LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருவகுப்பு-4. திருவேளைக்காரன் வகுப்பு

 

ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் 1
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் 2
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் 3
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் 4
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம
ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும் 5
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு
ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும் 6
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை
யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும் 7
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்
ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும் 8
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்
யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும் 9
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை
யேறவிடு நற்கருணை யோடக் காரனும் 10
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி
யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும் 11
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி
ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும் 12
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை
யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும் 13
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும்
யாகமுநி வர்க்குரிய காவற் காரனும் 14
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும்
யானையள விற்றுவளும் ஆசைக் காரனும் 15
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை
யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும் 16
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர்
வாவியில்உ தித்தமுக மாயக் காரனும் 17
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு
மானும்அய னைக்கறுவு கோபக் காரனும் 18
வாழியென நித்தமற வாதுபர விற்சரண
வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும் 19
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்
மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும் 20
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும்
வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும் 21
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது
வாகைபுனை குக்குடப தாகைக் காரனும் 22
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும்
வானிலணு வுக்கணுவு பாயக் காரனும் 23
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம
காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும் 24
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை
மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும் 25
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை
வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும் 26
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
வேலையுற விட்டதனி வேலைக் காரனும் 27
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர்
வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும் 28
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல்
வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும் 29
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி
சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும் 30
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி
யாகுலம னத்தினொடு போம்விற் காரனும் 31
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு
மேதகு குறத்திதிரு வேளைக் காரனே. 32


ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியதுவாகநிகழ் பத்தசன வாரக் காரனும் 1
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமையனாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் 2
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் 3
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநுபூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் 4
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅமராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும் 5
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அருணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும் 6
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமையானவர் தொடுத்தகவி மாலைக் காரனும் 7
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும் 8
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும் 9
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலையேறவிடு நற்கருணை யோடக் காரனும் 10
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநியேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும் 11
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையிராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும் 12
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலையாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும் 13
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும்யாகமுநி வர்க்குரிய காவற் காரனும் 14
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும்யானையள விற்றுவளும் ஆசைக் காரனும் 15
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளையோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும் 16
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர்வாவியில்உ தித்தமுக மாயக் காரனும் 17
வாரணப திக்குதவு நாரணனு வக்குமருமானும்அய னைக்கறுவு கோபக் காரனும் 18
வாழியென நித்தமற வாதுபர விற்சரணவாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும் 19
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும் 20
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும்வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும் 21
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருதுவாகைபுனை குக்குடப தாகைக் காரனும் 22
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும்வானிலணு வுக்கணுவு பாயக் காரனும் 23
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படமகாடவியில் நிற்பதொர்ச காயக் காரனும் 24
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகைமீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும் 25
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனைவேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும் 26
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவவேலையுற விட்டதனி வேலைக் காரனும் 27
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர்வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும் 28
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல்வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும் 29
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்விசாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும் 30
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவியாகுலம னத்தினொடு போம்விற் காரனும் 31
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழுமேதகு குறத்திதிரு வேளைக் காரனே. 32

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.