LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF

வீடுகளில் கட்டப்படும் தோரணங்களில் உள்ள பண்பாடும் தத்துவங்களும்!

நமது கலாசாரத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை, பெரும்பாலும் உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும். நாம் காலங்காலமாகக் கடைபிடிக்கும் பல்வேறு பழக்கங்களுக்குப் பின்னால் அறிவியல் ரீதியான காரணங்கள் பல இருக்கும்.

அக்காலத்தில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுவதில்லை. மங்கல, அமங்கல நிகழ்வுகள் நடப்பதைக் குறிக்க வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டன. அவை கட்டப்பட்டிருக்கும் முறையை வைத்தே அந்த வீட்டில் என்ன நடக்கிறது எனக் கூறிவிடலாம்.

பொதுவாக அலங்காரத்துக்காகக் கட்டப்படும் தோரண இலைகள் காற்றைத் தூய்மைப்படுத்த உதவும். தென்னங் குருத்தோலை கொண்டு செய்யப்படும் தோரணங்கள் குருவிகள் போன்ற வடிவத்தில் கட்டப்படும்.

மாவிலைகளும் சில நேரங்களில் சேர்க்கப்படும். குருவி இறக்கை கீழ்நோக்கி    இருந்தால் மங்கல நிகழ்வு என்றும் அது  மேல்நோக்கி    இருந்தால் அமங்கல நிகழ்வு என்றும் வகைப்படுத்தப்பட்டது.

தென்னங் குருத்தோலை கொண்டு செய்யப்படும் தோரணங்களில்  குருவி இறக்கை கீழ்நோக்கி இருப்பின் அது மங்கலத்தோரணம்  என்று கொள்வர் ;இது நான்கு அல்லது ஐந்து குருவிகளைக் கொண்டு இருக்கும்.

நம் தென்னாட்டிலும் இலங்கையிலும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.நமது நாட்டில் நான்கு அல்லது ஐந்து குருவிகள் கொண்டு விளங்கும் ;

இலங்கையில் ஐந்து குருவிகளைக் கொண்டு விளங்கும்.அதற்குக் காரணமும் சொல்கிறார்கள்.மங்கலத் தோரணமாவது தென்னைமரத்தின் மஞ்சள் குருத்தோலைகளில் ஐந்து தளங்களுடன் இரு முனைகளும் நிலத்தைப் பார்க்குமாறு கட்டப்படவேண்டும்.இவை ஐந்து கன்மேந்தியங்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் குறிக்கும் என்றும்,கன்மேந்தியங்களாலும் ஞானேந்திரியங்களாலும் புவியில்
   இன்பத் துன்ப நிகழ்வுகளை அனுபவித்துக்கொண்டு   வாழ்ந்துகொண்டிருந்தாலும் இறைவனை நோக்கியே எமது [ ஆன்மாவின் ]     செயல்பாடுகள் அமைகின்றன என்பதைக்குறிக்கின்றன என்னும் தத்துவ விளக்கத்தைத் தருகிறார்கள்.மங்கலத் தோரணங்களிடையே மாவிலைகளையும் இணைப்பர் .

 அமங்கலத் தோரணம் மூன்று   குருவிகள் இறக்கை மேல்நோக்கி   கொண்டிருக்கும்.   அறம், பொருள், இன்பம்  அனுபவித்த ஆன்மா பூவுலகை விட்டு மேலுலக வாழ்வில் வீடுபேற்றை நோக்கி இருவினைகளுடன் சென்றுகொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது  என்னும் தத்துவ விளக்கத்தைத் தருகிறார்கள். .

மாவிலை கட்டும்போது அதன் காம்பினை முன்பக்கம் எடுத்துக் குத்துதல் வேண்டும் .கொத்தாகக் காட்டுதலும் நன்மை தரும் .அமங்கல நிகழ்வில் மாவிலை பயன்படுத்தல் கூடாது.

சான்று   மற்றும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் ==ஆகமச்  சித்திரங்கள் -- மூன்றாம் பாகம் ,பக்கம்--  ௯      ஆசிரியர் .பிரம்மஸ்ரீ முனைவர் சாம்ப சோமாஸ்கந்த குருஜி ,ஈழ நல்லூர் .

அந்தப்பக்கத்தினை அடியேன் இணைத்துள்ளேன்.

புகைப்படங்கள்==

௧ , ௨, ௩  .மங்கல நிகழ்வுத் தோரணம் .

௪.அமங்கல நிகழ்வுத்  தோரணம்.

௫ ,  மாவிலைத் தோரணம்.

௬.ஆகமச்  சித்திரங்கள் -- மூன்றாம் பாகம் ,பக்கம்--  ௯  [9]    ஆசிரியர் .பிரம்மஸ்ரீ முனைவர் சாம்ப சோமாஸ்கந்த குருஜி ,ஈழ நல்லூர் .


நன்றி : வீரமணி வீராசாமி

by Swathi   on 28 Feb 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குடலி குளுக்கை கூண்டு குடலி குளுக்கை கூண்டு
மஞ்சப்பை... மஞ்சப்பை...
அஞ்சலட்டை ... அஞ்சலட்டை ...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.