LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

TNF 48 தேசிய மாநாட்டு விழா

'ஈதல்- குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

-எமது நோக்கம்- TNF 48

 

ஒருவருக்கு புகழ் என்பது கல்வியால் வரலாம்.

வீரத்தால் பெற்றிடலாம்.

செல்வத்தால் புகழை அடையலாம்.

பதவியால் வந்திடலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட 

ஈகையால் வரும் புகழ் மட்டுமே சிறந்ததாக கருதப்படும்.

 

ஆதலால் பசிப்பிணி போக்கும் மருத்துவனாக வாழ்தலே ஒருவருக்குப் பெருமை தருவதாக இருக்கும். நாம் உயிர் வாழ்வதற்கான பலனைப் பெற்றவர்களாக அப்போதுதான் கருதப்படும்.ஆதலால் வறியவர்க்கு ஈந்து புகழ் பட வாழுங்கள் என்கிறார் வள்ளுவர்.

முருகனுக்கும் அவ்வையாருக்கும் நடந்த ஓர் அழகான,அர்த்தமுள்ள உரையாடல் தமிழர்களாகிய நாம் அறிந்ததே,உலகறிந்ததே! 

உலகில் எது உயர்ந்தது என முருகன் கேட்க அவ்வை கூறிய பதில்கள் நமக்கு வாழ்க்கைப் பாடம் அல்லவோ!

மனிதராய் பிறத்தலே அரிது, அதிலும் எவ்வித உடற்குறைகளும் இல்லாது பிறப்பது மிக அரிது என சிறந்த சொல்லாடல்களில் விளக்கி இருப்பார். எக்குறையும் இல்லாமல் நாம் பிறந்துள்ளோம்,சிறப்பு! அதனினும் சிறப்பு யாது? நம் கண் முன்னே அக்குறைகளுடன் தென்படும் மனிதர்களை ஆதரிப்பது தான். 

இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 48 வருடங்களாக ஒப்பற்ற சீரிய பணியாற்றி வரும் 'தமிழ்நாடு அறக்கட்டளை' TNF-Tamil Nadu Foundation 48, இவ்வருடம் எக்குறைகள் இல்லாது பிறக்க வேண்டுமோ, அக்குறைகளுடன் பிறந்து உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள ஏழை எளிய மாணவ,மாணவியருக்கு உதவ இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் அக்குழந்தைகளுக்கான பள்ளிகள் எங்குள்ளதோ அங்கு உதவ  நிதியுதவி திரட்டி கொடுக்கவிருக்கிறார்கள். 

TNF இன் கல்வி முயற்சியான "ABC திட்டம்" மிக அருமையான ஒன்று. இது ஆறாம் வகுப்பிலிருந்து உயர்படிப்பு வரை அதாவது அவர்களின் விருப்பமான கல்லூரிப் படிப்பு வரை நிதிஉதவும் திட்டம். இந்த ஏபிசி திட்டத்தை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள ஒரே வெளி நிறுவனம் TNF மட்டுமே. தமிழ்நாட்டின் ஏழ்மையான குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உதவ விரும்பினால் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும்,வேலை நேரங்களிலும் அவர்களின் பள்ளி நேரங்களில் முறையாக செயல்படும் இதனை தாராளமாக அணுகலாம். 

மண் வாசனை (மாவட்ட அறக்கட்டளை நிதி) 

மண் வாசனை" என்பது 1974 இல் TNF உருவானதில் இருந்து மிகப்பெரிய நிதி திரட்டல் மற்றும் மூலதனத் திட்டமாகும். இந்த நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி மட்டுமே அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் TNF இன் கல்வி (ABC திட்டங்கள்) மற்றும் மனிதாபிமான திட்டங்களை விரிவுபடுத்தவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும். 2018 ஆம் ஆண்டில் TNF அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட "மண் வாசனை" முயற்சியின் குறிக்கோள், TNF ன் இந்நற்காரியங்கள் எவ்வித தடங்கலும் இன்றி மாநிலம் முழுவதும் தொடர்ந்து இருப்பதற்காக 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட TNF USA வாரியம் வழங்கும் திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்வதாகும்.

ஏபிசி திட்டமானது: 

வறுமை நிலையில் உள்ள கிராமப்புற மாணவர்களின் தர அளவிலான தேர்ச்சியை மேம்படுத்துவதாகும். இந்த முன்னெடுப்பின் செயல்கள் திறம்பட இருந்ததின் அடிப்படையில்,TNF ஏற்றுக்கொள்ளப்பட்ட பள்ளிகளில், கல்வி ரீதியாக சவாலானவர்கள் முதல் அதிக லட்சியம் கொண்ட மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ABC திட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 89 அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏபிசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 47,147 மாணவர்களை வளப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் பின்பற்றக்கூடிய ஒரு தனித்துவமான, நிலையான மற்றும் செலவு குறைந்த மாநில அளவிலான முயற்சியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

A – தரத்தை உயர்த்துதல்-கிரேடு நிலை தேர்ச்சியை அடைதல்- 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மெதுவாகக் கற்பவர்களை மேம்படுத்துதல்

பி - மன உறுதியை உயர்த்துதல்- 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு தயாரிப்பு உட்பட அதற்கான திறன் பயிற்சி

சி - உயர் கல்வி விருப்பங்களை நோக்கிய பயணம்- கல்லூரி சுற்றுப்பயணம், உதவித்தொகை, நீட் தயாரிப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான வேலைவாய்ப்பு.

"TNF 48 தேசிய மாநாட்டு விழா"

"வறியார்க்கொன்று ஈவதே ஈகை" எனும் திருக்குறளின்படி இதனை மேலும் சுவாரசியமாக நடத்தி அனைவரையும் மகிழ்விக்கவும் நிறைய திட்டங்கள் நடந்து வருகின்றது. அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய நிகழ்ச்சிகளுடன் அதே நேரம் இச்சேவைக்கு வேண்டிய நிதியின் இலக்கை அடைய பணம் திரட்ட வேண்டிய நோக்குடனும் செயல்பட்டு வருகின்றனர். அதற்காக பலரும் உழைத்து வருகின்றனர். ஒவ்வொரு அமைப்பிலும் சிறு குழுக்களாக இணைந்து ஒருங்கிணைத்து வருகின்றனர்.அதற்கான ஓர் சிறப்பு நிகழ்வுகள் "TNF 48 தேசிய மாநாட்டு விழா", வரும் மே மாதம் 27,28 மற்றும் 29 தேதிகளில் டல்லாஸில் நடக்க உள்ளது. 

 

அந்த மூன்று நாட்கள்:

மே 27-வெள்ளிக்கிழமை:

ATEA -American Tamil Entrepreneurs Association அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம், இவர்கள் TNF உடன் இணைந்து டல்லாஸில் ஓர் புதிய அத்தியாயம்/தொடக்கத்தை அமைக்கப்போகிறார்கள். சிறு தொழில்,பெரும் தொழில் என தொழில் முனைவோர் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

மே 28-சனிக்கிழமை: 

தமிழ்நாடு அறக்கட்டளையின் செயல்பாடுகளைத் துவக்க முதலில் குத்துவிளக்கேற்றி துவங்கப்படும். பின் திருமதி சுதா ரகுநாதனின் இசை கச்சேரி. அதனைத் தொடர்ந்து பரதநாட்டியம் மற்றும் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ஆரம்பம். தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்டம்,மயிலாட்டம்,பாம்பாட்டம்,கரகாட்டம்,காவடி போன்ற எட்டு விதமான நடனங்கள் நடைபெற இருக்கிறது. பின்னர் அறக்கட்டளையின் நிர்வாக குழுவின் அறிக்கை விவரங்கள் அறிவிக்கப்படும். தொடர்ந்து நாடகம்,டல்லாஸின் தமிழ்ப்பள்ளிகளின் குழந்தைகளின் நடனங்கள் என குதூகலமான பல நிகழ்வுகள் நடைபெறும். தொடர்ந்து 'நீயா-நானா' புகழ் கோபிநாத்தின் நிகழ்வு. மாலையில் 'இயக்கம்' நடனக் குழுவினரின் அற்புதமான நிகழ்ச்சி உள்ளது. இது பிராட்வே ஸ்டைலில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி. அன்றின் மற்றொரு சிறப்பு- அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் 'மகாபலிபுரம்' கலைக்கோவில் பற்றிய சிறப்புகளை அக்குழுவினர் பேச உள்ளனர்.

மே 29 -ஞாயிறு:

இன்று இம்மாநாட்டின் நோக்கமும்,வரவு-செலவுகளும் பற்றிய பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும். பின் தமிழ்ச்சங்கத்தின் சிலம்பம்,பறையும்-பரதமும், தமிழ் கலைகள் கொண்ட நிகழ்வும், திரு.நா.கணேசன் அவர்களின் 'தமிழ் இலக்கியத்தில் அறம்' எனும் தலைப்பில் உரையும், திரு.ஞானசம்பந்தம் அவர்களின் தலைமையில் 'இலக்கியமும் நகைச்சுவையும்' எனும் கலகலப்பான நிகழ்வும், தொடர்ந்து ஓர் மிகப்பெரிய அணிவகுப்பும் நடைபெற உள்ளது.அதில் பாரம்பரிய கலைகளும்,கும்மியும் உண்டு. இரவு பாடகி சித்ரா,சத்யப்ரகாஷ் பங்கேற்கும் லைட் மியூசிக். இசை இரவோடும் விருந்தோடும் இம்மூன்று நாட்கள் நிகழ்வுகள் நிறைவுபெறும். 

இதன் அனைத்து விவரங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் வலைத்தளத்தில் சென்று அறியலாம்.  


https://convention.tnfusa.org/

மேலும் இதனைப் படிக்கும் நல்லுள்ளங்களான தாங்களும் ஈகையின் அர்த்தத்தை தங்கள் நிதியுதவியுடன் காட்ட TNF  இன் வலைதளத்தில் விவரங்கள் உள்ளன. காணலாம்.

-ஷீலா ரமணன் for TNF Dallas

by Swathi   on 17 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.