LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- நரம்பு தளர்ச்சி (Neurasthenia)

மூளை நரம்பு பாதிப்பைப் போக்க - ஆயுர்வேத மருத்துவம் !

மூளைப் பகுதியிலிருந்து வெளிப்படும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால்  நீண்டகாலமாக அவதிப்படுபவர்களுக்கு அதிலிருந்து விடுபட சற்று தாமதமாகும்.நமது உடம்பில் சுமார் 107 மர்மஸ்தானங்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. அவற்றில் மூளை, இதயம், சிறுநீர்ப்பை ஆகிய பகுதிகள் முக்கியமான மர்ம ஸ்தானங்களாகும். இந்த மர்ம ஸ்தானபகுதிகளில் எளிதாக நோய் ஏற்படுவதில்லை. ஏற்பட்டால் அவை மிகுந்த காலத்திற்கு பிறகே சரிசெய்ய இயலும்.

மனிதனுக்கு தலையில் தான் வேர் உள்ளது என்று கூறப்படுகிறது.வாஸ்தவத்தில் மனிதன் தலைகீழாக இருக்கிறான். மரங்கள் நேராக இருக்கின்றன. செடியின் வேரில் விடப்படும் நீரை உடனடியாக அதன்  உச்சியிலுள்ள கிளை நுனி வரை எடுத்துச் செல்கிறது. அது போலவே மனிதனின் தலை உச்சியில் வைக்கப்படும் வீர்யமிக்க மூலிகைத் தைலத்தின் வீர்யமானது ஒன்றரை நொடியில் அதிலுள்ள தோலின் மேல்பரப்பில் பரவுகிறது. அதற்கு அடுத்த 2 நொடிகளில் உள் தோலில் ஊடுருவி விடுகிறது. அடுத்த இரண்டரை நொடிகளில் ரத்தத்தில் பரவி விடும். தசைகளை அடுத்த மூன்று நொடியிலும், அடுத்த நான்கு  நொடிகளில் பரவி நரம்புப் பகுதிகளுக்குள்ளும் சென்று நெய்ப்பும் மென்மையும் வறட்சி நீக்குதலும் தடை நீக்குதலும் செய்வதால் மூளை நரம்புகள் நெகிழ்ச்சியும் விறைப்பின்மையும் பெறுகின்றன.

பல காலம் இருண்டிருக்கும் ஓர் அறையில் ஒரு விளக்கை எடுத்துச் சென்றால் அங்கு ஒளி சிறிது சிறிதாகப் பரவுவதில்லை. உடனடியாக அந்த அறையிலுள்ள பொருட்களை நம்மால் காண முடிகிறது. அது போலவே மூலிகைத் தைலத்தின் பல குணச் சிறப்புகளும் பரவிவிடும். மேல் குறிப்பிட்டது ஒரு பொது நேர அளவு. உடல்நிலை சாதகமாக இருந்தால் இதைவிட விரைவாகவே பரவலாம். எதிரிடையானால் தாமதமும் ஆகலாம்.தலைமுடியை நன்கு பிரித்துவிட்டு, இரும்புக் கரண்டியில் சூடாக்கிய சுத்தபலாதைலம் அல்லது க்ஷீரபலா தைலத்தை பஞ்சில் நனைத்து உச்சந்தலையில் ஊற விடவும். இதே தைலத்தை தாடைப் பகுதியிலும், கழுத்து, பிடறிப் பகுதியிலும் தேய்த்து விடவும். நான்கைந்து பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய சூடான பாலிலிருந்து வெளிப்படும் ஆவியை முகத்தில் படும்படி காட்டவும். கண்களை நந்தியாவட்டைப் பூவினாலோ, முருங்கைப் பூவினாலோ மறைத்துக் கொள்ளவும்.

உள் மருந்தாகத் தனதநயனாதி கஷாயமும் க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்தும் சாப்பிட உகந்தது. 15 மிலி கஷாயத்தில் 60 மிலி சூடான தண்ணீர் கலந்து 10 சொட்டு க்ஷீரபலா கலந்து காளை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். தசமூலரஸாயனம் எனும் லேஹ்யத்தை 5 கிராம் (1 ஸ்புன்) இரவில் நக்கிச் சாப்பிடவும்.உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை ஏற்றவை. அரிசி, கோதுமை, உளுந்து, பால், நெய், தயிர், வெண்ணெய், வாழைப்பழம், இனிப்பு மாதுளை, திராட்சை போன்ற உடலுக்கு நெய்ப்புத் தருபவை உங்களுக்குச் சாப்பிட நல்லது. சுண்டைக்காய், பாகற்காய், வாழைக்காய் தவிர்க்கவும். அதிக அசதி தரும் வேலைகளும், இரவில் கண்விழித்தலும் நல்லதல்ல. குளிர்ந்த தண்ணீரில் தலை குளிக்கக் கூடாது தலைக்கு எண்ணெய்க் குளியல் முடிந்ததும் ராஸனாதி சூரணத்தை உச்சந்தலையில் சூடு பறக்கத் தேய்த்துவிடவும்.

by Swathi   on 08 Dec 2012  4 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
04-May-2021 17:26:33 P.s.ganesh said : Report Abuse
Vanakam sir enaku narambu thalarchi vanthuvittahu ethai cure pana taplet pls dmy whatsup no 6381275588 symptoms eye kocham iruku pesa mudiyala nadakka mudiyala nadukam iruku pls help
 
01-May-2021 14:29:23 Santhana ganesh said : Report Abuse
Vanakam sir enaku narambu thalarchi so cure medicine pls my whatsup no 6381275588
 
30-Sep-2019 15:08:33 jakkariya said : Report Abuse
thookam varra romba salllaiyaha irukkunndu pls reply me
 
02-May-2017 11:39:18 Bharathi said : Report Abuse
Moolai நரம்பு மருந்து kidaikkuma
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.