LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியம் சுட்டும் நூல்வகை

மனித இனத்தின் அனுபவமும், அறிவும் முறையாகத் தொகுத்துப் பதிவு செய்யப்படும் போது அது நூலாகிறது. தற்போது நூல்கள் பொதுவாகக் கீழ்க் கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

1.பார்வை நூல்கள்
2.பாட நூல்கள்
3.இலக்கியங்கள்

இலக்கியங்களை

1.கலைப்படைப்புகள்
2.பொழுது போக்குப்படைப்புகள்
3.விளக்க நூல்கள்
3.தொகுப்பு நூல்கள்
5.மொழியற்ற தழுவல் நூல்கள்

என பேணும் வகைப்படுத்தலாம். வகைப்படுத்தலை நம் தேவைக்கேற்ப வெவ்வேறு தலைப்புகளில் கூற இயலும். காலத்தால் தேவைகள் மாறும்பொழுது வகைப்படுத்தலும் மாறும். ஆனால் காலத்தால் மாறாத வகைப்படுத்தலை தொல்காப்பியம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளது.

மரபுநிலை திரியா மாட்சிய வாகி
உரைபடு நூல் தாம் இருவகை நிலை
முதலும் வழியுமென நுதலிய நெறியின.
(தொ.பொ.95)

தொல்காப்பியம் நூல்களை முதுல் நூல் வலிநூல் என இருவகையாகப் பிரிக்கிறது. எல்லாவகை வகைப்படுத்தல்களையும் இவ்வகைப்படுத்தனுக்குள் அடக்க இயலும், மேலும் நூல்களை எவ்வாறு வகைப்படுத்த வேண்டும் என்பதையும் தொல்காப்பியம் தெளிவாகச் சுட்டுகிறது.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூலாகும்
வழியெனப்படுவ ததன்வழித்தாகும்
(640.641.தொ.பொருள்)

துறைகளாகிய அறிஞர்கள், அனுபவத்தின் தோய்ந்து, தம் அறிவுக்குச் சரியெனப்படுபவற்றை, இதுவெண கூறப்படாத செய்திகளைப் படைத்துக்கூறும் நூல் முதல் நூலாகுமென்றும் முதல் நூலில் கூறப்படும் செய்திகளுக்கு உடன்பட்டுவரும் செய்திகளைக் கொண்ட நூல்கள் அனைத்துக்கும் வழிநூல்களாக கருதப்படுமென்றும் முதல் நூலின செய்திகளைத் தம் அறிவுத்திறத்தால் மறுத்து தம் கருத்தை நிலைநாட்டும் அறிஞர்களின் எதிர் நானும் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

வழி நூல்களைத் தொல்காப்பியம் கீழ்கண்டவாறு நால்வகையாகப் பிரிக்கிறது. தொகுத்தல் விரித்தல் தொகை விரி மொழிபெயர் ததர்ப்பட யாத்தலோ டனை மரபினவே (தொ.பொருள்.99)

முதல் நூலில் விரிவாகச் சொல்லப்பட்ட கருத்துக்களை விரிவாக விளக்கிக் கூறும் நூல்களும் பயன்கொள்வோரின் தேவைக்கேற்ப முதல்நூலைத் தொகுத்தும் விரித்துக் கூறும் நூல்களும் மொழி பெயர்ப்பு நூல்களும் வழிநூல்களாகக் கருதப்பட வேண்டுமெனத் தெரிவிக்கின்றது.

அறிவும், அறிவியலும் வளைந்து வரும் இந்நாளில் முதல் நூல்களின் பெருக்கம் ஒரு நாட்டில் உன்னத சிந்தனைத்திறன் மிக்க அறிஞர் பெருமக்களின் பெருக்கத்தைக் காட்டுவதால் அமையும். இருப்பினும் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் அறிவுச் செல்வத்தை நம் மொழியில் அறிமுகப்படுத்தவும் அறிஞர்களின் கருத்தை அனைவருக்கும் தெளிவுபடக் கூறவும் வழி நூல்களின் பெருக்கமும் அவசியமாகிறது.

ஒரு நூல் எப்படி அமைய வேண்டுமென்பதைத் தொல்காப்பியம் ஈனரங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத்திருவகை உத்தியொடு புணரின் நூலென மொழிப எனக் கூறுகிறது. அதாவது, கூறியது கூறல், மாறுகொனக் கூறல், குன்றக் கூறல், மிகைப்படுத்திக் கூறல் போன்ற பத்துவகைக் குற்றங்களின் நிறம், கருத்தை உணர்த்துதல், அதிகார வகைப்படுத்துதல், தொகுத்துக் கூறல், வகைபடக் கூறல், முன்னுக்குப்பின் முரண் இன்றிக் கூறல், ஒப்பக் கூறல் பிறனுடபம்பட்டது தானுடம் படுதல், இறந்தது காத்தல், எதிரது போற்றல், சொற்பொருள் விரித்தல் போன்ற முப்பத்தி இரண்டு வகை உத்திகளோடும் படைக்கப் படுவதே நூல் எனத் தொல்காப்பியம் தெரிவிக்கிறது. இதனைப் பல உரை நூல்களும் தெளிவுபடுத்துகிறது.

இவ்வகைப்பாடு கௌடில்யர் அர்த்தசாஸ்த்திரத்தில் சொல்லி இருக்கும் நூல்வகைகளையும் தந்திர உத்திகளையும் அடியொற்றி தொல்காப்பியத்தில் செய்யப்பட்ட இடைச்செருகல் என்ற மாற்றுக் கருத்தை இராமலிங்கர் பணி மன்றம் பதிப்பித்துள்ள தொல்காப்பியச் (பொருன்படலம்) ஆய்வு நூல் முன்னவக்கிறது. இருப்பினும் இந்நூல்வகை வகைப்பாடும், உத்திகளும் தற்போது பெருகிவரும், பொது அறிவியல் நூல்களுக்கும், பாடநூல்களுக்கும், இலக்கிய வகை நூல்களுக்கும் முற்றிலும் பொருந்துவதால் அமைந்துள்ள விதம் எண்ணி, எண்ணி மகிழத்தக்கதாகும்.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.