LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருவகுப்பு-2. தேவேந்திர சங்க வகுப்பு

 

தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி 1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை 2
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்ததர அம்பிகை 3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி 4
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் 5
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் 6
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
ஏகாமபரை யிந்திரை மோகாங்கசு மங்கலை 7
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி 8
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் 9
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் 10
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு 11
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் 12
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் 13
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் 14
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் 15
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே 16

தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடுசாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி 1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறைதாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை 2
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளிததாமாங்குச மென்றிரு தாளாந்ததர அம்பிகை 3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடிதானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி 4
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிளநீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் 5
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் 6
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதலஏகாமபரை யிந்திரை மோகாங்கசு மங்கலை 7
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி 8
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினைகாலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் 9
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகதகாசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் 10
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழைகாதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு 11
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் 12
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் 13
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் 14
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமகலாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் 15
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே 16

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.