LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

இளநரையை போக.. சில பயனுள்ள குறிப்புகள் !!

இன்றைய காலகட்டத்தில் நரை முடி பிரச்சனை என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, சிறுவர்களுக்கும் கூட இருக்கிறது. 


இளம் வயதிலேயே நரை முடி ஏற்படுவதற்கு சுற்றுசூழல் மாசு, உணவு முறை, அதிகப்படியான டென்ஷன் ஆகியவை முக்கியமான காரணங்களாகும்.  


நரை முடியை விரட்ட சில மருத்துவ குறிப்புகள் இதோ, 


நரை முடியை விரட்ட கறிவேப்பிலைதான் மிகச் சிறந்த மருந்து.  


நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக் கலக்குங்கள். இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவந்தால், இளநரை நெருங்காது.


பெரும்பாலான இளைஞர்கள், நரையை மறைக்க, செயற்கையான கலரிங் செய்துகொள்கின்றனர். தொடர்ந்து தலைமுடிக்கு கலரிங் செய்யும்போது, தலைமுடி ஆரோக்கியம் இழந்து, உடைந்து, அதன் தரம் குறைகிறது. ரசாயனம் கலந்த கலரிங் செய்யும்போது, தலை முடி பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கையான பழங்கள், காய்கறிகளில் தலைக்கு கலரிங் செய்துகொள்ளலாம்.


இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழம், ஆம்லா எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.


நெல்லிக்காய், கறிவேப்பிலை, பிஞ்சு கடுக்காய் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து இடித்துக்கொள்ளுங்கள். இவை மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இந்த எண்ணெயை லேசாகச் சூடு செய்து, தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு அலசலாம். இளநரையும் இருந்த இடம் தெரியாது. முடியும் கறுப்பாகும்.


100 கிராம் பிஞ்சுக் கடுக்காய்த்தூளை காஃபி பில்டரில் போட்டு, 300 எம்.எல், கொதிக்கும் நீரை ஊற்றவும். டிகாஷன் சொட்டுச் சொட்டாக இறங்க வேண்டும். தலையில் ஆலிவ் ஆயிலைத் தடவி வாரிக்கொள்ளவும். பிறகு, தலையின் சுற்றளவுக்கு ஏற்ப தடிமனான துணியை டிகாஷனில் முக்கி தலையில் வைத்துக் கட்டவும். 2 அல்லது 3 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு அலசவும். அதிக நரை இருந்தால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்தால், நரை முடி கறுப்பாகும்.


நெல்லி முள்ளி, கறிவேப்பிலை, வேப்பங்கொட்டை, பிஞ்சு கடுக்காய், அவுரி விதை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து நைஸாகப் பொடிக்கவும். இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெயிலில் வைத்து எடுக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவிவந்தால், இளநரை மறைந்து, கருகருப்பாக முடி வளரும்.  

by Swathi   on 28 Nov 2014  26 Comments
Tags: இளநரை கருப்பாக   இளநரை நீங்க   இளநரை போக   Ila Narai Neenga   Preventing While Hair        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா?
இளநரையை போக.. சில பயனுள்ள குறிப்புகள் !! இளநரையை போக.. சில பயனுள்ள குறிப்புகள் !!
தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !! தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !!
தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !! தலை முடி பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் !!
கருத்துகள்
01-Aug-2018 05:32:23 இந்து said : Report Abuse
எனக்கு நரை முடி கருப்பாக என்ன பண்ணலாம்
 
09-Oct-2017 18:34:59 Navaneethakrishnan said : Report Abuse
சார் ஏஜ் 23 எனக்கு இளம் நரை அதிகமா இருக்கு சரி செய்ய ஒரு வலி சொல்லுங்க சார்.....
 
25-Jun-2017 13:59:10 velu said : Report Abuse
சார் என் வயது 23 எனக்கு மீசை மற்றும் தாடி நரைத்து இருக்கு இது நீங்கி மீண்டும் கருப்பாக வளர என்ன செய்ய வேண்டும்
 
12-Jun-2017 10:59:43 karthika said : Report Abuse
சார் எனக்கு வயசு 23 எனக்கு இப்போவே நிறைய வெள்ளை முடி வந்துடுச்சு .அத போக்க வலி சொல்லுங்க
 
19-Mar-2017 11:05:34 vijay said : Report Abuse
I am 19 enakku maximum narai mudi irukka any solution
 
09-Mar-2017 23:30:22 ஆனந்தvel said : Report Abuse
yanakku mudi white akidichi athanalal sollungka
 
18-Jan-2017 02:16:10 mahasankar said : Report Abuse
எனக்கு 19 வயது ஆகுது எனக்கு மீசை தாடி இன்னும் வளரவில்லை எனக்கு நரைத்த முடி அதிகமாக இருக்குது இதை சரி செய்ய வைத்தியம் சொல்லுங்கள் சார்
 
19-Sep-2016 20:41:39 Mahesh said : Report Abuse
சார்/மேடம் 25 ஏஜ் மீ சோ நாரி முடி சைடுல இருக்கு யானா பண்றது போக எவளோ நாலு ஆகும் சொல்லுக ப்ளஸ்
 
07-May-2016 00:33:35 nagaraj said : Report Abuse
my age is 23. my problem for thadiyel vellai mudi 3 eruku how to clear sir my fatheruku kuda eruku so athanala varuma age 43 so solution sir
 
15-Mar-2016 22:13:55 M.Vinoth Kumar said : Report Abuse
எனக்கு 23 வயது ஆனால் இன்னும் மீசை தாடி சரியாக வளரவில்லை .........நன்றாக வளர வழி சொல்லுங்கள்
 
06-Mar-2016 05:00:45 kaveri.m said : Report Abuse
Romba thanks etha na try pani pakura
 
26-Feb-2016 09:49:28 manimozhi said : Thank you
எனக்கு 19 வயதாகிறது...எனக்கு முடி மிகவும் அதிகமா நரைத்து விட்டது ...எப்படியாவது உதவுங்கள்
 
21-Feb-2016 23:43:40 saravanan said : Report Abuse
சார் எனக்கு வயது 20 ஆகுது ... இன்னும் மீசை வளரல... எதாவது டிப்ஸ் சொல்லுங்க ...ப்ளீஸ்...
 
04-Dec-2015 06:24:36 kowsalya said : Report Abuse
tips are super
 
04-Dec-2015 02:16:00 Ashok said : Report Abuse
How save this details...... There is any option to save this details?????
 
04-Dec-2015 02:15:06 Ashok said : Report Abuse
How save this details...... There is any option to save this details?????
 
24-Nov-2015 21:19:11 AYYANAR said : Report Abuse
எல்லோருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
 
23-May-2015 03:46:41 kanagaraju said : Report Abuse
good
 
24-Apr-2015 20:09:11 சசி said : Report Abuse
நன்றாக உள்ளது
 
30-Mar-2015 05:46:51 kaviya said : Report Abuse
very good tips
 
30-Mar-2015 05:46:27 kaviya said : Report Abuse
very good tips
 
18-Mar-2015 05:26:26 விவேக் said : Report Abuse
நல்லா இருக்கு இந்த டிப்ஸ். அனைவர்க்கும் பயனுள்ளதாக இது இருக்கும். நன்றி. வணக்கம்.
 
02-Mar-2015 15:50:15 ramesh said : Report Abuse
Romba thanks neenga sonnada try chairom
 
17-Jan-2015 02:48:36 afrose said : Report Abuse
yanaku narai mudi vuladu
 
09-Dec-2014 04:36:40 Jai S said : Report Abuse
that is i cannot copy the text என்னால் இந்த எழுத்துக்களை copy செய்ய இயலவில்லை உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
 
09-Dec-2014 04:32:42 சைஸ் said : Report Abuse
என்னால் இந்த பக்கங்களின் கருத்துகளை copy செய்ய முடியவில்லை ஏனென்றால் mouse ன் வலது பொத்தான் ஐ உபயோக படுத்த முடியவில்லை. can you enable this option please or what can i do டு save this details help me please நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.