தன தாத்தன ...... தனதான

வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி     லோசன அம்புக ளாற்செயல் ...... தடுமாறி 
மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு     வேளைபு குந்தப ராக்ரம ...... மதுபாடி 
நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி     னாலுல கங்களு மேத்திய ...... இருதாளில் 
நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம     நாடஅ ருந்தவம் வாய்ப்பது ...... மொருநாளே 
ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ     ராயிர வெம்பகு வாய்ப்பணி ...... கயிறாக 
ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு     ளாயனு மன்றெயில் தீப்பட ...... அதிபார 
வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய     வாழ்வென வஞ்சக ராக்ஷதர் ...... குலமாள 
வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்     வானுல குங்குடி யேற்றிய ...... பெருமாளே.

வேடர்களுடைய செழுமை வாய்ந்த தினைப் புனத்தைக் காவல் காத்து, (அங்கு) பரண் மீது இருந்த வள்ளிப்பிராட்டியாருடைய கண்கள் ஆகிய அம்புகள் பாய்வதால் செயல் தடுமாற்றம் அடைந்ததுபோல நடித்து, உடல் சோர்வு அடைந்து மனம் உருகி நின்று, பரிதபிக்கத் தக்க நிலையில் (கிழவேடம் பூண்டு) தினைப் புனத்திற்கு சிறந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்த திறமையைக் கவிகளில் அமைத்துப் புகழ்ந்து பாடி, உலகத்தோர் (உனது கருணையை) அறிந்து உய்யும்படி ஓலமிட்டு உரைக்கின்ற நாவல்ல புலவர்களைக் கட்டி வசீகரிக்கும், பதினான்கு உலகில் உள்ளோரும் போற்றும் உனது இரண்டு திருவடிகளில், மணம் கமழும் கடப்பமாலையை அணிந்த உன் திருவடிகளில், அன்புடன் வைத்துக் காக்கின்ற உனது திறமையை, நாடி நிற்க, அருமையான தவச் செயலால் அடியேனுக்கும் கூடும்படியான ஒரு நாள் கிட்டுமோ? பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து, ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து, இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமாலும், முன்பு, முப்புரங்களும் தீயில் அழிவதற்காக, அதிக கனமாக வடக்கே உள்ள பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த வீரனுமாகிய சிவபெருமானும், எங்களது சுமையைக் குறைத்த* செல்வமே என்று உன்னைத் துதிக்க, வஞ்சக அரக்கர்களின் கூட்டம் அழிய, இந்திரனின் கொடிய சிறையை நீக்கி அவனை விடுவித்து, அவன் ஊராகிய பான்னுலகத்தையும் மற்றும் செல்வங்களையும் முழுவதுமாக மீட்டுத் தந்து, அவனுடைய விண்ணுலகத்தில் குடி ஏற்றி வைத்த பெருமாளே. 
* திருமாலின் தொழிலாகிய காத்தல் தொழிலை தேவர்களைக் காத்ததால் முருகனே செய்தான்.சிவனின் அழித்தல் தொழிலை அரக்கர்களை அழித்து முருகனே செய்தான்.எனவே இருவரின் தொழில் பாரத்தையும் குறைத்தான்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.