|
||||||||
தக்காளிக்காய் கூட்டு (tomato curry) |
||||||||
தேவையானவை: தக்காளிக் காய் – 1/2 கிலோ பச்சை மிளகாய் – 6 தேங்காய் – 1 மூடி சீரகம் – 2 டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன் உப்பு கொத்தமல்லித் தழை எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை: 1.பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும். 2.தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.அடுப்பில் கடாயில்கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். 4.தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும். 5.முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|