LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு 6 லட்சம் பேர் எழுதினர்!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பதவியில் 1199 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடந்த தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 பதவியில் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி, சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி, வேலை வாய்ப்புதுறை இளநிலை அதிகாரி, சிறைத்துறை பயிற்சி அதிகாரி, தொழில்துறை உதவி ஆய்வாளர், சப்-ரிஜிஸ்டிரார்(கிரேடு 2), நகராட்சி ஆணையர்(கிரேடு 2), உதவி பிரிவு அதிகாரி(சட்டத்துறை), உதவி பிரிவு அதிகாரி(நிதித்துறை), தணிக்கை ஆய்வாளர்(இந்து சமய அறநிலையத்துறை), கைத்தறி துறை இன்ஸ்பெக்டர், மூத்த ஆய்வாளர்(கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 23 துறைகளில் காலியாக உள்ள 1,199 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 9ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதில், 6 லட்சத்து 35 ஆயிரத்து 212 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

8242 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இத்தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 116 மையங்களில் 2268 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு பணியில் 39,188 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

 சென்னையில் மட்டும் 247 மையங்களில் 64,309 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வை தமிழில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 863 பேரும், ஆங்கிலத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.  சென்னையைப் பொறுத்தவரை மயிலாப்பூர், அண்ணாநகர், எழும்பூர், பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் தேர்வுகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 8 மணி முதலே தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கூடத்திற்கு வந்து இருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுதச் சென்ற நேரத்தில் பெற்றோரிடம் தங்கள் குழந்தையை ஒப்படைத்து சென்றனர்.

தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வுக் கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க டி.என்.பி..எஸ்.சி. அதிகாரிகள் 254 பறக்கும் படையினர் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். கண்காணிப்பு பணியில் 247 முதன்மை கண்காணிப்பாளர்களும், 3230 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். 

மாநிலம் முழுவதும் பதட்டமான 11 இடங்களில்  சிசிடிவி கேமரா மூலம் தேர்வு கண்காணிக்கப்பட்டது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வுகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. 

இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கப்படும். சாதாரணமாக ஒரு பதவிக்கு குறைந்தபட்சம் 50 பேர் தான் போட்டியிடுவார்கள். ஆனால், குரூப் 2 தேர்வில் 1 பதவிக்கு 500 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பதவியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. 

குரூப் 2 தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், “தேர்வில் பொது அறிவியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தது. நடப்பு நிகழ்வில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. இதே போல பொது தமிழ் தேர்வும் எளிதாக இருந்தது. இதனால், எளிதாக தேர்வு எழுத முடிந்தது “ என்றனர்.

by Mani Bharathi   on 12 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...? எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.