LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அகநானூறு

துடி - நுண் பொருள் விளக்கம் - பேராசிரியர் செ.வைத்தியலிங்கன்

தமிழில் "துடி' என்பதற்கு, உடுக்கை, உடுக்கு, சிரந்தை எனப் புலவர்கள் பல இடங்களில் பொருள் கூறியுள்ளனர். "துடி' என்பது தோலிசைக் கருவி; அந்தத் தோற்கருவிக்கு முற்காலத்தில் பல நோக்கங்களில் சிறப்பிடம் தந்துள்ளனர்.
"துடி' மரத்தால் செய்யப்பட்டு, அதன் இருபக்க வட்டக் கண்களும் தோலால் போர்த்தப்பட்டு, தோல் வாரால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அதன் இடைப்பகுதி சுருங்கியிருப்பதால், "இடை சுருங்கிய பறை' என்றும் விளக்கியுள்ளனர். அழகிய மகளிரை வருணிக்கையில், அவர்களின் இடை-இடுப்பு-நளினமாகச் சுருங்கி அமைதல் பற்றி "துடியிடை மகளிர்' எனப் புலவர்கள் இலக்கியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.
"துடி'யடிக்கையில் அதன் அசைகிற தோற்றம், பெண்யானை (பிடி) அசைகிற காலின் தோற்றத்துக்கு உவமையாகப் புலவர்கள் வருணித்துள்ளனர். இதை,
""துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த' (புற.369)
"துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீர்' (கலி.11:6)
எனவரும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம்.
கடிய ஓசையைக் கொண்டது துடி; அக்கால வழிபாட்டிலே அது இடம்பெறும். எடுத்துக்காட்டாக "நடுகல்' வழிபாட்டிலே மயிற்பீலி சூட்டிப் பலிகொடுத்ததைப் பற்றி அகநானூறு,
""நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்'' (35:8,9)
எனக் கூறும். காலப்போக்கில் தமிழ்நாட்டுக் கோயில் வழிபாடு நிகழும் காலத்தில் இசைக்கருவிகள் பெரிதும் இடம்பெற்றன. "நிருத்தம்' என்பது இக்காலத்தில் செவ்வியல் ஆடலாக "கிளாசிக் டான்ஸ்' எனப் போற்றப்படுகிறது. முற்காலத்தில் ஆடற்கலையில் "துடி' இடம்பெற்றுள்ளது. இதைப் பரிபாடல்,
""துடியின் அடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி
அருநறா மகிழ்தட்ப ஆடுவாள்'' (21:19-20) எனவும்,
""வாளி புரள்பவை போலும்
துடிச் சீர்க்குத்
தோளூழ பெயர்ப்பவள்
கண்'' (21:64-65)
எனவும் வரும். தோலிசைக் கருவியாக "துடி' கொட்டுபவனைத் "துடியன்' என்றனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு, மிகத் தொன்மையுடைய பழங்குடி மக்களைக் குறிப்பிடுகையில்,
""துடியன் பாணன் பறையன் கடம்பனென்(று)
இந்நான் கல்லது குடியுமில்லை'' (335:7-8)
எனக் கூறுவதிலிருந்து "துடியன்' சிறப்பிடம் பெறுதலை அறியலாம். துடியன் தன் பல பணிகளுக்கிடையே, துடிகொட்டி மக்களை விடியலில் உறக்கத்திலிருந்து விழிப்படையச் செய்வதாகும். இவ்வாறான குறிப்புகளும், "ஆடல்வல்லான்' தன் திருக்கரத்தில் ஏந்தியுள்ள "துடி' எனும் இசைக்கருவிக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கலாம். நடராஜப்பெருமான் ஏந்தியுள்ள "துடி' மிகப் பலவான சிந்தனை அலைகளை எழுப்பவல்லது.
ஆடல்வல்லானும் துடியும்:
சைவ சமயச் சான்றோர்கள் நடராஜ மூர்த்தியை "ஆனந்த ரூபம்' எனக் கண்டு காட்டுவர். தில்லை அம்பலவன் ஆனந்தத் திருக்கூத்தை இயற்றுகையில் வலத்திருக்கரத்தில் அனலும், இடத்திருக்கரத்தில் துடியும் கொண்டு காட்சியளிப்பான்; இதை மனவாசகங்கடந்தார் என்ற சிவஞானி தம் "உண்மை விளக்கம்' எனும் மெய்கண்ட சாத்திர நூலில்,
""தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்'' (35)
எனவரும் வெண்பாவால் காட்டியருள்கிறார். ஆடல்வல்லானுக்கு இது ஊன நடனம். இதனில் அவனுக்கு அமைந்த ஐந்தொழில்களுள் "படைத்தல்' என்பதைக் குறிக்க "துடி' எனும் உடுக்கை கூறப்படுகிறது. திருவைந்தெழுத்தினையே தில்லையாகிய வான் தலத்தில் ஆனந்த நடராஜப்பெருமாள் தன் திருமேனியாகக் கொண்டருள்கிறான் எனும் தத்துவத்தை,
""சேர்க்கும் துடி "சி'கரம் சிக்கன "வா' வீசுகரம்'' (33)
எனவரும் வெண்பாவால் உணரலாம். இங்கு "துடி' எனும் "சி'கரமே சிகரமாக உணரத்தக்கது; அதாவது, சூக்குமத் திருவைந்தெழுத்தில் முதல் எழுத்தாகச் "சி'கரம் (துடி) அமைந்துள்ளமை போற்றுதலுக்குரியது. மேலும் துடி, சிவசக்தியாக-நாதவிந்துத் தத்துவமாக அமைந்துள்ளமையைக் காணலாம்.
"துடி' விளைவிக்கும் சிறப்பு நோக்கு:
அண்டவெளிக்கு அப்பால்-விண் மண்டலத்துக்கு அப்பால்-வெட்டவெளியில் அசைவின்றியிருந்த பரம்பொருள், உலக உய்திக்காக வான்தலமாகிய தில்லையில் ஆடல்வல்லானாக திருக்கூத்தியற்றி அருள்புரியத் தொடங்கியுள்ளான். இது சமய ஞானியரும் சித்தர்களும் யோகியரும் உணர்ந்து புலப்படுத்திய தத்துவம். இந்தத் தத்துவத்தின் குறியீடாகத் "துடி' விளங்கி வருகிறது. அதாவது, அசைதலை-இயக்கத்தை-உணர்த்தும் நாதசக்தியின் அடையாளமாக அமைந்துள்ளது. இதற்கேற்ப தமிழ் இலக்கணமும் கைகொடுக்கிறது.
"துடி' என்பது துடித்தல்-துடிப்பு எனும் தொழிற்பெயரை உணர்த்தும் முதனிலைத் தொழிற்பெயராகக் கொள்ளுதல் வேண்டும். வான், வளி, தீ, நீர், நிலம் ஆகிய அனைத்தும் அசைதலாகிய பரிணாமத் துடிப்பு உள்ளது.
சமய ஞானமாகவும் தோத்திரமாகவும் சாத்திரமாகவும் அமைந்துள்ளவற்றை மக்களுக்கு உணரச்செய்யும் திருவருட் குறியீடாகவே "துடி' உள்ளது. ஆடல்வல்லானின் திருக்கூத்தில் - திருக்கரத்தில் இடம்பெற்றுள்ளதால்தான் "துடி'க்கு இத்தகைய சிறப்பு.

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.