|
|||||
பூசணிக்காயின் பத்து முக்கிய பயன்கள் !! |
|||||
பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும் பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பூசணிகாய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுகிறது.
1. பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.
2. உடல் சூட்டைத் தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காய், சிறுநீரக வியாதிகளையும் குணப்படுத்த வல்லது.
3. உடல் வலி உள்ளவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி சரியாகும்.
4. பூசணிக்காயின் நீர்விதை, நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது.
5. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
6. இதயம் பலவீனமாக இருப்பவர்கள், வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயம் பலமாகும்.
7. பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல்,நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.
8. பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.
9. பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி, அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பின் அதன் சாற்றை எடுத்து, நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
10. பூசணிக்காய் விதைகளை நான்கு காயவைத்து பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெரும். |
|||||
by Swathi on 23 Oct 2013 1 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|