LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1279 - கற்பியல்

Next Kural >

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.
மணக்குடவர் உரை:
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற் கறிவித்து.) ( யானது தெளிவித்த வழித் தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிந்து செல்ல நான் இங்கிருப்பின் இவை நில்லா வென்னுங் குறிப்பில்தன் தோட்கடகங்களை நோக்கி ; மெல் தோளும் நோக்கி - அதற் கேதுவாக இவை மெலியு மென்னுங் குறிப்பில் தன் மெல்லிய தோள்களையும் நோக்கி ; அடி நோக்கி - அதன் பின் , இவ்விரண்டும் நிகழாமல் நீங்கள் காதலருடன் நடந்து சென்று காத்தல் வேண்டு மென்னுங் குறிப்பில் தன் பாதங்களையும் நோக்கி ; அஃது ஆண்டு அவள் செய்தது-இங்ஙனம் உடன்போக்குக் குறித்த அச்செயலையே அன்று அவள் செய்தாள் . பிரிவுக் குறிப் புண்டாயின் செலவழுங்குவித்தல் இதன் பயனாம் .
கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.
சாலமன் பாப்பையா உரை:
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.
Translation
She viewed her tender arms, she viewed the armlets from them slid; She viewed her feet: all this the lady did.
Explanation
She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).
Transliteration
Thotinokki Mendholum Nokki Atinokki Aqdhaan Tavalsey Thadhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >