LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியத்தில் தாவரங்கள் - செல்வி பி.சாவித்திரி

உலகம் தழுவிய உயர்ந்த சிந்தனைகள் பொதுமையான சிந்தனைகள் வாழ்வியல் நெறிகள் வடித்து தமிழ் வளர்த்தனர் புலவர். ஆனால்,
அடிமைக்கனவுகளை அறுவடை செய்வதற்கு அட்சயப் பாத்திரத்தை அடகு வைத்த கதையாய் தேர்வில் தோற்றுக் கொண்டிருக்கிறது பாடபுத்தகம் இந்நிலை மாற வேண்டும். அதற்கு பாடமும் வாழ்வும் ஒன்றாக இருக்க வேண்டும். வெற்றி மாலை சூட்டுவதற்காக ஜெயதேவதை பூச்செடிளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உலகம் உணர வேண்டும்.
பூமி - வானம், இயற்கை - செயற்கை, அறிவியல் - வரலாறு, கலை-காலம், வாழ்க்கை - உணர்வு என்ற நிலையில் இலக்கணமும் இலக்கியமும் வாழ்க்கைக்கூறுகளை எடுத்து இயம்ப வேண்டும்.
ஐந்து பூதங்கள்

ஐந்து பொறிகள் உலகம் அனைத்திற்கும் பொது இலக்கணம் ஐந்து. நில அமைப்பு ஐந்து - தமிழுக்கே உரிய சிறப்பு ஆம் வாழ்வியல் நெறிகள் என்னும் போது மொழி அமைப்பு என வகைப்படுத்தும்போது தமிழுக்கே உரிய சிறப்பு பொருளதிகாரம் உணர்த்தும் தொல்காப்பியரின் ஐவகை நிலங்கள் பற்றிய செய்திகேளே!
தட்பவெப்பம் நில அமைப்பு மக்களின் வாழ்க்கை நெறி இவைகளின் அடிப்படையில் எச்செய்தியையும் விடாது சொல்லிச்செல்வது தொல்காப்பியர் தனித்தன்மை அத்தன்மைகளில் இயற்கையோடு இயைந்து மக்களின் வாழ்வில் பெருமளவு நன்மை€யை உண்டாக்குவது தாவரங்கள்.
பொதுவாக தாவரங்கள் என்னும்போது புல் செடி கொடி மரம் என்ற வகைகள் இடம்பெறுகின்றன.
உயிர்த்தன்மை உடையன அனைத்தும் நகரும் தன்மை உடையன என்னும் அடிப்படையில் தாவரங்கள் உணவுக்காக இடம் நகரும் தன்மையுடையன.
கீழ்நிலைத்தாவரங்கள் பாசிகள் ஆல்காக்கள் கசையிழை போன்றவை வேர் பிடித்ததற்காக நீர் நோக்கி நகருகின்றன. அதே போல மண் நோக்கி ஒளி நோக்கி தாவரங்கள் இயக்கம் அமைகின்றன.
அதேபோல நிறத்தின் அடிப்படையில் காலை மாலை எனப்பூக்கள் மலருகின்றன. பெரும்பாலும் வெந்நிறப்பூக்கள் காலையில் மலரும் மஞ்சள் நிறப்பூக்கள் மாலையில் மலரும் குறிப்பிட்ட திசை நோக்கி மலரும் பூக்களும் உண்டு.
உ.ம் சூரியகாந்தி பூ. இவை போல பல நுட்ப முறைகளைக் கண்டே தொல்காப்பியர் திணை ஒழுக்கத்தைச்சுட்டி அத்திணைக்குரிய மரம் பூ முதலியவற்றை கருப்பொருளில். அடுக்கிச்சொல்கிறார்.
''தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியோடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப''

தெய்வம் உணவு விலங்கு மரம் பறவை பறையென்னும் முழக்குக்கருவி தொழில் பண் (இசை) முதலியனவும் அத்தகைய பிறவும் கருப்பொருள் என்று கூறுவர். பிறவும் என்றதனால் பூவகையும் நீரும் கருப்பொருளாகக் கொள்ளப்படும்.
நல்லாசிரியிரின் இயல்பு கூறும் போது நன்னூல் ஆசிரியர் மலரின் சிறப்புப்பற்றி பேசுகிறார். ஏனெனில் தமிழர்வாழ்வில் எல்லா நிகழ்வுகளிலும் பூக்கள் முக்கிய இடம் பெறுகின்றன.
''மங்கலம் ஆகி இன்றியமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொளமெல்கி
பொழுதின் முகமலர் உடையது பூவே'' என்பார் பவணந்தி முனிவர். அத்தகைய சிறப்பு உடையதால்தான் பூ கருப்பொருளில் ஒன்றாயிருத்தல் வேண்டும்.
மலை காடு வயல் கடல் என்ற பகுப்பில் ஐந்திணை ஒழுக்கத்தை அமைத்துள்ள தொல்காப்பியர் மரங்ளையும் அவ்வாறே உரையாசிரியர்கள் வரிசைப்படுத்துகிறார்.
குறிஞ்சி : வேங்கையும் கோங்கும்
முல்லை : கொன்றை, குருந்து, புதல்
பாலை : பாலை, இருப்பை, கள்ளி, சூரை
நெய்தல் : புன்னை, கைதை
பொருளதிகாரம் புறத்மிணையியலில் கரந்தைத்துறைகள் பற்றி ஆசிரியர் கூறும் போது ''உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்'' எனப் பகைமன்னனது எண்ணத்தை உன்ன மரத்தோடு பொருத்திக் காண்கின்ற உன்னநிலையும் என்னும் போது உன்ன என்ற மரத்தைக் குறிப்பிடுகிறார்.
பொருளதிகாரம் மரபியலில் ஓரறிவுயுரின் சில சிறப்பு மரபுகள் என்னும் போது புறக் காழனவே புல்லலெனப்படுமே'' நூ86
புறவயிர்ப்பு உடையனவற்றை புல் என்று சொல்லுவர். அவை தெங்கு,. பனை, கமுகு, மூங்கில் என புலியூர் கேசிகன் உரை கூறுகிறார்.
''அகக் காழனவே மரனெனப்படுமே'' நூ87
உள்ளுறுதி உடையன மரமென்றும் கூறப்பெறும். அவ்வாறாயின் மரவகையின் உறுப்புகள்
''இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்
மரனொடு வரூஉம் கிளவு யென்ப'' - நூ 89.
இலை, முறி, தளிர்தோடு சினை, குழை, பூ, அரும்பு, நனை என்று கூறப்படுபவை எல்லாம் மரத்தின்கண் கவரும் உறுப்புச் சொற்களாம். இவைகள் மட்டுமன்றி இல்ல,. எகின் போன்ற மரப்பெயர்களும் தொல்காப்பியர் கூறிச்செல்லும் மரங்களாம், அத்திப்பூ, வேப்பம்பூ, பணம்பூ காந்தள் மலத், கொட்டி, தாமரை, செங்கழுநீர், மலர், வள்ளி என்று வரிசைப்படுத்தும் போது கொடி, செடி போன்றவற்றையும் நீர் வாழ்த்தாவரங்களையும் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுகிறார்.
முடிவுரை

மருந்தாக, உணவாக, அன்றாடம் பயன்தரு பொருளாக மரங்கள் பயன்படுகின்றன. அப்பயன்களை நாம் தொடர்ந்து பெற தொல்காப்பியர் காலம் முதல் காக்கப்படும் மரங்களை நாமும் காப்போம் நலம்பல பெறுவோம்.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural 3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.