|
||||||||
திருவாதிரை களி (thiruvathirakali) |
||||||||
தேவையானவை: பச்சரிசி- 2 கப் பயத்தம்பருப்பு- ஒரு கப் கடலைபருப்பு- 1/2 கப் தண்ணீர்- 6 கப் வெல்லம்- 2 1/2 கப் தேங்காய்- 1 கப் முந்திரிபருப்பு- 10 நெய்- 1/4 கப் ஏலக்காய்- 5 செய்முறை: 1.பச்சரிசி,பருப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணய் விடாமல் சிவக்க வறுத்து மிக்ஸீயில் மூன்றையும் சேர்த்து கரகரப்பாகஅரைத்துக்கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சிறிது கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தைப்போடவேண்டும். 3.வெல்லம் கரைந்தவுடன்தேங்காய் துருவலை போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் விடவேண்டும். 4.கொதித்தவுடன் அரைத்துவைத்த அரிசி பருப்புரவையை தூவிக்கொண்டே கிளறவும். 5.நன்றாக வெந்தவுடன் முந்திரிபருப்பை வறுத்துப்போட்டு மீதமுள்ள நெய்யையும் விட்டு ஏலக்காய் பொடியைியும் போட்டு நன்றாக கிளறி இறக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|